Skip to main content

Posts

Showing posts from June, 2012

உலகிலேயே கேரளாவில் தான் ஆட்டோ சார்ஜ் மலிவு- என் அனுபவம்.

சமீபத்தில் ஒரு திருமண வைபவத்தில் கலந்துகொள்ள கேரளாவில் திரிச்சூர் இரயில் நிலையத்தில் இறங்கி வடக்கு பஸ்நிலையம் செல்வதற்க்காக prepaid ஆட்டோவுக்காக டோக்கன் எடுத்தேன். அவரும் 28 ரூபாய் என்று ரசீது கொடுத்தார். இவ்வளவு குறைவாக இருக்கும் என்று நானும் எதிர்பார்க்கவில்லை.                         அது அதிகாலை 5.30 மணியாகையால் பொழுது விடிந்தும் விடியாதுமாய் இருந்தது இரயில் நிலைய வாயிலில் ஒரே கூட்டம் வரிசையாக நின்று கொண்டிருந்தது எதற்க்காக என்று கடைசிவரை எனக்கும் புரியவேயில்லை. ஆட்டோ மெதுவாக வாயிலை கடந்தது. வாயிலில் உள்ள ஆலமரத்தில் பறவைகள் சப்தம் காதை துளைத்தது....... அப்பொழ்துதான் சிறிது மழை பெய்து வெறித்திருந்ததால் பறவை எச்சத்தின் நாற்றம் குடலை புரட்டியது.             இப்படியாக சாலையோர காட்சிகளை ரசித்தவாரே ஆட்டோவில் பயணித்தேன். ஆங்காங்கே ஒன்றிரண்டு மனிதர்கள் டீ கடையில் சாயா குடித்துக்கொண்டிருந்தனர். வடக்கு பஸ் நிலையமும் வந்தது. நான் இறங்கி 28 ரூபாய்க்கான ரசீதையும் 50 ரூபாவும் கொடுத்தேன். அவர் மீதி 72 ரூபாய் கொடுத்தார். உலகிலேயே இங்குதான் ஆட்டோ சார்ஜ் இவ்வளவு மலிவு என்று நினைத்தவாரே