பின் தொடரரும் நண்பர்கள்

Sunday, February 20, 2011

இந்த நாடுகளைவிட நம்ம ஊரு பெருசுங்க

*  பனாமா நாடு அசாம் மாநிலத்தை விட சிறியது.

*   அயர்லாந்து அருணாசால்ப்  பிரதேசத்தைவிட சிறியது.

*    இங்கிலாந்து ஆந்திர பிரதேசத்தை விட சிறியது

*     இத்தாலி  நம்ம மகாராஷ்டிரத்தை விட சிறியது.( ஆனாலும் இந்தியாவை            ஆள்கிறது பாருங்க)

*   ஓமான் நாடு மத்திய பிரதேசத்தை விட சிறியது

*  கியூபா நாடு தமிழ் நாட்டை விட சிறியது

*  டென்மார்க் ஹரியானாவைவிட சிறியது.

*  இஸ்ரேல் மேகலாயா மாநிலத்தைவிட சிறியது.

*  கம்போடியா குஜராத் மாநிலத்தை விட சிறியது.

*  உருகுவே கர்நாடகத்தை விட சிறியது.Thursday, February 17, 2011

நரேந்திரமோடி : முன்மாதிரியான முதல்வர்

              1950 ஆம் ஆண்டு  செப்டம்பர்  17 -ல்  குஜராத்திலுள்ள வட்நகர்(vadnagar) என்ற சாதாரண கிராமத்தில் பிறந்தவர். சோசியல் சயின்ஸ்- ல் முதுகலை பட்டம் பெற்றவர்.  இவருடைய  அலுவலகம் ISO 9001:2008 CERTIFIED ஆகும்.
                                   முதன் முதலாக அக்டோபர் 2001-ல் குஜராத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த காலகட்டத்தில் தான் குஜராத்தில் புஜ் என்ற இடத்தில் மாபெரும்  பூகம்பம் ஏற்பட்டு குஜராத் மாபெரும் உயிர் மற்றும் பொருள் இழப்பைக் கண்டது.  அதிலிருந்து  குஜராத்தை மீட்டெடுத்து இந்தியாவிலேயே  ஆச்சரியப்படும் வகையில் முன்னணி மாநிலமாக ஆக்கிய பெருமை  மோடியையே சாரும்.  மதுக்கடை வருமானம் அங்கு கிடையாது. ஓட்டு வங்கிமற்றும் இலவச (அரிசி) அரசியல் அவர் செய்வது கிடையாது. அவருடைய ஒரே முழக்கம் குஜராத்தின் வளர்ச்சி.  அதையும் நம் அரசியல்வாதி மாதிரி பேசிக்கொண்டிராமல் செயலில் காட்டியவர். அனைத்து அரசு இயந்திரத்தையும் கணினிமயம் ஆக்கியவர்.
                 மோடியும், அவரது அரசும் ஏகப்பட்ட  அவார்டுகளை(பணம் கொடுத்து வாங்கியது அல்ல)   வென்றுள்ளது குறிப்பிடதக்கது. உலகத்தின் பார்வையை குஜராத்தின் பக்கம் திருப்பியவர் இவர். ஏழைகள் இருக்கும் வரை இலவசமாக் கொடுப்போம் என்று காமடி செய்யாமல் தொழிலதிபர்களின் சொர்க்கமாக குஜராத்தை மாற்றி குஜராத் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியவர். இவரது இதயமும் இனிக்கவுக் கண்கள் பனிக்கவும் யாரையும் வைத்துக்கொள்வதில்லை.  ஓட்டுக்காக அரசியல் நடத்தாமல் யார் தவறு செய்தாலும்  அசுரத்தனமாக அதை நசுக்குபவர்.

சிறுபான்மையினரின் எதிரியாக நரேந்திர மோடி சித்தரிக்கப்படுவது மிகவும் துரதிஷ்டவசமானது.    குஜராத் கலவரத்திற்க்கு மூல காரணமாக இருந்தது  கோத்ரா இரயில் எரிப்பு சம்பவம் ஆகும்.
                          1984 ஆம் ஆண்டு  அக்டோபர் 31 ம் தியதி காங்கிரஸ் ஆட்சியில்  இந்திராகாந்தி ஒரு சீக்கியரால் சுட்டுக்கொல்லப்பட்டபோது அதன் தொடர்பாக நடந்த கலவரத்தில்   ஏராளமான  சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதை நியாயப்படுத்த முடியாது என்றாலும்  ஒருவர்  தனது முட்டாள் தனத்தால் செய்யும் செயலால் ஏராளமான  அப்பாவிகள் சாவதை யாராலும் தடுக்கமுடியாததாக இருக்கிறது. ஆனாலும் சீக்கிய மக்கள் அதையெல்லாம் மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர்.
                             அது போல் இஸ்லாமிய சகோதரர்களும் அதை மறந்து  தேசிய நீரோட்டத்தில் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.  பாபர் மசூதி இடித்த டிசம்பர் 6 ஐ துக்க நாளாக அறிவிப்பது, குஜராத் கலவரத்தை  பேசிப்பேசி மன துவேசத்தை வளர்ப்பது  எந்ந விதத்திலும் நன்மையைத்தராது. அரசியல்வாதிகள், மற்றும் மதகுருமார்கள் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள இதை பயன்படுத்துகிறார்கள்.  ஒவ்வொரு இஸ்லாமிய  சகோதரனுக்கும்,மாற்றுமத சகோதரனுக்கும்  இடையே தனிப்பட்ட முறையில் எந்த பகையும் இல்லை.
வன்முறையால் பாதிப்பு எல்லோருக்கும் உண்டுதான், உதாரணமாக

