Skip to main content

அலை பேசி கொலை பேசி ஆக வேண்டாமே.......

                இந்த நவீன தொழில் நுட்பத்தில் தொலைபேசி தொல்லை பேசி ஆகிப்போனது நாம் அறிந்ததே. தொலைபேசி வீட்டில் இருந்தவரை பிரச்சனைகள் வெகு குறைவாகவே இருந்தது. அதில் நடக்கும் உரையாடல்களும் குடும்ப உறுப்பினர்களின் மத்தியிலே நடப்பதால் அதில் ஒரு வெளிப்படைத்தன்மையும் ஒருவித பாதுகாப்பும் இருந்தது. அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி தனிமனித ஒழுக்கத்திற்கு அது எந்த விதத்திலும் கேடு விளைவிக்கவில்லை.


                      ஆனால் புதிய வரவான அலைபேசியில் எண்ணிலடங்கா வசதிகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலும் அவை தவறாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது கேமிரா ஆனாலும் சரி. வாய்ஸ் ரெகார்டிங்க் ஆனாலும் சரி, வாயில் மாடுலேசன்( pitch shift) ஆனாலும் சரி
.
`                அது போல சாலையில் ந(க)டக்கும் போதும் அலைபேசியில் பேசிக்கொண்டே எதையும் சட்டை செய்யாமல் சென்று ஒழுங்காக வருபவனையும் தடுமாற செய்து விபத்திற்க்குள்ளாக்குவது , வாகனகள் ஓட்டும் போது பேசிக்கொண்டே ஒரு பக்கத்தில் ஸ்ட்ரோக் வந்தவனைப்போல் தலையை சரித்து வண்டி ஓட்டுவதும் கடைசியில் வண்டியையும் பேலன்ஸ் பண்ண முடியாமல் போனையும் காப்பாற்ற முடியாமல் சிலசமயம் தன்னையே காப்பாற்ற முடியாமல் தன் குடும்பத்தையே நிர்கதியாக்கிவிட்டுபோய் சேருவது மிகக்கொடுமையானது.


                 சமீபத்தில் ஒரு சிறந்த மகப்பேறு மருத்துவர் புகைவண்டி பாதையை கடக்க முயன்றபோது மற்றவர்கள் எவ்வளவு சத்தம்போட்டும் அதை கேட்காமல் பேச்சு கவனத்திலேயே சென்றதால் தொடர் வண்டியில் அடிப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டார். கடைசியில் அவர் உயிரை எடுக்க காரணமாக இருந்த அலை பேசிதான் அவரை அடையாளம் காட்டியது.


               ஆனால் சில கொலையாளிகளையும், குற்றவாளிகளையும் கண்டுபிடிக்க அலைபேசி உதவிவருவது ஒரு எதிர்பாராத நன்மை ஆகும். மற்றபடி நன்மைக்காக கொடுக்கப்பட்ட அனைத்து வசதிகளும் அதிகமாக தவறாகவே பயன்படுத்தப்படுகிறது.


                  மாணவிகளின் கையில் அலைபேசி ஊகிக்க முடியாத பிரச்சனைகளை உண்டாக்கிவிட்டு அவர்கள் எதிர்காலத்தையே சூனியமாக்கிவிடுவதையும் காணமுடிகிறது. பெற்றோர் எதற்க்காக அதை அனுமதித்தார்களோ அதைத்தவிர்த்து அனைத்தும் நடைபெறுவதை தடுக்கமுடியாத நிலையிலேயே பெற்றோர்கள் உள்ளனர்.


                 மாணவர்கள் அதிகமாக கடலை போடுவதற்க்கும், தன் காதலிகளுக்கு ரீசார்ஜ் செய்வதற்க்குமே சமயம் போதாமல் போய்விடுகிறது. இப்படிதான் ஒரு காதலனுக்கு ஒரு ஆசை (வேண்டாத ஆசை தான் ) தன் காதலி தன் பெயரை எப்படி அவள் அலை பேசியில் வைத்திருப்பாள் என பார்க்க விரும்பினான். ஒரு நாள் அவள் இல்லாத போது அவளது அலைபேசியில் பார்த்த போது அவன் தலையில் இடி விழுந்தது. அவள் கொடுத்திருந்த பெயர் ”ரீ சார்ஜ் அண்ணா”. இப்படியெல்லாம் அனுபவப்பட்ட ஆண்கள் தான் கடையில் மிகவும் தெளிவடைந்து விடுகிறார்கள்
                  
                   ஒரு மனைவி தன் கணவனிடம் உங்களுக்கு ஏற்கனவே” ராணி” என்று ஒரு மனைவி இருப்பதை ஏன் என்னிடம் மறைத்தீர்கள் என்று கேட்கிறாள். அதற்க்கு அவனோ நான் நம் திருமணத்திற்க்கு முன்பே சொல்லியிருக்கிறேன் அல்லவா உன்னை நான் ”ராணி மாதிரி” வைத்து காப்பாற்றுவேன் என்று.





Comments

அலைபேசியின் தேவையை இப்படிப்பட்ட தவறான நடவைடிக்கைகள்,விழுங்கி விடுகின்றன.
நல்ல பகிர்வு.
தற்போதைய நிலவரங்களை மிக அழகாக விவரித்துள்ளீர்கள்!!!பயனுள்ள பகிர்வு!!
ஆமினா said…
//. மற்றபடி நன்மைக்காக கொடுக்கப்பட்ட அனைத்து வசதிகளும் அதிகமாக தவறாகவே பயன்படுத்தப்படுகிறது.//

உண்மையான கூற்று.

