Skip to main content

சுத்தம் என்பது சுத்தமாக இல்லை: சர்தார்ஜி !!!!!!

நாம் சினிமாவிலோ அல்லது தொலைக்காட்சியிலோ வெளிநாடுகளை பார்க்கும் போது  அது ரொம்ப சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கிறது. ஆனால் அதன் பின்னால் எத்தனை பேரின் உழைப்பு இருக்கிறது என்பது நமக்கு தெரியாதது அல்ல. ஏனென்றால்  நம் வீட்டை சுத்தமாக வைக்கவேண்டும்  என்றாலே ஒரு நாளைக்கு எத்தனை தடவை துடைக்க வேண்டும்  அப்படி இருக்க ஒரு நாடே சுத்தமாக இருக்க  அனைவரின் கூட்டுமுயற்ச்சி அவசியம்.
                                    நம் நாட்டின் (அ)சுத்தம்)  நாம் அறிந்ததே. காரணமும் நாமே. வீட்டை சுத்தமாக்கி குப்பைகளை தெருவில் கொட்டுகிறோம் .   காரில் உணவருந்திவிட்டு  மிஞ்சியவற்றை ரோடில் வீசுகிறோம். இரயில் பயணங்களில் கூட  உண்டபின் எஞ்சியவற்றை  வெளியே வீசிவிடுகிறோம். (உள்ளே போட இடமுவில்லை என்பதும் உண்மைதான்).                
                                      நாம்மிடையே மாற்றம் வந்தால் தான்  சுற்றுபுறமும், சுகாதாரமும் வசப்படடும். இந்த விஷயத்தில் தென் இந்தியாவின் நிலையைவிட வட இந்தியாவின் நிலமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அங்கே 6 மாதம் குளிர் காலமாக இருப்பதால்  அவர்கள் அந்த காலத்தில் கொஞ்சம் குளிக்க யோசிப்பார்கள் மேலும் பிகார் வாசிகளிடம் சென்றால் ஒரு வித துர்நாற்றம் நம்மை விரட்டும்.
                               இப்படிதான் ஒவ்வொரு  நாட்டினரின் சகிப்புத்தன்மையை  அறிய உலக அளவில் ஒரு போட்டியை நடத்தினார்கள். ஒரு செம்மறி ஆட்டை ஒரு  அறையில் அடைத்து வைத்து  அதில் யார் அதிக நேரம் இருக்கிறார்கள்  என்று கண்டறியப்பட்டது. முதலாவதாக அமெரிக்கர் சென்றார், ஒரு மணி நேரம் கூட தாக்குப்பிடிக்கமுடியவில்லை நாற்றம் தாங்காமல் ஓடி வந்துவிட்டார். அடுத்தது ரஷ்யன்  அரைமணி நேரத்திலேயே அவனுடைய விக்கட்டும் விழுந்தது. மூன்றாவதாக  இந்தியாவின் சார்பாக சர்தார்ஜி  உள்ளே சென்றார்  அடுத்த நொடியில் செம்மறியாடு வெளியில் வந்தது நாற்றம் சகிக்காமல் !.

Comments

:)))))))))
இருந்தாலும் இது ரொம்ப ஓவரா இல்ல?
சர்தார்ஜி ஜோக் சொல்லி முடித்திருந்தாலும்,சொல்லப்பட்ட விஷயம் வருத்தும் உண்மை.பான் போட்டுத் துப்பி ஊரெல்லாம் கறையாக்கி வைக்கும் வழக்கம்-நீங்கள்தான் பார்த்திருப்பீரகளே.என்று மாறும் இந்நிலை?
Unknown said…
சர்த்தார்ஜி விஷயத்தை ஜோக்காக எடுத்துகொண்டாலும், நீங்கள் சொன்னது போல தென் இந்தியா ஒன்னும் வட இந்தியாவை விட உசத்தி இல்லை. சென்னையில் ஒரு சிக்னலில் 3 நிமிஷம் நின்று கவனியுங்கள். ஒரு மோட்டார் ஸைக்கிளை சுற்றி எவ்வளவு துப்புறானுங்கள் இந்த மானம் கெட்ட தமிழன் என்பது புரியும். நமக்கெல்லாம் நீட்டி முழக்கி பேசத்தான் தெரியும்.
Unknown said…
பட்டாபட்டி அண்ணா வருகைக்கு நன்றி.
Unknown said…
மாணிக்கம் சட்டநாதன் அவர்களே கருத்துக்கு நன்றி.
Unknown said…
அசோக்ராஜ் ஆனந்த்ராஜ் அவர்களே வருகைக்கு நன்றி.
Unknown said…
சந்திரசேகரன் ஐயா கருத்துக்கு நன்றி.
////செம்மறியாடு வெளியில் வந்தது நாற்றம் சகிக்காமல் !////

