பின் தொடரரும் நண்பர்கள்

Thursday, November 8, 2012

விளம்பரம் என்னும் மாயஜாலம்


டிவியில் விளம்பர படம் பார்க்கும்போது அதன் பின்னால் இருக்கும் விளம்பர கம்பனியின் உழைப்பு நமக்கு தெரிவதில்லை. நானும் ஒரு காலத்தில் என் நண்பருடன் விளம்பர படம் எடுக்க போனதுண்டு( உப்புமா கம்பனிதான்).  அப்பொழுதுதான் அதிலுள்ள நுணுக்கங்களை கண்டு வியந்து போனேன். 

               முதலில் அந்த விளம்பரம் புக் செய்ய அந்த வாடிக்கையாளரை சோப்பு போடுவதில் இருந்து ஆரம்பிக்கிறது இதன் தொழில் நுட்பம்.  எல்லா வியாபாரிகளுக்கும் தன் விளம்பரத்தை டிவியில் காண ஆசை இருக்கும். ஆனால் அதன் செலவை (சன் டிவி ரேஞ்சுக்கு) அதிகமாக கற்பனை பண்ணி வைத்திருப்பதால் அதை பற்றி ஆலோசிப்பதில்லை. ஆனால் அந்த இடத்தில் தான் நாங்கள் நிற்கிறோம்.... மிகவும் குறைந்த செலவில் அதை எடுத்து ( அதற்க்கென்று ஒரு டூபாக்கூர் கான்செப்ட் உருவாக்கி)  கொடுத்து அவர்களின் கனவை நனவாக்குகிறோம். அந்த விளம்பரம் அகில உலகமெங்கும் வரும் என்று அவர்கள் நினைத்துக்கொண்டிக்கும் வேளையில்   அவர்கள் கேபிள் டிவி ஏரியாவையே  தாண்டாது என்பது எங்களுக்கு பணம் செட்டில் செய்த பிற்பாடுதான் அவர்களுக்கு தெரியும்.

                  விளம்பரம் செய்வதனால் என்ன பயன் என்று விளக்குவதோடு நின்றுவிடாமல் விளம்பரம் டிவியில் வந்த பிறகு நாங்களே ஆள் வைத்து (கொஞ்சம் பணம் செலவானாலும்) போன் செய்து விசாரிக்கும் அந்த தொண்டு இருக்கிறதே அதில் தான் அவர் வீழ்ந்து போவார். அடடா விளம்பரம் செய்த உடனேயே இவ்வளவு ரெஸ்பான்ஸா ...........? அதனால்தான் பெரிய கம்பனிகள் வாரிக்குவிக்கின்றன என்று எண்ணுவார். ஆனால் எங்களுடைய  விசாரிப்புகள்  நாங்கள் பணம் வாங்கும் வரை தான். மேலும் அந்த என்கொயரியால் ஒரு பைசாவிற்க்கு அவருக்கு வியாபாரம் விற்க்கப்போவதில்லை. ஆனால் இதையெல்லாம் தாண்டி அவருடைய பொருள் விற்க்கிறது என்றால் உண்மையிலேயே அவருக்கு மச்சம் இருக்க வேண்டும் அல்லது அவருடைய பொருள் தரமாக இருந்திருக்க வேண்டும்.

               இதில் நடிப்பதற்க்கென்று வரும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பண்ணும் அலம்பல்களை பற்றி எழுத தனி பதிவே எழுத வேண்டும். அவ்வளவு டார்ச்சர் பண்ணுவார்கள்.  நாம் நினைக்கும் அவுட்புட்டை அவர்களிடம் வாங்குமுன் நமக்கு உயிரே போய்விடும். 
       
டிவியில் வந்தால் அந்த பொருள் தரமானதாகத்தான்  இருக்கும் என்று மக்கள் நம்பும் வரை எங்கள் தொழிலும் நடக்கும் அவர்கள் தொழிலும் நடக்கும்  அனைவருடைய வாழ்வும் சிறக்கும்.

           

Tuesday, October 9, 2012

பாருங்க... பாருங்க நானும் ரவுடி தான்..........


போன வாரம் சீரடி சாயி பாபா கோவிலுக்கு போய் வரும்பொழுது நடந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது அதை உங்களுக்கும்  தெரிவிப்பதே இந்த பதிவின் நோக்கம்.........

                    வாரம் ஒரு முறை சென்னையில் இருந்து ஒரு இரயில் வண்டி சீரடிக்கு செல்கிறது. அதில் செல்பவர்கள் அநேகமாக சாயிபாபாவின் பக்தர்கள் தான்.  அனைவரும் ஒரே இலக்கை நோக்கி பயணிப்பதால் பாடல் மற்றும் பஜனைகள் களைகட்டும். நாங்களும் நன்றாக பிரயாணத்தை ரசித்து ருசித்து மகிழ்ந்து சென்றோம். இனிமையாக தரினத்தை முடித்து இரயிலில் திரும்பிக்கொண்டிருந்தோம்.

டிக்கட் பரிசோதகரால்  நடுக்காட்டில் இறக்கிவிடப்பட்ட   குடும்பம்.

              இரண்டு பக்கமும் காட்சிகள் பச்சை பசேலென்று கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. அதை ரசித்துக்கொண்டும் என்  கேமிராவினால் காட்சிகளை  பதிவு செய்து கொண்டும்  வந்து கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு சிறிய இரயில் நிலையத்தில் இருந்து ஒரு  ஏழைக்குடும்பம் நாய் மற்றும் மூங்கில் கம்பு சகிதமாக ஏறியது. எனக்கு தெரிந்து அவர்களது மொத்த சொத்தும் அதுவாகத்தான் இருக்க வேண்டும். அந்த மூங்கில் கம்பு சிறிய கூடாரம் அமைக்க பயன்பட வேண்டும் என்பதே என் யூகம். வழக்கம் போல் டிக்கட் பரிசோதகர் வந்தார். சட்டம் தன் கடமையை செய்தது. நடுக்காட்டில் அவர்கள் இறக்கிவிடப்பட்டனர். என் மனது சிறிது வருந்தினாலும் டிக்கட் இல்லாமல் அதுவும் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறுவது என்பது சரியல்ல என்பதால் அது சரியாகவே பட்டது.


                  ஒரு அரைமணி நேர பிரயாணம் கழித்து  ஒரு  இரயில் நிலையத்தில் (கர்நாடகா) ஒரு பெருங்கூட்டம் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறி வலுக்கட்டாயமாக  அமர்ந்தது. நாம் நம்முடைய முன்பதிவு செய்யப்பட்ட இடம் வேறுயாரும் வர வழியில்லை என்ற நினைப்பில் அங்காங்கே  செல்போன்,கேமிரா மற்றும் பல பொருட்களை வெளியே வைத்திருந்தோம்.
இந்த திடீர் ஆக்கிரமிப்பால் எங்களால் அந்த பொருட்களை எடுக்கவும் வழியில்லை. அதனால் பாதுகாப்பு கருதி அந்த கூட்டத்திடம் வேறு பெட்டிக்கு போகுமாரும் இது முன் பதிவு செய்த பெட்டி என்று கூறியதும் தகாத வார்த்தையினால் திட்டினர். வேறு வழியில்லாமல்  அபாய சங்கிலியை இழுத்து இரயிலை நிறுத்தினோம்.

