Skip to main content

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD)
சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.


அறிகுறிகள்
* கீழ்படிதல் இல்லாதிருத்தல்
* பேசும்போது குறுக்கிடுதல்
* ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல்
* அதிகம் பேசுதல்
* மறதி
* அதிக சத்தமாக விளையாடுதல்
* கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல்
* பொறுமையின்மை
* கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல்
*  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை
             இவர்களுக்கு வலிப்பு நோய் காணப்படலாம். இவர்களின் பிரச்னை என்னவென்றால் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட காரியத்தை செய்யமுற்படுவார்கள்.  எதிலும் தொடர்ச்சியாக அதிக நேரம் ஈடுபடமாட்டார்கள்.
             
             இவர்களின் படிப்பும் சுமாராகத்தான் இருக்கும். ஆசிரியர் பாடம் எடுக்கும்போது தொடர்ச்சியாக இவர்களால் பாடங்களை பின்பற்ற முடிவதில்லை. இவர்களுக்கான பிரத்யோக பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த பள்ளியறையில் இவர்களுக்கு மனச்சிதறல் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். கண்ணைக்கவரும் வகையில் நிறங்கள் அல்லது பென்ஞ்,டெஸ்க் போன்றவைகளை
தவிற்க்கின்றனர். இவர்களுக்கு முக்கியமாக மனதை ஒருங்கிணைக்கின்ற பயிர்ச்சி தேவை. இவர்களிடம் ஏதாவது ஒரு திறமை அபிரிதமாக காணப்படும் அவற்றை கண்டறிந்து ஊக்குவித்தால் அந்த துறையில் பிரகாசிப்பார்கள். விளையாட்டுத்துறை இவர்களுக்கு பொருத்தமான ஒன்று. மருந்து மாத்திரையால்  பெரிய மாற்றத்தை காணமுடியாது, முறையான பயிற்ச்சியால்(Meditation,yoga) அதிக பயன்பெறலாம்
சிகிட்சைகள்: 
* குழந்தைகளின் நோயின் வீரியத்தை பொறுத்தும் வகையை பொறுத்து உங்களது குழந்தை மருத்துவர்(மருந்து சம்பந்தமாக) உங்களுக்கு உதவுவார். 
மருந்து போக, (behaviour modification) அவனுடைய சிறிய முயற்சியையும் பாராட்டும் விதத்தில் அவனுக்கு பிடித்த பரிசுகள் கொடுக்கவும்.
எக்காரணத்தை கொண்டும் அவர்களை அடிக்கவோ, தண்டிக்கவோ கூடாது. தெரிந்தே அவர்கள் தவறு செய்வதில்லை.
பெற்றோருக்கு அதிக பொறுமையும், அர்பணிப்பு தன்மையும் தேவை.
பெரிய வேலையை கொடுக்காமல் அதை பிரித்து கொடுத்து சிறிது சிறிதாக செய்ய சொல்லலாம். ஊக்குவித்தல் ரொம்பவே பயன் கொடுக்கும்.
மற்ற குழந்தைகளிடம் விளையாட அனுமதிக்க வேண்டும் அதன் மூலம் சமூக தொடர்புகள் அறுந்துவிடாமல் இருக்கும்.
அவர்களிடம் வெறுப்பு காண்பித்தால் அவரது மனதை மேலும் பாதிக்கும் இது அவர்களுடைய கல்வியையும் எதிர்காலத்தையும் பாதிக்கும்.
                   
                   யார் என்ன சொன்னாலும் நீங்கள் உங்கள் குழந்தையை எண்ணி மனம் தளர வேண்டாம்., ஏனென்றால் உலகமே வியக்கும் ஈடு இணையற்ற அற்வியல் மேதை ‘ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்’, உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரர் ‘பில்கேட்ஸ்’, புவியீர்ப்பு விசையை ஓர் ஆப்பிள் மூலம் உணர்ந்து உலகத்திற்க்கே உணர்த்திய மேதை ‘ஐசக்நியூட்டன்’, இன்று ஹாலிவுட்டை கலக்கிக்கொண்டிருக்கும் இயக்குனர் ‘ஸ்டீவன் ஸ்பீல்பர்க்’ என அனைவருமே இந்த மாதிரியான பாதிப்புக்கு ஆட்பட்டவர்கள்தான். இனி நம் குழந்தையில் எதிர்காலம் அவர்கள் கையில் இல்லை நம் கையில். SO "DON'T WORRY BE HAPPY"

 
  கொள்ளை அடிக்கிறதையே கொள்கையாக வைத்திருக்கிற திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிக்கெல்லாம் ஓட்டு போடுற    நீங்க  என் பதிவு உங்கள் மனதை கொள்ளை அடிக்கவில்லையின்றால் கண்டிப்பாக ஓட்டுபோடுங்க (பிடித்தால் சொல்லாமலே போடுவீங்கதானே)

