Skip to main content

கதவுகள் இல்லா அதிசய கிராமம் (அக்கிரமம் .......?)

                மீபத்தில்  ஷிர்டி சாயிபாபா கோயிலுக்கு போயிருந்தோம்.  அப்பொழுது அதன் அருகில்  சிக்னாபூர் என்ற இடத்தில் ஒரு சனீஸ்வரர் கோயில் இருப்பதாகவும் அது ரொம்ப விசேஷம்  என்றும் சொன்னார்கள்.  கால அவகாசம் இருந்ததால் போகலாம் என்று  புறப்பட்டோம்.  நாங்கள் ஆறு பேர் இருந்ததால் (அதில் 4 பேர் பிரம்மச்சாரிகள்) ஸ்கார்பியோ காரில் போகிற வழியில் கார் ஓட்டுனர் அந்த கோயிலை பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.
                                                      


            அந்த கோயில் அமைந்துள்ள கிராமத்தில்  எங்கும் எதிலும் கதவுகளே கிடையாதாம் (கேட்பது புரிகிறது  வங்கி உட்பட) .  யாரப்பா அங்கே ?  நீ கேட்பதும் சரிதான் கக்கூஸிலும் கூட கதவுகள் இல்லையாம். காரணம் கேட்டால் அங்கே திருட்டே கிடையாதாம். அடடா நம்ம நாட்டிலே இப்படி ஒரு ஊரா  தெரியாமல் இருந்து விட்டோமே  என்று  வருத்தப்பட்டேன்.
                     னீஸ்வரர் கோயில் வந்த விதம் பற்றியும் கூறிக்கொண்டே வந்தார். அதாவது  ஒரு நாள் சிறுவர் இருவர் மாடு மேய்த்துக்கொண்டு  ஆற்றில் நீர் அருந்த வந்தபோது ஒரு பெரிய கல் தண்ணீரில் மிதந்து வந்ததாகவும், அவர்கள் கையில் இருந்த கம்பால் அதை அடித்தபோது  அதிலிருந்து இரத்தம் வந்ததாகவும் இதை சிறுவர்கள் ஊரில் போய் கூற   ஊர்காரர்கள்  அந்த கல்லை தூக்க முயன்றும்  முடியவில்லையென்றும் கூறினார்.  பின்னர்  ஒருவரின்  கனவில் வந்து ஒரு கோயில் கட்டி அந்த கல்லை பிரதிஷ்டை செய்ய சொன்னதாம். இப்பொழுது  நிறைய பக்தர்கள் வருகிறார்களாம்.(வராதா பின்னே !) பக்தர்களின்  அலைபேசியை திருடிய ஒரு பெண்ணிற்க்கு கண் பார்வை போய்விட்டதாம். (என்ன ஒரு பில்டப்பு). வரும் வழியில் (மாட்டு செக்கில் ஆட்டிய) கரும்புச்சாறு குடித்தோம்.  இனி சீரியஸ் மேட்டர்  கோயிலுக்கு போகும்போது நாம் உடுத்த  அனைத்து துணிகளையும்  வண்டியில் வைத்துவிட்டு  காவி துணி மட்டும் உடுத்து அங்கேயே குளித்து ஈரத்துணியுடன் செல்ல வேண்டும். குளித்த பிறகு யாரிடமும் பேசவோ, யாரையும் தொடவோ கூடாது. குறிப்பாக பெண்களை  தொடவே  கூடாது. (பிரம்மச்சாரிகள் அதிகம் இருந்ததால் அப்படி சொல்லியிருக்க கூடும்.) அந்த சாமியை கிண்டல் செய்தவர்களின் வண்டி விபத்தில் கவிழ்ந்து விட்டதாக சொல்லி ஒரு வண்டியையும் காட்டி தந்தார்.  எல்லாம் சொல்லிமுடிக்கவும் வண்டி போய் சேரவும் சரியாக இருந்தது.   வண்டியை பார்க் செய்தவுடன் ஒரு கடைக்காரர்  அனைவருக்கும்  இலவசமாக காவி துண்டு வழங்கினார்.
