பின் தொடரரும் நண்பர்கள்

Wednesday, February 9, 2011

எங்கள் தேசம் இந்தியா ???!!!!!!!!!!!!!!!!!!!!!

அகரமும் சிகரமும்
எங்கள் இந்திய தேசத்தில் எல்லாவகையிலும்  உலகப்புகழ்  பெற்றவ்ர்களுக்கும் திறமையானவர்களுக்கும் பஞ்சமே இல்லை என்பதை நான் சொல்லவேண்டியதில்லை நீங்களே பாருங்கள்.


விளையாட்டு

இவருக்கு முன்னாலே கிரிக்கெட் இருந்தாலும்  இப்போ  கிரிக்கெட் இவரைச்சுற்றிதான் இருக்கிறது. கிரிக்கெட்டில் (சூதாட்டத்தில் அல்ல )அதிகம் சம்பாதித்தவர் இவர். கிரிக்கெட்டின் கடவுள் என வருணிக்கப்படும் இவர் எந்த வித பிரச்சனையிலும் சிக்காதவர்.  இந்திய மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்.இந்தியாவின்  ஹாக்கி அணிக்கு கேப்டனாக இருந்தவர். சச்சினின் சம காலத்தில் வந்தவர்தான் என்றாலும்  மும்பையில்  வாடகை வீட்டிலே  வசித்துவந்தார். இரண்டும்  உலக அளவிலான விளையாட்டாக இருந்தாலும்  போதுமான  அங்கீகாரமின்மையால் (வருமானமின்மையால்) சச்சினைப்பார்த்தே  நொந்துப்போனவர்.


ஆன்மீகம் 

*  ’ கதவைத் திற காற்று வரட்டும்”  என்று ரஞ்சிதமாகச்  சொன்னாலே தமிழக மக்களின் மனதில் டாண் என்று  வரும் உருவம் இதுதான் . இந்தியாவில் உலாவிவரும்  பல கார்பரேட் சாமியார்களில் அப்பட்டமாக பிடிபட்டதால் மீடியாக்களில்  நூடில்ஸாக நொறுங்கப்பட்டாலும்  கொஞ்சமும் வலிக்காத மாதிரியே சிரித்துகொண்டு சமாளிப்பவர் .  இளம்  வயதிலேயே பல கோடிகளுக்கு சொந்தக்காரர்.   முற்றும் துறப்பபதுதான் துறவம் என்பதி தவறாக புரிந்துகொண்டவர்.     புலி பசித்தாலும் புல்லைத்தின்னாது என்பது போல்  கம்பிகளுக்கு பின்னாலும் உலர் பழங்கள்தான்(dry fruits) வேண்டும் என்று அடம் பிடித்தவர்.     என்னதான் நடந்தாலும் சூடு சொரணையே இல்லாதவர் மாக்குபவர். 

*  காஸ்டியூமில் மட்டும் (நித்தியைப்போல்) சிறிய ஒற்றுமை இருந்தாலும் அவதார புருஷர் இவர்.  அமெரிக்காவில் போய் ஆற்றிய சொற்பொழிவில்  ஒரு புதிய ட்ரெண்ட்-ஐ உருவாக்கி இந்தியாவின் அபிமானத்தை உலகுக்கு தெரியப்படுத்தியவர்."நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!" என்றவர்.


அரசியல் 


ஐம்பது ஆண்டுகாலம் அரசியலில் இருந்தாலும்  மக்கள் சேவை என்பதை  (தன்) மக்கள் சேவை என்ற தவறான புரிதலால் நாட்டுமக்களின் நம்பிக்கையை இழந்து விட்டவர்.  நீண்ட அரசியல் பயணத்தின்  பயனாக கைது செய்யப்பட்டதால் ஒருவர் குற்றவாளி ஆக முடியாது என்ற உயரரிய தத்துவத்தை  கண்டுபிடித்து நாட்டு மக்களின்  கோபத்திற்க்கு பெட்ரோல் ஊற்றியவர்.  அவருக்கு பிடித்தவர்கள் என்னதான் செய்தாலும்  அவரை  அரவணைத்து கொண்டு செல்பவர்.  இந்த நேர்மை(!) மக்களுக்கு  ரொம்ப பிடித்துவிட்ட காரணத்தினால்  அதற்க்கான பரிசை கொடுப்பதற்க்காக  ஆவலாக இருக்கின்றனர்.

