பின் தொடரரும் நண்பர்கள்

Monday, September 26, 2011

ஒரு நண்பரின் கதை இது...........

வாங்க ஜெரால்ட் சார்( பெயர் தெரியாததால் இதையே பெயராக்கிவிடுவோம்) என்ன ரொம்ப சந்தோசமாக இருக்கீங்க என்றேன் நான். (ஜெரால்ட் என்னுடைய நல்ல வாடிக்கையாளர், அதிகம் பேசமாட்டார் , நல்ல மனிதரும் கூட.)  என்னுடைய மனைவி (வெளிநாட்டில் நர்ஸாக பணிபுரிந்து கொண்டிருந்தவர்) நாளை வருகிறாள் நாளை சென்னை சென்று அவளையும் அழைத்து கொஞ்சம், வாங்க வேண்டிய பொருட்களெல்லாம் வாங்கி வரவேண்டும். இரண்டு நாள் சென்னையில் ஹால்ட் என்றார். அவர் மனைவி10 வருடமாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.  ஒரு 10 வயதில் ஒரு மகனுடன் இவர் இங்கு புகைப்படத்தொழிலை செய்து வருகிறார். இந்த தடவை மனைவி வேலையை விட்டுவிட்டு இங்கே செட்டில் ஆக முடிவெடுத்துவிட்டார் என தெரிவித்தார். அதுதான் அவரது மகிழ்ச்சியின் முக்கிய காரணம்.

                 ஒரு நாள் நான் மாலை நாளிதழை படித்துக்கொண்டிருந்த போது   அதில் அவருடைய மனைவியின் மரண அறிவிப்பை கண்டு அதிர்ந்தேன்.  அவர் வந்தே மூன்று மாதம் தான் இருக்கும் என்ன ஆயிற்று என்று விசாரித்தேன்.  அங்கேயும் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி வருமாம். அவர் சாதாரண வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி உண்பது வழக்கமாம். இங்கு வந்து ஒரு மருத்துவரை பார்த்ததில் அது முற்றிய கேன்சர் என்றும் இனி பெரிதாக செய்ய ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டாராம். மூன்றே மாதங்களில் மிகவும் அம்சமாக இருந்த அந்த அம்மையார் மிகவும் உருமாறி இறந்தார் என்பதை நினைக்கும் போது நெஞ்சம் பதறியது. மருத்துவ தொழிலில் இருந்த அவர்களுக்கே இது நேர்ந்தது அவர்களின் அலட்சியத்தை காட்டியது.

                         இப்பொழுது அந்த நண்பர் அவருடைய அம்மாவுடன் மிகவும் சோகத்துடன் காலம் தள்ளிகொண்டிருக்கிறார். அன்பாக சிரிக்கும் அவர் முகத்தில் சிரிப்பு காணாமல் போய் விட்டிருந்தது. ஆகவே நண்பர்களே உடலில் வலி புண் என்று எதுவும் வழக்கத்திற்க்கு மாறாக தெரிந்தால் மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும். அலட்சியம் வேண்டாம்.


புற்றுநோயிலிருந்து ஒருவர் நிச்சயமாக தப்பிக்க முடியும் நோயின் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிட்சை மேற்கொண்டால்.


                  பொதுவாக 1.கருப்பை வாய்புற்றுநோய்
                                           2.மார்புப்புற்றுநோய்
                                           3.வாய்ப்புற்று நோய்
                                           4.  வயிற்று புற்றுநோய் ஆகியவை பரவலாக காணப்படுகின்றன. மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்


புற்றுநோயிலிருந்து ஒருவர் நிச்சயமாக தப்பிக்க முடியும் நோயின் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிட்சை மேற்கொண்டால்.