பின் தொடரரும் நண்பர்கள்

Tuesday, August 28, 2012

WISH YOU A HAPPY ONAM

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும், முகநூல் நண்பர்களுக்கும் மற்றும் கூகுள் ப்ளஸ் நண்பர்களுக்கும் என் உள்ளம்கனிந்த ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.......

Sunday, August 26, 2012

தி..க்...கு வாய்............

 லக அளவில் இந்தியாவில் திக்குவாய் மிக அதிகமாக கணப்படுகிறதாம் அதில் 80 சதவீதம் ஆண்களாம்.  உலக மக்கள் தொகையில் ஒரு சதவீதம் திக்குவாயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களாம்.. ஆங்கிலத்தில் இதை stammering அல்லது shuttering  என்றும் கூறுவதுண்டு.திக்குவாயைப்பற்றி எழுத ரொம்ப நாளாக நினைத்திருந்தேன்.  நானும் சிறுவயதில் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவன் என்பதும் அதன் பாதிப்புக்களை அனுபவபூர்வமாக உணர்ந்தவன் என்பதும் கூட ஒரு காரணம்.  என்னிடம் நிறைய திறமைகள் இருந்தும் என்னால் அதை செயல்படுத்த மிகவும் தடையாக இருந்தது இந்த திக்குவாய் என்றால் அது மிகையாகாது.                          


       சிறு வயது முதலே இதன் பாதிப்பு அதிகமாகவே இருந்தது நாலு நண்பர்கள் கூடும் இடத்தில் நான் போனால் நான் கேலிப்பொருள் ஆக்கப்படுவேன்...   இதனால் கும்பலாக இருக்கும் நண்பர் கூட்டத்தை தவிற்க்க நேர்ந்தது.... அந்த சந்தோஷத்தை இழக்க நேர்ந்தது..... பள்ளிக்காலத்தில் நான் என்னதான் பலதடவை வீட்டில் நன்றாகப் படித்து சொல்லி பார்த்துவிட்டு சென்றாலும் ஆசிரியர் முன் சென்றதும் என் தொண்டை வறண்டது போன்ற ஒரு உணர்வு ஏற்படும் என்னால் படித்ததை  சொல்ல முடியாது அதற்க்கான தண்டனையை பெற்றுக்கொள்வேன்...... மனதளவில் இவ்வளவு படித்தும் பயனில்லாமல் போய்விட்டதே என்று நொறுங்கிப்போவேன். மனதிற்க்குள் அழுவேன் வெட்கி தலை குனிவேன். இதில் எனக்கு கொஞ்சம் ஆசுவாசம்என்னவென்றால்  ஒவ்வொரு வகுப்பிலும் முதல் காலாண்டு வரும் வரை இது நடக்கும். பரீச்சையின் மதிப்பெண்கள்  என் தரத்தை  காட்டிக்கொடுத்துவிடும். பிறகு ஆசிரியர்கள் என்னை அவ்வளவாக கொடுமைப்படுத்த மாட்டார்கள். அந்த வருடம் ஒரு வழியாக கடந்து போகும். அடுத்த புதிய வகுப்பு ஆரம்பிக்கும் போது திரும்பவும் இதே படிப்பினையை கொடுக்கும் இப்படியே தான் என் பள்ளி வாழ்க்கையும் பலியாகிப்போனது.

        ல்லூரி வாழ்க்கையில் ஆசிரியர் கேட்டால் சொல்லாமல் இருப்பதை ஒரு ஸ்டைலாகவே மாற்றிக்கொண்டேன். காரணம் ஒன்று என் குறையை மறைக்க, மற்றொன்று பெண் பிள்ளைகளுடன்(co education) முதன் முறையாக படிக்க நேர்ந்ததுஎன்பதும். கல்லூரிபேராசிரியர்களிடம்  அடிக்கும் பழக்கம் எல்லாம் கிடையாது என்கிற கனவோடுதான் போனேன். என்னுடைய வகுப்பில் 69 பேர் உண்டு, அதில் நான் 69வது  மாணவன் அதாவது கடைசி  நபர் நான் தான் (as per alphabatical order).  அதனால் ஆசிரியர் என்னை பார்ப்பதே அபூர்வம்.... அவர் எடுக்கின்ற பாடத்தை நாங்கள்  follow செய்கிறோமா இல்லையா என்பதை அறிய last one  என்பார். அதாவது அவர் வாசித்ததை விட்ட இடத்திலிருந்து வாசிக்க சொல்வார் வழக்கம் போல் என் நா வறண்டுவிடும்.. பிறகு next one... next one....என்பார் அப்படியாக  அப்படியாக கடைசி  பெஞ்ச் முழுவது அந்த hour வெளியேற்றப்படுவோம்.  இது வழக்கமானஒன்றாகிப்போனது.கல்லூரி வளாகத்தில் ஒரு கொல்லாமரத்தில் (cashew nut tree) செட்டிலாகிவிடுவோம். இது பெண் பேராசிரியர் என்பதாக்  இத்தோடு விஷயம்  முடியும்.ஆனால் ஆண் பேராசிரியர் என்றால்  கதை கொஞ்சம் மாறும் உதாரணமாக  Define company ?? என்பார்..... நானும் ஏதோ எனக்கு சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தை கேட்டது போல் நிற்பேன் 1000 times என்பார் அதை அடுத்த நாள் ஆயிரம் தடவை எழுதிக்கொண்டு வர வேண்டும்..... இதை சொல்லிவிட்டால் இதைவிட பெரிய கேள்வியாக கேட்பார்.  திணறும் வரை கேட்டு இம்போசிசன் போட்டுத்தான் விடுவார். அதனால் முதல் கேள்வியிலேயே சரண்டர் ஆகிவிடுவோம்....எனக்குதான் திக்குவாய் ஆனால் என்னை பின்பற்றி கூட வரும் கூட்டத்திற்கு நல்ல வாய் தான்.  அது அன்பால் சேர்ந்த கூட்டம்...... நான் சொல்லவில்லையென்றால் அவர்களும் சொல்ல மாட்டார்கள். பிறகு இரண்டு நாள் கல்லூரிக்கு சொல்லாமல் படம் பார்ப்போம்.  பிறகு ஒரு 20 தடவை எழுதி ஏற்கனவே எழுதிய பழைய இம்போசிசன் பேப்பரையும் பின்னால் சேர்த்து கொடுப்போம். இப்படியாக கல்லூரி வாழ்க்கையும் காலாவதியாகிப்போனது.


பிறகு வேலைக்குப்போனேன் அங்கே தொலைபேசியில் யாராவது அழைத்தால்  என் வாயிலிருந்து ஒரு வார்த்தை வருவதற்க்குள் அவர் போனை வைத்துவிடுவார். இப்படியாகத்தான் நகரமாக நகர்ந்தது  என் வாழ்க்கை.... 

சரி ...
இதற்க்கு காரணம் தான் என்ன? திக்கு வாய் என்றால் என்ன???


                                திக்குவாய் என்பது ஒரு நோய் அல்ல....தன்னுடைய எண்ணத்தை கோர்வையாக ஒரு குறிப்பிட்ட கால அளவில் வெளிப்படுத்த முடியாத  நிலையே திக்குவாய்.  அதற்க்காக அவர்கள்  வேகமாக எத்தனிக்கும்போது வார்த்தை தடுமாற ஆரம்பிக்கிறது.   இவர்கள் ஆரம்பித்துவிட்டால் மிகவும் விரைவாக தடங்கல் இல்லாமல் சொல்லிமுடித்து விடுவார்கள்......ஆனால் இடையில் சிறு தடங்கல் வந்தால் அவ்வளவுதான் மனமும்.... வாயில் உள்ள தசைகளும்...உடலின் செய்கைகள் அனைத்தின் கோ ஆர்டினேசன் இல்லாமல்போவதால் பேச்சு தொடர முடியாமல் போய் விடும்.

