பின் தொடரரும் நண்பர்கள்

Thursday, February 17, 2011

நரேந்திரமோடி : முன்மாதிரியான முதல்வர்

              1950 ஆம் ஆண்டு  செப்டம்பர்  17 -ல்  குஜராத்திலுள்ள வட்நகர்(vadnagar) என்ற சாதாரண கிராமத்தில் பிறந்தவர். சோசியல் சயின்ஸ்- ல் முதுகலை பட்டம் பெற்றவர்.  இவருடைய  அலுவலகம் ISO 9001:2008 CERTIFIED ஆகும்.
                                   முதன் முதலாக அக்டோபர் 2001-ல் குஜராத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த காலகட்டத்தில் தான் குஜராத்தில் புஜ் என்ற இடத்தில் மாபெரும்  பூகம்பம் ஏற்பட்டு குஜராத் மாபெரும் உயிர் மற்றும் பொருள் இழப்பைக் கண்டது.  அதிலிருந்து  குஜராத்தை மீட்டெடுத்து இந்தியாவிலேயே  ஆச்சரியப்படும் வகையில் முன்னணி மாநிலமாக ஆக்கிய பெருமை  மோடியையே சாரும்.  மதுக்கடை வருமானம் அங்கு கிடையாது. ஓட்டு வங்கிமற்றும் இலவச (அரிசி) அரசியல் அவர் செய்வது கிடையாது. அவருடைய ஒரே முழக்கம் குஜராத்தின் வளர்ச்சி.  அதையும் நம் அரசியல்வாதி மாதிரி பேசிக்கொண்டிராமல் செயலில் காட்டியவர். அனைத்து அரசு இயந்திரத்தையும் கணினிமயம் ஆக்கியவர்.
                 மோடியும், அவரது அரசும் ஏகப்பட்ட  அவார்டுகளை(பணம் கொடுத்து வாங்கியது அல்ல)   வென்றுள்ளது குறிப்பிடதக்கது. உலகத்தின் பார்வையை குஜராத்தின் பக்கம் திருப்பியவர் இவர். ஏழைகள் இருக்கும் வரை இலவசமாக் கொடுப்போம் என்று காமடி செய்யாமல் தொழிலதிபர்களின் சொர்க்கமாக குஜராத்தை மாற்றி குஜராத் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியவர். இவரது இதயமும் இனிக்கவுக் கண்கள் பனிக்கவும் யாரையும் வைத்துக்கொள்வதில்லை.  ஓட்டுக்காக அரசியல் நடத்தாமல் யார் தவறு செய்தாலும்  அசுரத்தனமாக அதை நசுக்குபவர்.

சிறுபான்மையினரின் எதிரியாக நரேந்திர மோடி சித்தரிக்கப்படுவது மிகவும் துரதிஷ்டவசமானது.    குஜராத் கலவரத்திற்க்கு மூல காரணமாக இருந்தது  கோத்ரா இரயில் எரிப்பு சம்பவம் ஆகும்.
                          1984 ஆம் ஆண்டு  அக்டோபர் 31 ம் தியதி காங்கிரஸ் ஆட்சியில்  இந்திராகாந்தி ஒரு சீக்கியரால் சுட்டுக்கொல்லப்பட்டபோது அதன் தொடர்பாக நடந்த கலவரத்தில்   ஏராளமான  சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதை நியாயப்படுத்த முடியாது என்றாலும்  ஒருவர்  தனது முட்டாள் தனத்தால் செய்யும் செயலால் ஏராளமான  அப்பாவிகள் சாவதை யாராலும் தடுக்கமுடியாததாக இருக்கிறது. ஆனாலும் சீக்கிய மக்கள் அதையெல்லாம் மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர்.
                             அது போல் இஸ்லாமிய சகோதரர்களும் அதை மறந்து  தேசிய நீரோட்டத்தில் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.  பாபர் மசூதி இடித்த டிசம்பர் 6 ஐ துக்க நாளாக அறிவிப்பது, குஜராத் கலவரத்தை  பேசிப்பேசி மன துவேசத்தை வளர்ப்பது  எந்ந விதத்திலும் நன்மையைத்தராது. அரசியல்வாதிகள், மற்றும் மதகுருமார்கள் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள இதை பயன்படுத்துகிறார்கள்.  ஒவ்வொரு இஸ்லாமிய  சகோதரனுக்கும்,மாற்றுமத சகோதரனுக்கும்  இடையே தனிப்பட்ட முறையில் எந்த பகையும் இல்லை.
வன்முறையால் பாதிப்பு எல்லோருக்கும் உண்டுதான், உதாரணமாக

*  25 செப்டம்பர் 2002 ல் அக்சர்தாம் கோவிலில் நடந்த துப்பாக்கி சூட்டில் 29 பக்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

 * 17 பெப்ரவரி 2002 ல் கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தில் 27 பேர் கொல்லப்பட்டனர்.

* 27 செப்டம்பர் 2006 ல் இந்திய பாராளுமன்றம் மீது  தாக்குதல் நடத்தப்பட்டது அதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

* 14பிப்ரவரி 1998 ல் கோவையில் 17 இடங்களில் ஏற்ப்பட்ட  குண்டுவெடிப்பில்     33 பேர் உயிரிழந்தனர் மேலும் 158 பேர் படுகாயமடைந்தனர்.

*      26 நவம்பர் 2008 ல் நடந்த மும்பை தாஜ் ஹோட்டல் துப்பாக்கிச்சூட்டில்  60 பேர் கொல்லப்பட்டனர் நூற்றுக்கணக்கான பேர்  படுகாயமடைந்தனர்.