Comments

சிறந்த பதிவு!இது போன்ற தேவையான் பதிவுகள் அதிகம் வருவதில்லை. தொடரட்டும் உங்கள் பணி!
அண்ணே சூப்பரான பதிவுண்ணே.....
பயனுள்ள பதிவு....தொடர்ந்து எழுதுங்கள்....
Unknown said…
@சென்னை பித்தன் :
உங்களுடைய ஆதரவுக்கும்,வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக
Unknown said…
@MANO நாஞ்சில் மனோ :
உங்களுடைய வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக
Unknown said…
@NKS.ஹாஜா மைதீன் :
உங்களுடைய ஆதரவுக்கும்,வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக
இனியவன் சார்...இன்னைக்கு தான் இந்த பக்கம் எட்டி பார்க்கிறேன்..என்ன ஒரு அற்புதமான பதிவு...hyperactive babies பார்த்து இருக்கிறேன்...ஆனால் இவளவு விவரங்கள் இன்னைக்கு தான் தெரிந்து கொண்டேன்...நன்றி இனியவன் சார்..
Unknown said…
@ஆயிஷா :
உங்களுடைய வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக
Unknown said…
@ஆனந்தி..:
உங்களுடைய முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக
GUNA said…
nandru. mattrum thangalthu karuthuand advice ku nandri.. thangalathu virupathiruku inganga blog thee anaikkap pattathu...
சிறந்த பயனுள்ள பதிவு...நன்றி இனியன் சார்..
ஆமினா said…
உங்களுக்கு விருது வழங்கியுள்ளேன்

தயவு செய்து பெற்றுக்கொள்ளவும்.

http://kuttisuvarkkam.blogspot.com/2011/01/blog-post_17.html
Unknown said…
@தோழி பிரஷா :
உங்களுடைய வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக
Unknown said…
@ஆமினா :
உங்களுடைய வருகைக்கும்,கருத்துக்கும் ,நீங்கள் வழங்கிய விருதுக்கும் நன்றி.மீண்டும் வருக
நன்றி நண்பரே ...
ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் .
இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி
pudugaithendral said…
அட்டென்ஷன் டிஃபிஷியன்சி சிண்ட்ரோமிற்கும் இதற்கும் தொடர்பு உண்டா? இந்த் சிண்ட்ரோம் அதிகம் டீவி பார்ப்பதால் வருவதாகவும் படித்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் அந்த சிண்ட்ரோமுக்குக் இருக்கிறது அதான் கேட்டேன்.

இந்தப் பதிவை பேரண்ட்ஸ் கிளப்பில் போடலாமா?
Unknown said…
@புதுகைத் தென்றல்:
உங்களுடைய முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக
Unknown said…
@புதுகைத் தென்றல் : குழந்தைக்கு எதிலும் கான்சென்ட்ரேட் பண்ணமுடியவில்லை என்றால் எதில் அவன்/ள் விரும்பி கான்சென்ட்ரேட் செய்கிறார்களோ அதை அனுமதிப்பது நலம். ஆரம்ப நாட்களில் என் மகனை கார்டூன் படங்களை பார்க்கவிட்டதின் பலனாக அவன் ஓரளவு கான்சென்ட்ரேட் செய்ய பழகிக்கொண்டான். நம் இஷ்டத்தை இவர்களிடம் திணிக்க முடியாது.
//இந்தப் பதிவை பேரண்ட்ஸ் கிளப்பில் போடலாமா?// யாருக்காவது உபயோகப்படும் என்றால் மகிழ்ச்சிதான்.
பயனுள்ள தகவல்கள் இனியவன்.இப்படிக்குழந்தைகளை பெற்றோர்கள் எப்படி அணுக வேண்டும் என்ற விபரமும் இணைத்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
Unknown said…
ஸாதிகா :
இப்படிக்குழந்தைகளை பெற்றோர்கள் எப்படி அணுக வேண்டும் என்ற விபரமும் இணைத்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்//
கண்டிப்பாக இதேபதிவிலேயே அதையும் இணைத்துவிடுகிறேன்.வருகைக்கு நன்றி.மீண்டும் வருக.
Unknown said…
@மாத்தி யோசி:
உங்களுடைய முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக
மிக சரியான இடுகை இனியவன்.... இப்போது தான் படித்தேன்.... மிக பயணுள்ளத் தகவல்.... மிக்க நன்றி திடருங்க....

உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.
Unknown said…
சி. கருணாகரசு :
வாங்க சார். நல்ல இருக்கீங்களா.
தாமதமாக வந்ததற்கு மன்னித்துவிடுங்கள் சார். உண்மையிலேயே அருமையான பதிவு இது வாழ்த்துக்கள் சார்.
விஜி said…
ரொம்ப நல்ல பதிவு...ஷேர் பண்றேன்
Unknown said…
@விஜி :
உங்களுடைய முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக
Unknown said…
@Geetha6 :
உங்களுடைய முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக
Ganesan said…
பயனுள்ள தகவல். நல்ல எழுத்து நடை.