நகைச்சுவையாகச் சொன்னாலும் நல்ல விசயம் சொல்லியுள்ளீர்கள்...
// இந்தியாவின் சார்பாக சர்தார்ஜி உள்ளே சென்றார் அடுத்த நொடியில் செம்மறியாடு வெளியில் வந்தது நாற்றம் சகிக்காமல் !.///
இல்லியே பன்மொகன் சிங் நாள்தோறும் குளிப்பாராமே...:]]]
நாமே நம்மை கிண்டலடிப்பது நன்றாகவே உள்ளது

Popular posts from this blog

நரேந்திரமோடி : முன்மாதிரியான முதல்வர்

              1950 ஆம் ஆண்டு  செப்டம்பர்  17 -ல்  குஜராத்திலுள்ள வட்நகர்(vadnagar) என்ற சாதாரண கிராமத்தில் பிறந்தவர். சோசியல் சயின்ஸ்- ல் முதுகலை பட்டம் பெற்றவர்.  இவருடைய  அலுவலகம் ISO 9001:2008 CERTIFIED ஆகும்.                                    முதன் முதலாக அக்டோபர் 2001-ல் குஜராத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த காலகட்டத்தில் தான் குஜராத்தில் புஜ் என்ற இடத்தில் மாபெரும்  பூகம்பம் ஏற்பட்டு குஜராத் மாபெரும் உயிர் மற்றும் பொருள் இழப்பைக் கண்டது.  அதிலிருந்து  குஜராத்தை மீட்டெடுத்து இந்தியாவிலேயே  ஆச்சரியப்படும் வகையில் முன்னணி மாநிலமாக ஆக்கிய பெருமை  மோடியையே சாரும்.  மதுக்கடை வருமானம் அங்கு கிடையாது. ஓட்டு வங்கிமற்றும் இலவச (அரிசி) அரசியல் அவர் செய்வது கிடையாது. அவருடைய ஒரே முழக்கம்...

நெல்லையில் மினி பதிவர் சந்திப்பு - ஆபீஸர் அதிரடி.

 இடமிருந்து வலம் ரூபினா மேடம்(நாய்குட்டி மனசு),கெளசல்யா மேடம்(மனதோடு மட்டும்),சகாதேவன் ஐயா(வெடிவால்),ஞானேந்திரன்(யானைக்குட்டி),டைரக்டர்.செல்வகுமார்(selva speaking),சீனா ஐயா(வலைச்சரம்),சங்கரலிங்கம் ஐயா(உணவு உலகம்) நேற்று நெல்லையில் ஒரு அதிரடி பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக ஆபீஸர் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் அழைப்பு விடுத்தார். அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு.செல்வகுமார் அவர்கள்  பங்கேற்க்க இருப்பதாகவும் சொன்னார்கள். ஏற்கனவே பிரமாண்டமாக நடந்த முதல் பதிவர் சந்திப்பில்   நான் பங்கேற்க்க முடியாத வருத்தம் இன்னும் இழையோடிக்க்கொண்டிருப்பதாலும் இன்னும் மிக முக்கியமான நட்சத்திர பதிவர்கள் வருகிறார்கள் என்று சொன்னதாலும் உடனடியாக செல்ல முடிவெடுத்தேன். அதன் படி நெல்லை போய் சேர்ந்தேன். மிகவும் சரியான நேரத்திற்க்கு வந்துசேர்ந்தது சீனா ஐயா தான்( அதிக தொலைவில் இருந்து வந்தவரும் அவர்தான்)                பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர இனிதாக களைகட்ட ஆரம்பித்தது பதிவர் சந்திப்பு .  திவானந்தா சுவாமிகள் தன்னுடைய குளுகுளு அ...

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக...