பின் தொடரரும் நண்பர்கள்

Saturday, March 26, 2011

அண்ணா அண்ணாதான்.

முதல்வரான பிறகு காஞ்சியில் சொந்த வீட்டுக்குப்போனார் அண்ணா. ஐஸ் வாட்டர் வந்ததும் “ஏது பிரிட்ஜ் ! பணம் ஏது ?” என்று கேட்டு வாயிற்படியில் தலைவைத்துப் படுத்து விட்டார் !

                      வீட்டில் மருமகள்கள் வந்து தவணை முறையில் வாங்கியதாக புத்தகத்தைக் காட்டிய பிறகே உள்ளே சென்றார்.

                       “வாழ்நாளில் எப்போதும் இல்லாத அடக்கத்துடன் உங்கள் முன் நிற்க்கிறேன்” என்று பதவியேற்றவுடன் கடற்கரையில் மக்கள் முன் சொன்னார்.

                      “முன்பு இருந்தவற்றை கலைக்கவோ குலைக்கவோ வரவில்லை; மேம்படுத்தவே வந்துள்ளேன் என்று அரசு ஊழியர்களிடையே பேசினார்.  கற்பனை கூட செய்து பார்க்க முடியாத பண்பு அது.

                         ஒருநாள் நுங்கம்பாக்கம் வீட்டில் இருந்து பிற்பகல் நான்குமணிக்கு கோட்டைக்குப் போக வேண்டிய அவசர வேலை. உதவியாளார்கள் மறந்துவிட்டு கடைசி நேரம் நினைவுறுத்தினார்கள். பரபரப்பாக புறப்பட்ட முதல்வர் அண்ணா கார் அருகே வந்துவிட்டார்.  ஓட்டுனர் இல்லை. போலீஸ் அதிகாரி அந்த ஓட்டுனரை கடிந்து கொண்டார். முதல்வரின் பாராட்டைப் பெறலாம்   என்ற நினைப்போ என்னவோ ?. முதலமைச்சர் அண்ணா மெதுவாக சொன்னார்.! “ இது வழக்கமாக சண்முகம் (ஓட்டுனர்) டீ சாப்பிடுகிற நேரம்.  நாம் தான் அதியசயமாக் இந்த நேரத்தில் கோட்டைக்குப் புறப்படுகிறோம் ! அவன் என்ன செய்வான்! கோபிக்காதீர்கள் “ என்றார் அண்ணா !
           
                          இன்று அண்ணாவின் தம்பிகள் செய்கின்ற அட்டகாசம் நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஸ்பெக்ட்ரம் ஒரு பிரச்சனையே இல்லை  இவர்கள் தான் வேண்டுமென்றே ஊதி பெரிதாக்குகின்றனர் என்கிறார் கலைஞர்.  ஓட்டுனருக்காக காத்திருந்த அண்ணா எங்கே  இன்று முதல்வர் வருகிறார் என்றால் ஓட்டுமொத்த  நகரமுமே காத்திருக்கிறதே. வாழ்க அண்ணா ! வளர்க அவரது பெயரால் மக்களுக்கு போடப்படும் நாமம்????.
              Saturday, March 19, 2011

ராஜாவாக இருக்கவேண்டும் அல்லது ராசாவாக இருக்க வேண்டும் .

SONY INDIA வின்  RE SELLER'S MEET சென்னையில் ராடிசன் ரிசார்ட்-ல் 15 மற்றும்16-03-2011-ல் நடந்தது. அதில் நானும் கலந்து கொண்டேன்.  சோனி இந்தியாவின்  இந்திய பிரதிநிதி  waki chan  பேசிய போது  ஜப்பான் நாட்டைப்போல் எந்த ஒரு நாடும் சோதனைகளை சந்தித்ததில்லை என்றும் ஆனால் அதில் எல்லாம் இருந்து மீண்டுவந்த ஜப்பான் இதிலிருந்தும் மீளும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்
சோகமான முகத்துடன் வாக்கி சான்
conference -ல் சோனியின் தயாரிப்புகளை விளக்கும் வாக்கி சான்


