நவில்தொறும் நூல்நயம்--நண்பேன்டா-தொடர் பதிவு.
நண்பர் சென்னை பித்தன் ஐயா அவர்களின் அன்பு அழைப்பை ஏற்று இப்பதிவைத் 
தொடர்கிறேன்.
நாம்  சிறுவயது முதல்  நிறையபேர்களுடன் பழகினாலும் இன்று திரும்பி 
பார்க்கையில் நினைவில் வருபவர் சிலரே.  அவர்களைத்தான் நான் 
உங்களிடம் பகிர இருக்கிறேன்.   அதில் முதலாவதாக நான் ஒன்றாம் வகுப்பு 
முதல் பத்தாம் வகுப்பு வரை  என்னுடன் படித்த  என்னுயிர்த்தோழன் 
விமலைப்பற்றி நான் கூறியே ஆக வேண்டும். 
.
சாமுவேல் விமல் குமார்:
இவரும் நானும் ஒரே தெருவில் தான் வசித்து வந்தோம்.  அவர்கள் அம்மா 
இவர்களை மிகவும் அன்பாக நடத்துவது எனக்கு மிக ஆச்சர்யமாக இருக்கும். 
என் வீட்டில் எல்லோரும் மிகுந்த கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள். 
படிக்காவிட்டால் உலகமே இரண்டான மாதிரி கத்துவார்கள், ஆனால் என் 
நண்பனின் வீட்டிலோ take it easy policy  தான்.   நானும் 
அவரும் ஒன்றாகத்தான் பள்ளிக்கு செல்வோம்.  நல்ல நண்பர். 10-வது வகுப்பு 
வரை நாங்கள் ஒன்றாகத்தான் படித்தோம்.  கல்லூரி படிப்பில் பிரிந்தோம். 
பிறகு அவர் குடும்பத்தோடு சென்னை போய்விட்டார்.  அங்கே வாழ்க்கையில் 
போராடி ஜெயித்து இப்போது எல்லா வளத்தோடும்  சுகத்தோடும் நன்றாக 
இருக்கிறார்.  மிகவும் கடவுள் நம்பிக்கையுடைய கிறிஸ்தவகுடும்பம் 
அவர்களுடையது.   இப்போழுதும் சமயம் கிடைக்கும் போது அடிக்கடி
 பேசிக்கொள்வோம்.
ஜோயல் வினோசன் :
இந்த நண்பனும் என் தெருவில்தான்  வசித்துவந்தார்.  நானும் இவரும் 
சைக்கிளில் சுற்றாத இடம் இல்லை. வீட்டிற்க்கு ஒரே பையன்.   படித்து 
முடித்து தந்தையுடன் தொழில் செய்துவந்தார்.  நானும் வேலை 
கிடைத்து கான்பூர்,வாரணாசி என்று அலைந்து கொண்டிருந்த காலம். 
அவருக்கு தொழிலில் பயங்கர நஷ்டம் வந்து எல்லாவற்றையும் விற்றுவிட்டு 
சென்னை  போகவேண்டிய நிர்பந்தம்  ஏற்பட்டது.  அங்கேயும்  ஏழு வருடம் 
போராடிப்பார்த்து  திரும்பவும் எங்கள் ஊரிலே செட்டில் ஆகிவிட்டார்.  
அவரிடம் ஒரு கெட்ட பழக்கம் கூட கிடையாடது. நேர்மை என்றால் அப்படி 
ஒரு நேர்மை. இவர்களும் மிகவும் கடவுள் பற்றுள்ள கிறிஸ்தவ குடும்பம் தான்.  
ஆனால்  உலக வாழ்க்கையில்  அவரால் ஏன் ஜெயிக்க முடியவில்லை என்பது 
நான் இன்னும் என்னிடமும் ஆண்டவனிடமும் கேட்கும் கேள்வி.
சிவகுமார்:
 என்னுடைய வாழ்க்கையில் மறக்க  முடியாத(கூடாத) நபர்.   நான் 12 
ஆண்டுகால வனவாசத்தையும்(வட  இந்தியாவில் வேலை செய்த 
நாட்களைச்சொன்னேன் ) கல்யணத்தையும் முடித்துவிட்டு  வீட்டில் 
தண்டமாக இருந்த காலத்தில் எனக்கு ஒரு தொழிலை அறிமுகப்படுத்தியவர்.   
இன்றும்  என்னுடைய மிகப்பெரிய வாடிக்கையாளரில் இவரும் ஒருவர்..   
