பின் தொடரரும் நண்பர்கள்

Thursday, February 9, 2012

பாம்பு கடித்தாலும் மருந்தடித்தாலும் சாகத்தான் வேண்டுமா???

          நம் ஊரில் பாம்பு கடிக்கும்,மருந்தடித்தலுக்கும் பஞ்சமே கிடையாது.  அடிச்சவன்(கடிபட்டவன்) மட்டையாகி கிடக்க அவனை மருத்துவ மனை கொண்டு சென்றால் மருத்துவர் கேட்கும் முதல் கேள்வி என்ன பாம்பு கடித்தது ??? (அல்லது என்ன மருந்தை குடித்தான்???). பாம்பு படம் எடுக்கும் என்று படித்திருக்கிறேன் ஆனால் எந்த பாம்பும் அதை கடித்தவனுக்கு அந்த படத்தை கொடுத்ததாக கேள்விப்படவில்லை. அப்படி கொடுத்திருந்தால் அதை மருத்துவருக்கு காண்பிக்கலாம் அவரும் சிகிட்சையை ஆரம்பிப்பார்.

               ஆனால் இந்த பாழாய்ப்போன பாம்பு படம் எடுப்பதோடு சரி.     சரி அதன் பெயர் மற்றும் முகவரி ஏதாவது கொடுத்துவிட்டு போனாலும் நன்றாக இருக்கும். ஆனால் இது அந்த பாம்பிற்க்கும் தெரிவதில்லை அந்த மருத்துவர்க்கும் புரிவதில்லை. மருந்தடித்தவனாவது பாட்டிலை எங்காவது வைத்திருப்பான் ஆனால் இந்த பாம்பை எங்கே போய் பிடிக்க????... இதில் வேற அந்த பாம்பை நாம் பிடித்து கடித்தால் அந்த விஷம் இறங்கிவிடும் என்ற புரளி வேறு கிளப்பிவிட்டுகிட்டு இருக்காங்க. அதை பார்த்தாலே பேதி போகும் போகும்போது பிடிப்பதாவது ... கடிப்பதாவது....!!!!! நல்லா சொல்றாங்கையா டீட்டெய்லு.

                பூச்சி மருந்து குடித்தவனுக்கு உடனேயே சிகிட்சை ஆரம்பிப்பது போல் என்ன பாம்பு கடித்தாலும் அது என்ன பாம்பு என தெரியாவிட்டாலும் பலன் அளிக்கும் சிகிட்சை முறை அவசியம். மருத்துவமனைக்கு வந்த பிறகும் அநியாயமாக ஒரு உயிர் போவதை மருத்துவம் அனுமதிக்ககூடாது.

9 கருத்துரைகள்:

Sankar Gurusamy said...

பல விதமான விசங்களுக்கு பலவிதமான மருந்துகள் இருப்பதே இந்த நிலைக்கு காரணம். ஆனால் நம் நாட்டு வைத்தியத்தில் இதை கண்டுபிடிக்க ஏதாவது உபாயம் இருக்கும். அதை உபாயத்தை யாராவது தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு டாக்டர்கள் கத்துக்கிட்டா சிறப்பாக இருக்கும்.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

Madhavan Srinivasagopalan said...

அந்த பாம்பு பேருல எஃப்.ஐ.ஆர் போடச் சொல்லாம இருக்காங்களே..
அதுவரைக்கும் நன்றி..

செல்விகாளிமுத்து said...

அதை பார்த்தாலே பேதி போகும் போகும்போது பிடிப்பதாவது ... கடிப்பதாவது....!!!!! நல்லா சொல்றாங்கையா டீட்டெய்லு/////ஹா ஹா ஹா!!பேதி!!!!!இரண்டாவது பாம்பு,நிஜமாகவே பயமாக இருக்குலா!!

கே. ஆர்.விஜயன் said...

@ Sankar Gurusamy :

பாம்பு கடி வாங்கியவனிடம் என்ன பாம்பு என்ன்று கேட்டால் அவன் என்ன சொல்வான். எல்லோருக்கும் எல்லா பாம்பைப்பற்றியும் டீடெயில் எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இருட்டில் கடித்தால் வாய்ப்பே இல்லை. ஆனால் வைத்தியர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். உங்கள் கருத்திற்கு நன்றி சங்கர்.

கே. ஆர்.விஜயன் said...

@ Madhavan Srinivasagopalan : சரிதான்
நம்ப டாக்டர்கள் சொன்னாலும் சொல்லுவாங்க.ஆப்பரேசனை அவர்கள் செய்தாலும் ரிஸ்க்கை நோயாளிகள் மேல் வைப்பவர்கள் ஆயிற்றே. அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

கே. ஆர்.விஜயன் said...

@ செல்விகாளிமுத்து : பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள் நீங்கள் நடுங்குவதில் என்ன ஆச்சர்யம்.

சென்னை பித்தன் said...

உங்களுக்கு Liebster Blog விருது வழங்குவதில் நான் பெருமை அடைகிறேன்.பாருங்கள் என் இன்றைய பதிவு.

FOOD NELLAI said...

உண்மையில் அனைவர் மனதிலும் எழும் ஐயப்பாடே உங்கள் பதிவில் வெளிப்பட்டுள்ளது. இதற்கு, மருத்துவத்துறை சார்ந்தவர்கள் பதிலுரைத்தால் நலம்.

middleclassmadhavi said...

எனக்குப் பிடித்த தளமாக உங்கள் வலைப்பூவுக்கு 'லீப்ஸ்டர்' விருதை அறிவித்து மகிழ்கிறேன். சுட்டி இதோ: http://middleclassmadhavi.blogspot.in/2012/02/blog-post.html