Skip to main content

Posts

மருந்தால் தீராதது மந்திரத்தில் தீருமா?????????????

             பகுத்தறிவு வாதிகள் என்றால் எதையும் பகுத்து அறிந்து பிறகுதான் நம்புகிறவர்கள்.  ஆனால் நம்பிக்கை சார்ந்த எல்லா விஷயங்களுக்கும் சான்றுகள் இருப்பதில்லை. கடவுளை இங்கே வரச்சொல் நான் பார்க்கிறேன் என்றால் அது நடக்காத காரியம் தானே. மூட நம்பிக்கைகள் சிலரின் வாழ்வை வளமாக்கவும் பலரின் வாழ்வை குலைக்கவும் செய்கிறது என்பதும் உண்மையே .                 பகுத்தறிவுவாதி அறிவியல்வாதிகளைப்போல் சோதனைக்கூடம் அமைத்து கருவிகள் கொண்டு சோதனைகள் செய்யாமல் இருக்கலாம்.      ஆனால் இவர்களின் அடிப்படை மனப்பான்மை ஒன்றேயாகும் எதையும் அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளுதல். . அறிவியலுக்கு இன, நிற,மொழி,மத, வேற்றுமைகளோ நாட்டுப்பற்று என்ற வேற்றுமைகளோ அவர்கள் பார்த்ததில்லை. விஞ்ஞான அறிவு எந்த ஒரு நாட்டுக்கும் ஏக போக உரிமையன்று. இன்று விஞ்ஞானத்தை உலகம் முழுவதற்க்கும் சொந்தமாக்கினர். அறிவியல்வாதி இயற்கை மறைத்து வைத்திருக்கும் இரகசியத்தை ஆற்றலை,உண்மையை கண்டறிய இயற்கையை குறுக்கு விசாரணை செய்தான் பகுத்தான் புதியவற்ற...

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக...

ஊர் சுற்றலாம் வாங்க - பாங்காங்க் (தாய்லாந்து)

முதலில் இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தி தந்த SONY INDIA  நிறுவனத்துக்கும் அதற்க்கு காரணமாக இருந்த திரு. வினோத் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.          நண்பர் வினோத் (vivek computers, trichy)  தாய்லாந்து டூர் செல்ல இருப்பதாகவும் உங்களுடைய கடவுச்சீட்டை உடனடியாக அனுப்பவும் என்று சொன்னவுடன் எனக்கு மகிழ்ச்சி கரைபுரண்டோடியது. ஆனால் இதை என் நண்பர்களுக்கு சொன்னவுடன் ஒரு புன்சிரிப்போடு “நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட” என்றார்கள் என்றார்கள் என்னை அறிந்தவர்கள்.  நானும் அப்படி என்னதான் இருக்கிறது அங்கே என்று  அங்கு போய் வந்த என் நண்பனிடம் விசாரித்தபோதுதான் தாய்லாந்தில் பட்டாயா என்ற இடம் “ அதுக்கு” பெயர் போனது என்று தெரியவந்தது. “அது” எது என்று புரியாத நல்லவர்கள் மசாஜ் என்று திருத்தி படிக்கவும்.  அந்த கருமத்திற்க்கு BHOOM ...BHOOM என்ற அடைமொழி வேறு. பார்த்தாலே தெரியலையா நம்ம மதுரை விமான நிலையம்தான்.               ஒரு வழியாக மதுரையில் இருந்து மற்ற நண்பர்களுடன் spice jet விமானத்தில்...

நெல்லையில் மினி பதிவர் சந்திப்பு - ஆபீஸர் அதிரடி.

 இடமிருந்து வலம் ரூபினா மேடம்(நாய்குட்டி மனசு),கெளசல்யா மேடம்(மனதோடு மட்டும்),சகாதேவன் ஐயா(வெடிவால்),ஞானேந்திரன்(யானைக்குட்டி),டைரக்டர்.செல்வகுமார்(selva speaking),சீனா ஐயா(வலைச்சரம்),சங்கரலிங்கம் ஐயா(உணவு உலகம்) நேற்று நெல்லையில் ஒரு அதிரடி பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக ஆபீஸர் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் அழைப்பு விடுத்தார். அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு.செல்வகுமார் அவர்கள்  பங்கேற்க்க இருப்பதாகவும் சொன்னார்கள். ஏற்கனவே பிரமாண்டமாக நடந்த முதல் பதிவர் சந்திப்பில்   நான் பங்கேற்க்க முடியாத வருத்தம் இன்னும் இழையோடிக்க்கொண்டிருப்பதாலும் இன்னும் மிக முக்கியமான நட்சத்திர பதிவர்கள் வருகிறார்கள் என்று சொன்னதாலும் உடனடியாக செல்ல முடிவெடுத்தேன். அதன் படி நெல்லை போய் சேர்ந்தேன். மிகவும் சரியான நேரத்திற்க்கு வந்துசேர்ந்தது சீனா ஐயா தான்( அதிக தொலைவில் இருந்து வந்தவரும் அவர்தான்)                பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர இனிதாக களைகட்ட ஆரம்பித்தது பதிவர் சந்திப்பு .  திவானந்தா சுவாமிகள் தன்னுடைய குளுகுளு அ...

