Skip to main content

Posts

Showing posts from 2011

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

இது என் பார்வையின் கோளாறு............????????

       இந்தியன் வங்கி மிகவும் மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தது. எப்பொழுதும் கூட்டமாக இருக்கும் வங்கி.... உலகிலேயே மிகவும் மெதுவான இணைய இணைப்பை கொண்டதாக இருப்பதால் ஒரு ஆள் பணம் கட்டவே ஒரு மணிநேரம் ஆகும். அதனால் அந்த வங்கியில் எப்போ போனா ஆளே இருக்காது என்று PH.D பண்ணிவிட்டேன். உணவு இடவேளைக்கு கொஞ்சம் முன்னால் சென்றால் கூட்டம் இருக்காது. அப்படியே இன்றும் சென்றேன் வழக்கம்போல்.                               எல்லா கவுண்டர்களிலும் ஒரிரு ஆட்களே இருந்தனர். என் மனம் மகிழ்ச்சியால் துள்ளியது ஏதோ வங்கியில் ஒரு லட்சம் டெபாசிட் பண்ணியது மாதிரி. ஒரு கவுண்டரை தேர்ந்தெடுத்து போய் நின்றேன். மிகவும் ஆற அமர என் முன்னால் நின்றவரின் நோட்டுக்களை ரிசர்ச் பண்ணிக்கொண்டிருந்தார். அடுத்தாக என் முறையும் வந்தது.                                மிகவும் அலட்சியமாக என்னிடமிருந்து பணத்தை வாங்கினார். என் மனம் சிந்தித்தது , நானும் மனிதன் தான் அவரும். படிப்பு கூட இருவருக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை. ஏதோ ஒரு நல்ல மூடில் வங்கி பரீட்ச்சை  எழுதியிருப்பார் அதனால் கவுண்டரின் அந்தப்பக்கம் அவர் இந்தப்பக்

இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே...................

    பஞ்சத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறு பையன் ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் ஐ.நா. சபை நடத்திய முகாம் ஒன்றுக்கு உணவுக்காக ஊர்ந்து செல்கிறான். இந்த பையன் எப்போது சாவான் நாம் சாப்பிடலாம் என்று பையனை தூக்கி செல்ல தயாராக அருகிலேயே பிணம் தின்னி கழுகு ஒன்று காத்திருப்பதையும் காணலாம். இந்த பையன் உயிர் பிழைத்தானா அல்லது கழுகுக்கு இரையானானா என்று யாருக்கும் தெரியாது. ஏனென்றால் இந்த போட்டோவை எடுத்த போட்டோகிராபரும், போட்டோ எடுத்த உடன் அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டார்.           இந்த படத்தை பார்த்ததும் உலகமே பெரும் அதிர்ச்சிக்குள்ளானது. அமெரிக்காவில் பத்திரிகையாளர்களுக்கு கொடுக்கப்படும் மிகச்சிறந்த விருதான புலிட்சர் விருது இப்படத்திற்கு கிடைத்தது. எனினும் இப் படத்தை எடுத்த போட்டோகிராபர் கெவின் கார்டர் மனம் உடைந்து 3 மாதங்கள் கழித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் கடைசியாக கடவுளுக்கு எழுதிய கடிதம் ஒன்றும் கிடைத்தது.           அன்புள்ள கடவுளுக்கு : நான் எனக்கு கிடைத்த சாப்பாட்டை இனி எப்போதும் வீணாக்க மாட்டேன். அது எவ்வளவு மோசமாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த பையனை காப்பாற்றும் பட