*  25 செப்டம்பர் 2002 ல் அக்சர்தாம் கோவிலில் நடந்த துப்பாக்கி சூட்டில் 29 பக்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

 * 17 பெப்ரவரி 2002 ல் கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தில் 27 பேர் கொல்லப்பட்டனர்.

* 27 செப்டம்பர் 2006 ல் இந்திய பாராளுமன்றம் மீது  தாக்குதல் நடத்தப்பட்டது அதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

* 14பிப்ரவரி 1998 ல் கோவையில் 17 இடங்களில் ஏற்ப்பட்ட  குண்டுவெடிப்பில்     33 பேர் உயிரிழந்தனர் மேலும் 158 பேர் படுகாயமடைந்தனர்.

*      26 நவம்பர் 2008 ல் நடந்த மும்பை தாஜ் ஹோட்டல் துப்பாக்கிச்சூட்டில்  60 பேர் கொல்லப்பட்டனர் நூற்றுக்கணக்கான பேர்  படுகாயமடைந்தனர்.

* 15  செப்டம்பர் 2008 ல் டெல்லியில்  பஜாரில் நடந்த குண்டுவெடிப்பில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
                   
                    இவையனைத்தும் இஸ்லாமிய தொடர்புடைய  இயக்கங்களால்  நடத்தப்பட்டதாக பத்திரிகை செய்திகள் தெரிவித்தாலும்  இதை ஒரு சோக தினமாகவோ அல்லது அந்த நாளை ஞாபகம் வைத்து பேரணியோ அல்லது அமைதி ஊர்வலமோ இதனால்  பாதிக்கப்பட்ட மக்கள் நடத்துவதில்லை.  தண்டனை கொடுக்கவேண்டிய விஷயத்தை அரசிடமே விட்டுவிட்டனர்( !!!!)   இதுவே ஒரு முதிர்ச்சியடைந்த சமுதாயத்தின் அடையாளம் .  

இனி பேதம் களைவோம், சகோரத்துவம் பேணுவோம்.

  இந்தியானாக இருப்பதில் பெருமை கொள்வோம்.               

Sunday, February 13, 2011

படித்ததில் பிடித்தவை( jokes)

படித்ததில் பிடித்தவைன்னாலே  copy and paste  தான் புரிஞ்சிருப்பீங்க இருந்தாலும் எனக்கு புடிச்சிருக்கு உங்களுக்கு..................????


1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....
2) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.
3) மூன்று மொக்கைகள்: a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?
c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?

7)
ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது?....

8)
காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....

9)
என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...

11) True GK Facts:
**
அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.
**
ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.
**
பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
**
என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?.....

12)
ஜனவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 !அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி - 14 !!

13)
மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?

17)
தத்துவம் 2010
"
லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"
கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!
இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....

நன்றி  நன்றி

Wednesday, February 9, 2011

எங்கள் தேசம் இந்தியா ???!!!!!!!!!!!!!!!!!!!!!

அகரமும் சிகரமும்
எங்கள் இந்திய தேசத்தில் எல்லாவகையிலும்  உலகப்புகழ்  பெற்றவ்ர்களுக்கும் திறமையானவர்களுக்கும் பஞ்சமே இல்லை என்பதை நான் சொல்லவேண்டியதில்லை நீங்களே பாருங்கள்.


விளையாட்டு

இவருக்கு முன்னாலே கிரிக்கெட் இருந்தாலும்  இப்போ  கிரிக்கெட் இவரைச்சுற்றிதான் இருக்கிறது. கிரிக்கெட்டில் (சூதாட்டத்தில் அல்ல )அதிகம் சம்பாதித்தவர் இவர். கிரிக்கெட்டின் கடவுள் என வருணிக்கப்படும் இவர் எந்த வித பிரச்சனையிலும் சிக்காதவர்.  இந்திய மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்.இந்தியாவின்  ஹாக்கி அணிக்கு கேப்டனாக இருந்தவர். சச்சினின் சம காலத்தில் வந்தவர்தான் என்றாலும்  மும்பையில்  வாடகை வீட்டிலே  வசித்துவந்தார். இரண்டும்  உலக அளவிலான விளையாட்டாக இருந்தாலும்  போதுமான  அங்கீகாரமின்மையால் (வருமானமின்மையால்) சச்சினைப்பார்த்தே  நொந்துப்போனவர்.


