Skip to main content

இது என் பார்வையின் கோளாறு............????????

       இந்தியன் வங்கி மிகவும் மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தது. எப்பொழுதும் கூட்டமாக இருக்கும் வங்கி.... உலகிலேயே மிகவும் மெதுவான இணைய இணைப்பை கொண்டதாக இருப்பதால் ஒரு ஆள் பணம் கட்டவே ஒரு மணிநேரம் ஆகும். அதனால் அந்த வங்கியில் எப்போ போனா ஆளே இருக்காது என்று PH.D பண்ணிவிட்டேன். உணவு இடவேளைக்கு கொஞ்சம் முன்னால் சென்றால் கூட்டம் இருக்காது. அப்படியே இன்றும் சென்றேன் வழக்கம்போல்.


                              எல்லா கவுண்டர்களிலும் ஒரிரு ஆட்களே இருந்தனர். என் மனம் மகிழ்ச்சியால் துள்ளியது ஏதோ வங்கியில் ஒரு லட்சம் டெபாசிட் பண்ணியது மாதிரி. ஒரு கவுண்டரை தேர்ந்தெடுத்து போய் நின்றேன். மிகவும் ஆற அமர என் முன்னால் நின்றவரின் நோட்டுக்களை ரிசர்ச் பண்ணிக்கொண்டிருந்தார். அடுத்தாக என் முறையும் வந்தது.


                               மிகவும் அலட்சியமாக என்னிடமிருந்து பணத்தை வாங்கினார். என் மனம் சிந்தித்தது , நானும் மனிதன் தான் அவரும். படிப்பு கூட இருவருக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை. ஏதோ ஒரு நல்ல மூடில் வங்கி பரீட்ச்சை  எழுதியிருப்பார் அதனால் கவுண்டரின் அந்தப்பக்கம் அவர் இந்தப்பக்கம் நான். இருந்தாலும் ஒவ்வொரு நோட்டாக அந்த மெசினில் வைத்து செக் பண்ணுவதும்  அடுக்குவதுமாக இருந்தார். ஒருவேளை தகுதிக்கு மீறிய சம்பளம்தான் இந்த இறுமாப்பை கொடுக்குமோ???? என் மனம் எண்ணியது.  என்னுடைய தொழிலில்  வாடிக்கையாளரிடமிருந்து பணம் வாங்குவது ஒரு நிகழ்வு. இவர்களுக்கு அதுவே வேலை. எங்களுக்கு இப்படி ஆற அமர ஒவ்வொரு நோட்டாக ஆய்வு செய்ய சமயம் இருப்பதில்லை. கொடுக்கிற பொருளை செக் பண்ணி கொடுக்கவே சமயம் இருப்பதில்லை அதனிடடையில் இதெல்லாம் ஒரு  தூசிதான்.

                    அவர் மூக்குக்கண்ணாடியினூடே என்னை பார்ப்பதும் சீல் குத்துவதுமாக இருந்தார். அவர் இருந்த முறையே சரியில்லாமல் தான் இருந்தது. மிகவும் நிதானமான வேலை செய்யும் முறை. எல்லாம் எரிச்சலூட்டுவதாகத்தான் இருந்தது. ஒரு வழியாக செல்லான்னைத்தந்தார். அவருக்கும் உணவு இடைவேளை வந்தது. கவுண்டரை அடைத்துவிட்டு நாலுகாலில் நடந்து வெளியேறினார் ..... என மனம் திக் என்று குளிர்ந்தது........ எல்லா கோபமும் எங்கோ சிட்டாய் பறந்தது.         