                   அப்பொழுதுதான் எங்கிருந்தோ பரபரக்க டிக்கட் பரிசோதகர் ஓடோடி வந்தார். இந்த சம்பவத்தை சொன்னோம். அவர் கூறியது எங்களை திடுக்கிட வைத்தது. இங்கே இஸ்லாமியருக்கான ஒரு திருவிழா நடப்பதாகவும் அதனால் இன்றும் இவ்வளவு கூட்டம் என்றும் அடுத்த ஜங்ஷனில் அவர்கள் இறங்கிவிடுவார்கள் என்றும் கூறினார்.  ஒரு நபரிடம் கூட டிக்கட் இல்லை ஆனால் அதை ஒன்றும் கேட்க முடியாது இது இப்படித்தான் நீங்கள் தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்றார் மிகுந்த படப்படப்புடன். நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை. அப்பொழுது அந்த இரயில் நிலையத்தில் இருந்து மப்டியில் வந்த இரயில் நிலைய போலீசார் அந்த நபர்களை கடுமையான சொற்களால்திட்டி விரட்டவே அவர்கள் ஒதுங்கி கொண்டனர். அந்த போலீசாரும் இறங்கினர்..இரயிலும் நகர்ந்தது......சிறிது நேரத்தில் அந்த கூட்டம் மீண்டும் வந்து சேர்ந்தது. தகராரை தொடர்ந்தனர்  நீ போலீஸ் இல்லை இரயில்வே மினிஸ்டரிடம் வேண்டுமானாலும் சொல் உன்னால் ஒன்றும் புடுங்க முடியாது. அடுத்த ஸ்டேஷனில் அரை மணிநேரம் நிற்க்கும் அங்கே பார்த்துக்கொள்கிறோம் என்றனர். அதில் ஒருவன் மிகவும் தீவிரமாக செல்போனில் தொடர்பு கொண்டு வேறு நபர்களுடன் சம்பவத்தை விவரித்துக்கொண்டிருந்தான். நாங்கள் மொத்தம் ஏழுபேர்  சென்றிருந்தோம். அதில்  பலரும் அரசியலிலும் சட்ட துறையிலும் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள் தான். இருந்தாலும் அன்னிய இடத்தில் என்னதான் செய்துவிட முடியும். அதில் எனக்கும் எங்களை வழிநடத்தி சென்ற அந்த பிரம்மசாரிக்கும் மட்டுமே இந்தி தெரியும். மற்றவர்களுக்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்றே புரியவில்லை. எனக்கு அடுத்த ஸ்டேஷனில் ஏதோ விபரீதம் நடக்க இருப்பது புரிந்ததால் நானும் என்னுடன் வந்த (அவர் உச்ச நீதிமன்ற வக்கீல்) நண்பருடன் இரயிலில் இருக்கும் போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று நடந்தோம். என்னுடன் வந்த வக்கீல் கட்டையாக முடி வெட்டியிருந்ததால் (போலீஸ் என்று நினைத்து) அவர்கள் எங்களை பார்த்ததும் கலவரமானார்கள். காரணம் அடுத்த ஸ்டேசனில் இறங்க வேண்டும் என்பதால் ஒருவரும் டிக்கட் எடுக்கவில்லை.அதில் பெரும்பாலானவர்கள் குடும்பம் சகிதமாக (பர்தா அணிந்து) இருந்தனர். எங்களது மனநிலையும் திக் திக் என்று இருந்தபோதும்  ஏசி பெட்டியை  அடைந்து ஏசி அட்டெண்டரிடம் போலீசை பற்றி விசாரித்தோம்.  அவன் இந்த இரயிலில் RPF போலீஸ் கிடையாது ஏன் ஏதாவது பிரச்சனையா  என்றனர். ஆனால் அங்கேயும் இதே கூட்டம் நின்றது அதனால் எங்களால் எதையும் சொல்ல முடியாமல் திரும்பிக்கொண்டிருந்த போதே அந்த ஸ்டேஷனும் (WADI) வந்தது. அங்கிருந்த படியே 100 க்கு மொபைலில் தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னோம். அவர்களும் அந்த் ஸ்டேசன் போலீசுக்கு தகவல் கூறுவதாக கூறினர்

                        அந்த கூட்டம் அப்படியே வெளியே இறங்கி எங்கள் ஜன்னலருகே வந்து மிக மோசமான வார்த்தையால் திட்டத்துவங்கினர். எமர்ஜன்சி எக்சிட்  (Emergency exit) எங்கள் பக்கம் இருந்ததால் ஜன்னலில் கம்பியே இல்லை. நேரம் செல்ல செல்ல கூட்டம் கூடியது. கையில் கிடைத்த பொருட்களை கொண்டு எறிய ஆரம்பித்தனர். அதுவரை இந்தியனாக இருந்த நாங்கள் அவர்களால் இந்துவாக சித்தரிக்கப்பட்டோம். சம்பவம் திரித்து கூறப்பட்டது. அனைவரும் மிகவும் ஆவேசமாக நாங்கள் உண்ண வைத்திருந்த வாழைப்பழத்தையும் உணவையும் எடுத்து எங்கள் மீதே எறிந்தனர். எங்கள் சக பயணிகள் செய்வதறியாது திகைத்தனர்.  எங்களிடம் ஜன்னல் ஷட்டரை போடுமாறு கூறினர். நாங்களும் அப்படியே செய்தோம். அவர்கள் அந்த ஷட்டரை ஆக்ரோஷமாக தாக்கியதில் அதுவும் உடைந்து தொங்கியது. கூட்டத்தில் ஒருவனின் கையிலும் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அப்பொழுது 2 வயதான இரயில்வே போலீசும் வந்து சேர்ந்தார். அவர்கள் அந்த கும்பலிடம் கெஞ்சி கூத்தாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் ஒருவரும் கேட்பதாக இல்லை. சிறிது நேரத்தில் கும்பல் தகாத வார்த்தையால் சத்தமிட்டவாரே பெட்டிக்குள் நுழைய துவங்கியது. போலீசாரும் அவர்களை தடுத்தனர். நானும் அவர்களை வரவிடாமல் தடுத்தேன். ஒரு வழியாக இரயில் நகர துவங்கியது.......அவர்களும் அந்த பெட்டியை தாக்கியவாரும்..... தகாத வார்த்தையால் திட்டியவாரும் கொஞ்சநேரம் இரயில் வேகத்திற்க்கு ஈடு கொடுத்தனர்..... இரயில் வேகமெடுக்கவே  பதட்டம் தணிந்தது.

இதில் என் மனதில் தோன்றிய சில நியாயமான கேள்விகள்......

1. முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பிறர் ஏறி அராஜகம் பண்ணுவது சரியா.

2. ஒரு பாவப்பட்ட குடும்பத்தை இறக்கிவிட்ட டிக்கட் பரிசோதகர் இவர்களிடம்  பயந்தது ஏன்..?
3. இரயில் பெட்டியின் ஷட்டரை அவர்கள் நொறுக்கியும் இரயில் நிலைய போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்.?

4. இதெல்லாம் சின்ன மேட்டர் இதற்க்கெல்லாம் யாராவது அபாய சங்கிலியை இழுப்பார்களா என்று கருதியிருந்தால் எங்களிடம் அபராதம் வசூலிக்காதது ஏன்..?
5. சிறுபான்மையினர்  எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறும் அளவிற்க்கு அவர்களை சட்டத்தின் அப்பாற்பட்டவர்களாக கருத வைத்து பாதுகாப்பது யார்...?

டிக்கட் பரிசோதகரும், இரயில்வே போலீசாரும் தம் கடமைகளை உணர்ந்து பொறுப்பாக நடந்தால் இதெல்லாம் நடக்குமா...

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரும் இரயிலில் இரயில்வே போலீசார் மிகவும் கண்டிப்புடன் அனைத்து இட்லி மற்றும் டீ வியாபாரிகளிடம் 20 ரூபாய் வீதம் வசூலித்துக்கொண்டிருந்ததை கண் கூடாக பார்த்தேன். ஒரு வேளை அரசாங்கம் இவர்களுக்கு சம்பளம் கொடுப்பதில்லையோ என்னவோ...?


 எது எப்படியோ இது போன்ற சிறு சிறு பிரச்சனைகள் தான் மிகப்பெரிய சம்பவமாக மாறும். மாறியிருக்கிறது.  அவரவர் இடத்தில் எல்லோரும் பெரியவரே. யாரோ செய்த தவறுக்கு யாரோ தண்டனை பெறுவது  உலகத்திற்க்கு ஒன்றும் புதிதல்லவே......

