Skip to main content

தொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்

தொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்

என் முதல் கணிணி அனுபவம் என்கிற தொடர்பதிவு  தொடர்வது போல் நானும்  பல தொடர் பதிவுகளை எழுதி பலரையும் கோர்த்துவிட விரும்புகிறேன்.....
தலையங்கள் நிறைய தேவைப்படுவதால்.... பதிவர்களின் உதவியை நாடுகிறேன்.....


உதாரணமாக................

1. என் முதல் காதல் அனுபவம்.....


2. என் முதல் திருட்டு.......


3. நான் செய்த தவறுகள்..... அன்று முதல் இன்றுவரை.


                     இதுமாதிரி உணர்வுப்பூர்வமான வில்லங்கமான தலையங்கங்கள் வரவேற்க்கப்படுகின்றன......

தன் பெயரை போட்டுவிடுவானோ என்று பீதியிலே பேதி போகிற மாதிரியான தலையங்கங்கள்  வாஞ்சையோடு பரிசீலிக்கப்படும்.

யோசிங்கப்பா.............யோசிங்க.


Comments

நல்லது... அடுத்த வாரம் ஒன்றை ஆரம்பித்து விடுவோம்..!
எனது முதல் பேருந்து பயணம், ரயில் பயணம், விமானம் பயணம், பள்ளியில் முதலில் சேர்ந்தது, முதல் பைக் விபத்து, டிராபிக் போலீஸுக்கு லஞ்சம் குடுத்து தப்பிச்சது, முதல் போலீஸ் ஸ்டேசன் அனுபவம், கிணத்துக்குள்ளே அம்மிணியின் சோப்பை எடுத்து கொடுத்தது எப்படி முதல் அனுபவம் ஹி ஹி...போதுமா இன்னும் வேணுமா ?
என் முதல் காதல் அனுபவம்.....//

ஏற்கனவே உலைக்கை அடி போன்ல வாங்கிட்டு இருக்கேன் இனி இது வேறயா ?
என் முதல் திருட்டு.....//

டீச்சரின் பேனாவை லவட்டியது ஹி ஹி....
நான் செய்த தவறுகள்..... அன்று முதல் இன்றுவரை.//

என்னய்யா எனக்கு ஆப்பு வைக்க சதி நடக்குறாப்ல இருக்கே.
தன் பெயரை போட்டுவிடுவானோ என்று பீதியிலே பேதி போகிற மாதிரியான தலையங்கங்கள் வாஞ்சையோடு பரிசீலிக்கப்படும்.//

அப்போ "முதல் கில்மா படம் அனுபவம்" ஒன்றே போதும் ஹா ஹா ஹா ஹா....சிபி அண்ணன் சொல்ல சொன்னான்.
நாங்க நகம் கடிக்க ஆரம்பிச்சிட்டோம் ..அதான் யோசிக்கிறோம் விஜி!மூழ்கி முத்தெடுத்து அனுப்புகிறோம.

Popular posts from this blog

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

என் முதல் கணினி அனுபவம் - தொடர் பதிவு....!

எனக்கு தமிழ்லயே பிடிக்காத வார்த்தை “தொடர்பதிவு” . ஏதோ வந்தோமா  ஏதாவது இரண்டு லைன் முகநூல்ல கிறுக்கினோமா போனோமான்னு இருக்கிற  என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த மனோவை தனியாக கவனித்துக் கொல்கிறேன்.                      பதிவு எழுதியே வருடங்கள் ஆகிப்போனதால் புதிய பதிவு எழுத எங்கே போகவேண்டும் என்று தேடவே நிறைய நேரம் ஆகிவிட்டது..... ஒரு வழியாக கண்டுபிடித்தும் தொலைத்தாகிவிட்டது. இனிவாயில் வந்ததை  வாந்தி எடுக்க வேண்டியதுதான் பாக்கி.                     முதலில் நான் கணினி வாங்க காரணமே தொழில் ரீதியாக புதிதாக சந்தைக்கு வரும் கேமிரா மற்றும் அதன் உப பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்க வசதியாக இருக்குமே என்றுதான். அதற்காக இணைய இணைப்பும் எடுத்தேன். அப்பொழுதுதான் என் கடைக்கு அடுத்த கடையில் இருக்கும் ஹரீஸ் என்ற நண்பன் பதிவுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அது வால்பையன் மறைந்த நண்பர் பட்டாபட்டி மற்றும் பன்னிக்குட்டி ராமசாமி ஆகிய சீனியர் பதிவர் நண்பர்கள் கலக்கிக்கொண்டிருந்த காலம் அது. இணைய இணைப்பு இருக்கிறது என்பதால்  சும்மா இருக்கின்ற நேரங்களில் அதில் மனதில் தோன்றியவற்றை கிறுக்க ஆரம்பித்தேன

நெல்லையில் மினி பதிவர் சந்திப்பு - ஆபீஸர் அதிரடி.

 இடமிருந்து வலம் ரூபினா மேடம்(நாய்குட்டி மனசு),கெளசல்யா மேடம்(மனதோடு மட்டும்),சகாதேவன் ஐயா(வெடிவால்),ஞானேந்திரன்(யானைக்குட்டி),டைரக்டர்.செல்வகுமார்(selva speaking),சீனா ஐயா(வலைச்சரம்),சங்கரலிங்கம் ஐயா(உணவு உலகம்) நேற்று நெல்லையில் ஒரு அதிரடி பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக ஆபீஸர் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் அழைப்பு விடுத்தார். அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு.செல்வகுமார் அவர்கள்  பங்கேற்க்க இருப்பதாகவும் சொன்னார்கள். ஏற்கனவே பிரமாண்டமாக நடந்த முதல் பதிவர் சந்திப்பில்   நான் பங்கேற்க்க முடியாத வருத்தம் இன்னும் இழையோடிக்க்கொண்டிருப்பதாலும் இன்னும் மிக முக்கியமான நட்சத்திர பதிவர்கள் வருகிறார்கள் என்று சொன்னதாலும் உடனடியாக செல்ல முடிவெடுத்தேன். அதன் படி நெல்லை போய் சேர்ந்தேன். மிகவும் சரியான நேரத்திற்க்கு வந்துசேர்ந்தது சீனா ஐயா தான்( அதிக தொலைவில் இருந்து வந்தவரும் அவர்தான்)                பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர இனிதாக களைகட்ட ஆரம்பித்தது பதிவர் சந்திப்பு .  திவானந்தா சுவாமிகள் தன்னுடைய குளுகுளு அறையை அதற்க்காக ஒதுக்கி கொடுத்தது இன்னும் மகிழ்ச்சியூட்டியது