                               எனக்கு நாளடைவில் பயங்கள் குறைந்து தைரியமடைந்ததால் இன்று என்னிடம் திக்கு வாய் மறைந்துவிட்டது. என்னுடன் பழகிய எல்லா  புதிய நண்பர்களுக்கும்  எனக்கு திக்குவாய் இருந்தது என்ற விஷயம் கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருக்கும். இதற்க்காக் நான் மருந்து எடுத்ததில்லை.... வாயில் கூழாங்கற்கள் போட்டதில்லை..... மனதை கல்லாக்கிக்கொண்டேன். எவர் சிரித்தாலும் சட்டை செய்வதில்லை.  என்னை நானே உயர்வாக கருதிக்கொண்டேன்.  மிகவும் இலகுவான சொற்க்களைக்கொண்டு என் பேச்சை ஆரம்பிக்க பழகிக்கொண்டேன். இன்று  வெளிப்பார்வைக்கு அந்த பிரச்சனை இல்லை ஆனால் இது மன ரீதியான பிரச்சனை என்பதால் கோபம் வந்தாலோ.... ரொம்ப ஆவேசப்பட்டாலோ இன்றும் என் வார்த்தைகள் சிதறும்.... குளறும் அதனால் முடிந்த வரையில் அதையும் தவிற்க்கிறேன்.  மருத்துவம் இந்த குறை பாரம்பரியம் இல்லை என்று சொல்கிறது  ஆனாலும் என் மகனுக்கு இந்த குறை  இருக்கிறது நான் அதை மிகவும் நுணுக்கமாக அணுகுகிறேன். அடுத்தவர்களின் கேலிப்பேச்சிலிருந்து அவனை பாதுக்காக்கிறேன்... பள்ளியில் சொல்லி வைத்து அவனை துன்புறுத்தாமல் பார்த்துகொள்கிறேன். நான் அனுபவித்த கொடுமைஅவனை அணுகாதவாறு ஒரு பொறுப்பான தந்தையாக ஒரு அனுபவஸ்தராக இந்த பிரச்சனையை அணுகுகிறேன். இந்த பிரச்சனை உள்ளவர்கள் பொதுவாக hyper active  அதாவது சுறுசுறுப்புத்தன்மை அதிகம் உள்ளவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதே என் அனுபவ பாடம். இவர்களின்(சீக்கிரமாக பேசி முடிக்க வேண்டும்) அவசரம் தான்  இந்த திக்குவாய்க்கு முதல் காரணமாக இருக்கிறது. நாமாக  நமக்கென்று ஒரு பேச்சு ஸ்டைலை வைத்துக்கொண்டால் கூட இதிலிருந்து மீண்டு விட முடியும். நிதானமாக பேசினால் போதும் என்று நினைத்தாலே இதிலிருந்து வெற்றி பெறலாம் என்பதே என் கருத்து. முக்கியமாக இந்த நபர்களை கேலிசெய்வது மனரீதியாக அவர்களை மிகவும் பாதிக்கும் எனவே அதை தவிற்க்க வேண்டும். அதை ஒரு குறையாக கருதாமல் நண்பர்கள் அவர்களையும் தங்கள் கூட்டங்களில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு குறையை வைத்து அவர்களை தாழ்மைப்படுத்துவது எந்த விதத்திலும் ஒரு நல்ல நட்பாகவோ அல்லது ஆரோக்கியமான செயலாகவோ இருக்க முடியாது. இந்த சமூகமும்  இதற்க்கு உதவினால் இந்த குறை உள்ளவர்கள் அதிக மன பாதிப்பின்றி இதிலிருந்து மீள ஏதுவாக இருக்கும்.


                         இதற்க்கு அந்த காலங்களில் மருந்து என்று ஒன்றும் கிடையாது. ஆனால் இன்று “ பாகோக்ளோன்” என்ற மருந்து முதன் முறையாக கண்டுப்பிடிக்கப்பட்டிருக்கிறதாக கூறப்படுகிறது. சிலருக்கு நாக்கின் அடியில் தசை அதிகமாக ஒட்டியிருக்கும் (முடிச்சு) அதை அறுவை சிகிட்சை மூலம் நீக்கி பயிற்ச்சி கொடுக்கிறார்கள். ஆனால் ஒரு மருத்துவரால் பரிசோதனை வாயிலாக கண்டுபிடிக்க முடியாது .   5 திக்குவாய் குழந்தைகளையும் 5 சாதாரண குழந்தையும் கொடுத்து அவர்களை பேச வைக்காமல் வெறும் மருத்துவ பரிசோதனை மூலம் அவர்களுக்கு  திக்குவாய் இருக்கிறதா என்று பார்க்கச்சொன்னால் கண்டிப்பாக அவர்கள் முயற்ச்சி தோல்வியில் தான் முடியும். இது அதிக அளவில் மனம் (மூளை)  சார்ந்த  விஷயமே....... பெற்றோர்கள் அவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து ஊக்குவித்தால் இதிலிருந்து எளிதாக மீண்டுவிடலாம். சில ஆய்வுகள் தெரிவிப்பதைப்போல் இந்த குழந்தைகளின் வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.... மணவாழ்க்கையிலும் ஒரு பிரச்சனையும் இருக்காது..... அதெல்லாம் வெறும் பயமுறுத்தல் தான்.
 தேவை குழந்தையின் தன்னம்பிக்கையை வளர்ப்பது மட்டுமே.... நிதானமாக பேசு..... தன்னம்கையுடன் இலகுவான சொற்களைக்கொண்டு பேச்சை ஆரம்பி..... . பிறகு உலகம் உங்கள் கையில் என்பதை எழுதி வைத்துக்கொள். 

வாழ்க வளமுடன்.