நாங்கள் அங்கு இருக்கும்போது நம்முடைய முதல்வர், துணை முதல்வர் மற்றும் அழகிரி ஆகியோர் திடீரென வருகை புரிந்தார்கள். அவர்களை சந்திக்க  வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் ஏதோ  விவாதத்தில்  இருப்பதாக சொல்லப்பட்டது.  மாலையில் தான்  சாதிக் பாட்சா இறந்த விபரம்  பத்திரிகையில் வந்தது. அவர்களுக்கு ராசாவினால் அவர்களின் ராஜ வாழ்க்கை பாதிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை.  முதல்வருக்கு அது ராசியான ரிசார்ட்டாம். வசதியானவர்கள என்ன வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதை நம்மால் உணர முடிந்தது . ஒரு ஆர்வக்கோளாரால்  அதன் வாடகையை கேட்க தோன்றியது.  பத்தாயிரம் முதல் எண்பதாயிரம் வரை (வரிகள்  தனி)  அதில் தங்க வேண்டுமென்றால் ஒன்றில் ராஜாவாக இருக்கவேண்டும் அல்லது ராசாவாக இருக்க வேண்டும் .

எல்லாம் ஒரு விளம்பரம் தான்
.டிஸ்கி: நேரமின்மையால் தான் இப்படி ஒரு ஒப்பேத்தல் பதிவு. ஆதரவு தர வேண்டுகிறேன்.

Tuesday, March 8, 2011

மீண்டு வருமா தமிழகம் ......................?

தமிழகத்தில் திமுக , அதிமுக அணிகு மாற்றாக  நல்ல நேர்மையான தலைவரைக்கொண்ட ஒரு கட்சியை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.   தமிழக அரசியலின் அவல நிலையைப் பார்க்கும் போது, பீகார், மேற்க்கு வங்காளம் ஆகிய மாநிலங்களைக்காட்டிலும் மிகவும் கேவலமாக போய்விட்டது.     அங்கே நிதிஷ் குமார்,மம்தா பானர்ஜி ஆகியோர் மக்களுக்கு நல்லதை செய்து நல்ல செல்வாக்குடன் உள்ளனர்.   எதிர்கட்சிகள் செல்லாக்காசாகிப்போய்விட்டது.

                         ஆனால் தமிழ் நாட்டில் ஆளுங்கட்சி தோற்க்க ஆயிரம் காரணங்கள் இருக்கிறது.   தமிழ் நாடு உருப்படவேண்டுமென்றால் அது தோற்றாக வேண்டும் . ஆனால் மாற்று அணி என்று பார்க்கையில்  அதிமுக  நல்ல பலத்துடன் இருப்பது போல் தோன்றினாலும்  அது அனைத்து மக்களின் எதிர்பார்புகளை பூர்த்தி செய்யும் அணி அல்ல. அவர்களும் ஊழலுக்கு விதிவிலக்கல்ல என்றாலும் தப்போ சரியோ  செய்வதை ஆணித்தரமாக செய்யும் துணிவு ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு. அரசியலில் சில குப்பைகளை அகற்றவேண்டியிருப்பதால்  இந்த தடவை  இவர் ஆளவேண்டியது காலத்தின் கட்டாயம்.

                       இவர்களுக்கு மாற்றாக தகுதியான ஒரு ஆள் என்று பார்த்தால் அரசியலில் அந்திம காலத்தை நோக்கி நகருகின்ற கட்சியின் தலைவரான வைகோ தென்படுகிறார்.  இவருடைய பேச்சில்  அனல் பறக்கும். இன்றய தலைவர்களில் பேச்சாற்றலில் இவருக்கு நிகர் இவர்தான்.
                           
