Skip to main content

499 ????????????பாபநாசத்தில் நடந்த பதிவர் குளியல்

“ஆற்று நீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்று நீர் இரண்டும் போக்கும்”


ஆறு மலையிலிருந்து வருவதால் பல மூலிகைகள் அதில் கலந்திருக்கும். அதில் குளித்தால், வாதம் உள்ளிட்ட நோய்கள் நீங்கும். அது போன்றே அருவி நீரில் பல கனி(ம)ச் சத்துக்கள் மிகுந்து காணப்படுவதால் இதனைக் கனிமச்சத்து நீர் என்றும் கூறலாம். பருகினால் அல்லது இதில் குளித்தால் பித்தநோய், கல்லீரல் தொடர்புடைய நோய்கள், கீழ் வாதம் உள்ளிட்ட பல நோய்கள் போகும். சோற்று நீர் என்பது நீராகாரம். இது அருந்திவர வாதம், பித்தம் இரண்டும் நீங்கும்.


  இதையெல்லாம் தெரிந்து தான் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் ஒரு அருமையான பதிவர் சந்திப்பை (குளியலை) பாபநாசம் அருவியில் ஏற்பாடு செய்திருந்தார். நான், நாஞ்சில் மனோ, சங்கரலிங்கம் ஐயா,திவான் ஜி,நண்பர் சுதன் மற்றும் நண்பர் ராஜேஷ் எல்லோரும் சேர்ந்து பாபநாசம் சென்று எங்களுடைய பாவங்களை கழுவிக்கொண்டோம். அருமையான இரவு கொண்டாட்டம். சிரித்து ... சிரித்து மாய்ந்து போன தருணங்கள் எதையும் அவ்வளவு எளிதாக மறக்கமுடியாது. 


                          இதுவரை பொருட்செலவை பொருட்படுத்தாது நெல்லையில் பதிவர் சந்திப்பை வெற்றிகரமாக நடத்திவரும் திரு. சங்கரலிங்கம் ஐயாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.அதுவும் இவ்வளவு வேலை நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த ஒரு விளம்பர நோக்கமின்றி மிகவும் அருமையாக அவர் செய்யும் பணிகள் ஆச்சரியமூட்டுகிறது. எந்த ஒரு முகச்சுளிப்பின்றி அவர் செய்யும் பணியை மனதார வாழ்த்துகிறேன். இதை விலாவாரியாக நம் மனோ அவர்கள் எழுத இருப்பதால் இதை நான் இத்தோடு முடிக்கிறேன்.

Comments

வீழ்ச்சியில் கொட்டும் நீரின் மகிமைப்பற்றி அழகாக சொல்லியிருக்கிங்க விஜி!!கூடிய சீக்கிரம் ,நாங்களும் கலந்துகொள்ளும்படி,ஒரு நிகழ்ச்சியை, ஆபிசரிடம் பரிந்துரை செய்யுங்க!
Unknown said…
அடுத்த மாதம் ஆபீசர் அவர்களின் மகளுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. நெல்லையில் இதுவரை நடந்த பதிவர் சந்திப்பில் அதுதான் பெரியதாக இருக்கும். கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.
Unknown said…
அது ஒரு பெரிய கதை. சட்டியில இருந்தா தானே அகப்பையில் வரும்??????????? இல்லையா????????
Unknown said…
நாஞ்சில் மனோ ஒரு மெகா பதிவாக போடுவார். அதில் நீங்க இந்த கேள்வியின் விடையை எதிர் பார்க்கலாம் அல்லது கேட்கலாம்.
Anonymous said…
மனோவின் குளியல் காட்சிகளைக்காண பேராவலுடன் காத்திருக்கிறோம். குளிக்கும்போதாவது அந்த 'மிஷ்கின்' கண்ணாடியை கழற்றினாரா??
Anonymous said…
மனோ எழுதப்போகும் பதிவு. நினைத்தாலே திகிலடிக்கிறது. 'அகஸ்தியா அருவியில் குளிக்கும் எண்ணம் உருவான விதம்' பத்தியே அண்ணன் 175 பதிவு போடுவாரே. அதுக்கப்பறம் பஸ்ஸில் சென்றது, பஸ் நின்ற இடங்களில் டீக்கடை மாஸ்டரிடம் பேட்டி எடுத்தது, அந்த பேட்டி எடுத்த காரணம் உருவான விதம்...!! ஸ்ஸ்... எந்த குருவயூரப்பா. ஏன் இந்த வல்லிய சோதனா. யான் எந்த தப்பு செஞ்சு.....
Unknown said…
நாஞ்சில் மனோ கண்ணாடி உட்பட ”எதுவும்” போடவில்லை.... ஏன் சோப்பு கூட போடவில்லை. ஆனால் படங்கள் துரதிஷ்டவசமாக என்னிடம் இருந்தது அழிந்துவிட்டது. இனி அவர் போட்டால் தான் உண்டு. ஆனால் உங்கள் ஆசையை தீர்க்கும் படங்கள் அதில் உண்டு. எதையும் தாங்கும் இதயம் கொண்டோர் மட்டும் பாரீர். இளகிய மனம் கொண்டோர் மருத்துவர் உதவியுடன் பார்க்கவும்.
Unknown said…
இந்த கண்ணாடிக்காரன் தொல்ல தாங்க முடியலப்பா...அந்த 499 என்ன பிடிவாரண்ட்டா மாப்ள!

