Skip to main content

Posts

Showing posts from December, 2010

என் வடஇந்திய நண்பனுக்கு கல்யாணம்

       போ ன வாரம்  என் நண்பனின் திருமணம் கான்பூரில்(உத்திர பிரதேசம்) நடைப்பெற்றது.  நண்பனின்   அதீத அன்பின் காரணமாக அழைப்பை ஏற்று நானும் என் மனைவியும் புறப்பட்டோம்.                     அ திகாலை 5.50 க்கு அடைமழையில் ராப்திசாகர் என்ற இரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது.  இரயில் பெட்டிகள் காந்தி தாத்தா காலத்தில் உள்ளது போல் ரொம்ப பழையதாக இருந்தது. சரி  பெட்டி ரொம்ப இருட்டாக இருந்ததால் மின்விளக்கை போடலாம் என்று பொத்தானை துழாவினேன் அங்கே பொத்தான் இருந்ததுக்கு அடையாளமாக ஒரு ஓட்டை மட்டும் இருந்தது, சரி என்று விதியை நொந்தபடி படுத்து உறங்கிவிட்டேன்.  உறக்கம் தெளிந்தபோது மணி 12.00.   கொஞ்சம்  காலைகடன்களை கழிக்கலாமே என்று  கழிவறைக்கு ள் சென்று தாளிட தாப்பாளை(கொண்டியை) தேடினேன் அதுவும் மிஸ்ஸிங்(வாழ்க பிகாரிகள்).                        நி திஷ் குமார் ஆட்சியில் பிகார் முன்னேறியிருப்பதாக சொன்னார்களே  முன்னேறிய பிறகும் இப்படி என்றால் இதற்க்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே தலை சுற்றியது.எல்லாம் முடிந்த பின்  toilet ஐ flush செய்ய லிவரை அழுத்தினேன் கொஞ்சம் இறுக்கமாக இருந

சுத்தம் என்பது சுத்தமாக இல்லை: சர்தார்ஜி !!!!!!

நாம் சினிமாவிலோ அல்லது தொலைக்காட்சியிலோ வெளிநாடுகளை பார்க்கும் போது  அது ரொம்ப சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கிறது. ஆனால் அதன் பின்னால் எத்தனை பேரின் உழைப்பு இருக்கிறது என்பது நமக்கு தெரியாதது அல்ல. ஏனென்றால்  நம் வீட்டை சுத்தமாக வைக்கவேண்டும்  என்றாலே ஒரு நாளைக்கு எத்தனை தடவை துடைக்க வேண்டும்  அப்படி இருக்க ஒரு நாடே சுத்தமாக இருக்க  அனைவரின் கூட்டுமுயற்ச்சி அவசியம்.                                     நம் நாட்டின் (அ)சுத்தம்)  நாம் அறிந்ததே. காரணமும் நாமே. வீட்டை சுத்தமாக்கி குப்பைகளை தெருவில் கொட்டுகிறோம் .   காரில் உணவருந்திவிட்டு  மிஞ்சியவற்றை ரோடில் வீசுகிறோம். இரயில் பயணங்களில் கூட  உண்டபின் எஞ்சியவற்றை  வெளியே வீசிவிடுகிறோம். (உள்ளே போட இடமுவில்லை என்பதும் உண்மைதான்).                                                       நாம்மிடையே மாற்றம் வந்தால் தான்  சுற்றுபுறமும், சுகாதாரமும் வசப்படடும். இந்த விஷயத்தில் தென் இந்தியாவின் நிலையைவிட வட இந்தியாவின் நிலமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அங்கே 6 மாதம் குளிர் காலமாக இருப்பதால்  அவர்கள் அந்த காலத்தில் கொஞ்சம் குளிக்க யோசிப்பார்கள்