* 15  செப்டம்பர் 2008 ல் டெல்லியில்  பஜாரில் நடந்த குண்டுவெடிப்பில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
                   
                    இவையனைத்தும் இஸ்லாமிய தொடர்புடைய  இயக்கங்களால்  நடத்தப்பட்டதாக பத்திரிகை செய்திகள் தெரிவித்தாலும்  இதை ஒரு சோக தினமாகவோ அல்லது அந்த நாளை ஞாபகம் வைத்து பேரணியோ அல்லது அமைதி ஊர்வலமோ இதனால்  பாதிக்கப்பட்ட மக்கள் நடத்துவதில்லை.  தண்டனை கொடுக்கவேண்டிய விஷயத்தை அரசிடமே விட்டுவிட்டனர்( !!!!)   இதுவே ஒரு முதிர்ச்சியடைந்த சமுதாயத்தின் அடையாளம் .  

இனி பேதம் களைவோம், சகோரத்துவம் பேணுவோம்.

  இந்தியானாக இருப்பதில் பெருமை கொள்வோம்.               

58 கருத்துரைகள்:

sakthistudycentre-கருன் said...

வடை எனக்கா?

sakthistudycentre-கருன் said...

அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
வாழ்த்துக்கள்....

middleclassmadhavi said...

ஜெய் ஹிந்த்!

மோடியைப் பற்றி என் கணவர் மிக சிலாகித்துப் பேசுவார், அவரிடம் உங்கள் பதிவைச் சொல்கிறேன்!

சென்னை பித்தன் said...

//ஓட்டுக்காக அரசியல் நடத்தாமல் யார் தவறு செய்தாலும் அசுரத்தனமாக அதை நசுக்குபவர்.//
இந்தியாவில ஒரு மோடிதான் என்பதுதான் சோகமே!
நல்ல பதிவு!

அரசன் said...

இவரின் தொலைநோக்க பார்வை

இன்னும் உயர்த்தும் ...

இவரின் கொள்கைகள் ரொம்பவும் நல்லா இருக்கு ./..

நல்ல பதிவை வழங்கிய உங்களுக்கு நன்றிகள் ..

இப்படி ஒரு முதல்வரும் இந்தியாவில் தான் உள்ளார் .என்பதை நினைக்கும் பொது கொஞ்சம் சந்தோஷம் தான்

கக்கு - மாணிக்கம் said...

மோடியை ஒரு மோசமான வில்லனாகவும், முஸ்லிம் மக்களின் விரோதியாகவும் இங்குள்ள ஊடகங்கள், அதில் உள்ளவர்கள், சில தனியார் அமைப்பினர் அனைவரும் சித்தரிகின்றனர். ஆனால் குஜராத்தில் சமீபத்தில் நடந்த ஊராட்சி தேர்தலில் கூட முஸ்லிம் மக்களின் ஆதரவை பெற்றே வெற்றி கொண்டார். இவரின் திறமையான ஆட்சி முறையினை பற்றி பேசினால் நம்மையும் பி.ஜே.பி. காரன் அல்லது சங்க பரிவார் காட்டுமிராண்டிகள் என்று வரிந்து கட்டிக்கொண்டு வருவார்கள். தேசபற்றுகொண்ட ஒரு ஆட்சியாளர். அவ்வளவுதான்.இங்கு தேச பற்று என்றால் அது என்னவோ காங்கிரஸ் காரர்களுக்கு மட்டுமே சொந்தம் என்று பீலா விடுவார்கள். அதுதான் சோனியாவின் தலைமையில் சிரிப்பாய் சிரிகிறது.

கே. ஆர்.விஜயன் said...

sakthistudycentre-கருன் :
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. வடை உங்களுக்குதான்.

கே. ஆர்.விஜயன் said...

middleclassmadhavi :
அவரும் மோடி ரசிகரா. வாழ்க வளமுடன். வருகைகும் கருத்துக்கும் நன்றி.

கே. ஆர்.விஜயன் said...

சென்னை பித்தன் :
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கே. ஆர்.விஜயன் said...

அரசன் :
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அரசன் அவர்களே.

கே. ஆர்.விஜயன் said...

கக்கு - மாணிக்கம் :
நண்பர் கக்கு அவர்களின் கருத்துக்கு நன்றி.மீண்டும் வருக.

பாரத்... பாரதி... said...

//மோடியை ஒரு மோசமான வில்லனாகவும், முஸ்லிம் மக்களின் விரோதியாகவும் இங்குள்ள ஊடகங்கள், அதில் உள்ளவர்கள், சில தனியார் அமைப்பினர் அனைவரும் சித்தரிகின்றனர். ஆனால் குஜராத்தில் சமீபத்தில் நடந்த ஊராட்சி தேர்தலில் கூட முஸ்லிம் மக்களின் ஆதரவை பெற்றே வெற்றி கொண்டார். இவரின் திறமையான ஆட்சி முறையினை பற்றி பேசினால் நம்மையும் பி.ஜே.பி. காரன் அல்லது சங்க பரிவார் காட்டுமிராண்டிகள் என்று வரிந்து கட்டிக்கொண்டு வருவார்கள். தேசபற்றுகொண்ட ஒரு ஆட்சியாளர். அவ்வளவுதான்.இங்கு தேச பற்று என்றால் அது என்னவோ காங்கிரஸ் காரர்களுக்கு மட்டுமே சொந்தம் என்று பீலா விடுவார்கள். அதுதான் சோனியாவின் தலைமையில் சிரிப்பாய் சிரிகிறது//

பாரத்... பாரதி... said...

