Skip to main content

Posts

Showing posts from November, 2010

நடந்தது என்ன.......? நிஜம்

பல ஆஸ்கார் விருதுகளை அள்ளியதோடு  உலகெங்கிலும் பிரமாதமான வசூலை அள்ளி குவித்த படம் ‘டைட்டானிக்’. அப்படம் உண்மையில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்தும் அதனூடே சுவைக்காக ஒரு காதல் கதையையும் சேர்த்து எடுக்கப்பட்ட படம்.                  நிஜத்தில் நடந்தது 1912 ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து நியூயார்க் நகருக்கு டைட்டானிக் என்ற நீராவி கப்பல் புறப்பட்டது.  அன்று இரவு 11.25 மணிக்கு மிகப்பெரிய பனிக்கட்டிப்பாறை மீது மோதியது. பின்னர் மெள்ள மெள்ள மூழ்க ஆரம்பித்தது. மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு கப்பல் முழுவதுமாக மூழ்கியேவிட்டது. பயணிகளின் அபயக்குரல் கேட்டு “கார்பதியா” என்ற பயணிகள் கப்பல் ஒன்று உதவிக்கு வந்தது. ‘டைட்டானிக்கில் இருந்த 2200 பேரில் பெண்கள், குழந்தைகள் என 705 பேர்களை மட்டும் உயிருடன் காப்பாற்ற முடிந்தது.  1500 பேரை இந்த ‘டைட்டானிக்’ கப்பல் சமாதி கொண்டது, இதைவிட சிறப்பு  என்னவென்றால் இந்த சம்பவம் நடப்பதற்க்கு சரியாக முப்பது ஆண்டுகளுக்கு  முன்னர்  ஒரு புதினம் வெளியாகியிருக்கிறது ஆங்கிலதில்.  இதில் ‘டைட்டானிக்’ கப்பல் சம்பவம் அப்படியே இருக்கிறது. அதைப்படித்த பலருக்கும் ஆச்சரியம்.

கதவுகள் இல்லா அதிசய கிராமம் (அக்கிரமம் .......?)

                 ச மீபத்தில்  ஷிர்டி சாயிபாபா கோயிலுக்கு போயிருந்தோம்.  அப்பொழுது அதன் அருகில்  சிக்னாபூர் என்ற இடத்தில் ஒரு சனீஸ்வரர் கோயில் இருப்பதாகவும் அது ரொம்ப விசேஷம்  என்றும் சொன்னார்கள்.  கால அவகாசம் இருந்ததால் போகலாம் என்று  புறப்பட்டோம்.  நாங்கள் ஆறு பேர் இருந்ததால் (அதில் 4 பேர் பிரம்மச்சாரிகள்) ஸ்கார்பியோ காரில் போகிற வழியில் கார் ஓட்டுனர் அந்த கோயிலை பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.                                                                    அ ந்த கோயில் அமைந்துள்ள கிராமத்தில்  எங்கும் எதிலும் கதவுகளே கிடையாதாம் (கேட்பது புரிகிறது  வங்கி உட்பட) .  யாரப்பா அங்கே ?  நீ கேட்பதும் சரிதான் கக்கூஸிலும் கூட கதவுகள் இல்லையாம். காரணம் கேட்டால் அங்கே திருட்டே கிடையாதாம். அடடா நம்ம நாட்டிலே இப்படி ஒரு ஊரா  தெரியாமல் இருந்து விட்டோமே  என்று  வருத்தப்பட்டேன்.                       ச னீஸ்வரர் கோயில் வந்த விதம் பற்றியும் கூறிக்கொண்டே வந்தார். அதாவது  ஒரு நாள் சிறுவர் இருவர் மாடு மேய்த்துக்கொண்டு  ஆற்றில் நீர் அருந்த வந்தபோது ஒரு பெரிய கல் தண்ணீரில் மிதந்து வந்ததாகவும், அவர்கள