பிகாரில்  நடைப்பெற்ற  கோமாளித்தனமான ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து (நாட்டு) மக்கள் நலனே   தன் நலன் என்று கருதி அயராது உழைத்த காரணத்தினால் மக்களின் நன்மதிப்பைப்பெற்று இன்று அசைக்கமுடியாத  மக்கள் ஆதரவோடு ஆட்சி செய்பவர்.  பாராட்டப்பட வேண்டிய நேர்மையான  இந்திய அரசியல்  தலைவர்கள் சிலரில் இவர் முதன்மையானவர்.


ஊழல் 


ஸ்பெக்ட்ரம் என்ற வார்த்தையை பேட்டண்ட் எடுக்காமலேயே காலாகாலத்திற்க்கும் சொந்தமாக்கிய  கதாநாயகர்.  இந்திய வரலாற்றில் முதன் முறையாக  மீடியாவிற்க்கு வந்து சில வருடங்களே ஆன  இமாலய ஊழலை செய்து இந்திய நாட்டிற்க்கும், தமிழ் நாட்டிற்க்கும் அவர் சார்ந்த கட்சிக்கும்  பெருமை தேடி தந்தவர்.  அந்த சாதனைக்காக பிரதமர் அவரது தோளில் தட்டி கொடுத்து பாராட்டியதும் , அவரது கட்சி சார்பில்அந்த சாதனைக்காக  அவருக்கு  தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் நீங்கள் அறிந்ததே.

 இந்திய மக்களுக்கு திறமை  இருக்கிறது, சரியாக பயன்படுத்தினாலும் தவறாக பயன்படுத்தினாலும் பிரபலமாகிறார்கள்.  ஆனால் திறமையை நாட்டின் முன்னேற்றத்திற்க்காக மட்டும்  பயன்படுத்தினால் காந்திமாதிரி (ரூபாய் )நோட்டு  இல்லாவிட்டாலும்  நோட்டில் இருப்பீர்கள்.

 இன்னும்  நிறைய இருந்தாலும்  எழுத எனக்கு நேரம்  இருந்தாலும்  படிக்க ஆள் இருக்காது  என்ற ஒரே காரணத்தால்   தற்போதைக்கு  முடிக்கிறேன்.


28 கருத்துரைகள்:

sakthistudycentre-கருன் said...

கவனிப்புத்தன்மை அபாரம் அதை எழுத்தில் கச்சிதமாக கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள் ...

See.,

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html

sakthistudycentre-கருன் said...

Tamilmanam, Tamil10 ??????

MANO நாஞ்சில் மனோ said...

//இன்னும் நிறைய இருந்தாலும் எழுத எனக்கு நேரம் இருந்தாலும் படிக்க ஆள் இருக்காது என்ற ஒரே காரணத்தால் தற்போதைக்கு முடிக்கிறேன்.//


என்ன அண்ணா இப்பிடி சொல்லிட்டீங்க நாங்கல்லாம் இருக்கும் போது.....

MANO நாஞ்சில் மனோ said...

// கதவைத் திற காற்று வரட்டும்” என்று ரஞ்சிதமாகச் சொன்னாலே தமிழக மக்களின் மனதில் டாண் என்று வரும் உருவம் இதுதான்//

எனக்கு இந்த டீலிங் பிடிச்சிருக்கு....

middleclassmadhavi said...

//திறமையை நாட்டின் முன்னேற்றத்திற்க்காக மட்டும் பயன்படுத்தினால்// உண்மையான ஆதங்கம்!