                           ஒரு ஆரோக்கியமான அரசியலுக்கு தேவையான  அனைத்து அறிவையும் பெற்றிருந்தாலும் காலம் அவரை  அவர் அறியாமலேயே ஒரு வெற்றிடத்தை நோக்கி கொண்டு செல்கிறது .   அரசியலில்  கோர்வையாக பேசத்தெரியாத  அவருக்கு மிகவும் ஜூனியரான விஜயகாந்த் சாதித்த அளவுக்கு கூட அவர் சாதிக்கவில்லை. என்னதான் திறமையிருந்தாலும் காலம் ஒத்துழைக்கவில்லையென்றால்  என்ன ஆகும் என்பதற்க்கு வைகோ ஒரு சிறந்த முன் உதாரணம்.  இவரை  சார்ந்திருப்பவர்கள் படித்தவர்கள் , நல்ல சிந்தனைவாதிகள்  அவரது தலைவரைப்போல் அதிரடி அரசியல் தெரியாதவர்கள். இவர்களின் அரசியல் எதிர்காலமும் கேள்விக்குறியாகவே  இருக்கிறது.  அனேகமாக இந்த தேர்தல் அவருடைய கட்சியை காணாமல் கூட போக செய்யலாம்.

                          யாருக்கும் பிடிக்காத ஒதுக்கப்பட்ட ஸ்ரீசாந்த் கூட  (ஸ்ரீகாந்துக்கே பிடிக்காத)  அணியில் வர முடிகிறது .   ஒரு வேளை கேரளாவில் இதுக்கான விஷேச  பூஜைகள் இருக்குமோ என்னமோ ?( செய்வினையோ  செயப்பாட்டுவினையோ !! என்ன கருமமோ).  வைகோ இதைப்பற்றி அம்மாவிடம் விசாரிப்பது நலம்.  .   ஓட்டுவங்கி அரசியல் இவருக்கு தெரியாது.  இவரும் சுப்ரமணியம் சாமி மாதிரி ஆகிவிடுவார் என நினைக்கிறேன்.

மருத்துவர் அய்யா மற்றும் திருமா இவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொண்டார்கள்.  இப்போழுது இருக்கின்ற நிலையை தக்க வைத்துக்கொண்டாலே  இவர்களைப்பொறுத்தவரையில் பெரிய சாதனை தான். இவர்கள்  சேர்ந்திருக்கும் கூட்டணி  இவர்களுக்கு எந்த விதத்தில் உதவும் என்பது தெரியவில்லை.  காங்கிரஸ் தான் மிகவும் பரிதாபகரமான இடத்தில் இருக்கிறது. திமுகா வுடன் கூட்டணி வைத்தாலும் வைக்காவிட்டாலும்  தேர்தலில் மண்ணைக் கவ்வப்போவது உறுதி. 

   சீமான் வைகோ வின் இடத்தை ஓரளவு நிரப்பி வருகிறார். அவருக்கும்(தானாக) கூட்டம் கூடுகிறது.   இந்த முறையும் காங்கிராஸூக்கு  பெரிய இழப்பை உண்டாக்குவார் என எதிர்பார்கப்படுகிறது.அவருடைய இலக்கு அடுத்த தேர்தல்தான்.  இந்த தடவை இல்லையென்றாலும் அடுத்த  தேர்தலிலாவது ஒரு  ஊழலில்லாத கட்சி  ஆண்டால் தான் தமிழ் நாடு  சரிவிலிருந்து மீளும். அப்படி ஒரு கட்சியை அடையாளம் காட்ட எல்லாம் வல்ல இறைவன் தான்( ரஜினி!!!!!)  உதவ வேண்டும் .

