Skip to main content

Posts

Showing posts with the label செய்திகள்

இந்தியாவில் சோம்பேறிகளின் எண்ணிக்கை 132 சதவீதம் அதிகரிப்பு

                  சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமூக இணையதளமான ஃபேஸ்புக்கை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த ஒரு ஆண்டில் இரு மடங்காக உயர்ந்துள்ளது.               இந்தியாவில் மட்டும் ஃபேஸ்புக் பயன்பாடு 132 சதவீதம் அதிகரித்துள்ளதாம். இது பிரேசிலில் 268 சதவீதமாக உள்ளதாம்.சீனாவில் சமூக இணையதளங்களைப்பயன்படுத்துவதற்க்கு அதிகக் கட்டுப்பாடுகள் உள்ளதால் அங்கு இதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு.               ஒவ்வொரு மாதமும் ஃபேஸ்புக்கைப்பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை வைத்து இது கணக்கிடப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கின் பங்குகளை அமெரிக்க பங்கு வர்த்தகத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாம். நன்றி : தினமணி.

அலை பேசி கொலை பேசி ஆக வேண்டாமே.......

                இந்த நவீன தொழில் நுட்பத்தில் தொலைபேசி தொல்லை பேசி ஆகிப்போனது நாம் அறிந்ததே. தொலைபேசி வீட்டில் இருந்தவரை பிரச்சனைகள் வெகு குறைவாகவே இருந்தது. அதில் நடக்கும் உரையாடல்களும் குடும்ப உறுப்பினர்களின் மத்தியிலே நடப்பதால் அதில் ஒரு வெளிப்படைத்தன்மையும் ஒருவித பாதுகாப்பும் இருந்தது. அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி தனிமனித ஒழுக்கத்திற்கு அது எந்த விதத்திலும் கேடு விளைவிக்கவில்லை.                       ஆனால் புதிய வரவான அலைபேசியில் எண்ணிலடங்கா வசதிகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலும் அவை தவறாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது கேமிரா ஆனாலும் சரி. வாய்ஸ் ரெகார்டிங்க் ஆனாலும் சரி, வாயில் மாடுலேசன்( pitch shift) ஆனாலும் சரி . `                 அது போல சாலையில் ந(க)டக்கும் போதும் அலைபேசியில் பேசிக்கொண்டே எதையும் சட்டை செய்யாமல் சென்று ஒழுங்காக வருபவனையும் தடுமாற செய்து விபத்திற்க்குள்ளாக்குவது , வாகனகள் ஓட்டும் போது பேசிக்கொண்...

........................7...7.....7......................................

மேல் உலகங்கள் ஏழு, கீழ் உலகங்கள் ஏழு, கடல்கள் ஏழு, நதிகள் ஏழு,மண்டலங்கள் ஏழு,நிலங்கள் ஏழு, மாந்தர்கள் ஏழு, உடற்தாதுக்கள் ஏழு,உடல் குறைகள் ஏழு, உடல் சக்திகள் ஏழு..... ஆக உலகத்தை படைக்கும் பொழுது இப்படித்தான் எல்லாவற்றையும் ஏழு ,ஏழாக படைத்துள்ளான்.          ஏழு வகை உடல் சக்திகளை தவத்தாலோ, வலிமையாலோ,ஒன்றாகச்சேர்த்து சித்தி பெற்றவர்களை நாம் சித்தர்கள் என்கிறோம்.          உண்மையில் நாம் ஏழு உடல் சக்திகளையும் பெற்று முக்தி அடைய முடியுமா? என்ற சந்தேகம் எல்லோருக்கும் வரும். ஆனால், திருவள்ளுவரும்,ஒளவையாரும் தங்களது பாடல்களில் ஏழ்பிறப்பு உண்டு என்பதை வலியுறுத்தியுள்ளனர். திருக்குர் ஆனில் நபிகள் நாயகம் ஏழு உலகங்களை குறிப்பிடுகிறார். பரம பிதாவின் திருச்சபையில் ஏழு ஜோதிகள் எரிந்து கொண்டிருந்தன என்று பைபிள் குறிப்பிடுகிறது. சமண மதமும், புத்த மதமும் கூட இவ்வாறே குறிப்பிடுவது ஆச்சர்யம் தானே.!!!!!!!