ஊர் சுற்றலாம் வாங்க - சொத்தவிளை மற்றும் சங்குத்துறை கடற்கரை

சொத்தவிளை கடற்கரை குட் நைட் சூரியன் பீச்சுக்கு போகும் வழி இருபுறமும் சிங்கம் இருக்கும் பயப்பட வேண்டாம் இதுதான் பீச்சுக்கு நுழைவாயில்  இதைத்தவிர   எல்லா இடம் வழியாகவும் மக்கள் செல்வார்கள். கலக்கல் கன்ஸ்ட்ரக்‌ஷன். இவள் எழுத  அலை அழிக்க என்ன சின்னபுள்ளத்தனமா இருக்கு!!!!!!!! நாகர்கோவிலிலிருந்து 12  கி.மீ, தொலைவில் புத்தளம் அருகில்  அமைந்துள்ள அழகிய இயற்க்கை எழில் கொஞ்சும் கடற்கரையாகும். சுனாமியின் போது நிறைய பேரையும், வண்டிகளையும் தன்னகத்தே அணைத்து கொண்டு சென்ற தாயுள்ளம் கொண்ட கடற்கரை. குழந்தைகள் பூங்காவும் கண்காணிப்பு கோபுரமும். பயப்பட  வேண்டாம் இது நானேதான் (ஒரு அல்ப ஆசைதான் ) என் மனைவி என்ன ஒரு சந்தோஷம் வீடு கட்டியதில்  இது வெளி உலகுக்கு சமீபத்தில் தெரிய் தொடங்கி புதிய சுற்றுலா தலமாக மாறி வருகிறது. இங்கு நவீன மயமாக்ப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான் எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் நகர மக்களுக்கு இது இயற்க்கை அளித்த ஓர் வரப்பிரதாமாகும். ஒரு காரை பனை மரத்தின் உயரம் தூக்கி சென்று  மரத்தினிடையே ...

நண்பேன்டா

நவில்தொறும் நூல்நயம்--நண்பேன்டா-தொடர் பதிவு. நண்பர் சென்னை பித்தன் ஐயா அவர்களின் அன்பு அழைப்பை ஏற்று இப்பதிவைத்  தொடர்கிறேன். நாம்  சிறுவயது முதல்  நிறையபேர்களுடன் பழகினாலும் இன்று திரும்பி  பார்க்கையில் நினைவில் வருபவர் சிலரே.  அவர்களைத்தான் நான்  உங்களிடம் பகிர இருக்கிறேன்.   அதில் முதலாவதாக நான் ஒன்றாம் வகுப்பு  முதல் பத்தாம் வகுப்பு வரை  என்னுடன் படித்த  என்னுயிர்த்தோழன்  விமலைப்பற்றி நான் கூறியே ஆக வேண்டும்.  . சாமுவேல் விமல் குமார்: இவரும் நானும் ஒரே தெருவில் தான் வசித்து வந்தோம்.  அவர்கள் அம்மா  இவர்களை மிகவும் அன்பாக நடத்துவது எனக்கு மிக ஆச்சர்யமாக இருக்கும்.  என் வீட்டில் எல்லோரும் மிகுந்த கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள்.  படிக்காவிட்டால் உலகமே இரண்டான மாதிரி கத்துவார்கள், ஆனால் என்  நண்பனின் வீட்டிலோ take it easy policy  தான்.   நானும்  அவரும் ஒன்றாகத்தான் பள்ளிக்கு செல்வோம்.  நல்ல நண்பர். 10-வது வகுப்பு  வரை நாங்கள் ஒன்றாகத்தான் படித்தோம். ...