மோடி பற்றி எழுதுவதற்கு துணிந்தற்கே பாராட்ட வேண்டும்.

கே. ஆர்.விஜயன் said...

பாரத்... பாரதி... said...

மோடி பற்றி எழுதுவதற்கு துணிந்தற்கே பாராட்ட வேண்டும்.//

இந்திய நாட்டின் ஒரு தலைசிறந்த நிர்வாகியைப்பற்றி எழுதுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வளவு உலக அளவில் ஊழல் நடந்தும் எனக்கு எதுவும் தெரியாது என்கிற பிரதமர் எங்கே இவர் எங்கே. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாரத் பாரதி.

MANO நாஞ்சில் மனோ said...

நண்பன் கக்கு'வின் கருத்துதான் என் கருத்தும்.....
திறமை உள்ளவனை பாராட்டா விட்டாலும், திட்டாமலாவது இருப்பது நல்லது....

கே. ஆர்.விஜயன் said...

MANO நாஞ்சில் மனோ:
வாங்கையா வாங்க ஒரு ஸ்பீக்கர் போனை வாங்கி எல்லாரையும் கலாய்கறீங்களாம். நடத்துங்க. வருகைக்கு நன்றி.

Chitra said...
This comment has been removed by the author.
விந்தைமனிதன் said...

"படியுங்கள் பயங்கொள்ளுங்கள்" என்று தெஹல்கா ஆவணம் ஒன்று இருக்கின்றது. படித்துவிட்டு மீண்டும் மோடி நல்ல்ல்ல்லவர்(?!) என்று எழுதவும். அதற்கும் இதே புன்னூட்ட சிகாமணிகள் அருமையான, சிறப்பான பகிர்வு என்று புளகாங்கிதப்படட்டும்.

பேயரசாட்சி செய்தால்...

செங்கோவி said...

நானும் ‘படியுங்கள், பயங்கொள்ளுங்கள்’ ஆவணத்தை உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன்..ஒரு குழு கலவரம் செய்வது வேறு, ஒரு அரசே கலவரம் செய்வது வேறு. உங்களுக்குப் புரியும்படி சொல்வதென்றால் ராஜபக்‌ஷே இலங்கையில் செய்ததைத்தான் குஜராத்தில் மோடி செய்தார். ‘யாருக்குமே நல்லது செய்யாத திறமையற்ற ஒரு அரசியல்வாதி’-’தான் எதிரியாகப் பாவிக்கும் இனத்தை அழித்துக்கொண்டே இன்னொரு புறம் திறமையாக ஆட்சி செய்யும் அரசியல்வாதி’ என்ற இருவரில் முதலாமவரைத் தான் நான் தேர்ந்தெடுப்பேன். ஒருவன் திறமைசாலியாக மட்டும் இருந்தால் போதுமா..அடிப்படையில் மனிதனாக இருக்க வேண்டாமா..இந்துவாகப் பிறந்ததால் இதிலுள்ள அபத்தம் புரியவில்லையோ..ஒரு முஸ்லிம் பெண்ணின் வயிற்றை அறுத்து கருவை வெளியே எறிந்துவிட்டு, அவனே ஒரு மாநிலத்திற்கும் மதத்திற்கும் நல்லது செய்கிறான் ’என்றால் பாராட்டிவிட வேண்டுமா..சாரி சார், உங்கள் பதிவுடன் உடன்பட முடியவில்லை!

விந்தைமனிதன் said...

//அது போல் இஸ்லாமிய சகோதரர்களும் அதை மறந்து தேசிய நீரோட்டத்தில் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும்//

எதை மறந்து???

"முஸ்லிம் பெண்கள் பழங்களைப்போல் கிடைத்தார்கள். நாங்கள் சலிக்கச் சலிக்க உண்டோம்" என்று தன் மனைவியைச் சாட்சியாக வைத்துக் கொண்டு பெருமையாக முழங்கினவனுக்கும், வாக்காளர் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு எந்தெந்த வீடுகளில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்று தேடித்தேடிக் கொன்றவனுக்கும், எம்.பியாக இருந்தால்கூட முஸ்லிமாக இருந்ததனால் மிருகவெறியோடு கொன்றவனுக்கும் பாதுகாப்பு என்ற பெயரில் விளக்குப் பிடித்ததும், கும்பல் கும்பலாகக் கொலை செய்ய ஏதுவாய் அரசே கேஸ்(gas)ஏஜென்சிகள்,கடைகள் ஆகியவற்றிலிருந்து சிலிண்டர்களை சப்ளை செய்ததும்....

அடப்போங்க சார்... செத்தவனுங்களும், கற்பழிக்கப்பட்டவங்களும், வயிற்றுக் குழந்தையைக் கீறி எடுத்து கொல்லப்பட்டவளுமா முக்கியம்? தேசிய நீரோட்டம்தானே முக்கியம்!!!

முஸ்லிம் சகோதரர்களே! சீக்கிரம் வந்து நீரோட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள்

சி.கருணாகரசு said...

தெளிவான அரசியல் பார்வை.... எல்லா மாநிலங்களிலும் மோடியாய் முதல்வர்கள் இருந்தால்.....

பகிர்வு நச்!

Potemkin said...

'சிறந்த' நிர்வாகியான ஹிட்லரால் ஆளப்பட்ட ஜெர்மனிக்கும் மோடி ஆள்கிற குஜராத்துக்கும் உள்ள ஒற்றுமைகளை இந்த லிங்கில் படிக்கலாம். http://www.countercurrents.org/puniyani170410.htm

கொடூரர்களான ஹிட்லர், முசோலினியைப் புகழ்ந்த RSS தலைவன் கோல்வால்கரின் வாரிசு தானே இந்த மோடி. வன்புணர்வு, படுகொலைகளை போலீஸ் மற்றும் அரசு எந்திரத்தின் ஆதரவுடன் நடத்தி விட்டு, சிறந்த நிர்வாகமாம். தொட்டுக் கொள்ள மலத்தை வைத்து விட்டு பாசுமதி அரிசியில் சோறு போட்டால், வழித்து சாப்பிட்டு விட்டு... பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்குன்னு சொல்வார்கள் போல.

Potemkin said...

@chitra
//interesting post...//

திருமதி சித்ரா,

நீங்கள் வசிக்கிற அமெரிக்காவில் மோடிக்கு வீசா மறுக்கப்பட்டதும் ஏற்கனவே இருந்த வீசாவை தள்ளுபடி செய்ததும் ஏன் என்று தெரியுமா? ஐரோப்பிய யூனியன் மோடிக்கு வீசா மறுத்தது ஏன் என்று தெரியுமா?

நீங்கள் ஒரு கிறித்துவர் என்கிற முறையில் கேட்கிறேன்... ஒரிசாவில் அப்பாவி கிறித்துவர்கள் கொன்று குவிக்கப் பட்டதும் ஆயிரக் கணக்கானோர் வீடிழந்ததும் யாரால் என்று தெரியுமா?

RSS , பஜ்ரங்தள், இந்து முன்னணி நாளை திருநெல்வேலியிலும் கேம்ப் போட்டால் தான் இதை புரிந்து கொள்வீர்களா?

Potemkin said...

காங்கிரசின் சீக்கிய படுகொலைகளைக் காட்டி மோடியை நியாயப் படுத்த முடியாது. முஸ்லீம் பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்புகளை பட்டியல் போட்ட நீங்கள் ஹிந்துத்வா காவி பயங்கரவாதத்தை மறந்து விட்டீர்களா?

இந்தியாவில் நடந்த மதக் கலவரங்களின் பட்டியலைப் படித்து பாருங்கள். யார் திட்டமிட்டு அழிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று தெரியும்.

http://www.scribd.com/doc/39993690/3-Communal-Riots-in-India-1

Anonymous said...

இங்கு மோடி-யை ஆதரிப்பவர்கள் ரொம்ப அப்பாவிகளா.. இல்லை நடிக்கிறார்களா? ஹிட்லர்-ன் ஆட்சியில் தான் ஜெர்மனி-ன் பொருளாதார வளர்ச்சி வலுவடைந்தது.. அதற்காக ஹிட்லர் புத்தர் ஆகி விட்டானா ? குஜராத்-ன் வளர்ச்சியே கேள்விக்குறி ( அது ஊதி பெரிதாக்கப் பட்டது ) குஜராத்-ன் கடன் எவ்வளவு என்று தெரியுமா? எவன் செத்தால் என்ன.. எனக்கு பிரியாணி போட்டவன் புண்ணிய ஆத்மா.. அட போங்கய்யா..

எல் கே said...

/நீங்கள் வசிக்கிற அமெரிக்காவில் மோடிக்கு வீசா மறுக்கப்பட்டதும் ஏற்கனவே இருந்த வீசாவை தள்ளுபடி செய்ததும் ஏன் என்று தெரியுமா///

அதனால் அவருக்கு நஷ்டம் இல்லை. அமெரிக்காவுக்கு தான் நஷ்டம்...

Anonymous said...

//அதனால் அவருக்கு நஷ்டம் இல்லை. அமெரிக்காவுக்கு தான் நஷ்டம்..//

LOL...

பாலா said...

மோடி ஒரு சிறந்த நிர்வாகி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர்மீது மத சாயம் பூசப்படுவது வேதனைக்குரியது. இதில் கொடுமை என்னவென்றால் அவர் சிறுபான்மை மக்களின் ஆதரவோடுதான் வெற்றி பெறுகிறார். ஆனால் இங்கோ அவரை சிறுபானமையினரின் எதிரி என்று புலம்பி கொண்டிருக்கின்றார்கள்.

Potemkin said...

@LK
//நீங்கள் வசிக்கிற அமெரிக்காவில் மோடிக்கு வீசா மறுக்கப்பட்டதும் ஏற்கனவே இருந்த வீசாவை தள்ளுபடி செய்ததும் ஏன் என்று தெரியுமா///

அதனால் அவருக்கு நஷ்டம் இல்லை. அமெரிக்காவுக்கு தான் நஷ்டம்...//

ஆமாமா அமெரிக்காவுக்கு பெருத்த நஷ்டம். சமீபத்திய பொருளாதாரச் சரிவு கூட மோடிக்கு வீசா கொடுக்காதனாலதான்னு பேசிக்கிறாங்க, வொயிட் அவுசுல.
அது கெடக்கட்டும், மேலை நாடுகளில் மோடிக்கு வீசா எதனால மறுக்கப்பட்டது அப்படிங்கறது தான் இங்க கேள்வி.

கே. ஆர்.விஜயன் said...

விந்தைமனிதன் :
நண்பரே துவேஷத்தை விதைக்கவேண்டும் அல்லது அதிக ஓட்டு கிடைக்க வேண்டும் என்றால் நானும் ஒரு நாலாந்தர அரசியல் வாதியைபோல் தீவிரவாதத்தை ஆதரிக்கலாம். ஆனால் இந்த நாட்களில் நான் வடஇந்தியாவில் பணிபுரிந்து வந்தேன். அப்பொழுது ஒரு கலவரத்தில் இஸ்லாமிய நண்பரின் சிறிய குழந்தைகள் மாற்று மதத்தினரை கொளுத்திய விதம் அந்த அலறல் இன்னும் என் கண்முன்னே இருக்கின்றது. தெஹல்கா வை விட நான் கண்ணால் கண்டதைதானே நான் நம்பமுடியும். ஆனால் அதை நான் என் மனதிலேயே மூடி வைத்துவிட்டேன். துயரம் எல்லோருக்கும் உண்டு இஸ்லாமியருக்கும் மாற்று மதத்தினருக்கும் இரத்தம் ,உயிர்,வலி எல்லாம் ஓன்றுதான் ஆனால் மாற்றுமதத்தினர் மட்டும் எவ்வளவு அடித்தாலும் வலிக்காத மாதிரியே நடிக்கவேண்டும் என்றால் எப்படி சார் முடியும். வலிக்கிறதே. பாகிஸ்த்தான் என்றாலே தூயவர்களின் நாடு என்று அர்த்தம். இஸ்லாம் என்பது ஒரு இனிய மார்க்கம் எல்லாம் கேட்க நல்லாதான் இருக்கு.அப்படி இருந்தாலும் நல்லாதான் இருக்கும் ஆனால் என்ன நடக்கிறது என்பதை சொல்லும் துணிவாவது யாருக்கும் இருக்கிறதா. தீவிரவாதத்தை நான் ஆதரிக்கவில்லை. நீங்கள் விளைவைப்பற்றி மட்டும் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் எங்கிருந்து ஆரம்பம் என்று பார்த்தால் உண்மை புரியும்.

கே. ஆர்.விஜயன் said...

Potemkin :
நண்பரே அமெரிக்காவிற்க்கு அந்த இரட்டை கோபுரமும் அதன் கோரங்களும் இன்னும் மறந்திருக்காது. அதுவும் ஒரு விளைவுதான் தேவையில்லாமல் ஒருவனை சீண்டினால் என்ன செய்ய முடியும் என்று இஸ்லாமிய இயக்கங்களால் சொல்லிக்கொடுக்கப்பட்ட பாடம். அமெரிக்க சாதாம் உசேனை கொன்றதை நீங்கள் ஆதரிப்பீர். ஏனென்றால் அது உங்கள் அமெரிக்கா செய்தது. ஆனால் எங்களை பொறுத்தவரை அது ஒரு ரவுடித்தனம் அதன் விளைவை அது அனுபவிக்கிறது. நான் இரு மதத்தின் இடையே பிரச்சனைய வளர்க்க இதை எழுதவில்லை. புரியவில்லை என்றால் திரும்பவும் படிக்கவும்.

கே. ஆர்.விஜயன் said...

Potemkin said...

@chitra
//interesting post...//

திருமதி சித்ரா,

நீங்கள் வசிக்கிற அமெரிக்காவில் மோடிக்கு வீசா மறுக்கப்பட்டதும் ஏற்கனவே இருந்த வீசாவை தள்ளுபடி செய்ததும் ஏன் என்று தெரியுமா? ஐரோப்பிய யூனியன் மோடிக்கு வீசா மறுத்தது ஏன் என்று தெரியுமா? //

பதிவைப்போட்டது நான். பதில் அளிக்கவேண்டியதும் நானே தவிர சித்ரா மேடம் அல்ல. இந்த அளவு ஆவேசம் தேவையில்லை. அமெரிக்க இரட்டை கோபுர குண்டுவெடிப்பில் கிறிஸ்தவர்களும் இறந்தார்கள் என்பது அமெரிக்காவில் இருக்கும் அவருக்க்கு தெரியாதா என்ன?.

கே. ஆர்.விஜயன் said...

விந்தைமனிதன் :

"முஸ்லிம் பெண்கள் பழங்களைப்போல் கிடைத்தார்கள். நாங்கள் சலிக்கச் சலிக்க உண்டோம்" என்று தன் மனைவியைச் சாட்சியாக வைத்துக் கொண்டு பெருமையாக முழங்கினவனுக்கும், வாக்காளர் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு எந்தெந்த வீடுகளில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்று தேடித்தேடிக் கொன்றவனுக்கும், எம்.பியாக இருந்தால்கூட முஸ்லிமாக இருந்ததனால் மிருகவெறியோடு கொன்றவனுக்கும் பாதுகாப்பு என்ற பெயரில் விளக்குப் பிடித்ததும், கும்பல் கும்பலாகக் கொலை செய்ய ஏதுவாய் அரசே கேஸ்(gas)ஏஜென்சிகள்,கடைகள் ஆகியவற்றிலிருந்து சிலிண்டர்களை சப்ளை செய்ததும்....//
ஏதோ ஒரு அயோக்கியன் செய்த தப்பிற்க்காக அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். பிள்ளைக்கு பால் வாங்க போனவனும், வீட்டிற்க்கு காய்கறி வாங்க போனவனும் ஒன்றுமே அறியாத குழந்தைகளும் குண்டுவெடிப்பில் சாகிறான். குண்டுக்கு மதம் பேதம் கிடையாது எல்லாவரையும் கொல்லும் ஆனாலும் கவலையில்லை. நாங்கள் எதையுமே மறக்கப்போவதில்லை என்றால் அடுத்த பலி நாமாக கூட இருக்கலாம். என் கருத்து இதுதான். சாகபோவது நாம் தானே. நான் இல்லையே.

ரஹீம் கஸாலி said...

நண்பரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன். நேரம் கிடைத்தால் வருகை தரவும் .
http://blogintamil.blogspot.com/2011/02/5-saturday-in-valaichcharam-rahim.html

கே. ஆர்.விஜயன் said...

விந்தைமனிதன் said...

"படியுங்கள் பயங்கொள்ளுங்கள்" என்று தெஹல்கா ஆவணம் ஒன்று இருக்கின்றது. படித்துவிட்டு மீண்டும் மோடி நல்ல்ல்ல்லவர்(?!) என்று எழுதவும். அதற்கும் இதே புன்னூட்ட சிகாமணிகள் அருமையான, சிறப்பான பகிர்வு என்று புளகாங்கிதப்படட்டும்.//

சகோதரனே ஆவணங்களை விடவும் உங்கள் கண்களை நம்புங்கள் அது உங்களை ஏமாற்றாது. உலகிலேயே தினம் தினம் குண்டு வெடிக்கும் நாடு எது. உலகில் எந்த சமூகம் வாழ வழியின்றி தீவிரவாதத்தால் தினமும் செத்துக்கொண்டிருக்கின்றார்கள். அது ஏன். அங்கு மோடி இல்லையே. குஜராத்தில் மட்டும்தானே மோடி இருக்கிறார். ஆனால் துயரம் உலகம் முழுவதும் இருக்கின்றதே. நீங்கள் சொல்கிற மாதிரி குஜராத் முஸ்லீம் சகோதரர்கள் இல்லை என்பதற்க்கு மோடியின் வெற்றியே சாட்சி.

கே. ஆர்.விஜயன் said...

Potemkin:
நீங்கள் வசிக்கிற அமெரிக்காவில் மோடிக்கு வீசா மறுக்கப்பட்டதும் ஏற்கனவே இருந்த வீசாவை தள்ளுபடி செய்ததும் ஏன் என்று தெரியுமா? ஐரோப்பிய யூனியன் மோடிக்கு வீசா மறுத்தது ஏன் என்று தெரியுமா? //

அதே அமெரிக்காவில் நமது பழைய குடியரசு தலைவர் அப்துல் கலாமை விமான நிலையத்திலே தடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டாரே. அமெரிக்காவே செய்ததால் அது சரியாக இருக்குமோ. இவ்வளவு தமிழர்களை கொன்ற பின்னும் இந்திய அரசு ராஜபக்சே வுக்கு ராஜமரியாதையுடன் குலாவுகிறதே. அதெல்லாம் சரிதானோ. கனடாவில் சீமானுக்கு விசா மறுக்கப்பட்டதால் அவர் கொலையாளியாகிவிடுவாரா, பிராபகரின் தாயாருக்கு தமிழ் நாட்டில் சிகிட்சை செய்ய அனுமதி தரவில்லை என்பதால் அவர் துரோகி ஆகி விடுவாரா ? இதெல்லாம் அந்தந்த நாட்டின் லாப நட்டம் பார்த்து எடுக்கப்படுகின்ற்அரசியல் முடிவுகள்.

கே. ஆர்.விஜயன் said...

பாலா :
உங்களுடைய வருகைகும் முதிர்ச்சியான பதிலுக்கும் நன்றி.மீண்டும் வருக.

கே. ஆர்.விஜயன் said...

Chitra :
மேடம் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கே. ஆர்.விஜயன் said...

சி.கருணாகரசு :
உங்களுடைய ஆதரவுக்கு நன்றி.

கே. ஆர்.விஜயன் said...

ரஹீம் கஸாலி:
நன்றி நண்பரே.கண்டிப்பாக பார்க்கிறேன். வருகைக்கு நன்றி.

Anonymous said...

yeppa vijayaa.. entha kalavarattha nee kannaaa paarttha.. RSS velaya kaatra paatthiyaaa.. :))

கே. ஆர்.விஜயன் said...

Anonymous:
தாவூத் இப்ராஹீம், ஒசாமா பின் லேடன், சோட்டா சகீல், இவர்கள் எல்லாம் என்ன தேசத்தலைவர்களா ? இவர்களுடைய அடையாளம் என்ன. சிமி, லஸ்க்ர் இ தொய்பா(இன்னும் அடுக்கிக்கொண்டே பொகலாம்) இதெல்லாம் என்ன அரசியல் கட்சிகளா. எல்லாமே அடக்குமுறையினால் ஏற்ப்பட்ட விளைவுகள். அதுதான் வேண்டாம் என்கிறேன். பரஸ்பரம் சண்டையிடுவதால் இழப்பை தவிர வேறில்லை. ”குற்றம் பார்க்கின் சுற்றாம் இல்லை”

கே. ஆர்.விஜயன் said...

yeppa vijayaa.. entha kalavarattha nee kannaaa paarttha.. RSS velaya kaatra paatthiyaaa.. :))
அந்த கலவரத்தைப்பற்றி பதிவே போட மேட்டர் இருக்கு. ஆனா பெயரைக்கூட எழுத தைரியமில்லாத உனக்கெல்லாம் நான் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லைனு நினைக்கிறேன். எனக்கு ஏராளமான நல்ல இஸ்லாமிய நண்பர்கள் உள்ளனர். உன்னைப்போல் ஆட்களுக்கு பதில் சொல்லி அவர்களை இழக்கவிரும்பவில்லை எனவே இதை இத்துடனே முடித்துக்கொள்ள விரும்புகிறேன்.

M.Mani said...

துணிகரமான பதிவு நண்பரே! போலி மதச்சார்பின்மை பேசும் போலிகளுக்கு ஏன் இப்படி பற்றிக்கொண்டு வருகிறதோ!
அவர்களை ஒதுக்கிப் புறந்தள்ளிவிட்டுப் பதிவிடுங்கள். வாழ்த்துக்கள்.

