Skip to main content

Posts

Showing posts from February, 2012

பாம்பு கடித்தாலும் மருந்தடித்தாலும் சாகத்தான் வேண்டுமா???

           நம் ஊரில் பாம்பு கடிக்கும்,மருந்தடித்தலுக்கும் பஞ்சமே கிடையாது.  அடிச்சவன்(கடிபட்டவன்) மட்டையாகி கிடக்க அவனை மருத்துவ மனை கொண்டு சென்றால் மருத்துவர் கேட்கும் முதல் கேள்வி என்ன பாம்பு கடித்தது ??? (அல்லது என்ன மருந்தை குடித்தான்???). பாம்பு படம் எடுக்கும் என்று படித்திருக்கிறேன் ஆனால் எந்த பாம்பும் அதை கடித்தவனுக்கு அந்த படத்தை கொடுத்ததாக கேள்விப்படவில்லை. அப்படி கொடுத்திருந்தால் அதை மருத்துவருக்கு காண்பிக்கலாம் அவரும் சிகிட்சையை ஆரம்பிப்பார்.                 ஆனால் இந்த பாழாய்ப்போன பாம்பு படம் எடுப்பதோடு சரி.     சரி அதன் பெயர் மற்றும் முகவரி ஏதாவது கொடுத்துவிட்டு போனாலும் நன்றாக இருக்கும். ஆனால் இது அந்த பாம்பிற்க்கும் தெரிவதில்லை அந்த மருத்துவர்க்கும் புரிவதில்லை. மருந்தடித்தவனாவது பாட்டிலை எங்காவது வைத்திருப்பான் ஆனால் இந்த பாம்பை எங்கே போய் பிடிக்க????... இதில் வேற அந்த பாம்பை நாம் பிடித்து கடித்தால் அந்த விஷம் இறங்கிவிடும் என்ற புரளி வேறு கிளப்பிவிட்டுகிட்டு இருக்காங்க. அதை பார்த்தாலே பேதி போகும் போகும்போது பிடிப்பதாவது ... கடிப்பதாவது....!!!!! நல்லா சொல்றாங்கையா டீட்ட

விளையாடுவதையே மறந்துபோன இன்றைய மழலையர்கள்

          நேற்று ஒரு வயதான பெண்மணி ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது இந்த கால குழந்தை வளர்ப்பு முறையை பற்றி வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருந்தார். மேலும் அவர் கூறுகையில் நானும் 5 குழந்தைகளை பெற்று வளர்த்தவள் தான் இன்று 5 பேருமே மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஆனால் இன்றய குழந்தைகள் விளையாட்டு என்ற ஒரு விஷயத்தை இழந்தே விட்டார்கள் என்றே செல்ல வேண்டும் என்றார்.                    அந்த காலங்களில் பெண் குழந்தைகள் பட்டம் விடுதல், பல்லாங்குழி, பாண்டி மற்றும் இன்னும் பலவிதமான விளையாட்டுகளை விளையாடுவார்கள். ஆண் குழந்தைகள் கோலி விளையாட்டு, பம்பரம் விளையாட்டு,கோகோ, கபடி,மரம் ஏறுதல் குளத்தில் நீந்துகள் மற்றும் எல்லா மொள்ளமாரித்தனங்களையும் செய்து ஒருவிதத்தில் பொது அறிவு மிக்கவர்களாக இருந்தார்கள். இந்த சாக்கில் நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டவும் கற்றிருப்பார்கள். கொஞ்சம் முட்டு தேயும் அவ்வளவுதான் .                     இதில் குழந்தைகளின் தனித்திறன் வெளிப்பட்டு தானாகவே ஒரு குழு அமையும் அதில் சகலகலா வல்லவனான ஒருவன் தலைவனாக வருவான். இப்படி தனித்திறனை வளர்த்துக்கொள்வார்கள். நல்ல உடற்பயிற்ச்சியும் இ

சாமீ எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் !!!!!!!!!!!!!

              ரொ ம்ப நாளாகவே எனக்கு ஒரு சந்தேகம். கடவுள் என்று எல்லா மதத்திலும் சொல்லப்படுகிற நபர் உண்மையிலேயே இருக்கிறாரா ???? இருந்தால் நம் மன்மோகன் சிங் மாதிரி யார் எது சொன்னாலும் ஏன் இப்படி காது கேட்காத மாதிரியே இருக்கிறார்.                   இ ப்படி கேட்க காரணம் இருக்கிறது. யார் அதிகம் அவரை தொழுகிறார்களோ அவர்கள் அதிகம் கஷ்டத்தில் இருக்கிறார்கள். அதிலும் எனக்கு ஒரு சந்தேகம் அதிகம் கஷ்டத்தில் இருப்பதால் தான் அவர்கள் கடவுளை தொழுகிறார்களா இல்லை ... கடவுளை தொழுவதால் தான் கஷ்டப்படுகிறார்களா???                    ஏ னென்றால் கடவுள் பெயரை செல்லி கடவுளின் ஏஜெண்டாக பணிபுரியும் நபர்கள் நன்றாகத்தான் இருக்கிறார்கள். எல்லா மதத்தில் அப்படிப்பட்ட ஏஜெண்டுகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் அட்டூழியம் மிக.... மிக..... அதிகம்.  ஏன் நாம் ஏதாவது கேட்டால் கடவுள் செவி சாய்க்க மாட்டாரா ????  இல்லை இந்த ஏஜெண்ட் சொன்னால் தான் கேட்பாரா??? கடவுள் உண்மையில் இருக்கிறார் என்றால் இந்த டுபாக்கூர் (நல்லவர்களை பற்றி நான் சொல்லவே இல்லை) ஏஜெண்டுகளை ஏன் இவர் தண்டிக்காமல் வைத்திருக்கிறார்...???? அநியாயம்..

