Skip to main content

Posts

Showing posts with the label படைப்பு

பாம்பு கடித்தாலும் மருந்தடித்தாலும் சாகத்தான் வேண்டுமா???

           நம் ஊரில் பாம்பு கடிக்கும்,மருந்தடித்தலுக்கும் பஞ்சமே கிடையாது.  அடிச்சவன்(கடிபட்டவன்) மட்டையாகி கிடக்க அவனை மருத்துவ மனை கொண்டு சென்றால் மருத்துவர் கேட்கும் முதல் கேள்வி என்ன பாம்பு கடித்தது ??? (அல்லது என்ன மருந்தை குடித்தான்???). பாம்பு படம் எடுக்கும் என்று படித்திருக்கிறேன் ஆனால் எந்த பாம்பும் அதை கடித்தவனுக்கு அந்த படத்தை கொடுத்ததாக கேள்விப்படவில்லை. அப்படி கொடுத்திருந்தால் அதை மருத்துவருக்கு காண்பிக்கலாம் அவரும் சிகிட்சையை ஆரம்பிப்பார்.                 ஆனால் இந்த பாழாய்ப்போன பாம்பு படம் எடுப்பதோடு சரி.     சரி அதன் பெயர் மற்றும் முகவரி ஏதாவது கொடுத்துவிட்டு போனாலும் நன்றாக இருக்கும். ஆனால் இது அந்த பாம்பிற்க்கும் தெரிவதில்லை அந்த மருத்துவர்க்கும் புரிவதில்லை. மருந்தடித்தவனாவது பாட்டிலை எங்காவது வைத்திருப்பான் ஆனால் இந்த பாம்பை எங்கே போய் பிடிக்க????... இதில் வேற அந்த பாம்பை நாம் பிடித்து கடித்தால் அந்த விஷம் இறங்கிவிடும் என்ற புரளி வேறு கிளப்பிவிட்டுகிட்டு இருக்காங்க. அதை பார்த்தாலே ப...

விளையாடுவதையே மறந்துபோன இன்றைய மழலையர்கள்

          நேற்று ஒரு வயதான பெண்மணி ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது இந்த கால குழந்தை வளர்ப்பு முறையை பற்றி வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருந்தார். மேலும் அவர் கூறுகையில் நானும் 5 குழந்தைகளை பெற்று வளர்த்தவள் தான் இன்று 5 பேருமே மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஆனால் இன்றய குழந்தைகள் விளையாட்டு என்ற ஒரு விஷயத்தை இழந்தே விட்டார்கள் என்றே செல்ல வேண்டும் என்றார்.                    அந்த காலங்களில் பெண் குழந்தைகள் பட்டம் விடுதல், பல்லாங்குழி, பாண்டி மற்றும் இன்னும் பலவிதமான விளையாட்டுகளை விளையாடுவார்கள். ஆண் குழந்தைகள் கோலி விளையாட்டு, பம்பரம் விளையாட்டு,கோகோ, கபடி,மரம் ஏறுதல் குளத்தில் நீந்துகள் மற்றும் எல்லா மொள்ளமாரித்தனங்களையும் செய்து ஒருவிதத்தில் பொது அறிவு மிக்கவர்களாக இருந்தார்கள். இந்த சாக்கில் நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டவும் கற்றிருப்பார்கள். கொஞ்சம் முட்டு தேயும் அவ்வளவுதான் .                     இதில் குழந்தைகளின் தனித்திறன் வெளிப்பட்டு தானாகவே ஒரு ...

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக...

நண்பேன்டா

நவில்தொறும் நூல்நயம்--நண்பேன்டா-தொடர் பதிவு. நண்பர் சென்னை பித்தன் ஐயா அவர்களின் அன்பு அழைப்பை ஏற்று இப்பதிவைத்  தொடர்கிறேன். நாம்  சிறுவயது முதல்  நிறையபேர்களுடன் பழகினாலும் இன்று திரும்பி  பார்க்கையில் நினைவில் வருபவர் சிலரே.  அவர்களைத்தான் நான்  உங்களிடம் பகிர இருக்கிறேன்.   அதில் முதலாவதாக நான் ஒன்றாம் வகுப்பு  முதல் பத்தாம் வகுப்பு வரை  என்னுடன் படித்த  என்னுயிர்த்தோழன்  விமலைப்பற்றி நான் கூறியே ஆக வேண்டும்.  . சாமுவேல் விமல் குமார்: இவரும் நானும் ஒரே தெருவில் தான் வசித்து வந்தோம்.  அவர்கள் அம்மா  இவர்களை மிகவும் அன்பாக நடத்துவது எனக்கு மிக ஆச்சர்யமாக இருக்கும்.  என் வீட்டில் எல்லோரும் மிகுந்த கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள்.  படிக்காவிட்டால் உலகமே இரண்டான மாதிரி கத்துவார்கள், ஆனால் என்  நண்பனின் வீட்டிலோ take it easy policy  தான்.   நானும்  அவரும் ஒன்றாகத்தான் பள்ளிக்கு செல்வோம்.  நல்ல நண்பர். 10-வது வகுப்பு  வரை நாங்கள் ஒன்றாகத்தான் படித்தோம். ...