அகரமும் சிகரமும் எங்கள் இந்திய தேசத்தில் எல்லாவகையிலும் உலகப்புகழ் பெற்றவ்ர்களுக்கும் திறமையானவர்களுக்கும் பஞ்சமே இல்லை என்பதை நான் சொல்லவேண்டியதில்லை நீங்களே பாருங்கள். விளையாட்டு * இவருக்கு முன்னாலே கிரிக்கெட் இருந்தாலும் இப்போ கிரிக்கெட் இவரைச்சுற்றிதான் இருக்கிறது. கிரிக்கெட்டில் (சூதாட்டத்தில் அல்ல )அதிகம் சம்பாதித்தவர் இவர். கிரிக்கெட்டின் கடவுள் என வருணிக்கப்படும் இவர் எந்த வித பிரச்சனையிலும் சிக்காதவர். இந்திய மக்களின் நம்பிக்கை நட்சத்திரம். * இந்தியாவின் ஹாக்கி அணிக்கு கேப்டனாக இருந்தவர். சச்சினின் சம காலத்தில் வந்தவர்தான் என்றாலும் மும்பையில் வாடகை வீட்டிலே வசித்துவந்தார். இரண்டும் உலக அளவிலான விளையாட்டாக இருந்தாலும் போதுமான அங்கீகாரமின்மையால் (வருமானமின்மையால்) சச்சினைப்பார்த்தே நொந்துப்போனவர். ஆன்மீகம் * ’ கதவைத் திற காற்று வரட்டும்” என்று ரஞ்சிதமாகச் சொன்னாலே தமிழக மக்களின் மனதில் டாண் என்று வரும் உருவம் இதுதான் . இந்தியாவில் உலாவிவ...