Thursday, March 3, 2011

தமிழன்னா சும்மாவா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஒரு பார்க் பெஞ்சில்  சந்தோஷமாக இருந்த காதலர்களை போலீஸ்காரர் ஒருவர் கேட்டார்.
”நீங்கள் திருமணம்  செய்துகொள்ளக்கூடாதா ?”
”நாங்கள் திருமணம் ஆனவர்கள்” என்றான் இளைஞன்.
”பிறகு வீட்டிலேயே சந்தோஷமாக இருக்கலாமே ”என்றார் போலீஸ்காரர்.
இவளுடைய கணவரும் எனது மனைவியும் விடமாட்டார்கள்” என்றான் இளைஞன்.
*********************************************************************************

ஸ்விட்சர்லாந்து நாடு.
ரயில் வண்டி ஒன்று சென்று கொண்டிருந்தது.
ரயில் குகை ஒன்றின் வழியாக செல்கையில் பெட்டியில் இருள் சூழ்ந்தது. அப்போது “இச்” சென முத்தமுடும் ஒலியும் “ப்ட்”டென அடி கொடுக்கும் ஓலியும் கேட்டன.
குகையை விட்டு ரயில் வண்டி வெளியே வந்து ஓடியது.
நால்வரும் தம்முள் கீழ்க்கண்டபடி நினைத்துக்கொண்டனர்.
முதியவர்: சே ! இந்த இளம் ஆண்மகன் ரொம்ப மோசம். பெண் புத்திசாலி. தன்னை முத்தமிட்டவனை அடித்துவிட்டாளே.

பெண்: இந்த ஆடவரில் யாரோ ஒருவன் கிழவியை போய் முத்தமிட்டிருக்கிறான். நான் இருப்பது எப்படி  தெரியாமல் போனது?.

சிங்களன்:அந்த தமிழன் அந்த பெண்ணையல்லவா முத்தமிட்டிருக்கிறான். ஆனால் அந்த பெண் என்னையல்லவா அடித்துவிட்டாள்.

தமிழன்: என் உள்ளங்கையில் முத்தமிட்டுக்கொண்டு  சிங்களனை நானே அடிக்க வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டேன்.
*******************************************************************************
AMERICAN      : DO YOU KNOW SWIMMING

INDIAN            : NO

AMERICAN      : DOG IS BETTER THAN YOU. IT SWIM

INDIAN            :  DO YOU KNOW SWIMMING ?


AMERICAN      :    YES

INDIAN             :   THEN WHAT IS THE DIFFERENT BETWEEN YOU AND DOG ????????

Tuesday, March 1, 2011

கோழி முட்டை சைவமா !! இன்னும் பல தகவல்கள்


கால்நடைகள் மூலம் நமக்கு கிடைக்கிற உணவுப் பொருட்கள் பால்,முட்டை,இறைச்சி. இதுல பாலை சைவம்னு சொல்றோம்.இறைச்சியை அசைவம்னு முடிவு கட்டிட்டோம். ஆனா இந்த முட்டை மட்டும்  நடுவில் கிடந்து திண்டாடுது.

                        பால் தருவதால் பசு இறப்பது இல்லை. ஆனா இறைச்சி வேணும்னா ஒரு உயிரை கொன்னே ஆகணும் இல்லையா. அப்படி பார்க்கிறபோ முட்டைய சைவ உணவுன்னு சொல்லலாம். முட்டைக்குள்ளேருந்து குஞ்சு வர்ரத தடுத்துதானே முட்டையை சாப்பிடுறீங்க ! அப்படீன்னு நீங்க கேட்கலாம்.
                        