நெல்லையில் ஒரு மினி பதிவர் சந்திப்பு.10/11/2011

                    வ ழக்கம் போல் ஆபீசர் சங்கரலிங்கம் அவர்களின் தலைமையில் ஒரு மினி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் துபாய் ராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராக கெளரவிக்க இருப்பதாகவும் சொன்னார்கள். எனக்கும் அழைப்பு வந்தது.  வேலைகள் பல இருந்தாலும் போகவேண்டும் என்ற மனம் இருந்ததால் அதற்க்கான வழியை உருவாக்கிவிட்டு நெல்லையை சென்றடைந்தேன்.                 நா ன் போகும் போதே வழக்கமான, தலைவர் திவான் அவர்களின் ஹோட்டல் ஜன்னத்தில் குளு குளு அறையில் ஆபீசரும் கெளசல்யா மேடமும் மற்றும் துபாய் ராஜாவும் அவர் துணைவியார் ரேவதியும் வந்திருந்தனர்.  அடுத்ததாக ரூபினா மேடமும் வர சந்திப்பு களை கட்ட ஆரம்பித்தது.  ரூபினா மேடம் சென்னையில் தேனம்மை மேடத்தையும்  டைரக்டர் செல்வா சாரையும் சந்தித்ததைப்பற்றி கூறி புகைப்படங்களையும் காண்பித்தார்கள்.  மேலும் ராமலிங்கம், ஞானேந்திரம் மற்றும் வெடிவால் ஐயாவும் வந்து சேர சந்திப்பு சமோசா தேநீருடன் இனிதே ஆரம்பித்தது.  பரஸ்பர நலம் விசாரித்தலுடன் ஆரம்பித்த கூட்டம் .                         இ தனிடையில் ஆபீசர் சார் கடைசியாக எழுதிய பதிவில் அப்பளம் கலப்பட மேட்டரை எழுதியிருந்

கம்ப்யூட்டர் கதாநாயகன் ஸ்டீவ் ஜாப்ஸ்

1. Adam and Eve’s forbidden apple  2. Newton´s apple and finally  3. Steve Job´s Apple . The power of i iFounded  iConquered  iLeft  iCameBack  iMac  iPod  iTunes  iStore  iPhone iOS iAd iPad  iCloud  iRetire...  And iPassed Away Steve jobs  Mentor / Founder of Apple , now Apple Inc..,  Former CEO of Apple Inc.., Another man in the history of America who had his journey from RAGS to RICHES and a man who showed to world that computers are never black and white is now no more with us. Let his soul Rest in Peace. வாழ்க்கையில்பள்ளத்தையும் பார்த்தவர், உயரத்தையும் தொட்டவர்  ஸ்டீவ் ஜாப்ஸ் . இந்தக் கால இளைஞர்களுக்கு இவரது வாழ்க்கையே ஒரு பாடம்  .. புற்றுநோய் தன்னைத் தாக்கியது கடந்த 2004-ம் ஆண்டே ஸ்டீவ் ஜாப்ஸுக்குத் தெரிந்துவிட்டது. அதைத் தொடர்ந்து சில முறை சிகிச்சை மேற்கொண்டார். கல்லீரல் மாற்று அறுவையும் செய்து கொண்டார். ஆனாலும் கடந்த பிப்ரவரியிலேயே அவருக்குத் தனது இறுதி நாட்கள் தெரிந்துவிட்டன. தனது நாட்கள் எண்ணப்படுவது தெரிந்ததும், மிக நெ

ஒரு நண்பரின் கதை இது...........

வாங்க ஜெரால்ட் சார்( பெயர் தெரியாததால் இதையே பெயராக்கிவிடுவோம்) என்ன ரொம்ப சந்தோசமாக இருக்கீங்க என்றேன் நான். (ஜெரால்ட் என்னுடைய நல்ல வாடிக்கையாளர், அதிகம் பேசமாட்டார் , நல்ல மனிதரும் கூட.)  என்னுடைய மனைவி (வெளிநாட்டில் நர்ஸாக பணிபுரிந்து கொண்டிருந்தவர்) நாளை வருகிறாள் நாளை சென்னை சென்று அவளையும் அழைத்து கொஞ்சம், வாங்க வேண்டிய பொருட்களெல்லாம் வாங்கி வரவேண்டும். இரண்டு நாள் சென்னையில் ஹால்ட் என்றார். அவர் மனைவி10 வருடமாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.  ஒரு 10 வயதில் ஒரு மகனுடன் இவர் இங்கு புகைப்படத்தொழிலை செய்து வருகிறார். இந்த தடவை மனைவி வேலையை விட்டுவிட்டு இங்கே செட்டில் ஆக முடிவெடுத்துவிட்டார் என தெரிவித்தார். அதுதான் அவரது மகிழ்ச்சியின் முக்கிய காரணம்.                  ஒரு நாள் நான் மாலை நாளிதழை படித்துக்கொண்டிருந்த போது   அதில் அவருடைய மனைவியின் மரண அறிவிப்பை கண்டு அதிர்ந்தேன்.  அவர் வந்தே மூன்று மாதம் தான் இருக்கும் என்ன ஆயிற்று என்று விசாரித்தேன்.  அங்கேயும் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி வருமாம். அவர் சாதாரண வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி உண்பது வழக்கமாம். இங்கு வந்து ஒர