 ஆனால் ஒன்று அராஜகம் அழிந்தே தீரும். ஆதலினால்தான்  அகிலம் முழுவதும் அல்லல் படுகிறீர்கள்.ஆனால் அதில் அப்பாவிகள் பாதிக்கப்படும்போது யாராக இருந்தாலும் நமக்கும் வலிக்கவே செய்கிறது.

                   

Tuesday, August 28, 2012

WISH YOU A HAPPY ONAM

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும், முகநூல் நண்பர்களுக்கும் மற்றும் கூகுள் ப்ளஸ் நண்பர்களுக்கும் என் உள்ளம்கனிந்த ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.......

Sunday, August 26, 2012

தி..க்...கு வாய்............

 லக அளவில் இந்தியாவில் திக்குவாய் மிக அதிகமாக கணப்படுகிறதாம் அதில் 80 சதவீதம் ஆண்களாம்.  உலக மக்கள் தொகையில் ஒரு சதவீதம் திக்குவாயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களாம்.. ஆங்கிலத்தில் இதை stammering அல்லது shuttering  என்றும் கூறுவதுண்டு.திக்குவாயைப்பற்றி எழுத ரொம்ப நாளாக நினைத்திருந்தேன்.  நானும் சிறுவயதில் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவன் என்பதும் அதன் பாதிப்புக்களை அனுபவபூர்வமாக உணர்ந்தவன் என்பதும் கூட ஒரு காரணம்.  என்னிடம் நிறைய திறமைகள் இருந்தும் என்னால் அதை செயல்படுத்த மிகவும் தடையாக இருந்தது இந்த திக்குவாய் என்றால் அது மிகையாகாது.                          


       சிறு வயது முதலே இதன் பாதிப்பு அதிகமாகவே இருந்தது நாலு நண்பர்கள் கூடும் இடத்தில் நான் போனால் நான் கேலிப்பொருள் ஆக்கப்படுவேன்...   இதனால் கும்பலாக இருக்கும் நண்பர் கூட்டத்தை தவிற்க்க நேர்ந்தது.... அந்த சந்தோஷத்தை இழக்க நேர்ந்தது..... பள்ளிக்காலத்தில் நான் என்னதான் பலதடவை வீட்டில் நன்றாகப் படித்து சொல்லி பார்த்துவிட்டு சென்றாலும் ஆசிரியர் முன் சென்றதும் என் தொண்டை வறண்டது போன்ற ஒரு உணர்வு ஏற்படும் என்னால் படித்ததை  சொல்ல முடியாது அதற்க்கான தண்டனையை பெற்றுக்கொள்வேன்...... மனதளவில் இவ்வளவு படித்தும் பயனில்லாமல் போய்விட்டதே என்று நொறுங்கிப்போவேன். மனதிற்க்குள் அழுவேன் வெட்கி தலை குனிவேன். இதில் எனக்கு கொஞ்சம் ஆசுவாசம்என்னவென்றால்  ஒவ்வொரு வகுப்பிலும் முதல் காலாண்டு வரும் வரை இது நடக்கும். பரீச்சையின் மதிப்பெண்கள்  என் தரத்தை  காட்டிக்கொடுத்துவிடும். பிறகு ஆசிரியர்கள் என்னை அவ்வளவாக கொடுமைப்படுத்த மாட்டார்கள். அந்த வருடம் ஒரு வழியாக கடந்து போகும். அடுத்த புதிய வகுப்பு ஆரம்பிக்கும் போது திரும்பவும் இதே படிப்பினையை கொடுக்கும் இப்படியே தான் என் பள்ளி வாழ்க்கையும் பலியாகிப்போனது.

        ல்லூரி வாழ்க்கையில் ஆசிரியர் கேட்டால் சொல்லாமல் இருப்பதை ஒரு ஸ்டைலாகவே மாற்றிக்கொண்டேன். காரணம் ஒன்று என் குறையை மறைக்க, மற்றொன்று பெண் பிள்ளைகளுடன்(co education) முதன் முறையாக படிக்க நேர்ந்ததுஎன்பதும். கல்லூரிபேராசிரியர்களிடம்  அடிக்கும் பழக்கம் எல்லாம் கிடையாது என்கிற கனவோடுதான் போனேன். என்னுடைய வகுப்பில் 69 பேர் உண்டு, அதில் நான் 69வது  மாணவன் அதாவது கடைசி  நபர் நான் தான் (as per alphabatical order).  அதனால் ஆசிரியர் என்னை பார்ப்பதே அபூர்வம்.... அவர் எடுக்கின்ற பாடத்தை நாங்கள்  follow செய்கிறோமா இல்லையா என்பதை அறிய last one  என்பார். அதாவது அவர் வாசித்ததை விட்ட இடத்திலிருந்து வாசிக்க சொல்வார் வழக்கம் போல் என் நா வறண்டுவிடும்.. பிறகு next one... next one....என்பார் அப்படியாக  அப்படியாக கடைசி  பெஞ்ச் முழுவது அந்த hour வெளியேற்றப்படுவோம்.  இது வழக்கமானஒன்றாகிப்போனது.கல்லூரி வளாகத்தில் ஒரு கொல்லாமரத்தில் (cashew nut tree) செட்டிலாகிவிடுவோம். இது பெண் பேராசிரியர் என்பதாக்  இத்தோடு விஷயம்  முடியும்.ஆனால் ஆண் பேராசிரியர் என்றால்  கதை கொஞ்சம் மாறும் உதாரணமாக  Define company ?? என்பார்..... நானும் ஏதோ எனக்கு சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தை கேட்டது போல் நிற்பேன் 1000 times என்பார் அதை அடுத்த நாள் ஆயிரம் தடவை எழுதிக்கொண்டு வர வேண்டும்..... இதை சொல்லிவிட்டால் இதைவிட பெரிய கேள்வியாக கேட்பார்.  திணறும் வரை கேட்டு இம்போசிசன் போட்டுத்தான் விடுவார். அதனால் முதல் கேள்வியிலேயே சரண்டர் ஆகிவிடுவோம்....எனக்குதான் திக்குவாய் ஆனால் என்னை பின்பற்றி கூட வரும் கூட்டத்திற்கு நல்ல வாய் தான்.  அது அன்பால் சேர்ந்த கூட்டம்...... நான் சொல்லவில்லையென்றால் அவர்களும் சொல்ல மாட்டார்கள். பிறகு இரண்டு நாள் கல்லூரிக்கு சொல்லாமல் படம் பார்ப்போம்.  பிறகு ஒரு 20 தடவை எழுதி ஏற்கனவே எழுதிய பழைய இம்போசிசன் பேப்பரையும் பின்னால் சேர்த்து கொடுப்போம். இப்படியாக கல்லூரி வாழ்க்கையும் காலாவதியாகிப்போனது.


பிறகு வேலைக்குப்போனேன் அங்கே தொலைபேசியில் யாராவது அழைத்தால்  என் வாயிலிருந்து ஒரு வார்த்தை வருவதற்க்குள் அவர் போனை வைத்துவிடுவார். இப்படியாகத்தான் நகரமாக நகர்ந்தது  என் வாழ்க்கை.... 

சரி ...
இதற்க்கு காரணம் தான் என்ன? திக்கு வாய் என்றால் என்ன???


                                திக்குவாய் என்பது ஒரு நோய் அல்ல....தன்னுடைய எண்ணத்தை கோர்வையாக ஒரு குறிப்பிட்ட கால அளவில் வெளிப்படுத்த முடியாத  நிலையே திக்குவாய்.  அதற்க்காக அவர்கள்  வேகமாக எத்தனிக்கும்போது வார்த்தை தடுமாற ஆரம்பிக்கிறது.   இவர்கள் ஆரம்பித்துவிட்டால் மிகவும் விரைவாக தடங்கல் இல்லாமல் சொல்லிமுடித்து விடுவார்கள்......ஆனால் இடையில் சிறு தடங்கல் வந்தால் அவ்வளவுதான் மனமும்.... வாயில் உள்ள தசைகளும்...உடலின் செய்கைகள் அனைத்தின் கோ ஆர்டினேசன் இல்லாமல்போவதால் பேச்சு தொடர முடியாமல் போய் விடும்.

