பின் தொடரரும் நண்பர்கள்

Sunday, January 16, 2011

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD)
சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.


அறிகுறிகள்
* கீழ்படிதல் இல்லாதிருத்தல்
* பேசும்போது குறுக்கிடுதல்
* ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல்
* அதிகம் பேசுதல்
* மறதி
* அதிக சத்தமாக விளையாடுதல்
* கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல்
* பொறுமையின்மை
* கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல்
*  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை
             இவர்களுக்கு வலிப்பு நோய் காணப்படலாம். இவர்களின் பிரச்னை என்னவென்றால் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட காரியத்தை செய்யமுற்படுவார்கள்.  எதிலும் தொடர்ச்சியாக அதிக நேரம் ஈடுபடமாட்டார்கள்.
             
             இவர்களின் படிப்பும் சுமாராகத்தான் இருக்கும். ஆசிரியர் பாடம் எடுக்கும்போது தொடர்ச்சியாக இவர்களால் பாடங்களை பின்பற்ற முடிவதில்லை. இவர்களுக்கான பிரத்யோக பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த பள்ளியறையில் இவர்களுக்கு மனச்சிதறல் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். கண்ணைக்கவரும் வகையில் நிறங்கள் அல்லது பென்ஞ்,டெஸ்க் போன்றவைகளை
தவிற்க்கின்றனர். இவர்களுக்கு முக்கியமாக மனதை ஒருங்கிணைக்கின்ற பயிர்ச்சி தேவை. இவர்களிடம் ஏதாவது ஒரு திறமை அபிரிதமாக காணப்படும் அவற்றை கண்டறிந்து ஊக்குவித்தால் அந்த துறையில் பிரகாசிப்பார்கள். விளையாட்டுத்துறை இவர்களுக்கு பொருத்தமான ஒன்று. மருந்து மாத்திரையால்  பெரிய மாற்றத்தை காணமுடியாது, முறையான பயிற்ச்சியால்(Meditation,yoga) அதிக பயன்பெறலாம்
சிகிட்சைகள்: 
* குழந்தைகளின் நோயின் வீரியத்தை பொறுத்தும் வகையை பொறுத்து உங்களது குழந்தை மருத்துவர்(மருந்து சம்பந்தமாக) உங்களுக்கு உதவுவார். 
மருந்து போக, (behaviour modification) அவனுடைய சிறிய முயற்சியையும் பாராட்டும் விதத்தில் அவனுக்கு பிடித்த பரிசுகள் கொடுக்கவும்.
எக்காரணத்தை கொண்டும் அவர்களை அடிக்கவோ, தண்டிக்கவோ கூடாது. தெரிந்தே அவர்கள் தவறு செய்வதில்லை.
பெற்றோருக்கு அதிக பொறுமையும், அர்பணிப்பு தன்மையும் தேவை.
பெரிய வேலையை கொடுக்காமல் அதை பிரித்து கொடுத்து சிறிது சிறிதாக செய்ய சொல்லலாம். ஊக்குவித்தல் ரொம்பவே பயன் கொடுக்கும்.
மற்ற குழந்தைகளிடம் விளையாட அனுமதிக்க வேண்டும் அதன் மூலம் சமூக தொடர்புகள் அறுந்துவிடாமல் இருக்கும்.
அவர்களிடம் வெறுப்பு காண்பித்தால் அவரது மனதை மேலும் பாதிக்கும் இது அவர்களுடைய கல்வியையும் எதிர்காலத்தையும் பாதிக்கும்.
                   
                   யார் என்ன சொன்னாலும் நீங்கள் உங்கள் குழந்தையை எண்ணி மனம் தளர வேண்டாம்., ஏனென்றால் உலகமே வியக்கும் ஈடு இணையற்ற அற்வியல் மேதை ‘ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்’, உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரர் ‘பில்கேட்ஸ்’, புவியீர்ப்பு விசையை ஓர் ஆப்பிள் மூலம் உணர்ந்து உலகத்திற்க்கே உணர்த்திய மேதை ‘ஐசக்நியூட்டன்’, இன்று ஹாலிவுட்டை கலக்கிக்கொண்டிருக்கும் இயக்குனர் ‘ஸ்டீவன் ஸ்பீல்பர்க்’ என அனைவருமே இந்த மாதிரியான பாதிப்புக்கு ஆட்பட்டவர்கள்தான். இனி நம் குழந்தையில் எதிர்காலம் அவர்கள் கையில் இல்லை நம் கையில். SO "DON'T WORRY BE HAPPY"

 
  கொள்ளை அடிக்கிறதையே கொள்கையாக வைத்திருக்கிற திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிக்கெல்லாம் ஓட்டு போடுற    நீங்க  என் பதிவு உங்கள் மனதை கொள்ளை அடிக்கவில்லையின்றால் கண்டிப்பாக ஓட்டுபோடுங்க (பிடித்தால் சொல்லாமலே போடுவீங்கதானே)

Saturday, January 15, 2011

சிறப்பு குழந்தைகள்(Autism) ( என் வழி தனி வழி !!!!!!!!)