இன்று என் வாழ்க்கை வசந்தமாக இருக்கிறதென்றால் அதற்க்கு அவரும் ஒரு 
முக்கிய காரணம். நானும் அவரும் ஒரே கல்லூரியில்  ஒரே 
டெஸ்கில்(கடைசியில்!!!!!!!!!) இருந்தவர்கள்.   இன்றும் நாங்கள் சந்திக்காத  
நாட்களே கிடையாது.  இன்று காலையில் கூட என் கணினி மக்கர் செய்த     சரி 
செய்தது தந்தது அவர்தான்.
அரி ராம ஜெயம்:
இவரும் என் பால்ய கால நண்பர்  என் வீட்டிற்க்கு பின் வீடு.  எங்கள் 
சிந்தனையில்ஒரு  ஒற்றுமையும் அன்று முதல் இன்று வரை இருந்ததில்லை.  
மணிக்கணக்காக போராடுவோம்(பேசுவோம்)   ஆனால் நட்பில் விட்டு 
கொடுத்ததில்லை. இன்றும் எங்களுக்குள் எந்த ஓளிவுமறையும் இல்லை .      
எவ்வளவு பிஸியாக இருந்தாலும் வாரத்திற்க்கு ஒரு முறையாவது  நாங்கள் 
சந்திக்க தவறுவது இல்லை.  சில நேரங்களில் விடிய விடிய 
பேசிக்கொ(ல்)ள்வோம்.   ஒரு தடவை அவனை அவனது பிரின்சிபல் 
கண்டித்ததால் அவரது வாகனத்தின் சீட்டில் பிளேடு போடுகின்ற அளவுக்கு 
எங்கள் நட்பு இறுக்கம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
விகாஸ் சிங் மற்றும் விஷால் சிங்
இவர்கள் நான் வட இந்தியாவில் பணிபுரியும் போது இவர்களது வீட்டில் 8 
வருடம் இருந்திருக்கிறேன். அவர்கள் அம்மாவை என் பெற்ற அம்மாவை விட 
அதிகம் நேசித்தேன் என்று கூட சொல்லலாம். அந்த அளவு என்னை அவர்கள் 
என்னை குடும்பத்தில் ஒருத்தனாகவே பாவித்தார்கள். ஆனால் அவர்கள் 
கேன்சர் வந்து இறப்பதற்க்கு முன்   தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 
என்னை பார்க்க விரும்புவதாக சொன்னார்கள். ஆனால் அவர்கள் முடிவு 
இவ்வளவு  சீக்கிரம் இருக்கும் என்று என்னால் கணிக்க முடியாமல் போனதால் 
பார்க்க இயலவில்லை.  
என்னை தேடி நண்பர்கள் வந்தால் அவர்களுக்கு சேர்த்து தேநீர் செய்து 
தருவார்கள்(என் வீட்டில் கூட இது நடக்காது).  நான் அங்கிருந்து வந்து 9 
வருடம் ஆகிவிட்டது இன்றும் எங்களது உறவு தொடர்கிறது. போனவருடம்  
அவர்கள் வீட்டு திருமணத்திற்க்கு போயிருந்தேன். அதை ஒரு பதிவாகவும் 
எழுதியிருந்தேன்.
இதைத் தொடர நான் அழைப்பது
1) என் மன வானில் எஸ்.கே.செல்வி
2)  நாஞ்சில் மனோ
என்னை எழுதப் பணித்த சென்னைப்பித்தனை ஐயா அவர்களுக்கு  நன்றி.



Comments
வாழ்த்துக்கள்..
மனம் மகிழ்ந்து போனேன்
ஆண்டுகால வனவாசத்தையும்(வட இந்தியாவில் வேலை செய்த
நாட்களைச்சொன்னேன் ) கல்யணத்தையும் முடித்துவிட்டு வீட்டில்
தண்டமாக இருந்த காலத்தில் எனக்கு ஒரு தொழிலை அறிமுகப்படுத்தியவர்.//
இவர் நாம் திற்பரப்பு போயிட்டு வரும் வழியில் பார்த்த மாதிரி இருக்கே...???
நாம் செல் ரிப்பேர் பண்ணிவிட்டு நீர் அவரசத்திற்க்கு ஒதுங்குனீரே ஒரு ரூம்.அதுவும் கீழேயும் ஒரு கடை உண்டு. ஆனால் நாம் அவனை மீட் பண்ணவில்லை.