Skip to main content

ராசா முதல் கனிமொழி வரை ஜாமீன் இல்லா ஜெயில் ஏன்? சட்டம் என்ன சொல்கிறது!!!!!!!!!!

திகார் ஜெயில்...
ஒட்டு மொத்த இந்தியாவையும் ஏன்....? உலகத்தை கூட திரும்பி பார்க்கவைத்துள்ளது.  எத்தனை பூஜ்யம் போட்டு எப்படி எண்ணுவது ? என்று எண்ணிப்பார்த்து மலைக்கவைத்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா, முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. கலைஞர் டி.வி யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார், அரிநாயர்(ரிலையன்ஸ்) கரீம்  மொரானி(சினியுக் பிசினஸ்) வினோத் கோயங்கா, ஷாகித் பல்வா,ஆசிப் பல்வா(சுவான்), தொலைத்தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ராசா உதவியாளர் சந்தோலியா விளையாட்டு ஊழலில் சிக்கிய முன்னாள் மத்தியமநதிரி சுரேஷ் கல்மாடி உள்பட பலர் திகார் ஜெயிலுக்குள் அடைப்பட்டு கிடக்கிறார்கள்.

               ஆ. ராசா 140 நாட்களை கடந்துவிட்டார். கனிமொழி யும் 40 நாட்களை ஜெயிலில் கழித்துவிட்டர்.  இவர்களில் யாருக்கும் இப்போதைக்கு ஜாமீன் கிடைக்காது என்பது உறுதியாகிவிட்டது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு கீழ் கோர்ட்டை அணுகுங்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு சுத்தியலை ஓங்கி அடித்து விட்டது.

                    இன்னும் எத்தனை நாளைக்கு இவர்கள் ஜெயிலில் இருப்பார்கள்?.அனுமார் வாலைப்போல் அடுத்து யார்.? என்று நீண்டு கொண்டே செல்வதால் 2ஜி வழக்கில் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கலாவது எப்போது என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை.அதுவரைக்கும் இவர்கள் பெயிலைப்பற்றி யோசிக்காமல் ஜெயிலில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
                   சரி இது இவர்கள் வழக்கு !  மும்பை டி.வி தயாரிப்பாளர கொலை வழக்கில் கன்னட நடிகை மரியாவுக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைத்துள்ளது. ஆனால் 3 ஆண்டுகளாக மரியா ஜாமீன் கிடைக்காமல் ஜெயிலிலெயே இருந்துள்ளார். தற்போது 3 ஆண்டுகளை ஜெயிலில் கழித்துவிட்டதால் மரியா விடுதலை ஆகி இருக்கிறார். ஒரு வேளை கோர்ட்டு மரியாவுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து இருந்தால் அநியாயமாக ஒரு ஆண்டு கூடுதலாக ஜெயிலில் இருந்திருப்பாரே என்ற கேள்வி எல்லோரிடமும் எழுவது நியாயம் தான்.
                     ஜெயில் தண்டனை அறிவிப்பதற்க்கு முன்பு எத்தனை நாள் பெயில் இல்லாமல் ஜெயிலில் இருப்பது? இந்த நடைமுறை சரிதானா? கோர்ட்டு எந்த அடிப்படையில் இந்த வழக்குகளை அணுகுகிறது. இது பற்றி ஐகோர்ட்டு வக்கீல் வானதி சீனிவாசன் கூறியதாவது. :-

                       குற்றத்தின் தன்மையை பொறுத்தும் , குற்றம் சாட்டப்பட்டவரின் செல்வாக்கு. பின்னணி மற்றும் அந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி எத்தனை ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்  என்பதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ஜாமீன் மனுவை பரிசீலிப்பார்கள். குறிப்பாக குற்றம் சாட்டப்பட்டவரை வெளியே விட்டால் வழக்கை எந்த வகையில் பாதிக்கும் என்பதை கவனத்தில் கொள்வார்கள்.  
                            