                   ன்ன இருந்தாலும் பூஜை சாமான்கள் வாங்க வேண்டும் அதை என்னிடம் வாங்கினால் போதும் என்றார். (எங்களுக்கு அவருடைய  நேர்மை மிகவும் பிடித்திருந்தது இதே நேரம் நம் ஊராக இருந்தால் இதற்க்கும் பணம் வாங்கி இருப்பார்கள் என நினைத்துக்கொண்டோம்.) . ஒரு பக்கம் பயம் ஏனென்றால்  புது வண்டி ஆகையால் நாங்கள் வந்த வண்டியில் நம்பர் கூட கிடையாது. மறுபக்கம் கையில் உள்ள காசு, அலைபேசி எல்லாவற்றையும் வண்டியில் வைத்து செல்லவேண்டும். சாமி கும்பிட்டுவிட்டு வரும்போது வண்டி இல்லை என்றால் எங்கள் பாடு அதோகதிதான்.
                        ருவிதமாக எல்லோரும்  உடைகளை களைந்து காவி உடுத்தி, குளித்து  பூஜை சமான் வாங்க சென்றோம்(அவர்கள்  சொன்னபடி நாங்கள் யாரும்  பேசவோ,தொடவோ இல்லை)  எல்லோருக்கும்  பூஜை தட்டு தந்தார். அதில் ஒரு பத்தி,ஒரு குதிரை லாடம்,ஒரு குரளி வித்தை காட்டும் பொம்மை போல ஒரு பொம்மை,ஒரு வெள்ளி காசு ஒரு சிறிய கருப்பு துணி ஆகியவை அடங்கும். எனக்கு எதோ பொறி தட்ட விலையை கேட்டேன் (சைகையில்தான்).  அவன் சொன்ன விலைதான்  அவன் சொன்ன எல்லா கண்டிஷன்களையும் உடைத்தெறிந்தது. ஆம் அவன் கேட்டது மூவாயிரம் ரூபாய்.(டேய் இப்படி ஏமாற்றுகிற  உங்க ஊர்ல கதவு இருந்தா என்ன இல்லாட்டி என்ன ?)
              ங்களை தலைமை ஏற்று அழைத்து வந்த பிரம்மச்சாரி  அவனிடம்  எங்களுக்கு உன்னிடம் இருந்து ஒன்றும் வேண்டாம் காவி துணியின் வாடகையை பெற்றுக்கொள் என்றார், அவன் மறுக்கவே எல்லாரும் அவனுடைய துணியை அவிழ்த்து கொடுத்தோம்.(அவன் முகத்தில் ஈயாடவில்லை) அதற்க்கு அவன் சனீஸ்வரர் உங்களை தண்டிக்க போகிறார் என்றான். நாங்கள் எங்கள் வாழ்க்கையையே கடவுளுக்காக கொடுத்தவர்கள்  எஙகளுக்கு எந்த பயமும் இல்லை என்றார் பிரம்மச்சாரி. காவி துணிக்கான  பணத்தை அவன் கண் முன்னே இரு சிறுவர்களுக்கு கொடுத்தோம்.அந்த சிறுவர்களின் முகமலர்ச்சி எங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. பின்னர் எங்களது உடையிலே  கோயிலுக்கு சென்றோம். தொழுதுவிட்டு வந்தோம்.அங்கே காவி உடுத்த நிறைய பக்தர்களை (ஏமாளிகளை) காண முடிந்தது.
                  னி செல்ல விரும்புவர்கள் வீட்டிலிருந்தே  காவி துண்டு ம்,கொஞ்சம் நல்லெண்ணெய் கொண்டுபோனால்  நீங்களே உங்கள் கையால் அபிஷேகம் செய்யலாம். ஏமாறாமல் சிங்கம் போல திரும்ப வரலாம். அங்கேயே எண்ணெய் வாங்கினால் பாமாயில் அபிஷேகம் செய்த பாவம் இலவசமாக கிடைக்கும்.

Comments

அங்கேயே எண்ணெய் வாங்கினால் பாமாயில் அபிஷேகம் செய்த பாவம் இலவசமாக கிடைக்கும்.//

:)..

