Skip to main content

Posts

Showing posts from May, 2012

ஆதலினால் காதல் செய்வீர்................

இது ஒரு உண்மைக்கதை. இன்று ஒரு பெரியவரை சந்தித்தேன் அவர் தன் மகனின் கதையை கூறினார் அதன் பாதிப்பே இந்த பதிவு  கதையின் நாயகனின் பெயர் குமரன்( பெயர் மாற்றப்பட்டுள்ளது) ,  நாகர்கோயிலை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த குமரன் வீட்டில் உள்ள மற்ற இரு சகோதரர்களைகாட்டிலும் படு சுட்டி.  எதையும் எளிதில் ஏற்றுக்கொள்ளாத ஒரு சுபாவம் அவனை மற்றவர்களிடத்திலிருந்த பிரித்து காட்டியது.  அதுவே அவனது வளர்ச்சிக்கு ஊன்று கோலாகவும் இருந்தது.                கெட்டும் பட்டணம் சேர் என்பார்கள் அதுபோல் இவனும் கொஞ்சம் கெட்டு சென்னை பட்டணம் சேர்ந்தான். அங்கே சிறிது சிறிதாக முன்னேறி ஒரு ஒப்பந்ததாரர் (contractor)  ஆனான்.   நல்ல பணம் வர ஆரம்பித்தது அதனூடேயே செல்வாக்கும் வளர்ந்தது. அந்த ஏரியாவில் எல்லா வேலைக்கும் அவனைத்தான் அழைத்தார்கள் நிறைய பேருக்கு செல்லப்பிள்ளையானான்.               குமரனின் தாய்மாமாவுக்கு ஒரு இளவரசி என்ற மகள் இருந்தாள் அந்த பெண் கேரள தலைநகரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தாள்..... பெயருக்கேற்றார்போல் மிகவும் லட்சணமானப்பெண்.  இவனும் அவ்வப்போது ஊருக்கு வரும்போது அவளுக்கு சாரி சுடிதார்...தங்க செயின்

வாங்க சிரிக்கலாம்..............(நகைச்சுவை விருந்து)

பஸ்ஸில் கண்டக்டரிடம் ஒரு பயணி கேட்டார்: "ஆமாம், ஏன் காலை அகட்டி வச்சு நிக்கிறீங்க? கண்டக்டர்: "பேலன்ஸுக்கு. ஆமாம், நீங்களும் ஏன் காலை அகட்டி வச்சு நிக்கிறீங்க?" பயணி:"நானும் பேலன்ஸுக்குத தான் நிக்கிறேன். பத்து ரூபாய் குடுத்ததுக்கு டிக்கட் சார்ஜ் போக மீதி குடுங்க சார்" .............................................................................................. விவாதத்திலே நேரங்கழித்தல் - நிழலுடனே போராடுவதற்கு நிகராகும். ......................................................................................... பஸ்ஸில் 2 பின் போகுது. ஒரு பின் சீட்டில் உட்கார்ந்து விடுகிறது. ஒ ரு பின் படிக்கட்டில் நின்று கொண்டு வருகிறது. எது முதலில் இறங்கும். நின்ற பின் தான் முதலில் இறங்கும் ஏன் என்றால் பஸ்ஸில் நின்ற பின் இறங்கவும் என போர்டு போட்டிருக்கே ................................................................................................. துட்ட வட்டிக்கு விட்டா தண்டலு துப்பட்டால மனசை விட்டா மென்டலு ....................................