Skip to main content

அண்ணா அண்ணாதான்.

முதல்வரான பிறகு காஞ்சியில் சொந்த வீட்டுக்குப்போனார் அண்ணா. ஐஸ் வாட்டர் வந்ததும் “ஏது பிரிட்ஜ் ! பணம் ஏது ?” என்று கேட்டு வாயிற்படியில் தலைவைத்துப் படுத்து விட்டார் !

                      வீட்டில் மருமகள்கள் வந்து தவணை முறையில் வாங்கியதாக புத்தகத்தைக் காட்டிய பிறகே உள்ளே சென்றார்.

                       “வாழ்நாளில் எப்போதும் இல்லாத அடக்கத்துடன் உங்கள் முன் நிற்க்கிறேன்” என்று பதவியேற்றவுடன் கடற்கரையில் மக்கள் முன் சொன்னார்.

                      “முன்பு இருந்தவற்றை கலைக்கவோ குலைக்கவோ வரவில்லை; மேம்படுத்தவே வந்துள்ளேன் என்று அரசு ஊழியர்களிடையே பேசினார்.  கற்பனை கூட செய்து பார்க்க முடியாத பண்பு அது.

                         ஒருநாள் நுங்கம்பாக்கம் வீட்டில் இருந்து பிற்பகல் நான்குமணிக்கு கோட்டைக்குப் போக வேண்டிய அவசர வேலை. உதவியாளார்கள் மறந்துவிட்டு கடைசி நேரம் நினைவுறுத்தினார்கள். பரபரப்பாக புறப்பட்ட முதல்வர் அண்ணா கார் அருகே வந்துவிட்டார்.  ஓட்டுனர் இல்லை. போலீஸ் அதிகாரி அந்த ஓட்டுனரை கடிந்து கொண்டார். முதல்வரின் பாராட்டைப் பெறலாம்   என்ற நினைப்போ என்னவோ ?. முதலமைச்சர் அண்ணா மெதுவாக சொன்னார்.! “ இது வழக்கமாக சண்முகம் (ஓட்டுனர்) டீ சாப்பிடுகிற நேரம்.  நாம் தான் அதியசயமாக் இந்த நேரத்தில் கோட்டைக்குப் புறப்படுகிறோம் ! அவன் என்ன செய்வான்! கோபிக்காதீர்கள் “ என்றார் அண்ணா !
           
                          இன்று அண்ணாவின் தம்பிகள் செய்கின்ற அட்டகாசம் நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஸ்பெக்ட்ரம் ஒரு பிரச்சனையே இல்லை  இவர்கள் தான் வேண்டுமென்றே ஊதி பெரிதாக்குகின்றனர் என்கிறார் கலைஞர்.  ஓட்டுனருக்காக காத்திருந்த அண்ணா எங்கே  இன்று முதல்வர் வருகிறார் என்றால் ஓட்டுமொத்த  நகரமுமே காத்திருக்கிறதே. வாழ்க அண்ணா ! வளர்க அவரது பெயரால் மக்களுக்கு போடப்படும் நாமம்????.
              



Comments

எங்கேய்யா போனீர் ஆளையே காணோம்...?
//வீட்டில் மருமகள்கள் வந்து தவணை முறையில் வாங்கியதாக புத்தகத்தைக் காட்டிய பிறகே உள்ளே சென்றார்//

அவர்தான்ய்யா நாயகன்.....
//முதலமைச்சர் அண்ணா மெதுவாக சொன்னார்.! “ இது வழக்கமாக சண்முகம் (ஓட்டுனர்) டீ சாப்பிடுகிற நேரம். நாம் தான் அதியசயமாக் இந்த நேரத்தில் கோட்டைக்குப் புறப்படுகிறோம் ! அவன் என்ன செய்வான்! கோபிக்காதீர்கள் “ என்றார்//

இன்றைய முதல்வருக்கு டிரைவர் இப்பிடி செய்தால் அடியே கிடைச்சிருக்கும்....
//வாழ்க அண்ணா ! வளர்க அவரது பெயரால் மக்களுக்கு போடப்படும் நாமம்????.//