ம்..கலக்குங்க..
நான் புனேவில் பணி புரிந்த காலத்தில்,மூன்று முறை ஷீரடி சென்றிருக்கிறேன்.ஒரு முறை சனி சிக்னாபூரில் இறங்கி வணங்கி விட்டுச் சென்றேன். அவ்வளவுதான். அவசரப் பயணத்தில் அதற்கு மேல் என்ன செய்ய முடியும்?
தகவல்களுக்கு நன்றி
Unknown said…
பதிலுக்கு நன்றி சென்னைபித்தன் சார்.
Anonymous said…
உபயோகமான பதிவு விஜயன் சார். இதே போன்று பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன். நன்றி!
(nanbendaa.blogspot.com, madrasbhavan.blogspot.com)

Popular posts from this blog

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

என் முதல் கணினி அனுபவம் - தொடர் பதிவு....!

எனக்கு தமிழ்லயே பிடிக்காத வார்த்தை “தொடர்பதிவு” . ஏதோ வந்தோமா  ஏதாவது இரண்டு லைன் முகநூல்ல கிறுக்கினோமா போனோமான்னு இருக்கிற  என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த மனோவை தனியாக கவனித்துக் கொல்கிறேன்.                      பதிவு எழுதியே வருடங்கள் ஆகிப்போனதால் புதிய பதிவு எழுத எங்கே போகவேண்டும் என்று தேடவே நிறைய நேரம் ஆகிவிட்டது..... ஒரு வழியாக கண்டுபிடித்தும் தொலைத்தாகிவிட்டது. இனிவாயில் வந்ததை  வாந்தி எடுக்க வேண்டியதுதான் பாக்கி.                     முதலில் நான் கணினி வாங்க காரணமே தொழில் ரீதியாக புதிதாக சந்தைக்கு வரும் கேமிரா மற்றும் அதன் உப பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்க வசதியாக இருக்குமே என்றுதான். அதற்காக இணைய இணைப்பும் எடுத்தேன். அப்பொழுதுதான் என் கடைக்கு அடுத்த கடையில் இருக்கும் ஹரீஸ் என்ற நண்பன் பதிவுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அது வால்பையன் மறைந்த நண்பர் பட்டாபட்டி மற்றும் பன்னிக்குட்டி ராமசாமி ஆகிய சீனியர் பதிவர் நண்பர்கள் கலக்கிக்கொண்டிருந்த காலம் அது. இணைய இணைப்பு இருக்கிறது என்பதால்  சும்மா இருக்கின்ற நேரங்களில் அதில் மனதில் தோன்றியவற்றை கிறுக்க ஆரம்பித்தேன

நெல்லையில் மினி பதிவர் சந்திப்பு - ஆபீஸர் அதிரடி.

 இடமிருந்து வலம் ரூபினா மேடம்(நாய்குட்டி மனசு),கெளசல்யா மேடம்(மனதோடு மட்டும்),சகாதேவன் ஐயா(வெடிவால்),ஞானேந்திரன்(யானைக்குட்டி),டைரக்டர்.செல்வகுமார்(selva speaking),சீனா ஐயா(வலைச்சரம்),சங்கரலிங்கம் ஐயா(உணவு உலகம்) நேற்று நெல்லையில் ஒரு அதிரடி பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக ஆபீஸர் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் அழைப்பு விடுத்தார். அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு.செல்வகுமார் அவர்கள்  பங்கேற்க்க இருப்பதாகவும் சொன்னார்கள். ஏற்கனவே பிரமாண்டமாக நடந்த முதல் பதிவர் சந்திப்பில்   நான் பங்கேற்க்க முடியாத வருத்தம் இன்னும் இழையோடிக்க்கொண்டிருப்பதாலும் இன்னும் மிக முக்கியமான நட்சத்திர பதிவர்கள் வருகிறார்கள் என்று சொன்னதாலும் உடனடியாக செல்ல முடிவெடுத்தேன். அதன் படி நெல்லை போய் சேர்ந்தேன். மிகவும் சரியான நேரத்திற்க்கு வந்துசேர்ந்தது சீனா ஐயா தான்( அதிக தொலைவில் இருந்து வந்தவரும் அவர்தான்)                பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர இனிதாக களைகட்ட ஆரம்பித்தது பதிவர் சந்திப்பு .  திவானந்தா சுவாமிகள் தன்னுடைய குளுகுளு அறையை அதற்க்காக ஒதுக்கி கொடுத்தது இன்னும் மகிழ்ச்சியூட்டியது