சிறப்பு குழந்தைகள்

இந்தியாவில் பிறக்கும்போதே குழந்தை குறைபாடோடு பிறப்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேவருகிறது. அதை சிறுவயதிலேயே கண்டுபிடித்தால் அவர்களின் எதிர்காலம் காப்பாற்றப்படும்.  இவர்கள் சொல்லிக்கொடுக்கும்  எதையும்  அவ்வளவு எளிதாக் புரிந்த்து கொள்ளமாட்டார்கள்.  இது வீம்போ அல்லது அடம்பிடிப்போ,கீழ்படியாமையோ அல்ல. அவர்களுக்கு ஏற்பட்டுள்ள குறைபாடு. சாதாரண குழந்தையைப்போல் இருக்காமல், வித்தியாசமாக நடப்பதால், எல்லோரும் இந்த குழந்தைகளை வேடிக்கையாகப்பார்ப்பார்கள். இது பெற்றொருக்கு வேதனை தரும். இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோரில்  நானும் ஒருவன் என்ற முறையிலும் அடுத்தவர்களும் பாதிப்பை சரியான நேரத்தில் கண்டுபிடித்து அதிலிருந்து மீள இது உதவும் என கருதுகிறேன்.

 1. ஆடிஸம் : என்பது பிறவியிலேயே  ஏற்படும் ஒருவகை மனவளர்ச்சி குறைபாடு ஆகும். இந்த குழந்தைகளுடன் காணும் முக்கிய பிரச்சினை கற்றல் குறைபாடு ஆகும். காரணம் இந்த குழந்தைகளுக்கும் பேசுவதிலும்,வார்த்தைகளை உச்சரிப்பதிலும் பிரச்சனை ஏற்படுகிறது. சில சமயம் செவித்திறன் கூட குறைவாக இருக்கலாம். இந்த குழந்தைகள் பொதுவாக ஏதாவது ஒரு பொருளை,பொம்மையை(கையில் வைத்திருக்க) அதிகமாகவிரும்புவார்கள். அவர்களது நடவடிக்கை அர்த்தமில்லாததாக இருக்கும். இவர்களில் 60 -70 சதவீத குழந்தைகளுக்கு மூளைவளர்ச்சி குறைவாக இருக்கும். இவர்களில் 25 சதவீத குழந்தைகளுக்கு வலிப்புநோய் இருக்கலாம்.
 2. வாண்டு கிலீஃப்நேர் நோய் தொகுப்பு : இந்த நோய்யின் பாதிப்பு உள்ள குழந்தைகளுக்குப்பாதிப்பு பெரும்பாலும் 3 வயது முதல் 7 வயதுக்குள் தோன்ற ஆரம்பிக்கும். இவர்களுக்கு பேச்சு பாதிப்பு தான் முக்கிய பாதிப்பாகும். ஆரம்பத்தில் பிறர் பேசுவதை புரிந்துகொள்ளும் திறன் குறையும் அதன் பிறகு பேசும் திறனும் குறைய ஆரம்பிக்கும். இவர்களில் பெரும்பானவர்களுக்கு வலிப்பு நோய்ப் பாதிப்பும் ஏற்படும்.

 1. ரெட்ஸ் குறைபாடு : இந்த வகைக் குழந்தைகளுக்குப் பிறக்கும்போது பெரிதாக குறைபாடு இருக்காது. பிறந்த சில காலம் சாதாரண குழந்தைப்போலவே இருப்பார்கள். ஆனால் குழந்தை வளர வளர பிரச்னை வெளிப்படையாகத்தெரியவரும். ஆடிஸ குழந்தை போலவே, பிற குழந்தைகள் மற்றும் சிறுவர்களோடு சேரமாட்டார்கள். சமூகத்தொடர்பு என்றி காணப்படுவார்கள். ஆடிஸப்பாதிப்பு பெரும்பாலும் ஆன் குழந்தைகளிடம்தான் காணப்படும் ஆனால் ரெட்ஸ் குறைபாடு பெரும்பாலும் பெண் குழந்தைகளையே பாதிக்கிறது. இவர்களுக்கு பல் கடிக்கும் பழக்கமும் ஏற்ப்படும்.