மருந்தால் தீராதது மந்திரத்தில் தீருமா?????????????

             பகுத்தறிவு வாதிகள் என்றால் எதையும் பகுத்து அறிந்து பிறகுதான் நம்புகிறவர்கள்.  ஆனால் நம்பிக்கை சார்ந்த எல்லா விஷயங்களுக்கும் சான்றுகள் இருப்பதில்லை. கடவுளை இங்கே வரச்சொல் நான் பார்க்கிறேன் என்றால் அது நடக்காத காரியம் தானே. மூட நம்பிக்கைகள் சிலரின் வாழ்வை வளமாக்கவும் பலரின் வாழ்வை குலைக்கவும் செய்கிறது என்பதும் உண்மையே .                 பகுத்தறிவுவாதி அறிவியல்வாதிகளைப்போல் சோதனைக்கூடம் அமைத்து கருவிகள் கொண்டு சோதனைகள் செய்யாமல் இருக்கலாம்.      ஆனால் இவர்களின் அடிப்படை மனப்பான்மை ஒன்றேயாகும் எதையும் அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளுதல். . அறிவியலுக்கு இன, நிற,மொழி,மத, வேற்றுமைகளோ நாட்டுப்பற்று என்ற வேற்றுமைகளோ அவர்கள் பார்த்ததில்லை. விஞ்ஞான அறிவு எந்த ஒரு நாட்டுக்கும் ஏக போக உரிமையன்று. இன்று விஞ்ஞானத்தை உலகம் முழுவதற்க்கும் சொந்தமாக்கினர். அறிவியல்வாதி இயற்கை மறைத்து வைத்திருக்கும் இரகசியத்தை ஆற்றலை,உண்மையை கண்டறிய இயற்கையை குறுக்கு விசாரணை செய்தான் பகுத்தான் புதியவற்றை படைத்தான்.                அதற்க்காக அவர்கள் கொடுத்த விலைகள் அதிகம்.  அரசியல்வாதிகள், மன்னர்கள்,

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.                     தன்னுடையவா

ஊர் சுற்றலாம் வாங்க - பாங்காங்க் (தாய்லாந்து)

முதலில் இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தி தந்த SONY INDIA  நிறுவனத்துக்கும் அதற்க்கு காரணமாக இருந்த திரு. வினோத் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.          நண்பர் வினோத் (vivek computers, trichy)  தாய்லாந்து டூர் செல்ல இருப்பதாகவும் உங்களுடைய கடவுச்சீட்டை உடனடியாக அனுப்பவும் என்று சொன்னவுடன் எனக்கு மகிழ்ச்சி கரைபுரண்டோடியது. ஆனால் இதை என் நண்பர்களுக்கு சொன்னவுடன் ஒரு புன்சிரிப்போடு “நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட” என்றார்கள் என்றார்கள் என்னை அறிந்தவர்கள்.  நானும் அப்படி என்னதான் இருக்கிறது அங்கே என்று  அங்கு போய் வந்த என் நண்பனிடம் விசாரித்தபோதுதான் தாய்லாந்தில் பட்டாயா என்ற இடம் “ அதுக்கு” பெயர் போனது என்று தெரியவந்தது. “அது” எது என்று புரியாத நல்லவர்கள் மசாஜ் என்று திருத்தி படிக்கவும்.  அந்த கருமத்திற்க்கு BHOOM ...BHOOM என்ற அடைமொழி வேறு. பார்த்தாலே தெரியலையா நம்ம மதுரை விமான நிலையம்தான்.               ஒரு வழியாக மதுரையில் இருந்து மற்ற நண்பர்களுடன் spice jet விமானத்தில் (  சன் குரூப்பின் வளர்ச்சி) ஏறினோம்.  சில பயணிகள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் த

நெல்லையில் மினி பதிவர் சந்திப்பு - ஆபீஸர் அதிரடி.