இந்தியாவில் சோம்பேறிகளின் எண்ணிக்கை 132 சதவீதம் அதிகரிப்பு

                  சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமூக இணையதளமான ஃபேஸ்புக்கை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த ஒரு ஆண்டில் இரு மடங்காக உயர்ந்துள்ளது.               இந்தியாவில் மட்டும் ஃபேஸ்புக் பயன்பாடு 132 சதவீதம் அதிகரித்துள்ளதாம். இது பிரேசிலில் 268 சதவீதமாக உள்ளதாம்.சீனாவில் சமூக இணையதளங்களைப்பயன்படுத்துவதற்க்கு அதிகக் கட்டுப்பாடுகள் உள்ளதால் அங்கு இதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு.               ஒவ்வொரு மாதமும் ஃபேஸ்புக்கைப்பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை வைத்து இது கணக்கிடப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கின் பங்குகளை அமெரிக்க பங்கு வர்த்தகத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாம். நன்றி : தினமணி.

Made in India.

A Japani came to INDIA...! He took an auto to go to the airport, on the way a H onda overtakes ... Japani: HONDA made in JAPAN..... very fast... next a toyota overtakes Japani: TOYOTA made in JAPAN.....very fast .... Reached Airport & asked How Much? Driver: RS. 8000 .... Japani: Why so expensive?? Driver: METER made in INDIA ........''VERY FAST.....''

அலை பேசி கொலை பேசி ஆக வேண்டாமே.......

                இந்த நவீன தொழில் நுட்பத்தில் தொலைபேசி தொல்லை பேசி ஆகிப்போனது நாம் அறிந்ததே. தொலைபேசி வீட்டில் இருந்தவரை பிரச்சனைகள் வெகு குறைவாகவே இருந்தது. அதில் நடக்கும் உரையாடல்களும் குடும்ப உறுப்பினர்களின் மத்தியிலே நடப்பதால் அதில் ஒரு வெளிப்படைத்தன்மையும் ஒருவித பாதுகாப்பும் இருந்தது. அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி தனிமனித ஒழுக்கத்திற்கு அது எந்த விதத்திலும் கேடு விளைவிக்கவில்லை.                       ஆனால் புதிய வரவான அலைபேசியில் எண்ணிலடங்கா வசதிகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலும் அவை தவறாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது கேமிரா ஆனாலும் சரி. வாய்ஸ் ரெகார்டிங்க் ஆனாலும் சரி, வாயில் மாடுலேசன்( pitch shift) ஆனாலும் சரி . `                 அது போல சாலையில் ந(க)டக்கும் போதும் அலைபேசியில் பேசிக்கொண்டே எதையும் சட்டை செய்யாமல் சென்று ஒழுங்காக வருபவனையும் தடுமாற செய்து விபத்திற்க்குள்ளாக்குவது , வாகனகள் ஓட்டும் போது பேசிக்கொண்டே ஒரு பக்கத்தில் ஸ்ட்ரோக் வந்தவனைப்போல் தலையை சரித்து வண்டி ஓட்டுவதும் கடைசியில் வண்டியையும் பேலன்ஸ் பண்ண முடியாமல் போனையும் காப்பாற்

........................7...7.....7......................................

மேல் உலகங்கள் ஏழு, கீழ் உலகங்கள் ஏழு, கடல்கள் ஏழு, நதிகள் ஏழு,மண்டலங்கள் ஏழு,நிலங்கள் ஏழு, மாந்தர்கள் ஏழு, உடற்தாதுக்கள் ஏழு,உடல் குறைகள் ஏழு, உடல் சக்திகள் ஏழு..... ஆக உலகத்தை படைக்கும் பொழுது இப்படித்தான் எல்லாவற்றையும் ஏழு ,ஏழாக படைத்துள்ளான்.          ஏழு வகை உடல் சக்திகளை தவத்தாலோ, வலிமையாலோ,ஒன்றாகச்சேர்த்து சித்தி பெற்றவர்களை நாம் சித்தர்கள் என்கிறோம்.          உண்மையில் நாம் ஏழு உடல் சக்திகளையும் பெற்று முக்தி அடைய முடியுமா? என்ற சந்தேகம் எல்லோருக்கும் வரும். ஆனால், திருவள்ளுவரும்,ஒளவையாரும் தங்களது பாடல்களில் ஏழ்பிறப்பு உண்டு என்பதை வலியுறுத்தியுள்ளனர். திருக்குர் ஆனில் நபிகள் நாயகம் ஏழு உலகங்களை குறிப்பிடுகிறார். பரம பிதாவின் திருச்சபையில் ஏழு ஜோதிகள் எரிந்து கொண்டிருந்தன என்று பைபிள் குறிப்பிடுகிறது. சமண மதமும், புத்த மதமும் கூட இவ்வாறே குறிப்பிடுவது ஆச்சர்யம் தானே.!!!!!!!