|
ஆலயத்தின் புற தோற்றம் |
இன்று (04.04.2012, புதன் கிழமை) கன்னியா குமரி மாவட்டத்தில் பொற்றையடியில் ஸ்ரீ ஷீரடி சாய் பாபாவின் ஆலயம் பிராண பிரதிஷ்டை மற்றும் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. shri C.B SATPATHY கும்பாபிஷேகத்தையும் பிராண பிரதிஷ்டையையும் செய்து வைத்தார்.
|
ஆலயத்தின் முன் பார்வை |
இது வள்ளி ஸ்டீல் இண்டஸ்டீரீஸ் -ன் உரிமையாளர் திரு.நேபாள்ராஜ் என்பவரின் முழு முயற்ச்சியாலும் சொந்த பணத்தாலும் (வேறு எவரிடமிருந்து எந்த நன்கொடையும் பெறாமால்) நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இனி கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளை எப்படி சுசீந்திரமும் விவேகானந்த பாறையும் கவர்ந்து இழுத்ததோ அந்த வரிசையில் இந்த ஆலயமும் இடம்பெறும் என்றால் மிகையில்லை.
|
ஆலயத்தின் உள்ளே |
கன்னியாகுமரி மாவட்டத்தின் மிகப்பெரிய தொழிலதிபர்கள் பலரை அங்கே காண முடிந்தது. பாபாவின் பக்தர்கள் எல்லா ஐஸ்வர்களையும் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. அவரது பக்தர்களை பார்க்கும்போது அது ஒரு வகையில் சரி என்றே தோன்றியது. நான் வருடா வருடம் மும்பையின் அருகில் உள்ள ஷீரடி சாயிப்பாபா கோவிலுக்கு செல்வது வழக்கம். இந்த கோயில் இங்கே அமையப்பெற்றதால் இனி அவரை அடிக்கடி தரிசனம் செய்யலாம் என்பதே எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் தான்.
|
ஸ்ரீ சத்பதி சிலையை திறந்து பூஜையை ஆரம்பிக்கிறார். |
|
மந்திரங்கள் ஜெபிக்கப்படுகிறது. |
கடவுள் ஒருவரே என்று போதித்த சத்குரு ஷீரடி சாயிபாப இக்கலியுகத்தில் சமதர்மத்தை நிலைநாட்டி, அவரே அனைவரின் கடவுளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.சாயிபாபா நம்முடன் 1918 வரை இருந்தார்.
|
தீபாராதனை. |
|
ஆலயத்தின் உள்ளே பொறிக்கப்பட்டுள்ள
பாபாவின் உபதேச மொழிகள் |
|
கும்பாபிஷேகம் செய்ய ஆயத்தமாகிறார்கள் |
|
கும்பாபிஷேகம் நடக்கிறது |
|
எங்களது நகரசபை சேர்மன்
மீனா தேவ் (பேட்ஜ் அணிந்தவர்) கும்பபிஷேகத்தை பார்வையிடுகிறார். |
|
கிரீடம் அணிவிக்கப்படுகிறது |
|
கோயிலின் புறத்தோற்றம். |
|
ஆரத்தி எடுக்கப்படுகிறது |
|
பாபாவிற்க்கு உடை அணிவிக்கப்படுகிறது. |
|
இவர் தான் இந்த ஆலயத்தின் ஸ்தாபகர் திரு. நேபாள்ராஜ். |
நீ என்னை பார். நான் உன்னை பார்க்கிறேன். குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்களும், நான்கு வித சாதனை முறைகளும் அவசியமில்லை. நம்பிக்கையுடன் ஒரு குச்சியை நிலத்தில் நட்டு வணங்கினாலும் நீ கேட்டது கிடைக்குதா இல்லையா என்று பார். நம்பிக்கை, பொறுமை இவை இரண்டும் நான் கேட்கும் தட்சணை. யாரும் யாரை சேர்ந்தவர்களும் இல்லை. நான் உன்னில் இருக்கிறேன். நீ என்னுள் இருக்கிறாய். நான் மசூதியில் வாழும் தூய வெள்ளை பிராமணன். இந்த தூவாரகா மாயில் காலடி வைப்பவரின் துன்பங்கள் மறைந்து இக பர சுகம் அடைவர் இது சத்தியம் என்றார் அவர்.
Comments
Raji
பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.