பின் தொடரரும் நண்பர்கள்

Monday, July 11, 2011

ஊர் சுற்றலாம் வாங்க - சொத்தவிளை மற்றும் சங்குத்துறை கடற்கரை


சொத்தவிளை கடற்கரை


குட் நைட் சூரியன்


பீச்சுக்கு போகும் வழி இருபுறமும் சிங்கம் இருக்கும் பயப்பட வேண்டாம்
இதுதான் பீச்சுக்கு நுழைவாயில்  இதைத்தவிர   எல்லா இடம் வழியாகவும் மக்கள் செல்வார்கள்.
கலக்கல் கன்ஸ்ட்ரக்‌ஷன்.
இவள் எழுத  அலை அழிக்க என்ன சின்னபுள்ளத்தனமா இருக்கு!!!!!!!!
நாகர்கோவிலிலிருந்து 12  கி.மீ, தொலைவில் புத்தளம் அருகில்  அமைந்துள்ள அழகிய இயற்க்கை எழில் கொஞ்சும் கடற்கரையாகும். சுனாமியின் போது நிறைய பேரையும், வண்டிகளையும் தன்னகத்தே அணைத்து கொண்டு சென்ற தாயுள்ளம் கொண்ட கடற்கரை.
குழந்தைகள் பூங்காவும் கண்காணிப்பு கோபுரமும்.
பயப்பட  வேண்டாம் இது நானேதான் (ஒரு அல்ப ஆசைதான் )
என் மனைவி
என்ன ஒரு சந்தோஷம் வீடு கட்டியதில்
 இது வெளி உலகுக்கு சமீபத்தில் தெரிய் தொடங்கி புதிய சுற்றுலா தலமாக மாறி வருகிறது. இங்கு நவீன மயமாக்ப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான் எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் நகர மக்களுக்கு இது இயற்க்கை அளித்த ஓர் வரப்பிரதாமாகும். ஒரு காரை பனை மரத்தின் உயரம் தூக்கி சென்று  மரத்தினிடையே இட்டுசென்றது. சுனாமியின் போது  நிறைய சூட்கேஸ்கள் கேட்க ஆளின்றி அனாதையாய் கிடக்கக் கண்டேன் .

சங்குத்துறை கடற்கரை

எங்கள் கல்லூரியின் பேராசிரியர்கள் மூவர்க்கு  சங்கு ஊதியது இந்த பீச்
 (அது தான் காரணப்பெயரோ!!!)
நாகர்கோவிலிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அழகிய இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரையான் சங்குதுறை பீச்.
(நிறைய பேருக்கு) சங்கு (ஊதிய) துறை  கடற்கரை கொஞ்சம் டேஞ்சர்தான்.
மாலைப்போழுதின் மயக்கத்திலே நான்.
  தற்ப்போது நவீன மயமாக்கப்பட்டு குழந்தைகள் பூங்கா, குடில்கள் உட்பட சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

Friday, July 8, 2011

நண்பேன்டா


நவில்தொறும் நூல்நயம்--நண்பேன்டா-தொடர் பதிவு.

நண்பர் சென்னை பித்தன் ஐயா அவர்களின் அன்பு அழைப்பை ஏற்று இப்பதிவைத் 

தொடர்கிறேன்.


நாம்  சிறுவயது முதல்  நிறையபேர்களுடன் பழகினாலும் இன்று திரும்பி 

பார்க்கையில் நினைவில் வருபவர் சிலரே.  அவர்களைத்தான் நான் 

உங்களிடம் பகிர இருக்கிறேன்.   அதில் முதலாவதாக நான் ஒன்றாம் வகுப்பு 

முதல் பத்தாம் வகுப்பு வரை  என்னுடன் படித்த  என்னுயிர்த்தோழன் 

விமலைப்பற்றி நான் கூறியே ஆக வேண்டும். 

.
சாமுவேல் விமல் குமார்:

இவரும் நானும் ஒரே தெருவில் தான் வசித்து வந்தோம்.  அவர்கள் அம்மா 

இவர்களை மிகவும் அன்பாக நடத்துவது எனக்கு மிக ஆச்சர்யமாக இருக்கும். 

என் வீட்டில் எல்லோரும் மிகுந்த கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள். 