 1. ஏஞ்சல்மேன் நோய்த் தொகுப்பு : ஆடிஸப் பாதிப்பைப் போன்றே இது ஒருவித மன பாதிப்பு ஆகும். குறிப்பாக கற்றாலில் ஏற்படும் பாதிப்பு இது. இப்பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு பேசுவது, எழுதுவது,புரிந்துகொள்வதில் பிரச்னை இருக்கும். இவர்கள் ஆடிஸக்குழந்தைகளைப்போல் ஒதுங்கி இருக்காமல் பெற்றொரிடத்திலும் உறவினரிடத்திலும் மிகவும் அன்பாக இருப்பார்கள்.

 1. பிரைஜெல் ‘எக்ஸ்நோய்த் தொகுப்பு : இந்த பாதிப்பு மரபணு குறைபாடு காரணமாக ஏற்படுகிறது. இவர்களின் வாய் அன்னம் உயரமாக அமைந்திருக்கும். இவர்களுக்கு மாறுகண் ஏற்படலாம். நீண்டமுகமாக இருக்கும் காதுகளும் நீண்டிருக்கும். இவர்களுக்கு ‘மூளை மழுங்கிஇருக்கும்.  குரோமோசோம்  பரிசோதனை மூலம் பாதிக்கப்பட்டகுழந்தைகளீடம் இந்த குறைப்பாட்டை உறுதிப்படுத்தலாம்.


 1. ஆஸ்பெர்ஜர் நோய்த்தொகுப்பு :   இவர்களுக்கு மூளை வளர்ச்சி, செயல்பாடு, பேச்சு, ஆர்வம் என அனைத்துமே சாதாரணக் குழந்தைகளுக்கு இருப்பதைப்போல் காணப்படும். ஆனால்,வெளியுலகத் தொடர்புகள் தான்  ஆடிஸக்குழந்தையைப்போல் குறைவாக இருக்கும். இக்குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்த பிறகு மற்றவர்களைப்போலவே சுயமாக வாழ முடியும். இவ்வகை  குறைபாடு பெரும்பாலும் ப்ரம்ப்பரைக்காரண்ங்களாலும் ஏற்படும்.

 1. பிராடர் வில்லி நோய்த் தொகுப்பு : இந்த நோய்த்தொகுப்பு கூட ‘ஆடிஸப்பாதிப்பை போலவே காணப்படும். இந்த குழந்தைகளுக்கு, பேச்சு தாமதப்படுவதும்,தசைத்தளர்வும் காணப்படும். உணவு மீது உள்ள ஈடுபாட்டால், இவர்கள் எளிதில் குண்டாகிவிடுவார்கள். இந்த குறைபாடு, தாயின் கருவில் உள்ள 30-வது குரோமோசோமின் குறைபாட்டால் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

நோய்க்கான பொதுவான காரணங்கள் :
 • சுற்றுசூழல் பாதிப்புகள்
 • பூச்சிக்கொல்லி மருந்துகள்
 • தடுப்பூசி பின்விளைவுகள்
 • பாதரசம் கலந்த மருந்துகள்
 • பரம்பரை,மரபணு காரணங்கள்
 • வைரஸ்,பாக்டீரியா கொல்லி மருந்துகள்
 • தாது உப்புக்கள்,உயிர்சத்துக்கள் குறைபாடு
 • பிற நச்சுப்பொருட்களின் பாதிப்பு

நோய்க்கான ஆய்வுகள்,பரிசோதனகள் :
 நரம்பியல்,உளவியல் படித்த குழந்தை நல மருத்துவ நிபுணரிடம் காண்பித்தால், இந்நோயை எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள். இவர்களது மனநிலையையும் அறிவாற்றாலையும் (I.Q.)அறிந்துகொள்வதற்க்கான பல்வேறு கேள்விகளையும் கேட்டு (Verbal- Non verbal Tests)மனவியல் நிபுணர்களும் இவர்களுக்கு உதவுவார்கள்.
 • மூளைவளர்ச்சியை அறிய ஸ்கேன்(M.R.I.)
 • தைராய்டு ஹார்மொனின் செயல்பாடு(Thyroid function tests).
 • X குரோமோசோமின் பாதிப்பு நிலை

