 |
| conference -ல் சோனியின் தயாரிப்புகளை விளக்கும் வாக்கி சான் |
நாங்கள் அங்கு இருக்கும்போது நம்முடைய முதல்வர், துணை முதல்வர் மற்றும் அழகிரி ஆகியோர் திடீரென வருகை புரிந்தார்கள். அவர்களை சந்திக்க வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் ஏதோ விவாதத்தில் இருப்பதாக சொல்லப்பட்டது. மாலையில் தான் சாதிக் பாட்சா இறந்த விபரம் பத்திரிகையில் வந்தது. அவர்களுக்கு ராசாவினால் அவர்களின் ராஜ வாழ்க்கை பாதிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. முதல்வருக்கு அது ராசியான ரிசார்ட்டாம். வசதியானவர்கள என்ன வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதை நம்மால் உணர முடிந்தது . ஒரு ஆர்வக்கோளாரால் அதன் வாடகையை கேட்க தோன்றியது. பத்தாயிரம் முதல் எண்பதாயிரம் வரை (வரிகள் தனி) அதில் தங்க வேண்டுமென்றால் ஒன்றில் ராஜாவாக இருக்கவேண்டும் அல்லது ராசாவாக இருக்க வேண்டும் .
 |
| எல்லாம் ஒரு விளம்பரம் தான் |
.டிஸ்கி: நேரமின்மையால் தான் இப்படி ஒரு ஒப்பேத்தல் பதிவு. ஆதரவு தர வேண்டுகிறேன்.
Comments
அந்த நீச்சல் குளத்தில்-எவ்வளவு பெரிது-நீச்சல் அடித்தீர்களா!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நாம் சம்பாதிக்கிற வேகத்தை அங்கே செலவாகிற வேகத்துடன் கழித்து பார்த்தால் மிஞ்சுவது பெருமூச்சும், வேதனையும் மட்டுமே.
நீங்கள் சொன்ன இரண்டும் தேவையில்லை அவர்களுக்கு கூஜா வாக இருந்தால் போதும்//
ராசாவுக்கும் கூஜாவாக இருந்தவரின் நிலைமையை பார்த்தீர்களா.சாதிக் பாட்சா சாதிக்க முடியாமல் போய்விட்டாரே.
அதனால்தான் நீண்ட இடைவேளையா!
அந்த நீச்சல் குளத்தில்-எவ்வளவு பெரிது-நீச்சல் அடித்தீர்களா!//
ஒரு மணி நேரம் பந்து விளையாடிக்கொண்டிருந்தோம் அவ்வளவுதான்.