Skip to main content

Posts

Showing posts from July, 2013

தொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்

தொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும் என் முதல் கணிணி அனுபவம் என்கிற தொடர்பதிவு  தொடர்வது போல் நானும்  பல தொடர் பதிவுகளை எழுதி பலரையும் கோர்த்துவிட விரும்புகிறேன்..... தலையங்கள் நிறைய தேவைப்படுவதால்.... பதிவர்களின் உதவியை நாடுகிறேன்..... உதாரணமாக................ 1. என் முதல் காதல் அனுபவம்..... 2. என் முதல் திருட்டு....... 3. நான் செய்த தவறுகள்..... அன்று முதல் இன்றுவரை.                      இதுமாதிரி உணர்வுப்பூர்வமான வில்லங்கமான தலையங்கங்கள் வரவேற்க்கப்படுகின்றன...... தன் பெயரை போட்டுவிடுவானோ என்று பீதியிலே பேதி போகிற மாதிரியான தலையங்கங்கள்  வாஞ்சையோடு பரிசீலிக்கப்படும். யோசிங்கப்பா.............யோசிங்க.

நுகர்வோருக்கும் வேண்டும் விழிப்புணர்வு.................

இன்று ஒரு நண்பரை பார்க்க சென்றிருந்தேன்.  சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த போது .... போனவாரம் நீங்க முகநூலில் ஒருவருடன் (ஆபீசர் சங்கரலிங்கம் அவர்கள் ) இருக்கிறமாதிரி போட்டோ போட்டிருந்தீர்களே இவருக்கு அவர் நண்பரா என நண்பர்கள் கேட்டதாக கூறி ஒருமாதிரியாக சிரித்தார்.    நானும் அவர்களுக்கு நண்பர்தான் என்ன விஷயம் என்றேன் இல்லை சும்மாதான்  என்று சமாளித்தார்.  சும்மா சொல்லுங்கண்ணே நமக்குள் தானே என்றேன். அப்பொழுதுதான்  அவர் தன் மனக்கசப்பை கொட்ட துவங்கினார்.                         பாவப்பட்ட மக்களை எல்லாம் சோதனை என்ற பெயரில் துவம்சம் செய்கிறார்கள்,பல்காரங்களை ரோட்டில் கொட்டுகிறார்கள். அப்படியென்றால்  பெப்சியை தடை செய்ய வேண்டியதுதானே சீறினார் . அப்பாடா அப்படி வாங்க வழிக்கு என்று மனதிற்குள் நினைத்தவாரே நிலமையை விளக்க துவங்கினேன்.                            முதலில் சுகாதாரம் என்ற விஷயத்தில் பாவம் பணக்காரன் என்ற பாகுபாடு ஒன்றும் சட்டத்திற்கு கிடையாது.  யார் தவறு செய்தாலும் சட்டத்திற்குட்பட்டுதான்  அரசு அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்கின்றனர். பாவப்பட்டவன் என்பதற்காக  அவன் கலப்படம் செய்வதை  அல்லது அ

என் முதல் கணினி அனுபவம் - தொடர் பதிவு....!

எனக்கு தமிழ்லயே பிடிக்காத வார்த்தை “தொடர்பதிவு” . ஏதோ வந்தோமா  ஏதாவது இரண்டு லைன் முகநூல்ல கிறுக்கினோமா போனோமான்னு இருக்கிற  என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த மனோவை தனியாக கவனித்துக் கொல்கிறேன்.                      பதிவு எழுதியே வருடங்கள் ஆகிப்போனதால் புதிய பதிவு எழுத எங்கே போகவேண்டும் என்று தேடவே நிறைய நேரம் ஆகிவிட்டது..... ஒரு வழியாக கண்டுபிடித்தும் தொலைத்தாகிவிட்டது. இனிவாயில் வந்ததை  வாந்தி எடுக்க வேண்டியதுதான் பாக்கி.                     முதலில் நான் கணினி வாங்க காரணமே தொழில் ரீதியாக புதிதாக சந்தைக்கு வரும் கேமிரா மற்றும் அதன் உப பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்க வசதியாக இருக்குமே என்றுதான். அதற்காக இணைய இணைப்பும் எடுத்தேன். அப்பொழுதுதான் என் கடைக்கு அடுத்த கடையில் இருக்கும் ஹரீஸ் என்ற நண்பன் பதிவுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அது வால்பையன் மறைந்த நண்பர் பட்டாபட்டி மற்றும் பன்னிக்குட்டி ராமசாமி ஆகிய சீனியர் பதிவர் நண்பர்கள் கலக்கிக்கொண்டிருந்த காலம் அது. இணைய இணைப்பு இருக்கிறது என்பதால்  சும்மா இருக்கின்ற நேரங்களில் அதில் மனதில் தோன்றியவற்றை கிறுக்க ஆரம்பித்தேன