                             கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் சிலர் வழக்கு முடியும் வரை சுமார் 7 ஆண்டுகள் சிறையில் இருந்தார்கள். பொதுவாக  குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுபவர்களை வெளியே விட்டால் சாட்சிகளை மிரட்டுவார்கள், ஆதாரங்களை அழித்து விடுவார்கள் என்பதால் தான் குற்றப்பத்திரிகை தயாரித்து தாக்கல் செய்யும் வரை ஜாமீனில் விட மாட்டார்கள். 2ஜி வழக்கை பொறுத்தவரை தனிப்பட்ட நபருக்கோ,நிறுவனத்திற்க்கோ ஏற்ப்பட்ட சாதாரண இழப்பாக கோர்ட்டு  எடுத்துக்கொள்ளாது.  ஒட்டு மொத்த நாட்டின் பிரச்சனை. எனவே சுப்ரீம் கோர்டு நேரடியாக கண்காணிக்கிறது. வெளிநாடுகளில் கூட விசாரணை நடப்பதாக் சொல்கிறார்கள். எனவே இன்னும் அதிக குற்றப்பத்திரிகையை கோர்ட்டு எதிர்பார்க்கலாம். குற்றத்தின் தன்மை கருதி தீர்ப்பு வழங்கப்படும் வரையில் கூட கோர்ட்டு ஜாமீன் வழங்காமல் இருக்க முடியும்.

            ஒருவர் தண்டனை காலத்தைவிட கூடுதலாக ஜெயிலில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் அதற்க்கு எந்தவித நிவாரணத்துக்கும் சட்டத்தில்  இடமில்லை.. விடுதலை செய்யப்படும்போது கூட அவர் குற்றவாளி இல்லை என்று கோர்ட்டு சொல்லாது.சந்தேகத்துக்கு இடமின்றி குற்றத்தை நிரூபிக்க தவறியதால் விடுதலை செய்யப்படுவதாகத்தான் கோர்ட்டு கூறும். இதன் மூலம் விடுதலை செய்யப்பட்டவர் குற்றமே செய்யாதவர் என்று அர்த்தமாகாது.


                                                                                                                                          

நன்றி: மாலைமலர்

Comments

Sankar Gurusamy said…
இவர்களை எல்லாம் சட்டப்படி தண்டனை பெற வைப்பது குதிரைக் கொம்புதான். இப்படி குற்றம் சாட்டி எவ்வளவு நாள் முடியுமோ அவ்வளவு நாள் உள்ளே வைத்து திருப்திப் பட்டுக்க வேண்டியதுதான். அதத்தான் நம் நீதிபதிகள் கனஜோரா செஞ்சிக்கிட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன்.

பகிர்வுக்கு நன்றி...

http://anubhudhi.blogspot.com/
பகிர்வுக்கு நன்றி!
சட்டம் பற்றின சரியான பகிர்வு.. நன்றி விஜயன்.
Unknown said…
Sankar Gurusamy said...:
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Unknown said…
@சென்னை பித்தன்// வருகைக்கு நன்றி ஐயா
Unknown said…
@ !* வேடந்தாங்கல் - கருன் *!//
நன்றி ஆசிரியரே.
பகிர்வுக்கு நன்றி
Unknown said…
@தேனம்மை லெக்ஷ்மணன்: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்
Unknown said…
@middleclassmadhavi: ரொம்ப காலத்துக்கு பிறகு தந்த வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

Popular posts from this blog

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.                     தன்னுடையவா

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

என் வடஇந்திய நண்பனுக்கு கல்யாணம்

       போ ன வாரம்  என் நண்பனின் திருமணம் கான்பூரில்(உத்திர பிரதேசம்) நடைப்பெற்றது.  நண்பனின்   அதீத அன்பின் காரணமாக அழைப்பை ஏற்று நானும் என் மனைவியும் புறப்பட்டோம்.                     அ திகாலை 5.50 க்கு அடைமழையில் ராப்திசாகர் என்ற இரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது.  இரயில் பெட்டிகள் காந்தி தாத்தா காலத்தில் உள்ளது போல் ரொம்ப பழையதாக இருந்தது. சரி  பெட்டி ரொம்ப இருட்டாக இருந்ததால் மின்விளக்கை போடலாம் என்று பொத்தானை துழாவினேன் அங்கே பொத்தான் இருந்ததுக்கு அடையாளமாக ஒரு ஓட்டை மட்டும் இருந்தது, சரி என்று விதியை நொந்தபடி படுத்து உறங்கிவிட்டேன்.  உறக்கம் தெளிந்தபோது மணி 12.00.   கொஞ்சம்  காலைகடன்களை கழிக்கலாமே என்று  கழிவறைக்கு ள் சென்று தாளிட தாப்பாளை(கொண்டியை) தேடினேன் அதுவும் மிஸ்ஸிங்(வாழ்க பிகாரிகள்).                        நி திஷ் குமார் ஆட்சியில் பிகார் முன்னேறியிருப்பதாக சொன்னார்களே  முன்னேறிய பிறகும் இப்படி என்றால் இதற்க்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே தலை சுற்றியது.எல்லாம் முடிந்த பின்  toilet ஐ flush செய்ய லிவரை அழுத்தினேன் கொஞ்சம் இறுக்கமாக இருந