பின் தொடரரும் நண்பர்கள்

Tuesday, December 21, 2010

என் வடஇந்திய நண்பனுக்கு கல்யாணம்

       போன வாரம்  என் நண்பனின் திருமணம் கான்பூரில்(உத்திர பிரதேசம்) நடைப்பெற்றது.  நண்பனின்   அதீத அன்பின் காரணமாக அழைப்பை ஏற்று நானும் என் மனைவியும் புறப்பட்டோம்.

                    திகாலை 5.50 க்கு அடைமழையில் ராப்திசாகர் என்ற இரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது.  இரயில் பெட்டிகள் காந்தி தாத்தா காலத்தில் உள்ளது போல் ரொம்ப பழையதாக இருந்தது. சரி  பெட்டி ரொம்ப இருட்டாக இருந்ததால் மின்விளக்கை போடலாம் என்று பொத்தானை துழாவினேன் அங்கே பொத்தான் இருந்ததுக்கு அடையாளமாக ஒரு ஓட்டை மட்டும் இருந்தது, சரி என்று விதியை நொந்தபடி படுத்து உறங்கிவிட்டேன்.  உறக்கம் தெளிந்தபோது மணி 12.00.   கொஞ்சம்  காலைகடன்களை கழிக்கலாமே என்று  கழிவறைக்கு ள் சென்று தாளிட தாப்பாளை(கொண்டியை) தேடினேன் அதுவும் மிஸ்ஸிங்(வாழ்க பிகாரிகள்).

                       நிதிஷ் குமார் ஆட்சியில் பிகார் முன்னேறியிருப்பதாக சொன்னார்களே  முன்னேறிய பிறகும் இப்படி என்றால் இதற்க்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே தலை சுற்றியது.எல்லாம் முடிந்த பின்  toilet ஐ flush செய்ய லிவரை அழுத்தினேன் கொஞ்சம் இறுக்கமாக இருந்தது (ஒரு வேளை நான் தான் முதன்முறையாக உபயோகிக்கிறேனோ!)  இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தேன் அது அப்படியே என் கையோடு வந்தது  (என்ன கொடுமை சார் இது). தண்ணீர்  கொட்டோ கொட்டென்று கொட்டியது நானும் தொப்பென்று நனைந்துவிட்டேன்.  (Mr.BEAN மாதிரி ஆனது என் நிலமை)  மனைவிக்கு தெரியாமல் இருக்க இரயில் வாசலில் நின்று காயவைக்க வேண்டியது ஆகிவிட்டது.
               
                         ரயிலில் உணவு கொடுப்பவர்  கானா ..கானா...(சாப்பாடு என்று இந்தியில்) என்று கத்திக்கொண்டே செல்ல அருகில் இருந்த தமிழர்  காணோம் .. காணோம் என்கிறாரே தவிர எதை காணோம் என்று சொல்ல மறுக்கிறாரே என்று ஆதங்கப்படுகிறார்(ஜோக்கா ?). இது போக  பொது வகுப்பை விட கேவலமாக இருக்கிறது முன்பதிவு பெட்டி எல்லோரும் பக்கத்திலும்,தலையின் மேலுமாக ஏறிக்கொள்கிறார்கள்.
இப்படியாக நொறுங்கி நூடில்ஸ் ஆகி  ஒரு வழியாக கான்பூரை அடைகிறோம். கான்பூர் எனக்கு புதிய இடம் இல்லையென்றாலும்( 1992-2002 வரை அங்குதான் குப்பைகொட்டியிருகிறேன்) ரொம்பவே மாறி இருந்தது. மாறாதது அங்குள்ள வர்களின் நிரம்பிய வாயும்(  குட்கா,பான்மசாலா) ,ரோடிலுள்ள நிரம்பாத குண்டுகளும் தான்.
             
                                    கான்பூர் இரயில் நிலையத்தை பார்த்ததும் அப்படி ஒரு மனமகிழ்ச்சி.  ஒரு வழியாக மூன்று நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது. இரயில் நிலையத்திற்க்கு நண்பர்கள் புத்தம் புதிய காரில் (எல்லாம் மாமனாரின்  உபயம்தான்) அழைத்து சென்று  உயர்தர விடுதியில் தங்க வைத்தனர்.  குளிக்கலாம் என்று  பைப்  ஐ திறந்தால்  ஃப்ரீஸரில் வைத்த தண்ணீர் மாதிரி  பட்ட இடமெல்லாம் மறத்துவிட்டது. பிறகு தண்ணீர் விழுவது என்ற உணர்ச்சியே இல்லாமல்  மறத்தமிழன் போல் ஆகிவிட்டேன்.