படிக்காவிட்டால் உலகமே இரண்டான மாதிரி கத்துவார்கள், ஆனால் என் 

நண்பனின் வீட்டிலோ take it easy policy  தான்.   நானும் 

அவரும் ஒன்றாகத்தான் பள்ளிக்கு செல்வோம்.  நல்ல நண்பர். 10-வது வகுப்பு 

வரை நாங்கள் ஒன்றாகத்தான் படித்தோம்.  கல்லூரி படிப்பில் பிரிந்தோம். 

பிறகு அவர் குடும்பத்தோடு சென்னை போய்விட்டார்.  அங்கே வாழ்க்கையில் 

போராடி ஜெயித்து இப்போது எல்லா வளத்தோடும்  சுகத்தோடும் நன்றாக 

இருக்கிறார்.  மிகவும் கடவுள் நம்பிக்கையுடைய கிறிஸ்தவகுடும்பம் 

அவர்களுடையது.   இப்போழுதும் சமயம் கிடைக்கும் போது அடிக்கடி

 பேசிக்கொள்வோம்.

ஜோயல் வினோசன் :இந்த நண்பனும் என் தெருவில்தான்  வசித்துவந்தார்.  நானும் இவரும் 

சைக்கிளில் சுற்றாத இடம் இல்லை. வீட்டிற்க்கு ஒரே பையன்.   படித்து 

முடித்து தந்தையுடன் தொழில் செய்துவந்தார்.  நானும் வேலை 

கிடைத்து கான்பூர்,வாரணாசி என்று அலைந்து கொண்டிருந்த காலம். 

அவருக்கு தொழிலில் பயங்கர நஷ்டம் வந்து எல்லாவற்றையும் விற்றுவிட்டு 

சென்னை  போகவேண்டிய நிர்பந்தம்  ஏற்பட்டது.  அங்கேயும்  ஏழு வருடம் 

போராடிப்பார்த்து  திரும்பவும் எங்கள் ஊரிலே செட்டில் ஆகிவிட்டார்.  

அவரிடம் ஒரு கெட்ட பழக்கம் கூட கிடையாடது. நேர்மை என்றால் அப்படி 

ஒரு நேர்மை. இவர்களும் மிகவும் கடவுள் பற்றுள்ள கிறிஸ்தவ குடும்பம் தான்.  

ஆனால்  உலக வாழ்க்கையில்  அவரால் ஏன் ஜெயிக்க முடியவில்லை என்பது 

நான் இன்னும் என்னிடமும் ஆண்டவனிடமும் கேட்கும் கேள்வி.

சிவகுமார்:


 என்னுடைய வாழ்க்கையில் மறக்க  முடியாத(கூடாத) நபர்.   நான் 12 

ஆண்டுகால வனவாசத்தையும்(வட  இந்தியாவில் வேலை செய்த 

நாட்களைச்சொன்னேன் ) கல்யணத்தையும் முடித்துவிட்டு  வீட்டில் 

தண்டமாக இருந்த காலத்தில் எனக்கு ஒரு தொழிலை அறிமுகப்படுத்தியவர்.   

இன்றும்  என்னுடைய மிகப்பெரிய வாடிக்கையாளரில் இவரும் ஒருவர்..   

இன்று என் வாழ்க்கை வசந்தமாக இருக்கிறதென்றால் அதற்க்கு அவரும் ஒரு 

முக்கிய காரணம். நானும் அவரும் ஒரே கல்லூரியில்  ஒரே 

டெஸ்கில்(கடைசியில்!!!!!!!!!) இருந்தவர்கள்.   இன்றும் நாங்கள் சந்திக்காத  

நாட்களே கிடையாது.  இன்று காலையில் கூட என் கணினி மக்கர் செய்த     சரி 

செய்தது தந்தது அவர்தான்.

அரி ராம ஜெயம்:

இவரும் என் பால்ய கால நண்பர்  என் வீட்டிற்க்கு பின் வீடு.  எங்கள் 

சிந்தனையில்ஒரு  ஒற்றுமையும் அன்று முதல் இன்று வரை இருந்ததில்லை.  

மணிக்கணக்காக போராடுவோம்(பேசுவோம்)   ஆனால் நட்பில் விட்டு 

கொடுத்ததில்லை. இன்றும் எங்களுக்குள் எந்த ஓளிவுமறையும் இல்லை .      