                               எனக்கு நாளடைவில் பயங்கள் குறைந்து தைரியமடைந்ததால் இன்று என்னிடம் திக்கு வாய் மறைந்துவிட்டது. என்னுடன் பழகிய எல்லா  புதிய நண்பர்களுக்கும்  எனக்கு திக்குவாய் இருந்தது என்ற விஷயம் கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருக்கும். இதற்க்காக் நான் மருந்து எடுத்ததில்லை.... வாயில் கூழாங்கற்கள் போட்டதில்லை..... மனதை கல்லாக்கிக்கொண்டேன். எவர் சிரித்தாலும் சட்டை செய்வதில்லை.  என்னை நானே உயர்வாக கருதிக்கொண்டேன்.  மிகவும் இலகுவான சொற்க்களைக்கொண்டு என் பேச்சை ஆரம்பிக்க பழகிக்கொண்டேன். இன்று  வெளிப்பார்வைக்கு அந்த பிரச்சனை இல்லை ஆனால் இது மன ரீதியான பிரச்சனை என்பதால் கோபம் வந்தாலோ.... ரொம்ப ஆவேசப்பட்டாலோ இன்றும் என் வார்த்தைகள் சிதறும்.... குளறும் அதனால் முடிந்த வரையில் அதையும் தவிற்க்கிறேன்.  மருத்துவம் இந்த குறை பாரம்பரியம் இல்லை என்று சொல்கிறது  ஆனாலும் என் மகனுக்கு இந்த குறை  இருக்கிறது நான் அதை மிகவும் நுணுக்கமாக அணுகுகிறேன். அடுத்தவர்களின் கேலிப்பேச்சிலிருந்து அவனை பாதுக்காக்கிறேன்... பள்ளியில் சொல்லி வைத்து அவனை துன்புறுத்தாமல் பார்த்துகொள்கிறேன். நான் அனுபவித்த கொடுமைஅவனை அணுகாதவாறு ஒரு பொறுப்பான தந்தையாக ஒரு அனுபவஸ்தராக இந்த பிரச்சனையை அணுகுகிறேன். இந்த பிரச்சனை உள்ளவர்கள் பொதுவாக hyper active  அதாவது சுறுசுறுப்புத்தன்மை அதிகம் உள்ளவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதே என் அனுபவ பாடம். இவர்களின்(சீக்கிரமாக பேசி முடிக்க வேண்டும்) அவசரம் தான்  இந்த திக்குவாய்க்கு முதல் காரணமாக இருக்கிறது. நாமாக  நமக்கென்று ஒரு பேச்சு ஸ்டைலை வைத்துக்கொண்டால் கூட இதிலிருந்து மீண்டு விட முடியும். நிதானமாக பேசினால் போதும் என்று நினைத்தாலே இதிலிருந்து வெற்றி பெறலாம் என்பதே என் கருத்து. முக்கியமாக இந்த நபர்களை கேலிசெய்வது மனரீதியாக அவர்களை மிகவும் பாதிக்கும் எனவே அதை தவிற்க்க வேண்டும். அதை ஒரு குறையாக கருதாமல் நண்பர்கள் அவர்களையும் தங்கள் கூட்டங்களில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு குறையை வைத்து அவர்களை தாழ்மைப்படுத்துவது எந்த விதத்திலும் ஒரு நல்ல நட்பாகவோ அல்லது ஆரோக்கியமான செயலாகவோ இருக்க முடியாது. இந்த சமூகமும்  இதற்க்கு உதவினால் இந்த குறை உள்ளவர்கள் அதிக மன பாதிப்பின்றி இதிலிருந்து மீள ஏதுவாக இருக்கும்.


                         இதற்க்கு அந்த காலங்களில் மருந்து என்று ஒன்றும் கிடையாது. ஆனால் இன்று “ பாகோக்ளோன்” என்ற மருந்து முதன் முறையாக கண்டுப்பிடிக்கப்பட்டிருக்கிறதாக கூறப்படுகிறது. சிலருக்கு நாக்கின் அடியில் தசை அதிகமாக ஒட்டியிருக்கும் (முடிச்சு) அதை அறுவை சிகிட்சை மூலம் நீக்கி பயிற்ச்சி கொடுக்கிறார்கள். ஆனால் ஒரு மருத்துவரால் பரிசோதனை வாயிலாக கண்டுபிடிக்க முடியாது .   5 திக்குவாய் குழந்தைகளையும் 5 சாதாரண குழந்தையும் கொடுத்து அவர்களை பேச வைக்காமல் வெறும் மருத்துவ பரிசோதனை மூலம் அவர்களுக்கு  திக்குவாய் இருக்கிறதா என்று பார்க்கச்சொன்னால் கண்டிப்பாக அவர்கள் முயற்ச்சி தோல்வியில் தான் முடியும். இது அதிக அளவில் மனம் (மூளை)  சார்ந்த  விஷயமே....... பெற்றோர்கள் அவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து ஊக்குவித்தால் இதிலிருந்து எளிதாக மீண்டுவிடலாம். சில ஆய்வுகள் தெரிவிப்பதைப்போல் இந்த குழந்தைகளின் வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.... மணவாழ்க்கையிலும் ஒரு பிரச்சனையும் இருக்காது..... அதெல்லாம் வெறும் பயமுறுத்தல் தான்.
 தேவை குழந்தையின் தன்னம்பிக்கையை வளர்ப்பது மட்டுமே.... நிதானமாக பேசு..... தன்னம்கையுடன் இலகுவான சொற்களைக்கொண்டு பேச்சை ஆரம்பி..... . பிறகு உலகம் உங்கள் கையில் என்பதை எழுதி வைத்துக்கொள். 

வாழ்க வளமுடன். 

          

Monday, June 4, 2012

உலகிலேயே கேரளாவில் தான் ஆட்டோ சார்ஜ் மலிவு- என் அனுபவம்.

சமீபத்தில் ஒரு திருமண வைபவத்தில் கலந்துகொள்ள கேரளாவில் திரிச்சூர் இரயில் நிலையத்தில் இறங்கி வடக்கு பஸ்நிலையம் செல்வதற்க்காக prepaid ஆட்டோவுக்காக டோக்கன் எடுத்தேன். அவரும் 28 ரூபாய் என்று ரசீது கொடுத்தார். இவ்வளவு குறைவாக இருக்கும் என்று நானும் எதிர்பார்க்கவில்லை.

                       அது அதிகாலை 5.30 மணியாகையால் பொழுது விடிந்தும் விடியாதுமாய் இருந்தது இரயில் நிலைய வாயிலில் ஒரே கூட்டம் வரிசையாக நின்று கொண்டிருந்தது எதற்க்காக என்று கடைசிவரை எனக்கும் புரியவேயில்லை. ஆட்டோ மெதுவாக வாயிலை கடந்தது. வாயிலில் உள்ள ஆலமரத்தில் பறவைகள் சப்தம் காதை துளைத்தது....... அப்பொழ்துதான் சிறிது மழை பெய்து வெறித்திருந்ததால் பறவை எச்சத்தின் நாற்றம் குடலை புரட்டியது.

            இப்படியாக சாலையோர காட்சிகளை ரசித்தவாரே ஆட்டோவில் பயணித்தேன். ஆங்காங்கே ஒன்றிரண்டு மனிதர்கள் டீ கடையில் சாயா குடித்துக்கொண்டிருந்தனர். வடக்கு பஸ் நிலையமும் வந்தது. நான் இறங்கி 28 ரூபாய்க்கான ரசீதையும் 50 ரூபாவும் கொடுத்தேன். அவர் மீதி 72 ரூபாய் கொடுத்தார். உலகிலேயே இங்குதான் ஆட்டோ சார்ஜ் இவ்வளவு மலிவு என்று நினைத்தவாரே ஐம்பது ரூபாயை அவரது கையில் திணித்தேன். அவர் என் முகத்தை பார்த்தார்... நான் கொடுத்ததே 50 ரூபாய்தான் என்றேன். வளர நன்நி சாரே என்றவாரே சிட்டாய் பறந்தார்.