என்னத்தை சொல்லி அழ.......
Sriakila said…
நாட்டின் நிலைமை படுமோசம் தான் :((
உண்மையில் அண்ணா போன்றவர்களுக்கு மக்களை பற்றிய சிந்தனை மேலோங்கி இருந்தது. தமிழர்கள் மேல வரவேண்டும் என்று மனப்பூர்வமாகவே அரசியலில் ஈடுபட்டார். அவரோடு போயிற்று அரசியலில் எளிமையும் ,பண்பும், நாகரீகமும். அதனால் தான் இன்னமும் தமிழர்கள் அவரை மறக்க வில்லை.
நல்ல நினைவுகள் விஜயன்.
vijayan said…
அண்ணாதுரை என்னவோ நல்ல மனிதர் தான் அவருக்கு நல்லதம்பிகள் தான் வாய்க்கவில்லை.
தலைவா ... எங்க போனிங்க.. இப்பவெல்லாம் அடிக்கடி வரவதில்லையே..
ஒரு மகானின் நினைவுகளை நினைவூட்டியதற்க நன்றிகள்...
Unknown said…
MANO நாஞ்சில் மனோ said...

எங்கேய்யா போனீர் ஆளையே காணோம்...?//
கொஞ்சம் பிஸியாகிப்போனேன். அதான் யாருக்கும் பின்னூட்டம் போட முடியவில்லை.
Unknown said…
கக்கு - மாணிக்கம் said.:
இரண்டு பதிவில் பழைய பாடல்களை போட்டு அசத்துகிறீர்கள். வருகைக்கு நன்றி.
Unknown said…
!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தலைவா ... எங்க போனிங்க.. இப்பவெல்லாம் அடிக்கடி வரவதில்லையே.//

பள்ளியில் ஆசிரியர் கேட்பது மாதிரியே கேட்கறீங்க(ஆசிரியர் தானே!!). இனி பார்க்கலாம் டீச்சர்.
///இரண்டு பதிவில் பழைய பாடல்களை போட்டு அசத்துகிறீர்கள்.////

---------விஜயன்

அவைகள் எல்லாமும் உங்களுக்குத்தானே பாஸ்?
Chitra said…
இது வழக்கமாக சண்முகம் (ஓட்டுனர்) டீ சாப்பிடுகிற நேரம். நாம் தான் அதியசயமாக் இந்த நேரத்தில் கோட்டைக்குப் புறப்படுகிறோம் ! அவன் என்ன செய்வான்! கோபிக்காதீர்கள் “ என்றார் அண்ணா !


...... WOW!!! Super!
ம்... அந்த நாட்கள் வருமா என்ன?

ஆனா இந்தத் தேர்தல் நேரத்தில் மட்டும் ட்ராஃபிக் அவ்வளவு கெடுபிடி இல்லை!!
அண்ணாவுடன் தம்பிகளை ஒப்பிட முடியாது!
இது போன்றே பெருந்தலைவர் அம்மா வாழ்ந்த வீட்டில்,குழாய் போட்ட சம்பவம் தெரியுமா?அவர்தான் தலைவர்!
Unknown said…
விக்கி உலகம்:
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Unknown said…
Chitra said.:
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக.
Unknown said…
Sriakila said:
நன்றி மேடம்.
Unknown said…
FOOD said...:
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Unknown said…
middleclassmadhavi said...:
அந்த நாள் வர வேண்டுமென்றால் பச்சையும், மஞ்சளும் வெளியேற்றப்படவேண்டும்.வருகைகும் கருத்துக்கும் நன்றி.
Unknown said…
சென்னை பித்தன் said.:
அவர் அவர்தான். அதனால்தான் அவர் பெயர் இன்றளவும் பேசப்படுகிறது.
இதனால் தான் அவர் அண்ணா.....
Unknown said…
சங்கவி said.:
இதனால் தான் அவர் அண்ணா.....//