எவ்வளவு பிஸியாக இருந்தாலும் வாரத்திற்க்கு ஒரு முறையாவது  நாங்கள் 

சந்திக்க தவறுவது இல்லை.  சில நேரங்களில் விடிய விடிய 

பேசிக்கொ(ல்)ள்வோம்.   ஒரு தடவை அவனை அவனது பிரின்சிபல் 

கண்டித்ததால் அவரது வாகனத்தின் சீட்டில் பிளேடு போடுகின்ற அளவுக்கு 

எங்கள் நட்பு இறுக்கம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

விகாஸ் சிங் மற்றும் விஷால் சிங்


இவர்கள் நான் வட இந்தியாவில் பணிபுரியும் போது இவர்களது வீட்டில் 8 

வருடம் இருந்திருக்கிறேன். அவர்கள் அம்மாவை என் பெற்ற அம்மாவை விட 

அதிகம் நேசித்தேன் என்று கூட சொல்லலாம். அந்த அளவு என்னை அவர்கள் 

என்னை குடும்பத்தில் ஒருத்தனாகவே பாவித்தார்கள். ஆனால் அவர்கள் 

கேன்சர் வந்து இறப்பதற்க்கு முன்   தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 

என்னை பார்க்க விரும்புவதாக சொன்னார்கள். ஆனால் அவர்கள் முடிவு 

இவ்வளவு  சீக்கிரம் இருக்கும் என்று என்னால் கணிக்க முடியாமல் போனதால் 

பார்க்க இயலவில்லை.  

என்னை தேடி நண்பர்கள் வந்தால் அவர்களுக்கு சேர்த்து தேநீர் செய்து 

தருவார்கள்(என் வீட்டில் கூட இது நடக்காது).  நான் அங்கிருந்து வந்து 9 

வருடம் ஆகிவிட்டது இன்றும் எங்களது உறவு தொடர்கிறது. போனவருடம்  

அவர்கள் வீட்டு திருமணத்திற்க்கு போயிருந்தேன். அதை ஒரு பதிவாகவும் 

எழுதியிருந்தேன்.

இதைத் தொடர நான் அழைப்பது

1) என் மன வானில் எஸ்.கே.செல்வி

2)  நாஞ்சில் மனோ

என்னை எழுதப் பணித்த சென்னைப்பித்தனை ஐயா அவர்களுக்கு  நன்றி.

Saturday, July 2, 2011

ராசா முதல் கனிமொழி வரை ஜாமீன் இல்லா ஜெயில் ஏன்? சட்டம் என்ன சொல்கிறது!!!!!!!!!!

திகார் ஜெயில்...
ஒட்டு மொத்த இந்தியாவையும் ஏன்....? உலகத்தை கூட திரும்பி பார்க்கவைத்துள்ளது.  எத்தனை பூஜ்யம் போட்டு எப்படி எண்ணுவது ? என்று எண்ணிப்பார்த்து மலைக்கவைத்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா, முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. கலைஞர் டி.வி யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார், அரிநாயர்(ரிலையன்ஸ்) கரீம்  மொரானி(சினியுக் பிசினஸ்) வினோத் கோயங்கா, ஷாகித் பல்வா,ஆசிப் பல்வா(சுவான்), தொலைத்தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ராசா உதவியாளர் சந்தோலியா விளையாட்டு ஊழலில் சிக்கிய முன்னாள் மத்தியமநதிரி சுரேஷ் கல்மாடி உள்பட பலர் திகார் ஜெயிலுக்குள் அடைப்பட்டு கிடக்கிறார்கள்.

               ஆ. ராசா 140 நாட்களை கடந்துவிட்டார். கனிமொழி யும் 40 நாட்களை ஜெயிலில் கழித்துவிட்டர்.  இவர்களில் யாருக்கும் இப்போதைக்கு ஜாமீன் கிடைக்காது என்பது உறுதியாகிவிட்டது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு கீழ் கோர்ட்டை அணுகுங்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு சுத்தியலை ஓங்கி அடித்து விட்டது.