Monday, May 21, 2012

ஆதலினால் காதல் செய்வீர்................

இது ஒரு உண்மைக்கதை. இன்று ஒரு பெரியவரை சந்தித்தேன் அவர் தன் மகனின் கதையை கூறினார் அதன் பாதிப்பே இந்த பதிவு


 கதையின் நாயகனின் பெயர் குமரன்( பெயர் மாற்றப்பட்டுள்ளது) ,  நாகர்கோயிலை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த குமரன் வீட்டில் உள்ள மற்ற இரு சகோதரர்களைகாட்டிலும் படு சுட்டி.  எதையும் எளிதில் ஏற்றுக்கொள்ளாத ஒரு சுபாவம் அவனை மற்றவர்களிடத்திலிருந்த பிரித்து காட்டியது.  அதுவே அவனது வளர்ச்சிக்கு ஊன்று கோலாகவும் இருந்தது.


               கெட்டும் பட்டணம் சேர் என்பார்கள் அதுபோல் இவனும் கொஞ்சம் கெட்டு சென்னை பட்டணம் சேர்ந்தான். அங்கே சிறிது சிறிதாக முன்னேறி ஒரு ஒப்பந்ததாரர் (contractor)  ஆனான்.   நல்ல பணம் வர ஆரம்பித்தது அதனூடேயே செல்வாக்கும் வளர்ந்தது. அந்த ஏரியாவில் எல்லா வேலைக்கும் அவனைத்தான் அழைத்தார்கள் நிறைய பேருக்கு செல்லப்பிள்ளையானான். 

             குமரனின் தாய்மாமாவுக்கு ஒரு இளவரசி என்ற மகள் இருந்தாள் அந்த பெண் கேரள தலைநகரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தாள்..... பெயருக்கேற்றார்போல் மிகவும் லட்சணமானப்பெண்.  இவனும் அவ்வப்போது ஊருக்கு வரும்போது அவளுக்கு சாரி சுடிதார்...தங்க செயின் போன்ற எல்லா பொருட்களையும் வாங்கி கொடுத்து வந்தான். வீட்டுக்காரர்களும் ஒன்றும் சொல்லவில்லை . உரிமைப்பட்டவன் தானே...என்று விட்டுவிட்டார்கள். அந்த பெண்ணும் நாளொரு கனவையும் பொழுதொரு எண்ணமுமாக மனதிற்க்குள் காதலை வளர்த்து வந்தாள்.

                      இது இப்படி இருக்க சென்னையில் ஒரு நாள் ஒரு வீட்டிற்க்கு பிளம்பிங் வேலைக்கு சென்றார். அங்கே இருந்த ப்ரியா -வைகண்டதும் இதயம் இனித்தது கண்கள் பனித்தது.... குமரனின் படிப்போ வெறும் +2 , நாயகி B.E..படித்திருந்தாள் நல்ல வசதியான வீடு. 

                          வழக்கம்போல் இந்த காதலுக்கும் கண் இல்லாமல் போனதால் அந்தஸ்து படிப்பு எதுவும் ஒரு மேட்டராக தெரியவில்லை..... இரண்டு பேரும் இணைபிரியா பறவையாக நகரத்தில் பறந்து திரிந்தனர்.....இனி இருவரும் பிரிந்து வாழ வாய்ப்பே இல்லை என்பதை தன் மெய்யறிவால் உணர்ந்து கொண்டனர். வீட்டில் வேறு வழி இல்லாததால் இருவரையும் சேர்த்து வைத்தனர்.

                         திருமணம் முடிந்து புதுமண தம்பதிகள் கிராமத்திற்க்கு வந்த போது குமரனின் தாய்மாமன் பெண் இளவரசியும் வந்திருந்தாள்.


 புதுமண தம்பதிகளைக் கண்டதும் ஓ.........வென்று கதறினாள்.... உறவினர்கள் நடந்தது நடந்துவிட்டது மனசை தேத்திக்கொள் என்று சமாதானம் செய்தனர்..... அவளும் அப்பொழுதே ஓடிப்போய் வீட்டின் சமயலைறையில் நுழைந்தவள்   கடைசி வரை வெளியே தலை காட்டவே இல்லை. அவளால் முடிந்த வரைக்கும் அழுது தீர்த்ததுதான் மிச்சம் .

                     புதுமண தம்பதிகள் இனிமையாக வாழ்க்கையை ஆரம்பித்தனர்.  அவள் எள் எனும் முன்பே அவன் எண்ணெய்யானான். அவர்களுக்கு அழகான ஒரு குழந்தையு பிறந்தது. அவளுக்கு வெளிநாட்டில் ஒரு வேலையும் ரெடியானது. குமரன் ஓடியாடி பாஸ்போர்ட் விசா எல்லாம் ரெடியாக்கி அவளை அன்பாக அனுப்பி வைத்தான். அவளும் நல்லமுறையில் சம்பாதிக்க ஆரம்பித்தாள்..... லீவில் சென்னை வந்தாள்.... ஏதோ ஒரு பிரச்சனையின் காரணமாக குமரன்  நடுரோட்டில் வைத்து அடித்துவிட்டான். மேட்டர் பெரிதானது காவல்நிலையம் வரை சென்றது. இனி இவனுடன் வாழ்வது சாத்தியமில்லை என்று ஒரு வரியில் அவள் கூறிவிட்டாள்.

                      குமரனுக்கு இன்றும் அதே செல்வாக்கு ... அதே பணம்...எல்லா வசதியும் இருக்கிறது.... ஆனால் வாழ்க்கை....


 விவாகரத்து முடிந்ததும் அந்த மாமன் மகளுக்கே திரும்பவும் மணமுடித்து வைப்பதற்க்கு மனதில் எண்ணுகிறார் தந்தையார்..... , மாமன் மகளுக்கோ வேறொரு நல்ல வரன் அமைந்திருப்பதாக செய்தி இவர் காதுக்கு வருகிறது.
இதுதான் இதுவரை நடந்தது....... இனி என்ன நடக்கும் அல்லது எது நடந்தால் சரியாக இருக்கும் என்பதை நீங்களே கூட சொல்லலாம்.... உங்கள் கருத்தை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.....
                         ஆதலினால் காதல் செய்வீர்................

Tuesday, May 1, 2012

வாங்க சிரிக்கலாம்..............(நகைச்சுவை விருந்து)


பஸ்ஸில் கண்டக்டரிடம் ஒரு பயணி கேட்டார்: "ஆமாம், ஏன் காலை அகட்டி வச்சு
நிக்கிறீங்க?


கண்டக்டர்: "பேலன்ஸுக்கு. ஆமாம், நீங்களும் ஏன் காலை அகட்டி வச்சு
நிக்கிறீங்க?"


பயணி:"நானும் பேலன்ஸுக்குத தான் நிக்கிறேன். பத்து ரூபாய் குடுத்ததுக்கு
டிக்கட் சார்ஜ் போக மீதி குடுங்க சார்"


..............................................................................................
விவாதத்திலே நேரங்கழித்தல் -
நிழலுடனே போராடுவதற்கு நிகராகும்.
.........................................................................................
பஸ்ஸில் 2 பின் போகுது. ஒரு பின் சீட்டில் உட்கார்ந்து விடுகிறது. ஒ ரு பின்
படிக்கட்டில் நின்று கொண்டு வருகிறது. எது முதலில் இறங்கும்.


நின்ற பின் தான் முதலில் இறங்கும் ஏன் என்றால் பஸ்ஸில் நின்ற பின் இறங்கவும் என
போர்டு போட்டிருக்கே

.................................................................................................

துட்ட வட்டிக்கு விட்டா தண்டலு
துப்பட்டால மனசை விட்டா மென்டலு..............................................................................................
பெண் : சார் நான் மாசமா இருக்கேன்..


மேனேஜர் : அதுக்கு ஏம்மா??


பெண் : நீங்கதானே சொன்னீங்க. மாசமான சம்பளம் தரலாம்னு..


