புத்தாண்டு காலையிலேயே வீட்டில் பெரிய பஞ்சாயத்தாகிவிட்டது. எனது மூன்றாவது படிக்கிற மகனுக்கும் சிறிய மகளுக்கும் சண்டை. புதுவருடமும் அதுவுமாக அவனை அடிக்க கையை ஓங்கி பின்னர் கொஞ்சமாவது அறிவிருக்காடா அந்த நாயை விட கேவலமாக இருக்கிறாயே என்று திட்டினேன். அதற்க்கு விடுங்கப்பா உங்க பிள்ளைதானப்பா பின்னே எப்படி இருக்கும் என்ற படி ஆமாப்பா நாய்க்கு அறிவு கிடையாதா? என்றான் அப்பாவித்தனமாக. உருப்படியா ஒரு கேள்வி கேட்கிறானே என்று நினைத்து , மகனே எல்லா மிருகங்களுக்கும் மூளை உண்டு ஆனால் மூளையில் செரிப்ரம் என்ற ஒரு பகுதி உண்டு.அது மிருகங்களின் மூளையில் சிறப்பாக இயங்குவதில்லை. அது ஒன்றுதான் மனிதனை (உன்னையல்ல) பிற விலங்குகளைவிட மேம்பட்டவனாக ஆக்குகின்றது என்றேன். ...