இல்யாஸ்.மு said...

இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட உயிர்களை கொன்று இரத்தம் குடித்த ஓநாய்க்கு உத்தமபட்டம் சூட்டி மகிழ்வது உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்றால் உங்கள் நிறம் தெரிகிறது.
யாரோ ஒருவர் செய்த தவறல்ல. ஒரு அரசு, மோடி தலைமையிலான ஒரு அரசு திட்டம் தீட்டி கணக்கெடுத்து காத்திருந்து வெட்டிசாய்த்தது மனித உயிர்களை மட்டுமல்ல. மனித நேயத்தையும்தான். எந்த முகத்தை வைத்துக்கொண்டு இனி வெளிநாடுகளுக்கு செல்வேன் என்றழுத அப்போதைய பிரதமர் வாஜ்பேயி அதற்கு சாட்சி.

நீங்கள் சொல்லும் தேசிய நீரோட்டத்தில் எல்லோருமே இருக்கிறார்கள். ஜனநாயகத்தை மறுத்து, கலகத்தை உண்டாக்கி மனித உயிர்களை பலியிட்டு அவர்கள் உடல்களில் ஆட்சிபீடத்தை அமைத்து இருக்கும் மோடி போன்றவர்களை தவிர்த்து எல்லாருமே இந்தியன் என்கிற தேசிய நீரோட்டதில்தான் இருக்கின்றனர்.

ஆட்சி, கட்சி அரசியல் போன்றவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஒரு சராசரி மனிதனாக குஜராத்தில் நடந்த கருவருப்புகளை மனசாட்சி உள்ள ஒருவனும் ஏற்றுக்கொள்ளமாட்டான். அப்படி ஏற்றுக்கொண்டால் நாமெல்லாம் ஆறறிவு மனிதன் என்கிற நிலையிலிருந்து ஐந்தறிவு மிருகத்திற்கு இணை என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.

கே. ஆர்.விஜயன் said...

இல்யாஸ்.மு:
இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட உயிர்களை கொன்று இரத்தம் குடித்த ஓநாய்க்கு உத்தமபட்டம் சூட்டி மகிழ்வது உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்றால் உங்கள் நிறம் தெரிகிறது.//

சகோதரரே என்னுடைய பதிவில் குஜராத் கலவரத்தை எந்த ஒரு இடத்திலும் நியாயப்படுத்தவில்லை. நான் (காவி) நிறத்தவன் என்றால்
அதை நியாயப்படுத்த எனக்கு ஒரு தடங்கலும் இல்லை. மனசாட்சி என்று ஒன்றுஎல்லோருக்கும் இருக்கிறது. எல்லோருக்கும் ஒரே உயிர்தான்,ஒரே இரத்தம் தான், ஒரே உறவுதான்.

தருமி said...

மோதி தேர்தலில் வெற்றி பெறுவது, புதிய தொழிற்சாலைகள் நிறுவுவது என்பது போன்ற செய்திகளைப் படிக்கும்போது நம் ஊர் அரசியல்வாதிகளும் இவரைப்போல் அரசியலில், ஆளுமையில் நல்ல திறமைசாலிகளாக இருந்தால் நல்லது என்று எனக்கும் தோன்றியுள்ளது - சமீபத்தில் ஒரு கட்டுரையைப் படிக்கும் வரை.

கட்டுரையின் தொடுப்பை ஓரிரு நாளில் தருகிறேன். வாசித்துப் பாருங்கள். இப்போதைக்கு முழுக்கட்டுரை உண்டு. உங்கள் முகவரி தெரிந்தால் அனுப்புகிறேன்.

தருமி said...

தொடர்புக்கு ....

தருமி said...

இவர் கட்டுரைகள் படிப்பதுண்டு. எனக்குத் தெரிந்து எந்த சாயமும் இல்லாதவர். வாசித்துப் பாருங்கள்.

தருமி said...

ஏன் முந்திய பின்னூட்டத்தில் கொடுத்த தொடுப்பு வேலை செய்யவில்லை?

தொடுப்பு:
http://www.mynews.in/Blog/_B88745.html

Potemkin said...

அமெரிக்க அரசு தனது நாட்டுக்கு வெளியே ரவுடித்தனம் செய்கிற அரசு தான். மோடியின் இனப்படுகொலைகளை குறிப்பிட்டு காட்டும் பொருட்டு தான் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் இங்கு இழுத்து வந்தேன். குறிப்பாக சித்ரா அவர்களுக்கு விளக்கும் பொருட்டு. நான் அந்த ஏகாதிபத்தியங்களின் ஆதரவாளன் அல்ல.

குஜராத் கலவரங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறீர்கள். ஆனால் அதன் பின்னே மூளையாகச் செயல்பட்ட மோடியை சிறந்த மக்கள் நல நிர்வாகியாக காட்ட முயல்கிறீர்கள். இந்த முயற்சியின் முரண் உங்களுக்கு உண்மையிலேயே புரியவில்லையா? அப்பாவி பொதுமக்களைக் கொன்ற கசாபுக்கு தூக்கு என்றால், இதே நியாயத்தை மோடிக்கும் பொருத்தி பார்க்காமல் பட்டம் கொடுத்து ஊக்குவிப்பவர்கள் கசாபையும் விடக் கொடூரமானவர்கள் இல்லையா?