.............................................................................................
சில நேரங்களில் அவமானங்களும் கூட வெற்றிக்கான பாதை அமைக்கும்..
நமபிக்கையும் பொறுமையும் விடாமுயற்சியும் இருந்தால்

...........................................................................................
எதிர்பார்த்த வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை
ஆனால் எதிர்பார்க்காமல் யாரும் வாழ்வதில்லை


...............................................................................................
கிரிக்கெட் ப்ளேயருக்கும், காலேஜ் பிகருக்கும் என்ன வித்தியாசம்?
கிரிக்கெட் பிளேயர் *BAT*ல அடிப்பார்
காலேஜ் பிகர் *BATA*ல அடிப்பா


..............................................................................................
ஒருத்தர் பஸ்ஸில் பயணப்படும் போது திடீரென் ஓட்டுனர் பிரேக் போட அவர் முன்னால்
நின்ற பெண்மீது இடித்துவிட்டார்.. அவர் சுதாகரித்துக்கொண்டு எழும்முன்...


பெண் : ஏய், நீ என்னப்பண்ணிக்கிட்டிருக்க..?????
நம்மாளு: பஞ்சாப் யூனிவர்ஸிட்டில் பைனல் இயர் B.E.


..............................................................................................
விரும்பும்போது விரும்பினேன் என்பதைவிட
வெறுக்கும்போதும் விரும்பினேன் என்பதே
உண்மை அன்பு
................................................................................................
“இகழ்ச்சி” 
என்னை துணிந்து நில் 
என்றது


“புகழ்ச்சி” 
என்னை பணிந்து செல் 
என்றது.

................................................................................................

டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை.


இந்த டானிக்கை சாப்பிடுங்க.


சாப்பிட்டா சரியாப் போயிடுமா ?


நல்லா இருமலாம்...............................................................................................

கம்பியூட்டரை தட்டினால் அது என்ன நினைக்குமாம்?
இன்டெல் இன்சைட் ; மெண்டல் அவுட்சைட்'ன்னு 

..................................................................................................
டாக்டர்: நீங்க பிழைக்கிறது கஷ்டம்...


நோயாளி: ஏன் டாக்டர்?


டாக்டர்: ஸ்டெதாஸ்கோப்புல சங்கு சத்தம் கேட்குதே...........................................................................................
மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம்
அப்பா: ஓன்னுமில்லை
மகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே.
அப்பா:...
·  

...........................................................................................

வாழ்க்கையும் ஆசிரியரும் ஒரே போல


ஆனால் ஒரே ஒரு வித்தியாசம்.


ஆசிரியல் பாடம் சொல்லிக்கொடுத்து தேர்வு வைக்கிறார்
வாழ்க்கை தேர்வை வைத்து ரிசல்ட் மூலம் பாடம் சொல்லித்தருகிறது.

..............................................................................................
மனைவி : ஏங்க சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி அப்படின்னா என்னங்க..


நம்மாள் : நீ ஊருக்குப்போனா அது சனிப்பெயர்ச்சி..


போயிட்டு அப்படியே உன்தங்கையையும் கூட்டிக்கிட்டு வந்தா அதான்
குருப்பெயர்ச்சி..


...............................................................................................

அப்பா: மகளே, முன்னாடி நீ என்னை அப்பானனு ஆசையோட கூப்பிட்டுகிட்டுருந்தியே.. 
ஏன் இப்பெல்லாம் டாடின்னு கூப்பிடுற??? 
மகள் : அப்பான்னு கூப்பிட்டா லிப்ஸ்டிக் கலங்சுடும் டாடி..
...............................................................................................
ஒருத்தர்: டாக்டர்.. உங்க சர்ட்பிக்கெட் கொடுங்க..
டாக்டர் பயந்து போய் : ஏன்??
நம்மாள் : நான் 1 வீக் ஆபீஸ் லீவு..அவங்க டாக்டர் சர்ட்பிக்கெட் கேட்குறாங்க..
டாக்டர் : !!!


................................................................................................

கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.


மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.


கணவன் : ???

................................................................................................


குடி போதையில் வண்டி ஓட்டக்கூடாதுனா ,பார்ல எதுக்கு பார்க்கிங் வச்சிருக்காங்க???? 


.குரங்குல இருந்துதான் மனிதன் வந்தான் என்றால் எப்படி குரங்குகள் இன்று வரை இருக்கிறது????


நம்ம நாட்டுல பேச சுதந்திரம் இருக்குனா நாம எதுக்கு செல்லுக்கு bill கட்டணும்??? 


நீலச் சிலுவைச்(Blue cross) சங்கம்னு ஒன்னு இருந்தா இந்த அசைவ ஹோட்டல்லாம் எப்படி நடக்குது??
...

.........................................................................................

ஜாலியான அட்வைஸ் கதை 


டாஸ்மாக் மூடுகிற நேரத்தில், கடைசியாக நாலு பேர் உள்ளே போனார்கள். சற்றுத் தொலைவில் கான்ஸ்டபிள் காத்துக் கொண்டிருந்தார். இன்னும் ஒரு கேஸ் பாக்கியிருக்கிறது. குடித்துவிட்டு வண்டி ஓட்டியதற்க்காக ஒரே ஒருவன் சிக்கிவிட்டால், இன்றைய கோட்டா ஓவர்.


பதினைந்து நிமிடம் கடந்தது. டாஸ்மாக்கில் விளக்குகள் அணைந்தன. முதல் ஆள் வெளியே வந்தான். அப்படி ஒன்றும் ஆட்டமில்லை. கொஞ்சம் ஸ்டெடிதான். அடுத்த ஆள் வாட்டர் பாக்கெட்டை வீசி எறிந்தபடியே உடனே வந்தான். அவனும் பெரிதாகத் தள்ளாடவில்லை. மூன்றாவது ஆளும் நான்காவது ஆளும் ஒன்றாக வெளியே வந்தார்கள். மூன்றாவது ஆளின் கையில் கடைசி பெக். வாசலிலேயே குடித்தான். நான்காவது ஆளுக்கு நிற்கவே முடியவில்லை. அவனை மற்ற அனைவரும் சேர்ந்து தோளில் தாங்கியபடி கார் சீட்டில் உட்கார வைத்தார்கள். 


”மச்சான் பார்த்துடா . . . ஜாக்கிரதையா போயிடுவல்ல” 
”ழோ..ழோ..பிழாப்ளம். ழான் பாழத்துழ்கறேன்”, அவனைப் போலவே அவனுடைய குரலும் தள்ளாடியது.


மற்றவர்கள் அவனை விட்டுவிட்டு அவரவர் பைக்கில் தள்ளாடியபடியே ஏறிப் போனார்கள். கடைசி ஆள் இன்னமும் கார் சாவியை துளாவிக் கொண்டிருந்தான். 


”கார் வச்சிருக்கானா? நல்ல வெயிட் பார்ட்டி சிக்கிருச்சி, மீட்டர் போட்டுற வேண்டியதுதான்.” கான்ஸ்டபிள் முகத்தில் புன்னகை. 


”மிஸ்டர் காரை விட்டு இறங்கு” 
”எழுதுக்கு?”
”நீ குடிச்சிருக்க. குடிச்சிட்டு கார் ஓட்ட உன்னை அனுமதிக்க முடியாது. நல்லா வசமா மாட்டிக்கிட்ட”
”யாழ் சொழ்னது நாழ்ன் குழ்டிச்சிழுக்கேன்னு. நாழ்ன் குழ்டிக்கல”
”மிஸ்டர் நான் நினைச்சா உன் டிரைவிங் லைசென்ஸ்சையே கேன்சல் பண்ணிடுவேன். ஆயிரம் ரூபா குடுத்துட்டா உன்னை விட்டுடறேன். ஓடிப்போயிடு”
”சாழ்ர் . . . நாழ்ன் குழ்டிக்கல”
”டாய் யாருகிட்ட பொய் சொல்ற? ஊதுடா?”


அந்த இளைஞன் ஊதினான். என்ன ஆச்சரியம்? குடி நாற்றத்தை கண்டுபிடிக்கிற மீட்டரில் ஒரு சிறு அசைவு கூட இல்லை. 
”டாய் . . . நல்லா ஊதுடா”, இந்த முறை கான்ஸ்டபிள் தனது மூக்காலயே அவன் ஊதியதை மோப்பம் பிடித்தார். துளி கூட சரக்கு நாற்றம் வரவில்லை.
”டேய், உண்மையை சொல்லிடு. கொஞ்சம் கூட வாய் நாறல. எப்படிடா அது?”


”அட அது ஒண்ணும் பெரிய மேட்டர் இல்ல சார்”., பேசிக் கொண்டே கார் சாவியை கரெக்டாக செருகினான். 
”தினமும் எல்லாருமே குடிப்போம். ஆனா ஒருத்தர் மட்டும் குடிச்சா மாதிரி நடிப்போம்”
”எதுக்கு?”
”உங்கள மாதிரி ஆளுங்கள ஏமாத்தறதுக்குதான் . . .வரட்டா”, காரை ஸ்டார்ட் பண்ணி ஸ்டைலாகப் பறந்தான் அவன்.


நீதி


மது அருந்தாதீர்கள். மது அருந்தாவிட்டால், நீங்கள் உங்களை மட்டுமல்ல, மது அருந்துபவர்களையும் காப்பாற்றலாம்.


................................................................................................உடல் உறுப்புகளில் எங்காவது வலி ஏற்பட்டால் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக்கொள் என்பார்கள்


ஆனால் அந்த‌ பல்லுக்கே வலி ஏற்பட்டால் ??


..............................................................................................

அது என்னவோ தெரியவில்லை பசங்க அண்ணான்னு சொல்லும்போது வரும் சந்தோசம் பொண்ணுங்க அண்ணான்னு சொல்லும்போது வருவதில்லைநன்றி
Ranga nathan

Thursday, April 26, 2012


Wednesday, April 4, 2012

கன்னியாகுமரி மாவட்டம்- பொற்றையடி ஸ்ரீ சாய் ஆனந்த ஆலயம் பிராண பிரதிஷ்டை மற்றும் மஹா கும்பாபிஷேகம்

ஆலயத்தின் புற தோற்றம்
இன்று (04.04.2012, புதன் கிழமை) கன்னியா குமரி மாவட்டத்தில் பொற்றையடியில் ஸ்ரீ ஷீரடி சாய் பாபாவின் ஆலயம் பிராண பிரதிஷ்டை மற்றும் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.  shri C.B SATPATHY  கும்பாபிஷேகத்தையும் பிராண பிரதிஷ்டையையும் செய்து வைத்தார்.

ஆலயத்தின் முன் பார்வை
                  இது வள்ளி ஸ்டீல் இண்டஸ்டீரீஸ் -ன் உரிமையாளர் திரு.நேபாள்ராஜ் என்பவரின் முழு முயற்ச்சியாலும் சொந்த பணத்தாலும் (வேறு எவரிடமிருந்து எந்த நன்கொடையும் பெறாமால்) நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இனி கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளை எப்படி சுசீந்திரமும் விவேகானந்த பாறையும் கவர்ந்து இழுத்ததோ அந்த வரிசையில் இந்த ஆலயமும் இடம்பெறும் என்றால் மிகையில்லை.

ஆலயத்தின் உள்ளே
            கன்னியாகுமரி மாவட்டத்தின் மிகப்பெரிய தொழிலதிபர்கள் பலரை அங்கே காண முடிந்தது. பாபாவின் பக்தர்கள் எல்லா ஐஸ்வர்களையும் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. அவரது பக்தர்களை பார்க்கும்போது அது ஒரு வகையில் சரி என்றே தோன்றியது. நான் வருடா வருடம் மும்பையின் அருகில் உள்ள ஷீரடி சாயிப்பாபா கோவிலுக்கு செல்வது வழக்கம். இந்த கோயில் இங்கே அமையப்பெற்றதால் இனி அவரை அடிக்கடி தரிசனம் செய்யலாம் என்பதே எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் தான்.

ஸ்ரீ சத்பதி சிலையை திறந்து பூஜையை ஆரம்பிக்கிறார்.


மந்திரங்கள் ஜெபிக்கப்படுகிறது.
               கடவுள் ஒருவரே என்று போதித்த சத்குரு ஷீரடி சாயிபாப இக்கலியுகத்தில் சமதர்மத்தை நிலைநாட்டி, அவரே அனைவரின் கடவுளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.சாயிபாபா நம்முடன் 1918 வரை இருந்தார்.

தீபாராதனை.


ஆலயத்தின் உள்ளே பொறிக்கப்பட்டுள்ள
பாபாவின் உபதேச மொழிகள்கும்பாபிஷேகம் செய்ய ஆயத்தமாகிறார்கள்கும்பாபிஷேகம் நடக்கிறதுஎங்களது நகரசபை சேர்மன்
மீனா தேவ் (பேட்ஜ் அணிந்தவர்) கும்பபிஷேகத்தை பார்வையிடுகிறார்.

கிரீடம் அணிவிக்கப்படுகிறது
கோயிலின் புறத்தோற்றம்.

ஆரத்தி எடுக்கப்படுகிறது

பாபாவிற்க்கு உடை அணிவிக்கப்படுகிறது.
இவர் தான் இந்த ஆலயத்தின் ஸ்தாபகர் திரு. நேபாள்ராஜ்.
                          நீ என்னை பார். நான் உன்னை பார்க்கிறேன். குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்களும், நான்கு வித சாதனை முறைகளும் அவசியமில்லை. நம்பிக்கையுடன் ஒரு குச்சியை நிலத்தில் நட்டு வணங்கினாலும் நீ கேட்டது கிடைக்குதா இல்லையா என்று பார். நம்பிக்கை, பொறுமை இவை இரண்டும் நான் கேட்கும் தட்சணை. யாரும் யாரை சேர்ந்தவர்களும் இல்லை. நான் உன்னில் இருக்கிறேன். நீ என்னுள் இருக்கிறாய். நான் மசூதியில் வாழும் தூய வெள்ளை பிராமணன். இந்த தூவாரகா மாயில் காலடி வைப்பவரின் துன்பங்கள் மறைந்து இக பர சுகம் அடைவர் இது சத்தியம் என்றார் அவர்.

Sunday, March 4, 2012

499 ????????????பாபநாசத்தில் நடந்த பதிவர் குளியல்

“ஆற்று நீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்று நீர் இரண்டும் போக்கும்”


ஆறு மலையிலிருந்து வருவதால் பல மூலிகைகள் அதில் கலந்திருக்கும். அதில் குளித்தால், வாதம் உள்ளிட்ட நோய்கள் நீங்கும். அது போன்றே அருவி நீரில் பல கனி(ம)ச் சத்துக்கள் மிகுந்து காணப்படுவதால் இதனைக் கனிமச்சத்து நீர் என்றும் கூறலாம். பருகினால் அல்லது இதில் குளித்தால் பித்தநோய், கல்லீரல் தொடர்புடைய நோய்கள், கீழ் வாதம் உள்ளிட்ட பல நோய்கள் போகும். சோற்று நீர் என்பது நீராகாரம். இது அருந்திவர வாதம், பித்தம் இரண்டும் நீங்கும்.


  இதையெல்லாம் தெரிந்து தான் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் ஒரு அருமையான பதிவர் சந்திப்பை (குளியலை) பாபநாசம் அருவியில் ஏற்பாடு செய்திருந்தார். நான், நாஞ்சில் மனோ, சங்கரலிங்கம் ஐயா,திவான் ஜி,நண்பர் சுதன் மற்றும் நண்பர் ராஜேஷ் எல்லோரும் சேர்ந்து பாபநாசம் சென்று எங்களுடைய பாவங்களை கழுவிக்கொண்டோம். அருமையான இரவு கொண்டாட்டம். சிரித்து ... சிரித்து மாய்ந்து போன தருணங்கள் எதையும் அவ்வளவு எளிதாக மறக்கமுடியாது. 


                          இதுவரை பொருட்செலவை பொருட்படுத்தாது நெல்லையில் பதிவர் சந்திப்பை வெற்றிகரமாக நடத்திவரும் திரு. சங்கரலிங்கம் ஐயாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.அதுவும் இவ்வளவு வேலை நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த ஒரு விளம்பர நோக்கமின்றி மிகவும் அருமையாக அவர் செய்யும் பணிகள் ஆச்சரியமூட்டுகிறது. எந்த ஒரு முகச்சுளிப்பின்றி அவர் செய்யும் பணியை மனதார வாழ்த்துகிறேன். இதை விலாவாரியாக நம் மனோ அவர்கள் எழுத இருப்பதால் இதை நான் இத்தோடு முடிக்கிறேன்.

Thursday, February 9, 2012

பாம்பு கடித்தாலும் மருந்தடித்தாலும் சாகத்தான் வேண்டுமா???

          நம் ஊரில் பாம்பு கடிக்கும்,மருந்தடித்தலுக்கும் பஞ்சமே கிடையாது.  அடிச்சவன்(கடிபட்டவன்) மட்டையாகி கிடக்க அவனை மருத்துவ மனை கொண்டு சென்றால் மருத்துவர் கேட்கும் முதல் கேள்வி என்ன பாம்பு கடித்தது ??? (அல்லது என்ன மருந்தை குடித்தான்???). பாம்பு படம் எடுக்கும் என்று படித்திருக்கிறேன் ஆனால் எந்த பாம்பும் அதை கடித்தவனுக்கு அந்த படத்தை கொடுத்ததாக கேள்விப்படவில்லை. அப்படி கொடுத்திருந்தால் அதை மருத்துவருக்கு காண்பிக்கலாம் அவரும் சிகிட்சையை ஆரம்பிப்பார்.

               ஆனால் இந்த பாழாய்ப்போன பாம்பு படம் எடுப்பதோடு சரி.     சரி அதன் பெயர் மற்றும் முகவரி ஏதாவது கொடுத்துவிட்டு போனாலும் நன்றாக இருக்கும். ஆனால் இது அந்த பாம்பிற்க்கும் தெரிவதில்லை அந்த மருத்துவர்க்கும் புரிவதில்லை. மருந்தடித்தவனாவது பாட்டிலை எங்காவது வைத்திருப்பான் ஆனால் இந்த பாம்பை எங்கே போய் பிடிக்க????... இதில் வேற அந்த பாம்பை நாம் பிடித்து கடித்தால் அந்த விஷம் இறங்கிவிடும் என்ற புரளி வேறு கிளப்பிவிட்டுகிட்டு இருக்காங்க. அதை பார்த்தாலே பேதி போகும் போகும்போது பிடிப்பதாவது ... கடிப்பதாவது....!!!!! நல்லா சொல்றாங்கையா டீட்டெய்லு.

                பூச்சி மருந்து குடித்தவனுக்கு உடனேயே சிகிட்சை ஆரம்பிப்பது போல் என்ன பாம்பு கடித்தாலும் அது என்ன பாம்பு என தெரியாவிட்டாலும் பலன் அளிக்கும் சிகிட்சை முறை அவசியம். மருத்துவமனைக்கு வந்த பிறகும் அநியாயமாக ஒரு உயிர் போவதை மருத்துவம் அனுமதிக்ககூடாது.

விளையாடுவதையே மறந்துபோன இன்றைய மழலையர்கள்

          நேற்று ஒரு வயதான பெண்மணி ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது இந்த கால குழந்தை வளர்ப்பு முறையை பற்றி வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருந்தார். மேலும் அவர் கூறுகையில் நானும் 5 குழந்தைகளை பெற்று வளர்த்தவள் தான் இன்று 5 பேருமே மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஆனால் இன்றய குழந்தைகள் விளையாட்டு என்ற ஒரு விஷயத்தை இழந்தே விட்டார்கள் என்றே செல்ல வேண்டும் என்றார்.

                   அந்த காலங்களில் பெண் குழந்தைகள் பட்டம் விடுதல், பல்லாங்குழி, பாண்டி மற்றும் இன்னும் பலவிதமான விளையாட்டுகளை விளையாடுவார்கள். ஆண் குழந்தைகள் கோலி விளையாட்டு, பம்பரம் விளையாட்டு,கோகோ, கபடி,மரம் ஏறுதல் குளத்தில் நீந்துகள் மற்றும் எல்லா மொள்ளமாரித்தனங்களையும் செய்து ஒருவிதத்தில் பொது அறிவு மிக்கவர்களாக இருந்தார்கள். இந்த சாக்கில் நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டவும் கற்றிருப்பார்கள். கொஞ்சம் முட்டு தேயும் அவ்வளவுதான்.

                    இதில் குழந்தைகளின் தனித்திறன் வெளிப்பட்டு தானாகவே ஒரு குழு அமையும் அதில் சகலகலா வல்லவனான ஒருவன் தலைவனாக வருவான். இப்படி தனித்திறனை வளர்த்துக்கொள்வார்கள். நல்ல உடற்பயிற்ச்சியும் இருக்கும். கொஞ்சம் அக்கம்பக்கத்தில் இருந்து பஞ்சாயத்து வரும் என்றாலும் பொதுவாக நன்மையே அதிகம்விளையும். தனியாக சமுதாயத்தை நேர்கொள்ள பழகிவிடுகிறார்கள்.

                     ஆனால் இந்த கால குழந்தைகளின் வாழ்க்கை இயந்திரத்தனம் ஆகிவிட்டது. குறிப்பாக நகர்புரத்தில் இது நிறையவே காணப்படுகிறது. காலையில் ஆறுமணிக்கு எழுந்து குளித்து காலை உணவு உண்டு முடிக்கும் போதே பள்ளி பேருந்தின் அழைப்பு ஒலி கேட்கும். உடனே அரக்கபரக்க பாதி தின்றும் தின்னாமலும் ஒடி பள்ளிக்கு செல்வார்கள். மாலை வந்ததும் ஒரு மணிநேர உறக்கம் பிறகு வீட்டுப்பாடம் மற்றும் டியூசன். இரவு சாப்பாடு ...உறக்கம். மறுபடியும் காலை இதே ஓட்டம் தொடரும். பெரும்பாலும் எல்லா பள்ளிகளிலும் சனிக்கிழமை கூட வகுப்பு நடக்கிறது. ஞாயிறு அன்று செஸ் வகுப்பு , இசை வகுப்பு, நடன வகுப்பு,கராத்தே இப்படி எல்லாம் பெற்றோரின் விருப்பங்களே திணிக்கப்படுகிறது. அவர்களாக யோசித்து ஒரு காரியம் செய்ய முடிவதில்லை. வெறும் புத்தகப்புழுக்களாகவே மாறிவிடுகிறார்கள்.


                     அந்த கால குழந்தைகளை விட இவர்களுக்கு பாட அறிவு இருப்பதை மறுப்பதற்க்கில்லை என்றாலும் பொதுஅறிவிலும்,விளையாட்டிலும் உடற்பயிற்ச்சியிலும் வலுவற்றவர்களாகவே இருக்கிறார்கள். சிறிது நேரம் கிடைத்தால் தொலைகாட்சியின் முன் இருந்து நொறுக்குத்தீனிகளை பீப்பா போல் காட்சியளிக்கிறார்கள்.


                   உணவும்,கலாச்சாரமும் மாறிவிட்டதால் நோய்களுக்கு பஞ்சமில்லை.  நொறுக்கு தீனி அதிகம் தின்பதால் இன்றய குழந்தைகள் உணவு உட்கொள்வதில் மிகவும் மோசமாக இருக்கிறார்கள். அதற்கேற்றார்போல் உடல் நலமும் குன்றி புதிய புதிய நோய்களால் அவதியுறுகிறார்கள். இது இப்படியே போனால் எங்கு போய் முடியுமோ ??????