பாலா said...

//இந்திய மக்களுக்கு திறமை இருக்கிறது, சரியாக பயன்படுத்தினாலும் தவறாக பயன்படுத்தினாலும் பிரபலமாகிறார்கள்.

முற்றிலும் உண்மை. நன்றாக எழுதி இருக்கிறீர்கள்...

Anonymous said...

டீச்சர் கருண் சொன்னது போல மச்சர்ய வேகாதி விடயங்கள் வர்ம் நிகலங்களாகும் பல் வேலைகளில். பந்தய கத்துவ விமோசனங்கள் நிச்சயம் அரசியல் வாதிகளுக்கு மட்டும் தான் என்ற நிர்கதி மோக மாத்யம் என்றால் எதற்காக சத்துவ சாகர சமத்துவ போதனைகள் அச்சிரூ வீதிகள் உலாவுதற்கு மடுமே என்றால்
உலகக் கின்னக் கோப்பை கணவுகளில் கச்சின வகை இளைஞர்கள் திலத்திட வேட்டுவ விமலர் கூடுவார்களோ?

கே. ஆர்.விஜயன் said...

sakthistudycentre-கருன் :
வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி.மீண்டும் வருக.

கே. ஆர்.விஜயன் said...

MANO நாஞ்சில் மனோ :
அளவுக்கு மிஞ்சினால்............. நம்ம ஊர்ல சொல்வாங்க இல்லையா. அதான் மற்றபடி உங்க ஆதரவு இல்லாம எப்படி தலைவா....?
வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி.மீண்டும் வருக.

கே. ஆர்.விஜயன் said...

middleclassmadhavi :
உலகம் பூராவும் நம் சகோதர சகோதரிகள் வேலை பார்க்கிறார்களே, அதுவே நம் திறமைக்கான அங்கீகாரம்தானே.
வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி.மீண்டும் வருக.

கே. ஆர்.விஜயன் said...

பாலா :
நன்றி பாலா சார்.விஸ்வநாத் ஆனந்த உலகத்தையே கலக்கவில்லையா. அரசியலில் மட்டும் தான் தோற்றுக்கொண்டிருக்கிறோம்.

கே. ஆர்.விஜயன் said...

Anonymous :
உங்களுடைய தமிழை பார்த்தபின்புதான் எனக்கு தமிழ் தெரியாது என்ற விஷயமே புரிந்தது.
வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி.மீண்டும் வருக.

சுந்தரா said...

//இந்திய வரலாற்றில் முதன் முறையாக மீடியாவிற்க்கு வந்து சில வருடங்களே ஆன இமாலய ஊழலை செய்து இந்திய நாட்டிற்க்கும், தமிழ் நாட்டிற்க்கும் அவர் சார்ந்த கட்சிக்கும் பெருமை தேடி தந்தவர்.//

:) அதனாலதான், இந்தத் தலைப்புக்கு இவர் ஒருத்தரே போதும்னு விட்டுட்டீங்களா?

கே. ஆர்.விஜயன் said...

சுந்தரா :
இவனுகளைப்பற்றி எழுதினால் எழுதிக்கொண்டே இருக்கலாமே.
வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி.மீண்டும் வருக.

பாரத்... பாரதி... said...

சரியான ஒப்பீடுதான்... தன்ராஜ்பிள்ளையின் போர்க்குணம் வேறு யாரிடமும் காணமுடியாதது...

பாரத்... பாரதி... said...

சரியான ஒப்பீடுதான்... தன்ராஜ்பிள்ளையின் போர்க்குணம் வேறு யாரிடமும் காணமுடியாதது...

பாரத்... பாரதி... said...

படிக்க ஆள் இருக்காது என்ற ஒரே காரணத்தால் தற்போதைக்கு முடிக்கிறேன். //
அடுத்த பதிவில் தொடரலாமே...

கே. ஆர்.விஜயன் said...

