இந்தியன் வங்கி மிகவும் மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தது. எப்பொழுதும் கூட்டமாக இருக்கும் வங்கி.... உலகிலேயே மிகவும் மெதுவான இணைய இணைப்பை கொண்டதாக இருப்பதால் ஒரு ஆள் பணம் கட்டவே ஒரு மணிநேரம் ஆகும். அதனால் அந்த வங்கியில் எப்போ போனா ஆளே இருக்காது என்று PH.D பண்ணிவிட்டேன். உணவு இடவேளைக்கு கொஞ்சம் முன்னால் சென்றால் கூட்டம் இருக்காது. அப்படியே இன்றும் சென்றேன் வழக்கம்போல்.
எல்லா கவுண்டர்களிலும் ஒரிரு ஆட்களே இருந்தனர். என் மனம் மகிழ்ச்சியால் துள்ளியது ஏதோ வங்கியில் ஒரு லட்சம் டெபாசிட் பண்ணியது மாதிரி. ஒரு கவுண்டரை தேர்ந்தெடுத்து போய் நின்றேன். மிகவும் ஆற அமர என் முன்னால் நின்றவரின் நோட்டுக்களை ரிசர்ச் பண்ணிக்கொண்டிருந்தார். அடுத்தாக என் முறையும் வந்தது.
மிகவும் அலட்சியமாக என்னிடமிருந்து பணத்தை வாங்கினார். என் மனம் சிந்தித்தது , நானும் மனிதன் தான் அவரும். படிப்பு கூட இருவருக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை. ஏதோ ஒரு நல்ல மூடில் வங்கி பரீட்ச்சை எழுதியிருப்பார் அதனால் கவுண்டரின் அந்தப்பக்கம் அவர் இந்தப்பக்கம் நான். இருந்தாலும் ஒவ்வொரு நோட்டாக அந்த மெசினில் வைத்து செக் பண்ணுவதும் அடுக்குவதுமாக இருந்தார். ஒருவேளை தகுதிக்கு மீறிய சம்பளம்தான் இந்த இறுமாப்பை கொடுக்குமோ???? என் மனம் எண்ணியது. என்னுடைய தொழிலில் வாடிக்கையாளரிடமிருந்து பணம் வாங்குவது ஒரு நிகழ்வு. இவர்களுக்கு அதுவே வேலை. எங்களுக்கு இப்படி ஆற அமர ஒவ்வொரு நோட்டாக ஆய்வு செய்ய சமயம் இருப்பதில்லை. கொடுக்கிற பொருளை செக் பண்ணி கொடுக்கவே சமயம் இருப்பதில்லை அதனிடடையில் இதெல்லாம் ஒரு தூசிதான்.
அவர் மூக்குக்கண்ணாடியினூடே என்னை பார்ப்பதும் சீல் குத்துவதுமாக இருந்தார். அவர் இருந்த முறையே சரியில்லாமல் தான் இருந்தது. மிகவும் நிதானமான வேலை செய்யும் முறை. எல்லாம் எரிச்சலூட்டுவதாகத்தான் இருந்தது. ஒரு வழியாக செல்லான்னைத்தந்தார். அவருக்கும் உணவு இடைவேளை வந்தது. கவுண்டரை அடைத்துவிட்டு நாலுகாலில் நடந்து வெளியேறினார் ..... என மனம் திக் என்று குளிர்ந்தது........ எல்லா கோபமும் எங்கோ சிட்டாய் பறந்தது.

Comments
/
அனுபவங்கள் வாழ்வை மேம்படுத்துகின்றன.
'செல்லான்னைத்தந்தார்' புரியவில்லையே நண்பரே?
/
அனுபவங்கள் வாழ்வை மேம்படுத்துகின்றன.//
செல்லான் என்றால் கூப்பன் அல்லது டோக்கன் என்று நினைக்கிறேன்...!!!
காத்திருக்க வைத்து விட்டு, கடமையினையும் முடித்து விட்டு வெளியேறும் ஊழியர்..
இப்படியும் பல அனுபவங்களை நாம் அன்றாடம் காணுவோம். ஆனாலும் நீங்கள் வித்தியாசமாக ரசிக்கும் வண்ணம் சுவை கூட்டி எழுதியிருக்கிறீங்க.
நன்றி.
அது தான் நிஜம் விஜி. நானும் இது போன்ற நிகழ்வுகளை சென்னை வங்கிகளிலும் தபால் நிலையங்களிலும் கண்டதுண்டு. சைத்தபேட்டை தபால் நிலையத்தில் இப்பவும் கூட அந்த அம்மணி இருக்கிறது. கவுண்டரின் அந்த பக்கம் ஏதோ "சசிகலாவே "உட்கார்திருப்பதைபோல இருக்கும் அத்தனை நகைகளையும் அள்ளிப்போட்டுக்கொண்டு வேலைக்கு வந்துவிடும்.அதன் முகத்தில் ஒரு அலட்சியமும் திமிரும் கூட மிளிரும். எனக்கு முன்பாக நிற்கும் நபர்களிடம் அந்த அம்மா நடந்து கொள்ளும் முறைகளை பார்த்து வெறுத்துப்போய் நான் "ஊமை" போல சைகைகளால் பேசி கவர் , ஸ்டாம்புகளை வாங்கிகொண்டு சில்லறை என்னிடம் இல்லை என்று அடாவடியாக ஐநூறு ரூபாய் தாளை கொடுத்துவிட்டு மல்லுக்கு நின்று மீதம் வாங்கிகொண்டு வந்து , அந்த அம்மாவின் எதிரிலேயே இந்த கூத்துகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு மனதுக்குள் சிரித்துகொண்டு நின்ற என் அன்பு நண்பர் சேகரிடம் நான் சரளமாக பேச , அந்த அம்மாளின் முகத்தை பார்க்க வேண்டுமே. இவர்களை எல்லாம் நாம் தான் சரி பண்ண வேண்டும்.