                   
                                   
        மணமகன் “பராத்” ல் ஊர்வலமாக பெண் வீட்டிற்க்கு செல்லும் காட்சி                                      ஜெய்மால்” மணமக்கள் மாலை மாற்றுதல்

           உற்சாகமா(பா) ன நண்பர்களின் நடனம் தன் சொந்தங்களுடன்                                                   மணமக்கள் விஷால் -அன்சு

                                          என் மனைவி என் நண்பனின் மனைவியுடன்

ஒரு வழியாக கல்யாணத்தில் கலந்துகொண்டு  திரும்பினோம். நம்முடைய திருமணம் போல்  இல்லாமல் ”பராத்”  ”ஜெய்மால்”     போன்ற சம்பிரதாயங்களும் உண்டு.   அது போல் குடும்ப நண்பர்களுடன் கலக்கல் நடனமும் (நன்றாகவே ஆடுகிறார்கள்)  உண்டு. எல்லாம் முடிந்து வரும் போதும் இரயில் அனுபவம் கொடுமைதான் . ஆனால் உங்கள் நலன் கருதி அதை நான் எழுதப்போவதில்லை (உன் எழுதிலேயே இந்த ஒரு வரிதான் சூப்பர்  -னு நீங்க சொல்வது எனக்கு புரிகிறது).

Tuesday, December 14, 2010

சுத்தம் என்பது சுத்தமாக இல்லை: சர்தார்ஜி !!!!!!

நாம் சினிமாவிலோ அல்லது தொலைக்காட்சியிலோ வெளிநாடுகளை பார்க்கும் போது  அது ரொம்ப சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கிறது. ஆனால் அதன் பின்னால் எத்தனை பேரின் உழைப்பு இருக்கிறது என்பது நமக்கு தெரியாதது அல்ல. ஏனென்றால்  நம் வீட்டை சுத்தமாக வைக்கவேண்டும்  என்றாலே ஒரு நாளைக்கு எத்தனை தடவை துடைக்க வேண்டும்  அப்படி இருக்க ஒரு நாடே சுத்தமாக இருக்க  அனைவரின் கூட்டுமுயற்ச்சி அவசியம்.
                                    நம் நாட்டின் (அ)சுத்தம்)  நாம் அறிந்ததே. காரணமும் நாமே. வீட்டை சுத்தமாக்கி குப்பைகளை தெருவில் கொட்டுகிறோம் .   காரில் உணவருந்திவிட்டு  மிஞ்சியவற்றை ரோடில் வீசுகிறோம். இரயில் பயணங்களில் கூட  உண்டபின் எஞ்சியவற்றை  வெளியே வீசிவிடுகிறோம். (உள்ளே போட இடமுவில்லை என்பதும் உண்மைதான்).                
                                      நாம்மிடையே மாற்றம் வந்தால் தான்  சுற்றுபுறமும், சுகாதாரமும் வசப்படடும். இந்த விஷயத்தில் தென் இந்தியாவின் நிலையைவிட வட இந்தியாவின் நிலமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அங்கே 6 மாதம் குளிர் காலமாக இருப்பதால்  அவர்கள் அந்த காலத்தில் கொஞ்சம் குளிக்க யோசிப்பார்கள் மேலும் பிகார் வாசிகளிடம் சென்றால் ஒரு வித துர்நாற்றம் நம்மை விரட்டும்.
                               இப்படிதான் ஒவ்வொரு  நாட்டினரின் சகிப்புத்தன்மையை  அறிய உலக அளவில் ஒரு போட்டியை நடத்தினார்கள். ஒரு செம்மறி ஆட்டை ஒரு  அறையில் அடைத்து வைத்து  அதில் யார் அதிக நேரம் இருக்கிறார்கள்  என்று கண்டறியப்பட்டது. முதலாவதாக அமெரிக்கர் சென்றார், ஒரு மணி நேரம் கூட தாக்குப்பிடிக்கமுடியவில்லை நாற்றம் தாங்காமல் ஓடி வந்துவிட்டார். அடுத்தது ரஷ்யன்  அரைமணி நேரத்திலேயே அவனுடைய விக்கட்டும் விழுந்தது. மூன்றாவதாக  இந்தியாவின் சார்பாக சர்தார்ஜி  உள்ளே சென்றார்  அடுத்த நொடியில் செம்மறியாடு வெளியில் வந்தது நாற்றம் சகிக்காமல் !.

Sunday, November 28, 2010

நடந்தது என்ன.......? நிஜம்

பல ஆஸ்கார் விருதுகளை அள்ளியதோடு  உலகெங்கிலும் பிரமாதமான வசூலை அள்ளி குவித்த படம் ‘டைட்டானிக்’. அப்படம் உண்மையில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்தும் அதனூடே சுவைக்காக ஒரு காதல் கதையையும் சேர்த்து எடுக்கப்பட்ட படம்.