ஆன்மீகம் 

*  ’ கதவைத் திற காற்று வரட்டும்”  என்று ரஞ்சிதமாகச்  சொன்னாலே தமிழக மக்களின் மனதில் டாண் என்று  வரும் உருவம் இதுதான் . இந்தியாவில் உலாவிவரும்  பல கார்பரேட் சாமியார்களில் அப்பட்டமாக பிடிபட்டதால் மீடியாக்களில்  நூடில்ஸாக நொறுங்கப்பட்டாலும்  கொஞ்சமும் வலிக்காத மாதிரியே சிரித்துகொண்டு சமாளிப்பவர் .  இளம்  வயதிலேயே பல கோடிகளுக்கு சொந்தக்காரர்.   முற்றும் துறப்பபதுதான் துறவம் என்பதி தவறாக புரிந்துகொண்டவர்.     புலி பசித்தாலும் புல்லைத்தின்னாது என்பது போல்  கம்பிகளுக்கு பின்னாலும் உலர் பழங்கள்தான்(dry fruits) வேண்டும் என்று அடம் பிடித்தவர்.     என்னதான் நடந்தாலும் சூடு சொரணையே இல்லாதவர் மாக்குபவர். 

*  காஸ்டியூமில் மட்டும் (நித்தியைப்போல்) சிறிய ஒற்றுமை இருந்தாலும் அவதார புருஷர் இவர்.  அமெரிக்காவில் போய் ஆற்றிய சொற்பொழிவில்  ஒரு புதிய ட்ரெண்ட்-ஐ உருவாக்கி இந்தியாவின் அபிமானத்தை உலகுக்கு தெரியப்படுத்தியவர்."நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!" என்றவர்.


அரசியல் 


ஐம்பது ஆண்டுகாலம் அரசியலில் இருந்தாலும்  மக்கள் சேவை என்பதை  (தன்) மக்கள் சேவை என்ற தவறான புரிதலால் நாட்டுமக்களின் நம்பிக்கையை இழந்து விட்டவர்.  நீண்ட அரசியல் பயணத்தின்  பயனாக கைது செய்யப்பட்டதால் ஒருவர் குற்றவாளி ஆக முடியாது என்ற உயரரிய தத்துவத்தை  கண்டுபிடித்து நாட்டு மக்களின்  கோபத்திற்க்கு பெட்ரோல் ஊற்றியவர்.  அவருக்கு பிடித்தவர்கள் என்னதான் செய்தாலும்  அவரை  அரவணைத்து கொண்டு செல்பவர்.  இந்த நேர்மை(!) மக்களுக்கு  ரொம்ப பிடித்துவிட்ட காரணத்தினால்  அதற்க்கான பரிசை கொடுப்பதற்க்காக  ஆவலாக இருக்கின்றனர்.

பிகாரில்  நடைப்பெற்ற  கோமாளித்தனமான ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து (நாட்டு) மக்கள் நலனே   தன் நலன் என்று கருதி அயராது உழைத்த காரணத்தினால் மக்களின் நன்மதிப்பைப்பெற்று இன்று அசைக்கமுடியாத  மக்கள் ஆதரவோடு ஆட்சி செய்பவர்.  பாராட்டப்பட வேண்டிய நேர்மையான  இந்திய அரசியல்  தலைவர்கள் சிலரில் இவர் முதன்மையானவர்.


ஊழல் 


ஸ்பெக்ட்ரம் என்ற வார்த்தையை பேட்டண்ட் எடுக்காமலேயே காலாகாலத்திற்க்கும் சொந்தமாக்கிய  கதாநாயகர்.  இந்திய வரலாற்றில் முதன் முறையாக  மீடியாவிற்க்கு வந்து சில வருடங்களே ஆன  இமாலய ஊழலை செய்து இந்திய நாட்டிற்க்கும், தமிழ் நாட்டிற்க்கும் அவர் சார்ந்த கட்சிக்கும்  பெருமை தேடி தந்தவர்.  அந்த சாதனைக்காக பிரதமர் அவரது தோளில் தட்டி கொடுத்து பாராட்டியதும் , அவரது கட்சி சார்பில்அந்த சாதனைக்காக  அவருக்கு  தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் நீங்கள் அறிந்ததே.

