போன வாரம் சீரடி சாயி பாபா கோவிலுக்கு போய் வரும்பொழுது நடந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது அதை உங்களுக்கும் தெரிவிப்பதே இந்த பதிவின் நோக்கம்.........
வாரம் ஒரு முறை சென்னையில் இருந்து ஒரு இரயில் வண்டி சீரடிக்கு செல்கிறது. அதில் செல்பவர்கள் அநேகமாக சாயிபாபாவின் பக்தர்கள் தான். அனைவரும் ஒரே இலக்கை நோக்கி பயணிப்பதால் பாடல் மற்றும் பஜனைகள் களைகட்டும். நாங்களும் நன்றாக பிரயாணத்தை ரசித்து ருசித்து மகிழ்ந்து சென்றோம். இனிமையாக தரினத்தை முடித்து இரயிலில் திரும்பிக்கொண்டிருந்தோம்.
டிக்கட் பரிசோதகரால் நடுக்காட்டில் இறக்கிவிடப்பட்ட குடும்பம். |
ஒரு அரைமணி நேர பிரயாணம் கழித்து ஒரு இரயில் நிலையத்தில் (கர்நாடகா) ஒரு பெருங்கூட்டம் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறி வலுக்கட்டாயமாக அமர்ந்தது. நாம் நம்முடைய முன்பதிவு செய்யப்பட்ட இடம் வேறுயாரும் வர வழியில்லை என்ற நினைப்பில் அங்காங்கே செல்போன்,கேமிரா மற்றும் பல பொருட்களை வெளியே வைத்திருந்தோம்.
இந்த திடீர் ஆக்கிரமிப்பால் எங்களால் அந்த பொருட்களை எடுக்கவும் வழியில்லை. அதனால் பாதுகாப்பு கருதி அந்த கூட்டத்திடம் வேறு பெட்டிக்கு போகுமாரும் இது முன் பதிவு செய்த பெட்டி என்று கூறியதும் தகாத வார்த்தையினால் திட்டினர். வேறு வழியில்லாமல் அபாய சங்கிலியை இழுத்து இரயிலை நிறுத்தினோம்.
அப்பொழுதுதான் எங்கிருந்தோ பரபரக்க டிக்கட் பரிசோதகர் ஓடோடி வந்தார். இந்த சம்பவத்தை சொன்னோம். அவர் கூறியது எங்களை திடுக்கிட வைத்தது. இங்கே இஸ்லாமியருக்கான ஒரு திருவிழா நடப்பதாகவும் அதனால் இன்றும் இவ்வளவு கூட்டம் என்றும் அடுத்த ஜங்ஷனில் அவர்கள் இறங்கிவிடுவார்கள் என்றும் கூறினார். ஒரு நபரிடம் கூட டிக்கட் இல்லை ஆனால் அதை ஒன்றும் கேட்க முடியாது இது இப்படித்தான் நீங்கள் தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்றார் மிகுந்த படப்படப்புடன். நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை. அப்பொழுது அந்த இரயில் நிலையத்தில் இருந்து மப்டியில் வந்த இரயில் நிலைய போலீசார் அந்த நபர்களை கடுமையான சொற்களால்திட்டி விரட்டவே அவர்கள் ஒதுங்கி கொண்டனர். அந்த போலீசாரும் இறங்கினர்..இரயிலும் நகர்ந்தது......சிறிது நேரத்தில் அந்த கூட்டம் மீண்டும் வந்து சேர்ந்தது. தகராரை தொடர்ந்தனர் நீ போலீஸ் இல்லை இரயில்வே மினிஸ்டரிடம் வேண்டுமானாலும் சொல் உன்னால் ஒன்றும் புடுங்க முடியாது. அடுத்த ஸ்டேஷனில் அரை மணிநேரம் நிற்க்கும் அங்கே பார்த்துக்கொள்கிறோம் என்றனர். அதில் ஒருவன் மிகவும் தீவிரமாக செல்போனில் தொடர்பு கொண்டு வேறு நபர்களுடன் சம்பவத்தை விவரித்துக்கொண்டிருந்தான். நாங்கள் மொத்தம் ஏழுபேர் சென்றிருந்தோம். அதில் பலரும் அரசியலிலும் சட்ட துறையிலும் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள் தான். இருந்தாலும் அன்னிய இடத்தில் என்னதான் செய்துவிட முடியும். அதில் எனக்கும் எங்களை வழிநடத்தி சென்ற அந்த பிரம்மசாரிக்கும் மட்டுமே இந்தி தெரியும். மற்றவர்களுக்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்றே புரியவில்லை. எனக்கு அடுத்த ஸ்டேஷனில் ஏதோ விபரீதம் நடக்க இருப்பது புரிந்ததால் நானும் என்னுடன் வந்த (அவர் உச்ச நீதிமன்ற வக்கீல்) நண்பருடன் இரயிலில் இருக்கும் போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று நடந்தோம். என்னுடன் வந்த வக்கீல் கட்டையாக முடி வெட்டியிருந்ததால் (போலீஸ் என்று நினைத்து) அவர்கள் எங்களை பார்த்ததும் கலவரமானார்கள். காரணம் அடுத்த ஸ்டேசனில் இறங்க வேண்டும் என்பதால் ஒருவரும் டிக்கட் எடுக்கவில்லை.அதில் பெரும்பாலானவர்கள் குடும்பம் சகிதமாக (பர்தா அணிந்து) இருந்தனர். எங்களது மனநிலையும் திக் திக் என்று இருந்தபோதும் ஏசி பெட்டியை அடைந்து ஏசி அட்டெண்டரிடம் போலீசை பற்றி விசாரித்தோம். அவன் இந்த இரயிலில் RPF போலீஸ் கிடையாது ஏன் ஏதாவது பிரச்சனையா என்றனர். ஆனால் அங்கேயும் இதே கூட்டம் நின்றது அதனால் எங்களால் எதையும் சொல்ல முடியாமல் திரும்பிக்கொண்டிருந்த போதே அந்த ஸ்டேஷனும் (WADI) வந்தது. அங்கிருந்த படியே 100 க்கு மொபைலில் தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னோம். அவர்களும் அந்த் ஸ்டேசன் போலீசுக்கு தகவல் கூறுவதாக கூறினர்