                    இன்னும் எத்தனை நாளைக்கு இவர்கள் ஜெயிலில் இருப்பார்கள்?.அனுமார் வாலைப்போல் அடுத்து யார்.? என்று நீண்டு கொண்டே செல்வதால் 2ஜி வழக்கில் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கலாவது எப்போது என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை.அதுவரைக்கும் இவர்கள் பெயிலைப்பற்றி யோசிக்காமல் ஜெயிலில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
                   சரி இது இவர்கள் வழக்கு !  மும்பை டி.வி தயாரிப்பாளர கொலை வழக்கில் கன்னட நடிகை மரியாவுக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைத்துள்ளது. ஆனால் 3 ஆண்டுகளாக மரியா ஜாமீன் கிடைக்காமல் ஜெயிலிலெயே இருந்துள்ளார். தற்போது 3 ஆண்டுகளை ஜெயிலில் கழித்துவிட்டதால் மரியா விடுதலை ஆகி இருக்கிறார். ஒரு வேளை கோர்ட்டு மரியாவுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து இருந்தால் அநியாயமாக ஒரு ஆண்டு கூடுதலாக ஜெயிலில் இருந்திருப்பாரே என்ற கேள்வி எல்லோரிடமும் எழுவது நியாயம் தான்.
                     ஜெயில் தண்டனை அறிவிப்பதற்க்கு முன்பு எத்தனை நாள் பெயில் இல்லாமல் ஜெயிலில் இருப்பது? இந்த நடைமுறை சரிதானா? கோர்ட்டு எந்த அடிப்படையில் இந்த வழக்குகளை அணுகுகிறது. இது பற்றி ஐகோர்ட்டு வக்கீல் வானதி சீனிவாசன் கூறியதாவது. :-

                       குற்றத்தின் தன்மையை பொறுத்தும் , குற்றம் சாட்டப்பட்டவரின் செல்வாக்கு. பின்னணி மற்றும் அந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி எத்தனை ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்  என்பதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ஜாமீன் மனுவை பரிசீலிப்பார்கள். குறிப்பாக குற்றம் சாட்டப்பட்டவரை வெளியே விட்டால் வழக்கை எந்த வகையில் பாதிக்கும் என்பதை கவனத்தில் கொள்வார்கள்.  
                            
                             கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் சிலர் வழக்கு முடியும் வரை சுமார் 7 ஆண்டுகள் சிறையில் இருந்தார்கள். பொதுவாக  குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுபவர்களை வெளியே விட்டால் சாட்சிகளை மிரட்டுவார்கள், ஆதாரங்களை அழித்து விடுவார்கள் என்பதால் தான் குற்றப்பத்திரிகை தயாரித்து தாக்கல் செய்யும் வரை ஜாமீனில் விட மாட்டார்கள். 2ஜி வழக்கை பொறுத்தவரை தனிப்பட்ட நபருக்கோ,நிறுவனத்திற்க்கோ ஏற்ப்பட்ட சாதாரண இழப்பாக கோர்ட்டு  எடுத்துக்கொள்ளாது.  ஒட்டு மொத்த நாட்டின் பிரச்சனை. எனவே சுப்ரீம் கோர்டு நேரடியாக கண்காணிக்கிறது. வெளிநாடுகளில் கூட விசாரணை நடப்பதாக் சொல்கிறார்கள். எனவே இன்னும் அதிக குற்றப்பத்திரிகையை கோர்ட்டு எதிர்பார்க்கலாம். குற்றத்தின் தன்மை கருதி தீர்ப்பு வழங்கப்படும் வரையில் கூட கோர்ட்டு ஜாமீன் வழங்காமல் இருக்க முடியும்.

            ஒருவர் தண்டனை காலத்தைவிட கூடுதலாக ஜெயிலில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் அதற்க்கு எந்தவித நிவாரணத்துக்கும் சட்டத்தில்  இடமில்லை.. விடுதலை செய்யப்படும்போது கூட அவர் குற்றவாளி இல்லை என்று கோர்ட்டு சொல்லாது.சந்தேகத்துக்கு இடமின்றி குற்றத்தை நிரூபிக்க தவறியதால் விடுதலை செய்யப்படுவதாகத்தான் கோர்ட்டு கூறும். இதன் மூலம் விடுதலை செய்யப்பட்டவர் குற்றமே செய்யாதவர் என்று அர்த்தமாகாது.


                                                                                                                                          

நன்றி: மாலைமலர்