பின் தொடரரும் நண்பர்கள்

Saturday, December 31, 2011

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

Tuesday, December 20, 2011

இது என் பார்வையின் கோளாறு............????????

       இந்தியன் வங்கி மிகவும் மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தது. எப்பொழுதும் கூட்டமாக இருக்கும் வங்கி.... உலகிலேயே மிகவும் மெதுவான இணைய இணைப்பை கொண்டதாக இருப்பதால் ஒரு ஆள் பணம் கட்டவே ஒரு மணிநேரம் ஆகும். அதனால் அந்த வங்கியில் எப்போ போனா ஆளே இருக்காது என்று PH.D பண்ணிவிட்டேன். உணவு இடவேளைக்கு கொஞ்சம் முன்னால் சென்றால் கூட்டம் இருக்காது. அப்படியே இன்றும் சென்றேன் வழக்கம்போல்.


                              எல்லா கவுண்டர்களிலும் ஒரிரு ஆட்களே இருந்தனர். என் மனம் மகிழ்ச்சியால் துள்ளியது ஏதோ வங்கியில் ஒரு லட்சம் டெபாசிட் பண்ணியது மாதிரி. ஒரு கவுண்டரை தேர்ந்தெடுத்து போய் நின்றேன். மிகவும் ஆற அமர என் முன்னால் நின்றவரின் நோட்டுக்களை ரிசர்ச் பண்ணிக்கொண்டிருந்தார். அடுத்தாக என் முறையும் வந்தது.


                               மிகவும் அலட்சியமாக என்னிடமிருந்து பணத்தை வாங்கினார். என் மனம் சிந்தித்தது , நானும் மனிதன் தான் அவரும். படிப்பு கூட இருவருக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை. ஏதோ ஒரு நல்ல மூடில் வங்கி பரீட்ச்சை  எழுதியிருப்பார் அதனால் கவுண்டரின் அந்தப்பக்கம் அவர் இந்தப்பக்கம் நான். இருந்தாலும் ஒவ்வொரு நோட்டாக அந்த மெசினில் வைத்து செக் பண்ணுவதும்  அடுக்குவதுமாக இருந்தார். ஒருவேளை தகுதிக்கு மீறிய சம்பளம்தான் இந்த இறுமாப்பை கொடுக்குமோ???? என் மனம் எண்ணியது.  என்னுடைய தொழிலில்  வாடிக்கையாளரிடமிருந்து பணம் வாங்குவது ஒரு நிகழ்வு. இவர்களுக்கு அதுவே வேலை. எங்களுக்கு இப்படி ஆற அமர ஒவ்வொரு நோட்டாக ஆய்வு செய்ய சமயம் இருப்பதில்லை. கொடுக்கிற பொருளை செக் பண்ணி கொடுக்கவே சமயம் இருப்பதில்லை அதனிடடையில் இதெல்லாம் ஒரு  தூசிதான்.

                    அவர் மூக்குக்கண்ணாடியினூடே என்னை பார்ப்பதும் சீல் குத்துவதுமாக இருந்தார். அவர் இருந்த முறையே சரியில்லாமல் தான் இருந்தது. மிகவும் நிதானமான வேலை செய்யும் முறை. எல்லாம் எரிச்சலூட்டுவதாகத்தான் இருந்தது. ஒரு வழியாக செல்லான்னைத்தந்தார். அவருக்கும் உணவு இடைவேளை வந்தது. கவுண்டரை அடைத்துவிட்டு நாலுகாலில் நடந்து வெளியேறினார் ..... என மனம் திக் என்று குளிர்ந்தது........ எல்லா கோபமும் எங்கோ சிட்டாய் பறந்தது.         

Monday, December 19, 2011

இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே...................


    பஞ்சத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறு பையன் ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் ஐ.நா. சபை நடத்திய முகாம் ஒன்றுக்கு உணவுக்காக ஊர்ந்து செல்கிறான். இந்த பையன் எப்போது சாவான் நாம் சாப்பிடலாம் என்று பையனை தூக்கி செல்ல தயாராக அருகிலேயே பிணம் தின்னி கழுகு ஒன்று காத்திருப்பதையும் காணலாம். இந்த பையன் உயிர் பிழைத்தானா அல்லது கழுகுக்கு இரையானானா என்று யாருக்கும் தெரியாது. ஏனென்றால் இந்த போட்டோவை எடுத்த போட்டோகிராபரும், போட்டோ எடுத்த உடன் அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டார்.


          இந்த படத்தை பார்த்ததும் உலகமே பெரும் அதிர்ச்சிக்குள்ளானது. அமெரிக்காவில் பத்திரிகையாளர்களுக்கு கொடுக்கப்படும் மிகச்சிறந்த விருதான புலிட்சர் விருது இப்படத்திற்கு கிடைத்தது. எனினும் இப் படத்தை எடுத்த போட்டோகிராபர் கெவின் கார்டர் மனம் உடைந்து 3 மாதங்கள் கழித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் கடைசியாக கடவுளுக்கு எழுதிய கடிதம் ஒன்றும் கிடைத்தது.


          அன்புள்ள கடவுளுக்கு : நான் எனக்கு கிடைத்த சாப்பாட்டை இனி எப்போதும் வீணாக்க மாட்டேன். அது எவ்வளவு மோசமாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த பையனை காப்பாற்றும் படியும் இந்த துயர நிலையிலிருந்து அவனை மீட்குமாறும் நான் வேண்டிக்கொள்கிறேன்.நாங்கள் இனிமேல் உலகில் நடப்பதைகூர்ந்து கவனிப்போம். எங்களை பற்றி மட்டுமே கவனித்துக்கொண்டிருந்க்க மாட்டோம். இந்த படத்தை பார்க்கும்போதெல்லாம் நாங்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்பதை எங்களுக்கு நினைவூட்டிக்கொண்டிருக்கும். இனி ஒருபோதும் பிறருக்கு கொடுக்க வேண்டியதை கொடுக்காமல் வைத்திருக்க மாட்டோம்.


         இக்கடிதத்தை நமது நண்பர்களிடம் காண்பியுங்கள். இந்த உலகில் எங்கு யார் துயரங்களை அனுபவித்தாலும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்யட்டும். யாரெல்லாம் சாப்பாட்டை வீணாக்குகிறார்களோ அவர்களிடம் இப்படத்தை காண்பியுங்கள். அவர்கள் இதைப்பற்றி நினைத்து பார்க்கட்டும்