Skip to main content

அலை பேசி கொலை பேசி ஆக வேண்டாமே.......

                இந்த நவீன தொழில் நுட்பத்தில் தொலைபேசி தொல்லை பேசி ஆகிப்போனது நாம் அறிந்ததே. தொலைபேசி வீட்டில் இருந்தவரை பிரச்சனைகள் வெகு குறைவாகவே இருந்தது. அதில் நடக்கும் உரையாடல்களும் குடும்ப உறுப்பினர்களின் மத்தியிலே நடப்பதால் அதில் ஒரு வெளிப்படைத்தன்மையும் ஒருவித பாதுகாப்பும் இருந்தது. அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி தனிமனித ஒழுக்கத்திற்கு அது எந்த விதத்திலும் கேடு விளைவிக்கவில்லை.


                      ஆனால் புதிய வரவான அலைபேசியில் எண்ணிலடங்கா வசதிகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலும் அவை தவறாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது கேமிரா ஆனாலும் சரி. வாய்ஸ் ரெகார்டிங்க் ஆனாலும் சரி, வாயில் மாடுலேசன்( pitch shift) ஆனாலும் சரி
.
`                அது போல சாலையில் ந(க)டக்கும் போதும் அலைபேசியில் பேசிக்கொண்டே எதையும் சட்டை செய்யாமல் சென்று ஒழுங்காக வருபவனையும் தடுமாற செய்து விபத்திற்க்குள்ளாக்குவது , வாகனகள் ஓட்டும் போது பேசிக்கொண்டே ஒரு பக்கத்தில் ஸ்ட்ரோக் வந்தவனைப்போல் தலையை சரித்து வண்டி ஓட்டுவதும் கடைசியில் வண்டியையும் பேலன்ஸ் பண்ண முடியாமல் போனையும் காப்பாற்ற முடியாமல் சிலசமயம் தன்னையே காப்பாற்ற முடியாமல் தன் குடும்பத்தையே நிர்கதியாக்கிவிட்டுபோய் சேருவது மிகக்கொடுமையானது.


                 சமீபத்தில் ஒரு சிறந்த மகப்பேறு மருத்துவர் புகைவண்டி பாதையை கடக்க முயன்றபோது மற்றவர்கள் எவ்வளவு சத்தம்போட்டும் அதை கேட்காமல் பேச்சு கவனத்திலேயே சென்றதால் தொடர் வண்டியில் அடிப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டார். கடைசியில் அவர் உயிரை எடுக்க காரணமாக இருந்த அலை பேசிதான் அவரை அடையாளம் காட்டியது.


               ஆனால் சில கொலையாளிகளையும், குற்றவாளிகளையும் கண்டுபிடிக்க அலைபேசி உதவிவருவது ஒரு எதிர்பாராத நன்மை ஆகும். மற்றபடி நன்மைக்காக கொடுக்கப்பட்ட அனைத்து வசதிகளும் அதிகமாக தவறாகவே பயன்படுத்தப்படுகிறது.


                  மாணவிகளின் கையில் அலைபேசி ஊகிக்க முடியாத பிரச்சனைகளை உண்டாக்கிவிட்டு அவர்கள் எதிர்காலத்தையே சூனியமாக்கிவிடுவதையும் காணமுடிகிறது. பெற்றோர் எதற்க்காக அதை அனுமதித்தார்களோ அதைத்தவிர்த்து அனைத்தும் நடைபெறுவதை தடுக்கமுடியாத நிலையிலேயே பெற்றோர்கள் உள்ளனர்.


                 மாணவர்கள் அதிகமாக கடலை போடுவதற்க்கும், தன் காதலிகளுக்கு ரீசார்ஜ் செய்வதற்க்குமே சமயம் போதாமல் போய்விடுகிறது. இப்படிதான் ஒரு காதலனுக்கு ஒரு ஆசை (வேண்டாத ஆசை தான் ) தன் காதலி தன் பெயரை எப்படி அவள் அலை பேசியில் வைத்திருப்பாள் என பார்க்க விரும்பினான். ஒரு நாள் அவள் இல்லாத போது அவளது அலைபேசியில் பார்த்த போது அவன் தலையில் இடி விழுந்தது. அவள் கொடுத்திருந்த பெயர் ”ரீ சார்ஜ் அண்ணா”. இப்படியெல்லாம் அனுபவப்பட்ட ஆண்கள் தான் கடையில் மிகவும் தெளிவடைந்து விடுகிறார்கள்
                  
                   ஒரு மனைவி தன் கணவனிடம் உங்களுக்கு ஏற்கனவே” ராணி” என்று ஒரு மனைவி இருப்பதை ஏன் என்னிடம் மறைத்தீர்கள் என்று கேட்கிறாள். அதற்க்கு அவனோ நான் நம் திருமணத்திற்க்கு முன்பே சொல்லியிருக்கிறேன் அல்லவா உன்னை நான் ”ராணி மாதிரி” வைத்து காப்பாற்றுவேன் என்று.