அந்த கூட்டம் அப்படியே வெளியே இறங்கி எங்கள் ஜன்னலருகே வந்து மிக மோசமான வார்த்தையால் திட்டத்துவங்கினர். எமர்ஜன்சி எக்சிட் (Emergency exit) எங்கள் பக்கம் இருந்ததால் ஜன்னலில் கம்பியே இல்லை. நேரம் செல்ல செல்ல கூட்டம் கூடியது. கையில் கிடைத்த பொருட்களை கொண்டு எறிய ஆரம்பித்தனர். அதுவரை இந்தியனாக இருந்த நாங்கள் அவர்களால் இந்துவாக சித்தரிக்கப்பட்டோம். சம்பவம் திரித்து கூறப்பட்டது. அனைவரும் மிகவும் ஆவேசமாக நாங்கள் உண்ண வைத்திருந்த வாழைப்பழத்தையும் உணவையும் எடுத்து எங்கள் மீதே எறிந்தனர். எங்கள் சக பயணிகள் செய்வதறியாது திகைத்தனர். எங்களிடம் ஜன்னல் ஷட்டரை போடுமாறு கூறினர். நாங்களும் அப்படியே செய்தோம். அவர்கள் அந்த ஷட்டரை ஆக்ரோஷமாக தாக்கியதில் அதுவும் உடைந்து தொங்கியது. கூட்டத்தில் ஒருவனின் கையிலும் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அப்பொழுது 2 வயதான இரயில்வே போலீசும் வந்து சேர்ந்தார். அவர்கள் அந்த கும்பலிடம் கெஞ்சி கூத்தாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் ஒருவரும் கேட்பதாக இல்லை. சிறிது நேரத்தில் கும்பல் தகாத வார்த்தையால் சத்தமிட்டவாரே பெட்டிக்குள் நுழைய துவங்கியது. போலீசாரும் அவர்களை தடுத்தனர். நானும் அவர்களை வரவிடாமல் தடுத்தேன். ஒரு வழியாக இரயில் நகர துவங்கியது.......அவர்களும் அந்த பெட்டியை தாக்கியவாரும்..... தகாத வார்த்தையால் திட்டியவாரும் கொஞ்சநேரம் இரயில் வேகத்திற்க்கு ஈடு கொடுத்தனர்..... இரயில் வேகமெடுக்கவே பதட்டம் தணிந்தது.
இதில் என் மனதில் தோன்றிய சில நியாயமான கேள்விகள்......
1. முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பிறர் ஏறி அராஜகம் பண்ணுவது சரியா.
2. ஒரு பாவப்பட்ட குடும்பத்தை இறக்கிவிட்ட டிக்கட் பரிசோதகர் இவர்களிடம் பயந்தது ஏன்..?
3. இரயில் பெட்டியின் ஷட்டரை அவர்கள் நொறுக்கியும் இரயில் நிலைய போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்.?
4. இதெல்லாம் சின்ன மேட்டர் இதற்க்கெல்லாம் யாராவது அபாய சங்கிலியை இழுப்பார்களா என்று கருதியிருந்தால் எங்களிடம் அபராதம் வசூலிக்காதது ஏன்..?
5. சிறுபான்மையினர் எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறும் அளவிற்க்கு அவர்களை சட்டத்தின் அப்பாற்பட்டவர்களாக கருத வைத்து பாதுகாப்பது யார்...?
டிக்கட் பரிசோதகரும், இரயில்வே போலீசாரும் தம் கடமைகளை உணர்ந்து பொறுப்பாக நடந்தால் இதெல்லாம் நடக்குமா...
சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரும் இரயிலில் இரயில்வே போலீசார் மிகவும் கண்டிப்புடன் அனைத்து இட்லி மற்றும் டீ வியாபாரிகளிடம் 20 ரூபாய் வீதம் வசூலித்துக்கொண்டிருந்ததை கண் கூடாக பார்த்தேன். ஒரு வேளை அரசாங்கம் இவர்களுக்கு சம்பளம் கொடுப்பதில்லையோ என்னவோ...?
எது எப்படியோ இது போன்ற சிறு சிறு பிரச்சனைகள் தான் மிகப்பெரிய சம்பவமாக மாறும். மாறியிருக்கிறது. அவரவர் இடத்தில் எல்லோரும் பெரியவரே. யாரோ செய்த தவறுக்கு யாரோ தண்டனை பெறுவது உலகத்திற்க்கு ஒன்றும் புதிதல்லவே......
ஆனால் ஒன்று அராஜகம் அழிந்தே தீரும். ஆதலினால்தான் அகிலம் முழுவதும் அல்லல் படுகிறீர்கள்.ஆனால் அதில் அப்பாவிகள் பாதிக்கப்படும்போது யாராக இருந்தாலும் நமக்கும் வலிக்கவே செய்கிறது.
Comments
அடிக்கடி நாங்கள் ரயில் பிரயாணம் மேற்கொள்வதால் இந்த அநியாயங்களை கண்டும் காணாமலும் இருந்து விடுவதும் உண்டு, சில சமயம் பொங்கி டிக்கெட் இல்லாதவர்களை விரட்டியதும் உண்டு...!
இப்படித்தான் இருக்கும்.