மோடியை ஆதரிப்பதற்காக பாகிஸ்தான், லஷ்கர், ஒசாமா என்று பூச்சாண்டி காட்டுவது எதற்கு? இங்கு யாரும் முஸ்லீம் பயங்கரவாதிகளை ஆதரித்து எழுத வில்லையே. ஏதோ மோடியும் அவன் ஆட்களும் பயங்கரவாதிகளை மட்டும் தேடி கண்டுபிடித்து கொன்ற மாதிரியல்லவா சொல்கிறீர்கள். நிறைமாதக் கர்ப்பிணியையும் வயிற்றுச் சிசுவையும் கொன்றவர்களை பாதுகாத்து வருகிற ஒரு மத வெறியனை ஆதரிப்பதற்கும் ஒரு இரும்பு மனது வேண்டும்.

கே. ஆர்.விஜயன் said...

Potemkin:
மோடியை ஆதரிப்பதற்காக பாகிஸ்தான், லஷ்கர், ஒசாமா என்று பூச்சாண்டி காட்டுவது எதற்கு?//
எதையுமே ஒரு பக்கமாக ஆராய்ந்தால் அது சரியல்ல. இப்போழுதும் சொல்கிறேன் மோடி ஒரு தலைசிறந்த நிர்வாகி. அவர் ஒரு மாநிலத்தில் முதல்வர் அவர். கேரளத்தில் இஸ்லாமியத்தை மையப்படுத்தி திரித்து ஒரு கேள்வி தயாரித்தத்ற்க்காக அவருடைய ஒரு கை துண்டிக்கப்பட்டது. துண்டித்தது யாரென்று நான் சொல்லவேண்டியது இல்லை. இன்று அவருக்கு வேலையும் இல்லை. இதை உங்களால் நியாயப்படுத்த முடியுமா. நான் முன்பே சொன்னது போல் ஆதாரம் இன்னும் இருக்கிறது. ஆனால் இது என் வேலையல்ல.அது என் நோக்கமும் அல்ல. ஒரு மதத்தை சார்ந்த எழுத்தாக இருக்கக்கூடாது என்பதே என் எண்ணம். உங்கள் எழுத்துக்கள் என்னை ஆவேசப்படுத்தின என்பது மட்டும் உண்மை. அதன் வெளிப்பாடுதான் மேலே நான் இட்ட பின்னூட்டங்கள். அதற்க்காக நான் வருந்துகிறேன்.

தருமி said...

இதையும் எல்லோரும் படிப்பது நல்லது. குஜராத் இஸ்லாமியரை விடவும் நம் தமிழ்நாட்டு இஸ்லாமிய்ருக்கு கோபம் அதிகமா என்ற் கேள்வி எழுகிறது.

தருமி said...

முந்திய தொடுப்பும் தப்பாகக் கொடுத்துள்ளேன்.

படித்துப் பாருங்கள்.....

தருமி said...

//இதை ஒரு சோக தினமாகவோ அல்லது அந்த நாளை ஞாபகம் வைத்து பேரணியோ அல்லது அமைதி ஊர்வலமோ இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நடத்துவதில்லை. தண்டனை கொடுக்கவேண்டிய விஷயத்தை அரசிடமே விட்டுவிட்டனர்( !!!!) இதுவே ஒரு முதிர்ச்சியடைந்த சமுதாயத்தின் அடையாளம் . //

மிக மிகச்சரி

மர்மயோகி said...

இந்தியாவில் நடைபெற்ற பெரும்பாலான குண்டு வெடிப்புச்சம்பவங்கள் ஹிந்து தீவிரவாதிகளால் நடத்தப்பட்டன என்று இப்போது தெரியவந்து கொண்டிருக்கிறது..

மோடி என்ற பயங்கரவாதி, முஸ்லிம் மக்களின்மீதான் வெறி நாயகூட்டத்தின் தாக்குதலை கண்டு கொள்ள வேண்டுமாம் என்ற சொன்ன செய்தியும் - தெஹல்கா புலனாய்வும் மோடியின் மிருகத்தனத்தை வெளிச்சம்போட்டு காட்டியும், அவனை நல்லவனாக சித்தரிக்க முயலும் உங்கள் எண்ணமும், அதற்க்கு ஜால்ரா போட்டு பின்னூட்டம் போடும் கூட்டத்தினரின் எண்ணமும் புரிகிறது..

மர்மயோகி said...

விஜயன் உளறிக்கொட்டுகிறார்,

கேரளாவும் தாக்குதல் நடத்தியது அம்மாநில முதல்வரல்ல

மோடி என்பவன் குஜராத் முதல்வன்.

அவன் ஒரு மிருகம்

அவனுக்கு வக்காலத்து வாங்கும் எவனும் மிருக குணம் உடையவனே

சீனு said...

//ஒரு முஸ்லிம் பெண்ணின் வயிற்றை அறுத்து கருவை வெளியே எறிந்துவிட்டு, அவனே ஒரு மாநிலத்திற்கும் மதத்திற்கும் நல்லது செய்கிறான் ’என்றால் பாராட்டிவிட வேண்டுமா..சாரி சார், உங்கள் பதிவுடன் உடன்பட முடியவில்லை!//

இன்னும் எவ்வளவு நாள் தான் இதையே சொல்லிக்கிட்டிருப்பாங்கனு தெரியல...

http://en.wikipedia.org/wiki/2002_Gujarat_violence#Riot_cases_controversy

"The report which was brought to the notice of the bench, consisting of Justices Arijit Pasayat, P Sathasivam and Aftab Alam, noted that the much publicised case of a pregnant Muslim woman Kausar Banu being gangraped by a mob and foetus being removed from sharp weapons, was also cooked up and false."