Comments

அலைபேசியின் தேவையை இப்படிப்பட்ட தவறான நடவைடிக்கைகள்,விழுங்கி விடுகின்றன.
நல்ல பகிர்வு.
தற்போதைய நிலவரங்களை மிக அழகாக விவரித்துள்ளீர்கள்!!!பயனுள்ள பகிர்வு!!
ஆமினா said…
//. மற்றபடி நன்மைக்காக கொடுக்கப்பட்ட அனைத்து வசதிகளும் அதிகமாக தவறாகவே பயன்படுத்தப்படுகிறது.//

உண்மையான கூற்று.

நன்மைக்காக கொடுத்த பலவற்றை தீமையில் தான் செலவழிக்கிறோம்.
வேலை நேரங்களில் மிகுந்த "கழுதருப்பாக " இருந்ததால் கடந்த நான்கு நாட்களாக என் சுவிட்ச் ஆப் செய்துதான் வைத்துள்ளேன். வேலை நிமித்தமாக பேச லேன்ட் லைன் இருக்கிறது. அது இல்லை என்றாலும் எனக்கு குறை ஒன்றுமில்லை. நிம்மதியாக ஒரு மனதுடன் கவனமாக இருக்க முடிகிறது. ஒன்றும் குடி முழுகி போய்விடவில்லை. மாறாக நிம்மதியாக இருக்கிறது.

இந்த மொபைல் வருவதற்கு முன்னாடி எல்லாம் ஒன்றுமே நடக்காமல் உலகம் ஸ்தம்பித்தா நின்றது?
இதெல்லாம் "நுகர்வர் கலாச்சாரத்தில் " கம்பெனிகள் பண்ணும் மாய் மாலம் அன்றி வேறு ஒன்றும் இல்லை.

மொபைலை ஸ்டேடஸ் சிம்பலாக கருதும் பன்னாடைகள் அதனாலேயே செத்துத்தான் போவார்கள். இதில் வருத்தப்பட ஒன்றும் இல்லை விஜி.
Unknown said…
@ சென்னை பித்தன்: உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. நாம் சந்தித்து வெகுகாலம் ஆகிவிட்டது.இனி தொடர்ந்து சந்திக்கலாம்.
Unknown said…
@ செல்விகாளிமுத்து :தாங்களுடைய மேலான கருத்துக்கு நன்றி தோழி.
Unknown said…
@ஆமினா :தங்களுடைய ஆதரவுக்கு நன்றி அமீனா.
Unknown said…
@கக்கு - மாணிக்கம்:
இந்த மொபைல் வருவதற்கு முன்னாடி எல்லாம் ஒன்றுமே நடக்காமல் உலகம் ஸ்தம்பித்தா நின்றது? // நியாயமான கேள்வி கக்கு சார்.எல்லாம் காலத்தின் (அலங்)கோலம் தான்.தாங்களுடைய அருமையான கருத்துக்கு நன்றி.

Popular posts from this blog

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.                     தன்னுடையவா

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

என் வடஇந்திய நண்பனுக்கு கல்யாணம்

       போ ன வாரம்  என் நண்பனின் திருமணம் கான்பூரில்(உத்திர பிரதேசம்) நடைப்பெற்றது.  நண்பனின்   அதீத அன்பின் காரணமாக அழைப்பை ஏற்று நானும் என் மனைவியும் புறப்பட்டோம்.                     அ திகாலை 5.50 க்கு அடைமழையில் ராப்திசாகர் என்ற இரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது.  இரயில் பெட்டிகள் காந்தி தாத்தா காலத்தில் உள்ளது போல் ரொம்ப பழையதாக இருந்தது. சரி  பெட்டி ரொம்ப இருட்டாக இருந்ததால் மின்விளக்கை போடலாம் என்று பொத்தானை துழாவினேன் அங்கே பொத்தான் இருந்ததுக்கு அடையாளமாக ஒரு ஓட்டை மட்டும் இருந்தது, சரி என்று விதியை நொந்தபடி படுத்து உறங்கிவிட்டேன்.  உறக்கம் தெளிந்தபோது மணி 12.00.   கொஞ்சம்  காலைகடன்களை கழிக்கலாமே என்று  கழிவறைக்கு ள் சென்று தாளிட தாப்பாளை(கொண்டியை) தேடினேன் அதுவும் மிஸ்ஸிங்(வாழ்க பிகாரிகள்).                        நி திஷ் குமார் ஆட்சியில் பிகார் முன்னேறியிருப்பதாக சொன்னார்களே  முன்னேறிய பிறகும் இப்படி என்றால் இதற்க்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே தலை சுற்றியது.எல்லாம் முடிந்த பின்  toilet ஐ flush செய்ய லிவரை அழுத்தினேன் கொஞ்சம் இறுக்கமாக இருந