 இந்திய மக்களுக்கு திறமை  இருக்கிறது, சரியாக பயன்படுத்தினாலும் தவறாக பயன்படுத்தினாலும் பிரபலமாகிறார்கள்.  ஆனால் திறமையை நாட்டின் முன்னேற்றத்திற்க்காக மட்டும்  பயன்படுத்தினால் காந்திமாதிரி (ரூபாய் )நோட்டு  இல்லாவிட்டாலும்  நோட்டில் இருப்பீர்கள்.

 இன்னும்  நிறைய இருந்தாலும்  எழுத எனக்கு நேரம்  இருந்தாலும்  படிக்க ஆள் இருக்காது  என்ற ஒரே காரணத்தால்   தற்போதைக்கு  முடிக்கிறேன்.


Tuesday, February 8, 2011

18 + கேள்விகள் என் பிள்ளைகள் என்னிடம் கேட்டவை.????

1. The underpart of the Queen elizebette is always wet why ?


2..A  is father of  B. but  B is not a  son of  A ?


விடை தெரிந்தவர்கள் ஓட்டு போட்டுட்டு போய்கிட்டே இருங்க. தெரியாதவங்க கண்டிப்பா என்னுடைய முதல் பின்னூட்டத்தை போய் பாருங்க.

Thursday, February 3, 2011

சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது...................................

 நண்பர் : ஏம்பா ...வீடு ஒழுகுதே .... ஓடு  மாத்தக்கூடாதா?

வீட்டுக்காரர் : இப்ப எப்பிடி மாத்தமுடியும்....... அதான் மழை பெய்யுதே......

நண்பர் : அட நீ ஒண்ணு.... இப்பவா மாத்த சொன்னேன் ... வெயில் காலம் வருமில்ல அப்ப மாத்து.

வீட்டுக்காரர் : அப்ப எதுக்கு மாத்தணும்........ அப்பதான் ஒழுகாதே.   
                                        ***********************************

வேட்பாளர் : பொதுமக்களே ! வரும் தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை எல்லாம் குப்பை தொட்டியில்  போடுங்கள்.

வாக்காளார்:  என்னப்பா இது அநியாயம்.... வாக்கை குப்பை தொட்டியில் போட சொல்றாரே.

நண்பர்  : அது  ஒண்ணுமில்லீங்க......... அவருடைய சின்னம்  குப்பை தொட்டியாம்.
                                             ***********************************

கடவுள் : பக்தா உன் பக்தியை மெச்சினேன்!  உனக்கு என்ன வேணும் கேள் !

பக்தன் : எனக்கு என்ன வேணும்னு தெரியாத நீயெல்லாம்  கடவுள் -னு நான் எப்படி நம்பறது.
                                            ***********************************

பெரியவர்  : தம்பி உடம்பு சரியில்லையா.... டாக்டரிடம் போய் வா................
இளைஞன் : போய்தான் ஆகணுமா?

பெரியவர்  :ஆமாம்........... டாக்டர் பிழைக்கணும்.

இளைஞன் : அவர் நிறைய மருந்து எழுதுவாரே.

பெரியவர்  : எல்லா மருந்தையும் வாங்கு ..... ஏன்னா மருந்துகடைக்காரர் பிழைக்கணும்.

  இளைஞன் :    அவ்வளவும் சாப்பிட்டே ஆகணுமா ?

  பெரியவர்  : எதையும் சாப்பிடாதே .... ஏன்னா நீ பிழைக்கணும்.  
                                *************************************    

மாணவர்கள் : (கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தின் மீது உட்கார்ந்துள்ள      குரங்கைப்பார்த்து)  ஹை ..............குரங்குடா.............

ஆசிரியர் : (அவரும்  பார்த்துவிட்டு கிண்டலாக  என்ன நியூ அட்மிஷனா.........

மாணவன்  : இல்ல சார்  நியூ அப்பாயின்மெண்ட் சார் !
                                     ************************************ 

ஆசிரியர் : மாணவர்களே நல்ல கவனியுங்க..... இந்த குடுவையில் அமிலம் இருக்கு..... இப்ப நான் என் பையிலிருந்து ஒரு ரூபாய் நாணயத்தை  இதுல போடறேன்...... இது கரையுமா !   கரையாதா!
மாணவர்கள் : (ஒரே குரலில்) கரையாது சார்.................

ஆசிரியர் : வெரிகுட் ! எல்லோரும் கரெக்டா சொல்லிட்டீங்களே !


 மாணவர்கள் :   கரையிரமாதிரி இருந்தா உங்க காசை போடுவீங்களா 
சார் !..........................    
                           ****************************************


அடிபட்டவர் : ஏண்டா மோதினே ?

இடித்தவர்  : பிரேக் பிடிக்கல சார் !

 அடிபட்டவர் : பார்க்க புது வண்டியா இருக்கு பிரேக் பிடிக்கலேன்னு பொய் சொல்றியே !

இடித்தவர் : நான் பிரேக் பிடிக்கல சார்.

                               *****************************************