                 நிஜத்தில் நடந்தது 1912 ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து நியூயார்க் நகருக்கு டைட்டானிக் என்ற நீராவி கப்பல் புறப்பட்டது.  அன்று இரவு 11.25 மணிக்கு மிகப்பெரிய பனிக்கட்டிப்பாறை மீது மோதியது. பின்னர் மெள்ள மெள்ள மூழ்க ஆரம்பித்தது. மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு கப்பல் முழுவதுமாக மூழ்கியேவிட்டது. பயணிகளின் அபயக்குரல் கேட்டு “கார்பதியா” என்ற பயணிகள் கப்பல் ஒன்று உதவிக்கு வந்தது. ‘டைட்டானிக்கில் இருந்த 2200 பேரில் பெண்கள், குழந்தைகள் என 705 பேர்களை மட்டும் உயிருடன் காப்பாற்ற முடிந்தது.  1500 பேரை இந்த ‘டைட்டானிக்’ கப்பல் சமாதி கொண்டது, இதைவிட சிறப்பு  என்னவென்றால் இந்த சம்பவம் நடப்பதற்க்கு சரியாக முப்பது ஆண்டுகளுக்கு  முன்னர்  ஒரு புதினம் வெளியாகியிருக்கிறது ஆங்கிலதில்.  இதில் ‘டைட்டானிக்’ கப்பல் சம்பவம் அப்படியே இருக்கிறது. அதைப்படித்த பலருக்கும் ஆச்சரியம்.

Thursday, November 18, 2010

கதவுகள் இல்லா அதிசய கிராமம் (அக்கிரமம் .......?)

                மீபத்தில்  ஷிர்டி சாயிபாபா கோயிலுக்கு போயிருந்தோம்.  அப்பொழுது அதன் அருகில்  சிக்னாபூர் என்ற இடத்தில் ஒரு சனீஸ்வரர் கோயில் இருப்பதாகவும் அது ரொம்ப விசேஷம்  என்றும் சொன்னார்கள்.  கால அவகாசம் இருந்ததால் போகலாம் என்று  புறப்பட்டோம்.  நாங்கள் ஆறு பேர் இருந்ததால் (அதில் 4 பேர் பிரம்மச்சாரிகள்) ஸ்கார்பியோ காரில் போகிற வழியில் கார் ஓட்டுனர் அந்த கோயிலை பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.
                                                      