Comments

நல்லதொரு அனுபவம் விஜி.இதுபோன்ற நிறைய விசயங்களை சீர்தூக்கிப்பார்த்துதான் கோபப்பட வேண்டும் என்பது போன்ற ஒரு மேசஜ்!!எல்லா கோபங்களும்,சிட்டாய் பறந்தன....இதுதான் இந்த பகிர்வுக்கு மேலும் சிறப்பு செய்திருக்கின்றது!!!!குட்.வெரி குட்!
Unknown said…
உங்களுடைய வரவிற்க்கும் சிறப்பான கருத்திற்க்கும் நன்றி செல்வி.
Unknown said…
'செல்லான்னைத்தந்தார்' புரியவில்லையே நண்பரே?
/
அனுபவங்கள் வாழ்வை மேம்படுத்துகின்றன.
சாய் பிரசாத் said...
'செல்லான்னைத்தந்தார்' புரியவில்லையே நண்பரே?
/
அனுபவங்கள் வாழ்வை மேம்படுத்துகின்றன.//

செல்லான் என்றால் கூப்பன் அல்லது டோக்கன் என்று நினைக்கிறேன்...!!!
சில வங்கிகளில் மிகவும் அலட்சியமாக செயல் படுவதை பார்த்து மனம் வெதும்பியதுண்டு...!!!
எங்கள் ஊர் இந்தியன் ஓவர் சீஸ் பேங்கில் என்னை இது போல காக்க வைத்தனர், என் ஆர் ஐ அக்கௌன்ட் வைத்திருப்பவர்களுக்கு நல்ல மரியாதை உண்டு, ஆனால் இங்கே தலைகீழாக இருப்பதை கண்டு ஆங்கிலத்தில் கத்த ஆரம்பிச்சிட்டேன்,ஒரு ஆளுக்கும் இங்கிலீஸ்ல பதில் தர முடியல போல,ஏ யப்பா ஒரு நிமிஷத்துல என் வேலையை முடிச்சி தந்துட்டாங்க, அதுல இருந்து நான் எப்போ போனாலும் நேர்வெஸ்சா இருந்து என்னை கூப்பிட்டு முதல்லயே பணத்தை தந்துருவாங்க, வேண்ணா அதே பேங்கில், வேற கவுண்டரில் செக் பண்ணி பாருங்க ஒருநாள்...?
யோவ் நம்ம நண்பன் ராஜகுமாரை நியாபக படுத்திட்டீங்க...!!!!
Unknown said…
சாய் பிரசாத்: challan தலைவா. பணம் கட்டிய ரசீது. நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பிரசாத்.
இங்கேயும் அதே போல ஒரு பெண்மணி அதிகாரியாக இருக்கிறார். ATM பின் தொல்லை தந்தாலே அந்த பெண்மணியிடம் போய் நிற்க வேண்டுமே என்ற கவலையில் எனக்கு காய்ச்சலே வந்து விடும். குறைகள் இருப்பதாலேயே வாடிக்கையாளர்களிடம் அலட்சியமாய் இருப்பது சரியாக இருக்காது.
வணக்கம் அண்ணே,
காத்திருக்க வைத்து விட்டு, கடமையினையும் முடித்து விட்டு வெளியேறும் ஊழியர்..
இப்படியும் பல அனுபவங்களை நாம் அன்றாடம் காணுவோம். ஆனாலும் நீங்கள் வித்தியாசமாக ரசிக்கும் வண்ணம் சுவை கூட்டி எழுதியிருக்கிறீங்க.
நன்றி.
/// ஒருவேளை தகுதிக்கு மீறிய சம்பளம்தான் இந்த இறுமாப்பை கொடுக்குமோ???? என் மனம் எண்ணியது. ///

அது தான் நிஜம் விஜி. நானும் இது போன்ற நிகழ்வுகளை சென்னை வங்கிகளிலும் தபால் நிலையங்களிலும் கண்டதுண்டு. சைத்தபேட்டை தபால் நிலையத்தில் இப்பவும் கூட அந்த அம்மணி இருக்கிறது. கவுண்டரின் அந்த பக்கம் ஏதோ "சசிகலாவே "உட்கார்திருப்பதைபோல இருக்கும் அத்தனை நகைகளையும் அள்ளிப்போட்டுக்கொண்டு வேலைக்கு வந்துவிடும்.அதன் முகத்தில் ஒரு அலட்சியமும் திமிரும் கூட மிளிரும். எனக்கு முன்பாக நிற்கும் நபர்களிடம் அந்த அம்மா நடந்து கொள்ளும் முறைகளை பார்த்து வெறுத்துப்போய் நான் "ஊமை" போல சைகைகளால் பேசி கவர் , ஸ்டாம்புகளை வாங்கிகொண்டு சில்லறை என்னிடம் இல்லை என்று அடாவடியாக ஐநூறு ரூபாய் தாளை கொடுத்துவிட்டு மல்லுக்கு நின்று மீதம் வாங்கிகொண்டு வந்து , அந்த அம்மாவின் எதிரிலேயே இந்த கூத்துகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு மனதுக்குள் சிரித்துகொண்டு நின்ற என் அன்பு நண்பர் சேகரிடம் நான் சரளமாக பேச , அந்த அம்மாளின் முகத்தை பார்க்க வேண்டுமே. இவர்களை எல்லாம் நாம் தான் சரி பண்ண வேண்டும்.