சரியாக சொன்னீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Jayadev Das said…
நல்லவனா இருநது என்ன பிரயோஜனம், திருடனுங்களை நல்லவன்னு சொல்லி தமிழன் தலையில் கட்டிவிட்டு விட்டு, போய்ச் சேர்ந்திட்டாரு. அது இவர் தப்பில்லை என்று சொல்லலாம், இவரோட போதனை எந்த மாதிரி இருந்திருக்கும்னு தான் பாக்கணும். பேசிப் பேசிய வோட்டு வாங்கிய இவர் தனது கட்சிக்காரர்களிடம், மக்கள் நலனுக்காக பாடுபடுங்கள் என்ற கருத்தை பேசி விதைக்காமல் இவர் மூக்குப் பொடியை சொர்...சொர்... ன்னு சொருகிகிட்டு போய்விட்டார். கோடி சனத்தை பேசி ஏமாற்றிய இவர் தனது கட்சியின் பத்து தலைவர்களுடன் பேசத் தெரியாதவர். விளைவு இன்று தமிழன் ஆண்டியாக நிற்கிறான்.
பதவி வரும்போது பணிவு வரும் - நல்லவர்களுக்கு

Popular posts from this blog

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை     ...

நரேந்திரமோடி : முன்மாதிரியான முதல்வர்

              1950 ஆம் ஆண்டு  செப்டம்பர்  17 -ல்  குஜராத்திலுள்ள வட்நகர்(vadnagar) என்ற சாதாரண கிராமத்தில் பிறந்தவர். சோசியல் சயின்ஸ்- ல் முதுகலை பட்டம் பெற்றவர்.  இவருடைய  அலுவலகம் ISO 9001:2008 CERTIFIED ஆகும்.                                    முதன் முதலாக அக்டோபர் 2001-ல் குஜராத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த காலகட்டத்தில் தான் குஜராத்தில் புஜ் என்ற இடத்தில் மாபெரும்  பூகம்பம் ஏற்பட்டு குஜராத் மாபெரும் உயிர் மற்றும் பொருள் இழப்பைக் கண்டது.  அதிலிருந்து  குஜராத்தை மீட்டெடுத்து இந்தியாவிலேயே  ஆச்சரியப்படும் வகையில் முன்னணி மாநிலமாக ஆக்கிய பெருமை  மோடியையே சாரும்.  மதுக்கடை வருமானம் அங்கு கிடையாது. ஓட்டு வங்கிமற்றும் இலவச (அரிசி) அரசியல் அவர் செய்வது கிடையாது. அவருடைய ஒரே முழக்கம்...

என் முதல் கணினி அனுபவம் - தொடர் பதிவு....!

எனக்கு தமிழ்லயே பிடிக்காத வார்த்தை “தொடர்பதிவு” . ஏதோ வந்தோமா  ஏதாவது இரண்டு லைன் முகநூல்ல கிறுக்கினோமா போனோமான்னு இருக்கிற  என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த மனோவை தனியாக கவனித்துக் கொல்கிறேன்.                      பதிவு எழுதியே வருடங்கள் ஆகிப்போனதால் புதிய பதிவு எழுத எங்கே போகவேண்டும் என்று தேடவே நிறைய நேரம் ஆகிவிட்டது..... ஒரு வழியாக கண்டுபிடித்தும் தொலைத்தாகிவிட்டது. இனிவாயில் வந்ததை  வாந்தி எடுக்க வேண்டியதுதான் பாக்கி.                     முதலில் நான் கணினி வாங்க காரணமே தொழில் ரீதியாக புதிதாக சந்தைக்கு வரும் கேமிரா மற்றும் அதன் உப பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்க வசதியாக இருக்குமே என்றுதான். அதற்காக இணைய இணைப்பும் எடுத்தேன். அப்பொழுதுதான் என் கடைக்கு அடுத்த கடையில் இருக்கும் ஹரீஸ் என்ற நண்பன் பதிவுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அது வால்பையன் மறைந்த நண்பர் பட்டாபட்டி மற்றும் பன்னிக்குட்டி ராமசாமி ஆகிய சீனியர் பதிவர் நண்பர்கள் கலக்கிக்கொண்டிருந்த ...