பாரத்... பாரதி...:
படிக்க ஆள் இருக்காது என்ற ஒரே காரணத்தால் தற்போதைக்கு முடிக்கிறேன். //
அடுத்த பதிவில் தொடரலாமே...///

தொடர்பதிவுகள் எதையும் பொதுவாக நான் படிக்க விரும்புவதில்லை. அதனால்தான் அப்படி.
வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி.மீண்டும் வருக

வெளங்காதவன் said...

அபாரம்.............

Chitra said...

இந்திய மக்களுக்கு திறமை இருக்கிறது, சரியாக பயன்படுத்தினாலும் தவறாக பயன்படுத்தினாலும் பிரபலமாகிறார்கள். ஆனால் திறமையை நாட்டின் முன்னேற்றத்திற்க்காக மட்டும் பயன்படுத்தினால் காந்திமாதிரி (ரூபாய் )நோட்டு இல்லாவிட்டாலும் நோட்டில் இருப்பீர்கள்.


..... Simply Superb!

டக்கால்டி said...

ஸ்பெக்ட்ரம் ராஜாவின் ஊழலுக்கு இன்னொரு துருவமான சி.என்.என் ஹீரோ நாராயண் கிருஷ்ணனைப் பற்றி சொல்லி இருக்கலாம் தலைவா...

ஸ்ரீராம். said...

//"ஆனால் திறமையை நாட்டின் முன்னேற்றத்திற்க்காக மட்டும் பயன்படுத்தினால் காந்திமாதிரி (ரூபாய் )நோட்டு இல்லாவிட்டாலும் நோட்டில் இருப்பீர்கள்"//

உண்மை..

//"இன்னும் நிறைய இருந்தாலும் எழுத எனக்கு நேரம் இருந்தாலும் படிக்க ஆள் இருக்காது என்ற ஒரே காரணத்தால் தற்போதைக்கு முடிக்கிறேன்."//

இதுவும் உண்மை!

கே. ஆர்.விஜயன் said...

வெளங்காதவன் :
நன்றி.நன்றி மீண்டும் வருக.

கே. ஆர்.விஜயன் said...

Chitra :

வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி.மீண்டும் வருக

கே. ஆர்.விஜயன் said...

டக்கால்டி :
ஊழலைப்பற்றி எழுதவேண்டும் என்றால் நிறைய எழுதலாம். அதுதானே மலிந்துகிடக்கிறது. அதான் சாம்பிளுக்கு ஒன்று மட்டும் எழுதினேன்.
வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி.மீண்டும் வருக

கே. ஆர்.விஜயன் said...

ஸ்ரீராம்.
//"இன்னும் நிறைய இருந்தாலும் எழுத எனக்கு நேரம் இருந்தாலும் படிக்க ஆள் இருக்காது என்ற ஒரே காரணத்தால் தற்போதைக்கு முடிக்கிறேன்."//

இதுவும் உண்மை!//
வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி.மீண்டும் வருக

Jayadev Das said...

//மீடியாக்களில் நூடில்ஸாக நொறுங்கப்பட்டாலும் கொஞ்சமும் வலிக்காத மாதிரியே சிரித்துகொண்டு சமாளிப்பவர் . // அருமை! // மக்கள் சேவை என்பதை (தன்) மக்கள் சேவை என்ற தவறான புரிதலால் நாட்டுமக்களின் நம்பிக்கையை இழந்து விட்டவர். //உண்மை. [மஞ்சள் துண்டுக்காரரின் பொருத்தமான படத்தை தேர்ந்தெடுத்து போட்டுள்ளீர்கள், சூப்பர்.]

சென்னை பித்தன் said...

விளையாட்டுக்கு,ஆன்மீகத்துக்கு,அரசியலுக்கு எல்லாம் ரெண்டு,ஊழலுக்கு மட்டும் ஒண்ணா?ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்று எண்ணி விட்டீகளோ!