வாழ்த்துக்கள்.
FARHAN said…
பதிவுலகில் வித்யாசமான முயற்சி தொடர்ந்து செல்ல வாழ்த்துக்கள்
என் பக்கத்து வீட்டில் 3 வயது பெண்குழந்தை ஒன்று உள்ளது. ரோட்டில் போகிறவர்களை கூட அழைத்து திட்டுகிறது. ( எருமைமாடே, சனியனே, டே உன்னைத்தான் காது கேக்கலையா) மற்ற பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அந்த பெண்ணுடன் சேர அனுமதிப்பதில்லை. பள்ளிக்கு செல்ல ஆட்டோவில் அனுமதிக்கவில்லை. அந்த தாய் இதன் பாதிப்பை உணர்ந்ததாகத் தெரிவில்லை. சொன்னால் சண்டைக்கு வருகிறார்.
Sriakila said…
இப்போது தான் உங்கள் பதிவைப் பார்த்தேன். குழந்தைகளின் குணங்களைப் பற்றி எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். ரொம்பவும் பயனுள்ள பதிவு.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!
மிகவும் பயனுள்ள பதிவு நல்ல எழுத்து நடை.வாழ்த்துக்கள்...
மிகவும் பயனுள்ள விஷயங்கள்.வாழ்த்துக்கள்.
நம்ம சைட்டுக்கு வாங்க!
கருத்த சொல்லுங்க!!
நல்லா பழகுவோம்!!!

Popular posts from this blog

என் முதல் கணினி அனுபவம் - தொடர் பதிவு....!

எனக்கு தமிழ்லயே பிடிக்காத வார்த்தை “தொடர்பதிவு” . ஏதோ வந்தோமா  ஏதாவது இரண்டு லைன் முகநூல்ல கிறுக்கினோமா போனோமான்னு இருக்கிற  என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த மனோவை தனியாக கவனித்துக் கொல்கிறேன்.                      பதிவு எழுதியே வருடங்கள் ஆகிப்போனதால் புதிய பதிவு எழுத எங்கே போகவேண்டும் என்று தேடவே நிறைய நேரம் ஆகிவிட்டது..... ஒரு வழியாக கண்டுபிடித்தும் தொலைத்தாகிவிட்டது. இனிவாயில் வந்ததை  வாந்தி எடுக்க வேண்டியதுதான் பாக்கி.                     முதலில் நான் கணினி வாங்க காரணமே தொழில் ரீதியாக புதிதாக சந்தைக்கு வரும் கேமிரா மற்றும் அதன் உப பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்க வசதியாக இருக்குமே என்றுதான். அதற்காக இணைய இணைப்பும் எடுத்தேன். அப்பொழுதுதான் என் கடைக்கு அடுத்த கடையில் இருக்கும் ஹரீஸ் என்ற நண்பன் பதிவுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அது வால்பையன் மறைந்த நண்பர் பட்டாபட்டி மற்றும் பன்னிக்குட்டி ராமசாமி ஆகிய சீனியர் பதிவர் நண்பர்கள் கலக்கிக்கொண்டிருந்த காலம் அது. இணைய இணைப்பு இருக்கிறது என்பதால்  சும்மா இருக்கின்ற நேரங்களில் அதில் மனதில் தோன்றியவற்றை கிறுக்க ஆரம்பித்தேன

நெல்லையில் மினி பதிவர் சந்திப்பு - ஆபீஸர் அதிரடி.

 இடமிருந்து வலம் ரூபினா மேடம்(நாய்குட்டி மனசு),கெளசல்யா மேடம்(மனதோடு மட்டும்),சகாதேவன் ஐயா(வெடிவால்),ஞானேந்திரன்(யானைக்குட்டி),டைரக்டர்.செல்வகுமார்(selva speaking),சீனா ஐயா(வலைச்சரம்),சங்கரலிங்கம் ஐயா(உணவு உலகம்) நேற்று நெல்லையில் ஒரு அதிரடி பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக ஆபீஸர் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் அழைப்பு விடுத்தார். அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு.செல்வகுமார் அவர்கள்  பங்கேற்க்க இருப்பதாகவும் சொன்னார்கள். ஏற்கனவே பிரமாண்டமாக நடந்த முதல் பதிவர் சந்திப்பில்   நான் பங்கேற்க்க முடியாத வருத்தம் இன்னும் இழையோடிக்க்கொண்டிருப்பதாலும் இன்னும் மிக முக்கியமான நட்சத்திர பதிவர்கள் வருகிறார்கள் என்று சொன்னதாலும் உடனடியாக செல்ல முடிவெடுத்தேன். அதன் படி நெல்லை போய் சேர்ந்தேன். மிகவும் சரியான நேரத்திற்க்கு வந்துசேர்ந்தது சீனா ஐயா தான்( அதிக தொலைவில் இருந்து வந்தவரும் அவர்தான்)                பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர இனிதாக களைகட்ட ஆரம்பித்தது பதிவர் சந்திப்பு .  திவானந்தா சுவாமிகள் தன்னுடைய குளுகுளு அறையை அதற்க்காக ஒதுக்கி கொடுத்தது இன்னும் மகிழ்ச்சியூட்டியது