            அந்த கோயில் அமைந்துள்ள கிராமத்தில்  எங்கும் எதிலும் கதவுகளே கிடையாதாம் (கேட்பது புரிகிறது  வங்கி உட்பட) .  யாரப்பா அங்கே ?  நீ கேட்பதும் சரிதான் கக்கூஸிலும் கூட கதவுகள் இல்லையாம். காரணம் கேட்டால் அங்கே திருட்டே கிடையாதாம். அடடா நம்ம நாட்டிலே இப்படி ஒரு ஊரா  தெரியாமல் இருந்து விட்டோமே  என்று  வருத்தப்பட்டேன்.
                     னீஸ்வரர் கோயில் வந்த விதம் பற்றியும் கூறிக்கொண்டே வந்தார். அதாவது  ஒரு நாள் சிறுவர் இருவர் மாடு மேய்த்துக்கொண்டு  ஆற்றில் நீர் அருந்த வந்தபோது ஒரு பெரிய கல் தண்ணீரில் மிதந்து வந்ததாகவும், அவர்கள் கையில் இருந்த கம்பால் அதை அடித்தபோது  அதிலிருந்து இரத்தம் வந்ததாகவும் இதை சிறுவர்கள் ஊரில் போய் கூற   ஊர்காரர்கள்  அந்த கல்லை தூக்க முயன்றும்  முடியவில்லையென்றும் கூறினார்.  பின்னர்  ஒருவரின்  கனவில் வந்து ஒரு கோயில் கட்டி அந்த கல்லை பிரதிஷ்டை செய்ய சொன்னதாம். இப்பொழுது  நிறைய பக்தர்கள் வருகிறார்களாம்.(வராதா பின்னே !) பக்தர்களின்  அலைபேசியை திருடிய ஒரு பெண்ணிற்க்கு கண் பார்வை போய்விட்டதாம். (என்ன ஒரு பில்டப்பு). வரும் வழியில் (மாட்டு செக்கில் ஆட்டிய) கரும்புச்சாறு குடித்தோம்.  இனி சீரியஸ் மேட்டர்  கோயிலுக்கு போகும்போது நாம் உடுத்த  அனைத்து துணிகளையும்  வண்டியில் வைத்துவிட்டு  காவி துணி மட்டும் உடுத்து அங்கேயே குளித்து ஈரத்துணியுடன் செல்ல வேண்டும். குளித்த பிறகு யாரிடமும் பேசவோ, யாரையும் தொடவோ கூடாது. குறிப்பாக பெண்களை  தொடவே  கூடாது. (பிரம்மச்சாரிகள் அதிகம் இருந்ததால் அப்படி சொல்லியிருக்க கூடும்.) அந்த சாமியை கிண்டல் செய்தவர்களின் வண்டி விபத்தில் கவிழ்ந்து விட்டதாக சொல்லி ஒரு வண்டியையும் காட்டி தந்தார்.  எல்லாம் சொல்லிமுடிக்கவும் வண்டி போய் சேரவும் சரியாக இருந்தது.   வண்டியை பார்க் செய்தவுடன் ஒரு கடைக்காரர்  அனைவருக்கும்  இலவசமாக காவி துண்டு வழங்கினார்.
                   ன்ன இருந்தாலும் பூஜை சாமான்கள் வாங்க வேண்டும் அதை என்னிடம் வாங்கினால் போதும் என்றார். (எங்களுக்கு அவருடைய  நேர்மை மிகவும் பிடித்திருந்தது இதே நேரம் நம் ஊராக இருந்தால் இதற்க்கும் பணம் வாங்கி இருப்பார்கள் என நினைத்துக்கொண்டோம்.) . ஒரு பக்கம் பயம் ஏனென்றால்  புது வண்டி ஆகையால் நாங்கள் வந்த வண்டியில் நம்பர் கூட கிடையாது. மறுபக்கம் கையில் உள்ள காசு, அலைபேசி எல்லாவற்றையும் வண்டியில் வைத்து செல்லவேண்டும். சாமி கும்பிட்டுவிட்டு வரும்போது வண்டி இல்லை என்றால் எங்கள் பாடு அதோகதிதான்.
                        ருவிதமாக எல்லோரும்  உடைகளை களைந்து காவி உடுத்தி, குளித்து  பூஜை சமான் வாங்க சென்றோம்(அவர்கள்  சொன்னபடி நாங்கள் யாரும்  பேசவோ,தொடவோ இல்லை)  எல்லோருக்கும்  பூஜை தட்டு தந்தார். அதில் ஒரு பத்தி,ஒரு குதிரை லாடம்,ஒரு குரளி வித்தை காட்டும் பொம்மை போல ஒரு பொம்மை,ஒரு வெள்ளி காசு ஒரு சிறிய கருப்பு துணி ஆகியவை அடங்கும். எனக்கு எதோ பொறி தட்ட விலையை கேட்டேன் (சைகையில்தான்).  அவன் சொன்ன விலைதான்  அவன் சொன்ன எல்லா கண்டிஷன்களையும் உடைத்தெறிந்தது. ஆம் அவன் கேட்டது மூவாயிரம் ரூபாய்.(டேய் இப்படி ஏமாற்றுகிற  உங்க ஊர்ல கதவு இருந்தா என்ன இல்லாட்டி என்ன ?)
              ங்களை தலைமை ஏற்று அழைத்து வந்த பிரம்மச்சாரி  அவனிடம்  எங்களுக்கு உன்னிடம் இருந்து ஒன்றும் வேண்டாம் காவி துணியின் வாடகையை பெற்றுக்கொள் என்றார், அவன் மறுக்கவே எல்லாரும் அவனுடைய துணியை அவிழ்த்து கொடுத்தோம்.(அவன் முகத்தில் ஈயாடவில்லை) அதற்க்கு அவன் சனீஸ்வரர் உங்களை தண்டிக்க போகிறார் என்றான். நாங்கள் எங்கள் வாழ்க்கையையே கடவுளுக்காக கொடுத்தவர்கள்  எஙகளுக்கு எந்த பயமும் இல்லை என்றார் பிரம்மச்சாரி. காவி துணிக்கான  பணத்தை அவன் கண் முன்னே இரு சிறுவர்களுக்கு கொடுத்தோம்.அந்த சிறுவர்களின் முகமலர்ச்சி எங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. பின்னர் எங்களது உடையிலே  கோயிலுக்கு சென்றோம். தொழுதுவிட்டு வந்தோம்.அங்கே காவி உடுத்த நிறைய பக்தர்களை (ஏமாளிகளை) காண முடிந்தது.
                  னி செல்ல விரும்புவர்கள் வீட்டிலிருந்தே  காவி துண்டு ம்,கொஞ்சம் நல்லெண்ணெய் கொண்டுபோனால்  நீங்களே உங்கள் கையால் அபிஷேகம் செய்யலாம். ஏமாறாமல் சிங்கம் போல திரும்ப வரலாம். அங்கேயே எண்ணெய் வாங்கினால் பாமாயில் அபிஷேகம் செய்த பாவம் இலவசமாக கிடைக்கும்.