இந்நோய்க்கான சிகிட்சைகள் :
    ஆடிஸ நோய்க்கு சிகிட்சை செய்ய ஒரு குறிப்பிட்ட  மருந்தோ,ஊசியோ இல்லை. அதற்க்கு பல்வேறு பயிற்சி முறைகளும்,சிகிட்சை முறைகளும் தற்சமயம் செய்யப்படுகின்றன.
*Applied Behaviour Analysis   எனப்படும் நடைமுறை நடத்தைப் பயிற்சி.
* நட்பு வட்டாரத்தை வளர்த்தல். இவர்கள் தனித்தே இருக்க விரும்புவார்கள். அப்படி இருக்க விடாமல் மற்ற குழந்தைகளுடன் நம் கண்காணிப்புடன் விளையாடவிட வேண்டும்.
          அவர்களுக்கு தானே கற்க்கும் திறன் குறைவாக இருப்பதால் பெற்றோர்தான் சிரத்தை எடுத்து ஒவ்வொரு விஷயத்தையும் புரியும்வரை பொறுமையாக சொல்லிக் கொடுக்கவேண்டும்.
எங்க போறீங்க கமெண்டும் ஓட்டும் போடாமல்,போடுங்க ப்ளீஸ் !

Monday, January 3, 2011

எல்லோரும் பாருங்க நானும் விஞ்ஞானிதான்..........................???????

நான் பள்ளியில் படிக்கும் காலங்களிலும் சரி, இப்பவும் சரி  பள்ளி ஆசிரியர்  ஒவ்வொரு மாணவரிடமும் நீபடித்து யாராக  ஆக விரும்புறன்னு கேட்பாங்க. அப்போ எல்லோரும் வழக்கம் போல டாக்டர் அல்லது இன்ஜினியர் - ன்னு சொல்வாங்க.  யாரும் சயிண்டிஸ்ட் ஆவேன்னு சொல்லி நான்  கேட்டதில்லை. ஏன்னா அது அப்பவும் இப்பவும் பாப்புலர் இல்லை.

                                  ஒரு புதிய விஷயத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானியாலதான் முடியும்,அது மனித குலத்திற்க்கு ரொம்ப தேவையும் கூட.  மருத்துவரோ அல்லது பொறியாளரோ ஆகவேண்டும் என்றால் அந்த துறையில் படித்து( அல்லது வாங்கியோ) பட்டம் பெற்றால் போதும். ஆனால் விஞ்ஞானி ஆக படிப்பு மட்டுமல்லாமல் அந்த துறையில் முழுமையான ஈடுபாடு ம்  அர்பணிப்பு தன்மையும் தேவை.

                                  அப்படி வந்தவரில் எடிசனும் ஒருவர். அவர் தன் ஆராய்ச்சியின் மூலம் ஒரு விஷயத்தை தெரிந்து கொண்டார். ஸெட்லிஜ் என்னும் உப்பை இரசாயன முறைப்படி கரைத்து அதன் மூலம் எழும்பும் ஆவியை மெல்லிய ஒரு பொருளில் கசியாமல் அடைத்தால் அந்தப் பொருள் வானத்தை நோக்கி மேலெழும்பிச் செல்லும் என்பது தான் அது.


                                     இந்த சோதனையை ஒரு மனிதன் விஷயத்தில் பயன்படுத்தினால் ஒருவேளை மனிதன் ஆகாயத்தில் எழும்பிக் காற்றில் மிதந்து மேலே செல்லக்கூடும் என்று எடிசன் நினைத்தார். அவர் வீட்டு வேலைக்காரனுக்கு ஸெட்லிஜ் உப்பை கரைத்து அவன் வயிறு முட்ட குடிக்க செய்தார். அவன் ஆகாயத்தை நோக்கி பறக்காமல் இந்த உலகைவிட்டே செல்லக்கூடிய நிலையை அடைந்து விட்டார்.  இப்படி நிறைய விஞ்ஞானிகளின் மனநிலை  நம்மை ஒத்து இருப்பதில்லை.
                                   
                                          இப்படிதான் ஒரு விஞ்ஞானி ஒரு  சோதனையில் ஈடுபட்டிருந்தார்.      ஒரு  ஈ  -ஐ பிடித்து அதன் ஒரு காலை பிய்த்து அவருடைய விரலில் ஏறும் படி சொன்னார். அதுவும் ஏறியது  இப்படி ஒவ்வொரு காலாக பிய்த்து விரலில் ஏறும் படி சொன்னார் அதுவும் தத்தித்தடுமாறி ஏறியது. கடைசியாக இருந்த காலையும் பிய்த்து ஏறச்சொன்னார் ( அதென்ன நடிகர் விஜய்யா சாதாரண ஈ தானே  !  காலில்லாமல் எப்படிய்யா ஏறும்) . உடனே அந்த விஞ்ஞானி சோதனையின் முடிவை  டயரியில் எழுதினார் பின்வருமாறு 
“ ஈ -யில்  ஆறு காலையும் எடுத்தவுடன்  காது கேட்பதில்லை அது செவிடாகிவிடுகிறது  என்று”.   