நன்மைக்காக கொடுத்த பலவற்றை தீமையில் தான் செலவழிக்கிறோம்.
வேலை நேரங்களில் மிகுந்த "கழுதருப்பாக " இருந்ததால் கடந்த நான்கு நாட்களாக என் சுவிட்ச் ஆப் செய்துதான் வைத்துள்ளேன். வேலை நிமித்தமாக பேச லேன்ட் லைன் இருக்கிறது. அது இல்லை என்றாலும் எனக்கு குறை ஒன்றுமில்லை. நிம்மதியாக ஒரு மனதுடன் கவனமாக இருக்க முடிகிறது. ஒன்றும் குடி முழுகி போய்விடவில்லை. மாறாக நிம்மதியாக இருக்கிறது.

இந்த மொபைல் வருவதற்கு முன்னாடி எல்லாம் ஒன்றுமே நடக்காமல் உலகம் ஸ்தம்பித்தா நின்றது?
இதெல்லாம் "நுகர்வர் கலாச்சாரத்தில் " கம்பெனிகள் பண்ணும் மாய் மாலம் அன்றி வேறு ஒன்றும் இல்லை.

மொபைலை ஸ்டேடஸ் சிம்பலாக கருதும் பன்னாடைகள் அதனாலேயே செத்துத்தான் போவார்கள். இதில் வருத்தப்பட ஒன்றும் இல்லை விஜி.
Unknown said…
@ சென்னை பித்தன்: உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. நாம் சந்தித்து வெகுகாலம் ஆகிவிட்டது.இனி தொடர்ந்து சந்திக்கலாம்.
Unknown said…
@ செல்விகாளிமுத்து :தாங்களுடைய மேலான கருத்துக்கு நன்றி தோழி.
Unknown said…
@ஆமினா :தங்களுடைய ஆதரவுக்கு நன்றி அமீனா.
Unknown said…
@கக்கு - மாணிக்கம்:
இந்த மொபைல் வருவதற்கு முன்னாடி எல்லாம் ஒன்றுமே நடக்காமல் உலகம் ஸ்தம்பித்தா நின்றது? // நியாயமான கேள்வி கக்கு சார்.எல்லாம் காலத்தின் (அலங்)கோலம் தான்.தாங்களுடைய அருமையான கருத்துக்கு நன்றி.

Popular posts from this blog

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை     ...

நெல்லையில் மினி பதிவர் சந்திப்பு - ஆபீஸர் அதிரடி.

 இடமிருந்து வலம் ரூபினா மேடம்(நாய்குட்டி மனசு),கெளசல்யா மேடம்(மனதோடு மட்டும்),சகாதேவன் ஐயா(வெடிவால்),ஞானேந்திரன்(யானைக்குட்டி),டைரக்டர்.செல்வகுமார்(selva speaking),சீனா ஐயா(வலைச்சரம்),சங்கரலிங்கம் ஐயா(உணவு உலகம்) நேற்று நெல்லையில் ஒரு அதிரடி பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக ஆபீஸர் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் அழைப்பு விடுத்தார். அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு.செல்வகுமார் அவர்கள்  பங்கேற்க்க இருப்பதாகவும் சொன்னார்கள். ஏற்கனவே பிரமாண்டமாக நடந்த முதல் பதிவர் சந்திப்பில்   நான் பங்கேற்க்க முடியாத வருத்தம் இன்னும் இழையோடிக்க்கொண்டிருப்பதாலும் இன்னும் மிக முக்கியமான நட்சத்திர பதிவர்கள் வருகிறார்கள் என்று சொன்னதாலும் உடனடியாக செல்ல முடிவெடுத்தேன். அதன் படி நெல்லை போய் சேர்ந்தேன். மிகவும் சரியான நேரத்திற்க்கு வந்துசேர்ந்தது சீனா ஐயா தான்( அதிக தொலைவில் இருந்து வந்தவரும் அவர்தான்)                பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர இனிதாக களைகட்ட ஆரம்பித்தது பதிவர் சந்திப்பு .  திவானந்தா சுவாமிகள் தன்னுடைய குளுகுளு அ...

நரேந்திரமோடி : முன்மாதிரியான முதல்வர்

              1950 ஆம் ஆண்டு  செப்டம்பர்  17 -ல்  குஜராத்திலுள்ள வட்நகர்(vadnagar) என்ற சாதாரண கிராமத்தில் பிறந்தவர். சோசியல் சயின்ஸ்- ல் முதுகலை பட்டம் பெற்றவர்.  இவருடைய  அலுவலகம் ISO 9001:2008 CERTIFIED ஆகும்.                                    முதன் முதலாக அக்டோபர் 2001-ல் குஜராத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த காலகட்டத்தில் தான் குஜராத்தில் புஜ் என்ற இடத்தில் மாபெரும்  பூகம்பம் ஏற்பட்டு குஜராத் மாபெரும் உயிர் மற்றும் பொருள் இழப்பைக் கண்டது.  அதிலிருந்து  குஜராத்தை மீட்டெடுத்து இந்தியாவிலேயே  ஆச்சரியப்படும் வகையில் முன்னணி மாநிலமாக ஆக்கிய பெருமை  மோடியையே சாரும்.  மதுக்கடை வருமானம் அங்கு கிடையாது. ஓட்டு வங்கிமற்றும் இலவச (அரிசி) அரசியல் அவர் செய்வது கிடையாது. அவருடைய ஒரே முழக்கம்...