முக்கடல் சங்கமத்தில் புகைப்படபிரியன் சங்கமம் -26.01.2012

முகநூல் புகைப்படப்பிரியன் குழுமத்தின் சார்பில் 26.01.2012 அன்று குமரி முனையில் TRI-SEA HOTEL -ல் வைத்து ”புகைப்பட கலந்துரையாடல் மற்றும் பயிற்சி”   நடைப்பெற்றது. இந்த குழுமத்தை சார்ந்த திரு.மெர்வின் ஆன்டோ தான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்.திரு மென்வின் ஆன்டோவை பற்றி நான் பலமுறை எழுத நினைத்து காலம் கடந்து சென்று கொண்டே இருந்தது. அவரைப்பற்றி தனியாக ஒரு பதிவு எழுத நினைத்துள்ளேன். இந்த நிகழ்ச்சியில் ஒரு நண்பர் குறிப்பிட்ட மாதிரி அவர் ஒரு PHOTO SCIENTIST  என்றே கூறலாம் அந்த அளவிற்க்கு மிகவும் நுட்பமாக புகைப்படத்தை யாரும் சிந்திக்காத புதிய பரிணாமத்தில் எடுப்பதில் வல்லவர். அவரின் தனிப்பட்ட முயற்சி தான் இந்த நிகழ்ச்சி.  அவர் பார்க்க... பழக மிகவும் எளிமையானவர்.செய்யும் தொழிலை மிகவும் அர்பணிப்பு உணர்வோடு செய்பவர்...... என இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்....... நீங்கள் அனுமதித்தால்......... . காலை ஒன்பது மணிக்கு Registration துவங்கியது. அந்த பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. உறுப்பினர்கள் வந்தவுடன் நிகழ்ச்சி துவங்கியது. காலையில் நிகழ்ச்சி பங்கேற்ப்பாளர்களின் ...

நெல்லையில் மினி பதிவர் சந்திப்பு - ஆபீஸர் அதிரடி.

 இடமிருந்து வலம் ரூபினா மேடம்(நாய்குட்டி மனசு),கெளசல்யா மேடம்(மனதோடு மட்டும்),சகாதேவன் ஐயா(வெடிவால்),ஞானேந்திரன்(யானைக்குட்டி),டைரக்டர்.செல்வகுமார்(selva speaking),சீனா ஐயா(வலைச்சரம்),சங்கரலிங்கம் ஐயா(உணவு உலகம்) நேற்று நெல்லையில் ஒரு அதிரடி பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக ஆபீஸர் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் அழைப்பு விடுத்தார். அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு.செல்வகுமார் அவர்கள்  பங்கேற்க்க இருப்பதாகவும் சொன்னார்கள். ஏற்கனவே பிரமாண்டமாக நடந்த முதல் பதிவர் சந்திப்பில்   நான் பங்கேற்க்க முடியாத வருத்தம் இன்னும் இழையோடிக்க்கொண்டிருப்பதாலும் இன்னும் மிக முக்கியமான நட்சத்திர பதிவர்கள் வருகிறார்கள் என்று சொன்னதாலும் உடனடியாக செல்ல முடிவெடுத்தேன். அதன் படி நெல்லை போய் சேர்ந்தேன். மிகவும் சரியான நேரத்திற்க்கு வந்துசேர்ந்தது சீனா ஐயா தான்( அதிக தொலைவில் இருந்து வந்தவரும் அவர்தான்)                பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர இனிதாக களைகட்ட ஆரம்பித்தது பதிவர் சந்திப்பு .  திவானந்தா சுவாமிகள் தன்னுடைய குளுகுளு அ...

ராசா முதல் கனிமொழி வரை ஜாமீன் இல்லா ஜெயில் ஏன்? சட்டம் என்ன சொல்கிறது!!!!!!!!!!

திகார் ஜெயில்... ஒட்டு மொத்த இந்தியாவையும் ஏன்....? உலகத்தை கூட திரும்பி பார்க்கவைத்துள்ளது.  எத்தனை பூஜ்யம் போட்டு எப்படி எண்ணுவது ? என்று எண்ணிப்பார்த்து மலைக்கவைத்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா, முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. கலைஞர் டி.வி யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார், அரிநாயர்(ரிலையன்ஸ்) கரீம்  மொரானி(சினியுக் பிசினஸ்) வினோத் கோயங்கா, ஷாகித் பல்வா,ஆசிப் பல்வா(சுவான்), தொலைத்தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ராசா உதவியாளர் சந்தோலியா விளையாட்டு ஊழலில் சிக்கிய முன்னாள் மத்தியமநதிரி சுரேஷ் கல்மாடி உள்பட பலர் திகார் ஜெயிலுக்குள் அடைப்பட்டு கிடக்கிறார்கள்.                ஆ. ராசா 140 நாட்களை கடந்துவிட்டார். கனிமொழி யும் 40 நாட்களை ஜெயிலில் கழித்துவிட்டர்.  இவர்களில் யாருக்கும் இப்போதைக்கு ஜாமீன் கிடைக்காது என்பது உறுதியாகிவிட்டது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு கீழ் கோர்ட்டை அணுகுங்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு சுத்தியலை ஓங்கி அடித்து விட்டது....