                          கொள்ளை அடிக்கிறதையே கொள்கையாக வைத்திருக்கிற திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிக்கெல்லாம் ஓட்டு போடுற    நீங்க  என் பதிவு உங்கள் மனதை கொள்ளை அடிக்கவில்லையின்றால் கண்டிப்பாக ஓட்டுபோடுங்க (பிடித்தால் சொல்லாமலே போடுவீங்கதானே)

Saturday, January 1, 2011

உலக சந்தையில் இந்திய மூளைக்கு அதிக விலை !!!!!!!!!!

 புத்தாண்டு காலையிலேயே  வீட்டில் பெரிய பஞ்சாயத்தாகிவிட்டது.  எனது மூன்றாவது படிக்கிற மகனுக்கும் சிறிய  மகளுக்கும் சண்டை.   புதுவருடமும் அதுவுமாக அவனை அடிக்க கையை ஓங்கி பின்னர் கொஞ்சமாவது அறிவிருக்காடா அந்த நாயை விட கேவலமாக இருக்கிறாயே என்று திட்டினேன். அதற்க்கு விடுங்கப்பா உங்க பிள்ளைதானப்பா பின்னே எப்படி இருக்கும்  என்ற படி ஆமாப்பா நாய்க்கு அறிவு கிடையாதா? என்றான் அப்பாவித்தனமாக.

                                  உருப்படியா  ஒரு கேள்வி கேட்கிறானே என்று நினைத்து , மகனே எல்லா மிருகங்களுக்கும்  மூளை உண்டு ஆனால் மூளையில் செரிப்ரம் என்ற ஒரு பகுதி உண்டு.அது மிருகங்களின்  மூளையில் சிறப்பாக இயங்குவதில்லை. அது ஒன்றுதான் மனிதனை (உன்னையல்ல) பிற விலங்குகளைவிட மேம்பட்டவனாக ஆக்குகின்றது என்றேன்.
                                   
                                மனிதனின் மூளை  கம்யூட்டரைப் போன்று ஒரே சமயத்தில் பல வேலைகளை செய்கிறது. உதாரணமாக நீ விளையாடிக்கொண்டே உன் தங்கையை  அழவைக்க முடிகிறது என்றேன். அப்போது அவன் அப்பா அமெரிக்கா, ஜப்பான்  காரனுக்கு அதிக மூளை இருக்குமாப்பா ?  அவன்தானே நிறைய கண்டுபிடிக்கிறான் (  என் மகனாடா  நீ உன் வயசிலே நான் இப்படியெல்லாம் யோசிக்கவேயில்லியேடா !)   அப்படியெல்லாம்  இல்லை, மூளை எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் இருக்கு  ஆனா அதை  எதுக்கு உபயோகப்படுத்துறோம் என்பது தான் வித்தியாசம் என்றேன்.

                 அதற்க்கும் என் மகன், ஆனால் அப்பா   என்ன  இருந்தாலும்  நம் இந்திய மூளைக்குதான் உலக சந்தையில் மதிப்பு இருக்குன்னு என் நண்பன் சொன்னான்.( இருக்காதா பின்னே  ! தகவல் தொடர்பில் (IT field) நாம் தானே ராஜா  ஐயோ !!  ராசா இல்லை) ஒரு தகவலும் சொன்னான்
 ஒரு தடவை  எல்லா உலக மக்களின் மூளையையும் வைத்து ஒரு கண்காட்சி வைத்தார்களாம் அதில்  அமெரிக்கரைவிட,ஜப்பானியரைவிட இந்தியரின் மூளைக்குதான் விலை அதிகமாக இருந்ததாம் ( இருக்காதா பின்னே !) . ஏன்னு கேட்டா  அது தான்  யூஸ் பண்ணாம ரொம்ப ஃப்ரஷ்  ஆக இருக்குமாம்.                       கொள்ளை அடிக்கிறதையே கொள்கையாக வைத்திருக்கிற திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிக்கெல்லாம் ஓட்டு போடுற    நீங்க  என் பதிவு உங்கள் மனதை கொள்ளை அடித்திருந்தால் (இல்லையென்றாலும் ) கண்டிப்பாக ஓட்டுபோடவீங்கன்னு நம்புகிறேன்.