Popular posts from this blog

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை     ...

நெல்லையில் மினி பதிவர் சந்திப்பு - ஆபீஸர் அதிரடி.

 இடமிருந்து வலம் ரூபினா மேடம்(நாய்குட்டி மனசு),கெளசல்யா மேடம்(மனதோடு மட்டும்),சகாதேவன் ஐயா(வெடிவால்),ஞானேந்திரன்(யானைக்குட்டி),டைரக்டர்.செல்வகுமார்(selva speaking),சீனா ஐயா(வலைச்சரம்),சங்கரலிங்கம் ஐயா(உணவு உலகம்) நேற்று நெல்லையில் ஒரு அதிரடி பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக ஆபீஸர் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் அழைப்பு விடுத்தார். அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு.செல்வகுமார் அவர்கள்  பங்கேற்க்க இருப்பதாகவும் சொன்னார்கள். ஏற்கனவே பிரமாண்டமாக நடந்த முதல் பதிவர் சந்திப்பில்   நான் பங்கேற்க்க முடியாத வருத்தம் இன்னும் இழையோடிக்க்கொண்டிருப்பதாலும் இன்னும் மிக முக்கியமான நட்சத்திர பதிவர்கள் வருகிறார்கள் என்று சொன்னதாலும் உடனடியாக செல்ல முடிவெடுத்தேன். அதன் படி நெல்லை போய் சேர்ந்தேன். மிகவும் சரியான நேரத்திற்க்கு வந்துசேர்ந்தது சீனா ஐயா தான்( அதிக தொலைவில் இருந்து வந்தவரும் அவர்தான்)                பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர இனிதாக களைகட்ட ஆரம்பித்தது பதிவர் சந்திப்பு .  திவானந்தா சுவாமிகள் தன்னுடைய குளுகுளு அ...

நரேந்திரமோடி : முன்மாதிரியான முதல்வர்

              1950 ஆம் ஆண்டு  செப்டம்பர்  17 -ல்  குஜராத்திலுள்ள வட்நகர்(vadnagar) என்ற சாதாரண கிராமத்தில் பிறந்தவர். சோசியல் சயின்ஸ்- ல் முதுகலை பட்டம் பெற்றவர்.  இவருடைய  அலுவலகம் ISO 9001:2008 CERTIFIED ஆகும்.                                    முதன் முதலாக அக்டோபர் 2001-ல் குஜராத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த காலகட்டத்தில் தான் குஜராத்தில் புஜ் என்ற இடத்தில் மாபெரும்  பூகம்பம் ஏற்பட்டு குஜராத் மாபெரும் உயிர் மற்றும் பொருள் இழப்பைக் கண்டது.  அதிலிருந்து  குஜராத்தை மீட்டெடுத்து இந்தியாவிலேயே  ஆச்சரியப்படும் வகையில் முன்னணி மாநிலமாக ஆக்கிய பெருமை  மோடியையே சாரும்.  மதுக்கடை வருமானம் அங்கு கிடையாது. ஓட்டு வங்கிமற்றும் இலவச (அரிசி) அரசியல் அவர் செய்வது கிடையாது. அவருடைய ஒரே முழக்கம்...