முதல்வரான பிறகு காஞ்சியில் சொந்த வீட்டுக்குப்போனார் அண்ணா. ஐஸ் வாட்டர் வந்ததும் “ஏது பிரிட்ஜ் ! பணம் ஏது ?” என்று கேட்டு வாயிற்படியில் தலைவைத்துப் படுத்து விட்டார் !
வீட்டில் மருமகள்கள் வந்து தவணை முறையில் வாங்கியதாக புத்தகத்தைக் காட்டிய பிறகே உள்ளே சென்றார்.
“வாழ்நாளில் எப்போதும் இல்லாத அடக்கத்துடன் உங்கள் முன் நிற்க்கிறேன்” என்று பதவியேற்றவுடன் கடற்கரையில் மக்கள் முன் சொன்னார்.
“முன்பு இருந்தவற்றை கலைக்கவோ குலைக்கவோ வரவில்லை; மேம்படுத்தவே வந்துள்ளேன் என்று அரசு ஊழியர்களிடையே பேசினார். கற்பனை கூட செய்து பார்க்க முடியாத பண்பு அது.
ஒருநாள் நுங்கம்பாக்கம் வீட்டில் இருந்து பிற்பகல் நான்குமணிக்கு கோட்டைக்குப் போக வேண்டிய அவசர வேலை. உதவியாளார்கள் மறந்துவிட்டு கடைசி நேரம் நினைவுறுத்தினார்கள். பரபரப்பாக புறப்பட்ட முதல்வர் அண்ணா கார் அருகே வந்துவிட்டார். ஓட்டுனர் இல்லை. போலீஸ் அதிகாரி அந்த ஓட்டுனரை கடிந்து கொண்டார். முதல்வரின் பாராட்டைப் பெறலாம் என்ற நினைப்போ என்னவோ ?. முதலமைச்சர் அண்ணா மெதுவாக சொன்னார்.! “ இது வழக்கமாக சண்முகம் (ஓட்டுனர்) டீ சாப்பிடுகிற நேரம். நாம் தான் அதியசயமாக் இந்த நேரத்தில் கோட்டைக்குப் புறப்படுகிறோம் ! அவன் என்ன செய்வான்! கோபிக்காதீர்கள் “ என்றார் அண்ணா !
இன்று அண்ணாவின் தம்பிகள் செய்கின்ற அட்டகாசம் நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஸ்பெக்ட்ரம் ஒரு பிரச்சனையே இல்லை இவர்கள் தான் வேண்டுமென்றே ஊதி பெரிதாக்குகின்றனர் என்கிறார் கலைஞர். ஓட்டுனருக்காக காத்திருந்த அண்ணா எங்கே இன்று முதல்வர் வருகிறார் என்றால் ஓட்டுமொத்த நகரமுமே காத்திருக்கிறதே. வாழ்க அண்ணா ! வளர்க அவரது பெயரால் மக்களுக்கு போடப்படும் நாமம்????.

Comments
அவர்தான்ய்யா நாயகன்.....
இன்றைய முதல்வருக்கு டிரைவர் இப்பிடி செய்தால் அடியே கிடைச்சிருக்கும்....
என்னத்தை சொல்லி அழ.......
நல்ல நினைவுகள் விஜயன்.
எங்கேய்யா போனீர் ஆளையே காணோம்...?//
கொஞ்சம் பிஸியாகிப்போனேன். அதான் யாருக்கும் பின்னூட்டம் போட முடியவில்லை.
இரண்டு பதிவில் பழைய பாடல்களை போட்டு அசத்துகிறீர்கள். வருகைக்கு நன்றி.
தலைவா ... எங்க போனிங்க.. இப்பவெல்லாம் அடிக்கடி வரவதில்லையே.//
பள்ளியில் ஆசிரியர் கேட்பது மாதிரியே கேட்கறீங்க(ஆசிரியர் தானே!!). இனி பார்க்கலாம் டீச்சர்.
---------விஜயன்
அவைகள் எல்லாமும் உங்களுக்குத்தானே பாஸ்?
...... WOW!!! Super!
ஆனா இந்தத் தேர்தல் நேரத்தில் மட்டும் ட்ராஃபிக் அவ்வளவு கெடுபிடி இல்லை!!
இது போன்றே பெருந்தலைவர் அம்மா வாழ்ந்த வீட்டில்,குழாய் போட்ட சம்பவம் தெரியுமா?அவர்தான் தலைவர்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக.
நன்றி மேடம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அந்த நாள் வர வேண்டுமென்றால் பச்சையும், மஞ்சளும் வெளியேற்றப்படவேண்டும்.வருகைகும் கருத்துக்கும் நன்றி.
அவர் அவர்தான். அதனால்தான் அவர் பெயர் இன்றளவும் பேசப்படுகிறது.
இதனால் தான் அவர் அண்ணா.....//
சரியாக சொன்னீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.