பின் தொடரரும் நண்பர்கள்

Saturday, March 19, 2011

ராஜாவாக இருக்கவேண்டும் அல்லது ராசாவாக இருக்க வேண்டும் .

SONY INDIA வின்  RE SELLER'S MEET சென்னையில் ராடிசன் ரிசார்ட்-ல் 15 மற்றும்16-03-2011-ல் நடந்தது. அதில் நானும் கலந்து கொண்டேன்.  சோனி இந்தியாவின்  இந்திய பிரதிநிதி  waki chan  பேசிய போது  ஜப்பான் நாட்டைப்போல் எந்த ஒரு நாடும் சோதனைகளை சந்தித்ததில்லை என்றும் ஆனால் அதில் எல்லாம் இருந்து மீண்டுவந்த ஜப்பான் இதிலிருந்தும் மீளும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்
சோகமான முகத்துடன் வாக்கி சான்
conference -ல் சோனியின் தயாரிப்புகளை விளக்கும் வாக்கி சான்


நாங்கள் அங்கு இருக்கும்போது நம்முடைய முதல்வர், துணை முதல்வர் மற்றும் அழகிரி ஆகியோர் திடீரென வருகை புரிந்தார்கள். அவர்களை சந்திக்க  வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் ஏதோ  விவாதத்தில்  இருப்பதாக சொல்லப்பட்டது.  மாலையில் தான்  சாதிக் பாட்சா இறந்த விபரம்  பத்திரிகையில் வந்தது. அவர்களுக்கு ராசாவினால் அவர்களின் ராஜ வாழ்க்கை பாதிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை.  முதல்வருக்கு அது ராசியான ரிசார்ட்டாம். வசதியானவர்கள என்ன வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதை நம்மால் உணர முடிந்தது . ஒரு ஆர்வக்கோளாரால்  அதன் வாடகையை கேட்க தோன்றியது.  பத்தாயிரம் முதல் எண்பதாயிரம் வரை (வரிகள்  தனி)  அதில் தங்க வேண்டுமென்றால் ஒன்றில் ராஜாவாக இருக்கவேண்டும் அல்லது ராசாவாக இருக்க வேண்டும் .

எல்லாம் ஒரு விளம்பரம் தான்
.டிஸ்கி: நேரமின்மையால் தான் இப்படி ஒரு ஒப்பேத்தல் பதிவு. ஆதரவு தர வேண்டுகிறேன்.

8 கருத்துரைகள்:

FOOD said...

படங்கள் பார்க்க அருமை.

கக்கு - மாணிக்கம் said...

இதில் ஒன்றும் ரகசியம் இல்லை, சென்னை மற்றும் மாமல்லபுரம் ஸ்டார் ஹோட்டல்கள், ரிசார்டுகளில் ஒரு நாள் வாடகையை விசாரித்து பாருங்கள். நிறைய தமிழக அரசியல் வாதிகள் அனைவரும் தினமும் இவைகளில்தான் வந்து கூடி, பேசி கொண்டாடி கும்மாளாமிட்டு ,அனுபவித்து செல்கிறார்கள்என்பது சாதாரண கீழ் நிலையில் உள்ள ஹோட்டல் வேலை காரர்களுக்கும் தெரியும்.ஒரு நாளில் இவர்கள் செலவு செய்யும் தொகையினை கேட்டால் நம் போன்றோருக்கு "வயித்தால " போகும் விஜயன்!

Anonymous said...

நீங்கள் சொன்ன இரண்டும் தேவையில்லை அவர்களுக்கு கூஜா வாக இருந்தால் போதும்

சென்னை பித்தன் said...

அதனால்தான் நீண்ட இடைவேளையா!
அந்த நீச்சல் குளத்தில்-எவ்வளவு பெரிது-நீச்சல் அடித்தீர்களா!

கே. ஆர்.விஜயன் said...

FOOD:
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கே. ஆர்.விஜயன் said...

கக்கு - மாணிக்கம்:
நாம் சம்பாதிக்கிற வேகத்தை அங்கே செலவாகிற வேகத்துடன் கழித்து பார்த்தால் மிஞ்சுவது பெருமூச்சும், வேதனையும் மட்டுமே.

கே. ஆர்.விஜயன் said...

"குறட்டை " புலி said...

நீங்கள் சொன்ன இரண்டும் தேவையில்லை அவர்களுக்கு கூஜா வாக இருந்தால் போதும்//

ராசாவுக்கும் கூஜாவாக இருந்தவரின் நிலைமையை பார்த்தீர்களா.சாதிக் பாட்சா சாதிக்க முடியாமல் போய்விட்டாரே.

கே. ஆர்.விஜயன் said...

சென்னை பித்தன் said...

அதனால்தான் நீண்ட இடைவேளையா!
அந்த நீச்சல் குளத்தில்-எவ்வளவு பெரிது-நீச்சல் அடித்தீர்களா!//
ஒரு மணி நேரம் பந்து விளையாடிக்கொண்டிருந்தோம் அவ்வளவுதான்.