Popular posts from this blog

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை     ...

என் முதல் கணினி அனுபவம் - தொடர் பதிவு....!

எனக்கு தமிழ்லயே பிடிக்காத வார்த்தை “தொடர்பதிவு” . ஏதோ வந்தோமா  ஏதாவது இரண்டு லைன் முகநூல்ல கிறுக்கினோமா போனோமான்னு இருக்கிற  என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த மனோவை தனியாக கவனித்துக் கொல்கிறேன்.                      பதிவு எழுதியே வருடங்கள் ஆகிப்போனதால் புதிய பதிவு எழுத எங்கே போகவேண்டும் என்று தேடவே நிறைய நேரம் ஆகிவிட்டது..... ஒரு வழியாக கண்டுபிடித்தும் தொலைத்தாகிவிட்டது. இனிவாயில் வந்ததை  வாந்தி எடுக்க வேண்டியதுதான் பாக்கி.                     முதலில் நான் கணினி வாங்க காரணமே தொழில் ரீதியாக புதிதாக சந்தைக்கு வரும் கேமிரா மற்றும் அதன் உப பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்க வசதியாக இருக்குமே என்றுதான். அதற்காக இணைய இணைப்பும் எடுத்தேன். அப்பொழுதுதான் என் கடைக்கு அடுத்த கடையில் இருக்கும் ஹரீஸ் என்ற நண்பன் பதிவுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அது வால்பையன் மறைந்த நண்பர் பட்டாபட்டி மற்றும் பன்னிக்குட்டி ராமசாமி ஆகிய சீனியர் பதிவர் நண்பர்கள் கலக்கிக்கொண்டிருந்த ...

நெல்லையில் மினி பதிவர் சந்திப்பு - ஆபீஸர் அதிரடி.

 இடமிருந்து வலம் ரூபினா மேடம்(நாய்குட்டி மனசு),கெளசல்யா மேடம்(மனதோடு மட்டும்),சகாதேவன் ஐயா(வெடிவால்),ஞானேந்திரன்(யானைக்குட்டி),டைரக்டர்.செல்வகுமார்(selva speaking),சீனா ஐயா(வலைச்சரம்),சங்கரலிங்கம் ஐயா(உணவு உலகம்) நேற்று நெல்லையில் ஒரு அதிரடி பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக ஆபீஸர் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் அழைப்பு விடுத்தார். அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு.செல்வகுமார் அவர்கள்  பங்கேற்க்க இருப்பதாகவும் சொன்னார்கள். ஏற்கனவே பிரமாண்டமாக நடந்த முதல் பதிவர் சந்திப்பில்   நான் பங்கேற்க்க முடியாத வருத்தம் இன்னும் இழையோடிக்க்கொண்டிருப்பதாலும் இன்னும் மிக முக்கியமான நட்சத்திர பதிவர்கள் வருகிறார்கள் என்று சொன்னதாலும் உடனடியாக செல்ல முடிவெடுத்தேன். அதன் படி நெல்லை போய் சேர்ந்தேன். மிகவும் சரியான நேரத்திற்க்கு வந்துசேர்ந்தது சீனா ஐயா தான்( அதிக தொலைவில் இருந்து வந்தவரும் அவர்தான்)                பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர இனிதாக களைகட்ட ஆரம்பித்தது பதிவர் சந்திப்பு .  திவானந்தா சுவாமிகள் தன்னுடைய குளுகுளு அ...