                        இப்போழுதெல்லாம் சேவல் சேராத, உயிர் கரு இல்லாத, அடை வைத்தாலும் குஞ்சு பொரிக்காத  முட்டைகள் தான் பண்ணையிலிருந்து வருது.
கருவுள்ள முட்டை வேணும்னாதான் சேவல் சேரணும். முட்டை உருவாகக் கோழியோட உடம்புல இருக்கிற சத்தே போதும்.
                         பாலை சைவ உணவாக கருதுபவர்கள், உயிர்க்கரு இல்லாத முட்டைகளை சைவ உணவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மகாத்மா காந்தி சொல்லியிருக்கிறாரே போதாதா ?. சைவம் அசைவம்கிறது மனதை பொறுத்த விஷயம்.நீங்களே யோசிச்சு முடிவெடுங்க. ஆனால் முட்டை ஒரு உயர்ந்த உணவு.
இனி முட்டையை பற்றிய சில பயனுள்ள தகவல்கள்

*  நாட்டுகோழி முட்டையில்தான் சத்து அதிகமா ?
       பொதுவா மஞ்சள் கரு நிற்ம் அடர்த்தியா இருந்தா அது சத்து நிறைந்ததுன்னு மக்கள் நினைக்குறாங்க.  சாந்தொபில்(xanthophyl) ன்னு சொல்ற ஒரு பொருள் தான் மஞ்சள் நிறத்தை கொடுக்குது. அதுக்கும் சத்துக்கும் சம்பந்தம் கிடையாது. பண்ணை கோழியில் நாம் கொடுக்கிற உணவுல எல்லா சத்தும் இருக்குது. ஆனா நிறம் கொடுக்கிற அந்த பொருள் குறைவா இருக்குது அவ்வளவுதான். நாட்டு கோழி முட்டையைவிட பண்ணை கோழி முட்டை அளவில் பெரிதாய் இருக்கும். அதனால் கூடுதல் சத்து கிடைக்கும்.

*   முட்டை கெட்டுபோய் விட்டதா என்பதை எப்படி கண்டு பிடிப்பது.?
               கேண்ட்லிங்  (candling) என்ற முறையில் ஒளிக்கதிர்களை செலுத்தி முட்டையின் தரம் அறியலாம்.
 அல்லது ஒரு பாத்திரத்தில் ரெண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பூன் உப்பை போட்டுக் கலக்கி  அதுல முட்டைய மெதுவா போடுங்க. நல்ல முட்டையா இருந்தா பாத்திரத்தின் அடியிலே இருக்கும் . பழைய முட்டையா இருந்தா பெருத்த பாகம் மேலே நிக்கும். அழுகிய முட்டைன்னா அப்படியே மிதக்கும்.
  முட்டையை பாதுகாக்க சில டிப்ஸ்

*   அழுக்கான முட்டையை வாங்காதீங்க. அப்படியே வாங்கினாலும் கழுவாமல் உடனேயே உபயேகப்படுதிடுங்க. கழுவினா முட்டையில் ஓட்டில் நிறைய நுண் துழைகள் உள்ளன. அதன் வழியாக  நுண்கிருமிகள் குறிப்பா சூடோமோனஸ் (pseudomonas)  நுழைஞ்சி முட்டையை கெடுத்திடும்.
*   முட்டையை அடுக்கி வைக்கும்போது குறுகிய பகுதி அடியில் வரும்படி வைங்க.

*  முட்டையை அவிக்கும்போது நீரில் கொஞ்சம்  உப்பு போட்டீங்கன்னா ஓடு உரிக்க எளிதா இருக்கும்.
*   வேகவச்ச முட்டைய உடனடியா பச்சை தண்ணீரில் போட்டா பச்சை வளையம் ஏற்படாது.
*    ஸ்பூனால அடிச்சு கலக்கும் போது நுரை எளிதா வந்துச்சினாலும் அது நல்ல முட்டை.
*     எலுமிச்சம் பழச்சாறு கொஞ்சம் ஊத்தி வேகவச்சா உடையாமல் அவிச்சி எடுக்கலாம்.
*     முட்டை அடிச்ச பாத்திரம் கவுச்சி அடிக்குதே என்ன பண்றதுங்கரீங்களா ?
 கவலைப்படாதீங்க ! எலுமிச்சம் பழச்சாறு அல்லது தோலால் துலக்கிப் பிறகு பாத்திரத்தை  சூடுபடுத்தினா வாடை போயிடும்.