 இடமிருந்து வலம் ரூபினா மேடம்(நாய்குட்டி மனசு),கெளசல்யா மேடம்(மனதோடு மட்டும்),சகாதேவன் ஐயா(வெடிவால்),ஞானேந்திரன்(யானைக்குட்டி),டைரக்டர்.செல்வகுமார்(selva speaking),சீனா ஐயா(வலைச்சரம்),சங்கரலிங்கம் ஐயா(உணவு உலகம்) நேற்று நெல்லையில் ஒரு அதிரடி பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக ஆபீஸர் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் அழைப்பு விடுத்தார். அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு.செல்வகுமார் அவர்கள்  பங்கேற்க்க இருப்பதாகவும் சொன்னார்கள். ஏற்கனவே பிரமாண்டமாக நடந்த முதல் பதிவர் சந்திப்பில்   நான் பங்கேற்க்க முடியாத வருத்தம் இன்னும் இழையோடிக்க்கொண்டிருப்பதாலும் இன்னும் மிக முக்கியமான நட்சத்திர பதிவர்கள் வருகிறார்கள் என்று சொன்னதாலும் உடனடியாக செல்ல முடிவெடுத்தேன். அதன் படி நெல்லை போய் சேர்ந்தேன். மிகவும் சரியான நேரத்திற்க்கு வந்துசேர்ந்தது சீனா ஐயா தான்( அதிக தொலைவில் இருந்து வந்தவரும் அவர்தான்)                பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர இனிதாக களைகட்ட ஆரம்பித்தது பதிவர் சந்திப்பு .  திவானந்தா சுவாமிகள் தன்னுடைய குளுகுளு அறையை அதற்க்காக ஒதுக்கி கொடுத்தது இன்னும் மகிழ்ச்சியூட்டியது

ஊர் சுற்றலாம் வாங்க - சொத்தவிளை மற்றும் சங்குத்துறை கடற்கரை

சொத்தவிளை கடற்கரை குட் நைட் சூரியன் பீச்சுக்கு போகும் வழி இருபுறமும் சிங்கம் இருக்கும் பயப்பட வேண்டாம் இதுதான் பீச்சுக்கு நுழைவாயில்  இதைத்தவிர   எல்லா இடம் வழியாகவும் மக்கள் செல்வார்கள். கலக்கல் கன்ஸ்ட்ரக்‌ஷன். இவள் எழுத  அலை அழிக்க என்ன சின்னபுள்ளத்தனமா இருக்கு!!!!!!!! நாகர்கோவிலிலிருந்து 12  கி.மீ, தொலைவில் புத்தளம் அருகில்  அமைந்துள்ள அழகிய இயற்க்கை எழில் கொஞ்சும் கடற்கரையாகும். சுனாமியின் போது நிறைய பேரையும், வண்டிகளையும் தன்னகத்தே அணைத்து கொண்டு சென்ற தாயுள்ளம் கொண்ட கடற்கரை. குழந்தைகள் பூங்காவும் கண்காணிப்பு கோபுரமும். பயப்பட  வேண்டாம் இது நானேதான் (ஒரு அல்ப ஆசைதான் ) என் மனைவி என்ன ஒரு சந்தோஷம் வீடு கட்டியதில்  இது வெளி உலகுக்கு சமீபத்தில் தெரிய் தொடங்கி புதிய சுற்றுலா தலமாக மாறி வருகிறது. இங்கு நவீன மயமாக்ப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான் எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் நகர மக்களுக்கு இது இயற்க்கை அளித்த ஓர் வரப்பிரதாமாகும். ஒரு காரை பனை மரத்தின் உயரம் தூக்கி சென்று  மரத்தினிடையே இட்டுசென்றது. சுனாமியின் போது  நிறைய சூ