பின் தொடரரும் நண்பர்கள்

Monday, June 4, 2012

உலகிலேயே கேரளாவில் தான் ஆட்டோ சார்ஜ் மலிவு- என் அனுபவம்.

சமீபத்தில் ஒரு திருமண வைபவத்தில் கலந்துகொள்ள கேரளாவில் திரிச்சூர் இரயில் நிலையத்தில் இறங்கி வடக்கு பஸ்நிலையம் செல்வதற்க்காக prepaid ஆட்டோவுக்காக டோக்கன் எடுத்தேன். அவரும் 28 ரூபாய் என்று ரசீது கொடுத்தார். இவ்வளவு குறைவாக இருக்கும் என்று நானும் எதிர்பார்க்கவில்லை.

                       அது அதிகாலை 5.30 மணியாகையால் பொழுது விடிந்தும் விடியாதுமாய் இருந்தது இரயில் நிலைய வாயிலில் ஒரே கூட்டம் வரிசையாக நின்று கொண்டிருந்தது எதற்க்காக என்று கடைசிவரை எனக்கும் புரியவேயில்லை. ஆட்டோ மெதுவாக வாயிலை கடந்தது. வாயிலில் உள்ள ஆலமரத்தில் பறவைகள் சப்தம் காதை துளைத்தது....... அப்பொழ்துதான் சிறிது மழை பெய்து வெறித்திருந்ததால் பறவை எச்சத்தின் நாற்றம் குடலை புரட்டியது.

            இப்படியாக சாலையோர காட்சிகளை ரசித்தவாரே ஆட்டோவில் பயணித்தேன். ஆங்காங்கே ஒன்றிரண்டு மனிதர்கள் டீ கடையில் சாயா குடித்துக்கொண்டிருந்தனர். வடக்கு பஸ் நிலையமும் வந்தது. நான் இறங்கி 28 ரூபாய்க்கான ரசீதையும் 50 ரூபாவும் கொடுத்தேன். அவர் மீதி 72 ரூபாய் கொடுத்தார். உலகிலேயே இங்குதான் ஆட்டோ சார்ஜ் இவ்வளவு மலிவு என்று நினைத்தவாரே ஐம்பது ரூபாயை அவரது கையில் திணித்தேன். அவர் என் முகத்தை பார்த்தார்... நான் கொடுத்ததே 50 ரூபாய்தான் என்றேன். வளர நன்நி சாரே என்றவாரே சிட்டாய் பறந்தார்.

4 கருத்துரைகள்:

தமிழானவன் said...

சில நேரங்களில் கேரளாவைப் பார்த்து பொறாமை கொள்ளாமல் இருக்க முடியாது

சிட்டுக்குருவி said...

நீங்க அநியாயத்துக்கு நல்லவரா இருக்கீங்களே...சீக்கிரமா உருப்பட்டுருவீங்க..:)

செல்விகாளிமுத்து said...

சேட்டன் ஒருவாடு 'kind hearted'எனிக்கு அறியுமே!என்ன விஜி,நிறைய படங்கள் எதிர்பார்த்தேன்(கேரளா)!சின்ன விசயம் ஆனால் மேசஜ் இருக்கே!

middleclassmadhavi said...

சரி தான்! திருச்சூரில் ஒரு ஆட்டோக்காரர், அன்றைய தினம் மெயின் பீச் லீவு என்று தெரிந்து நாங்கள் வருத்தப்பட்டதும், இன்னொரு அழகான, கூட்டமில்லாத கடற்கரைக்கு அழைத்துச் சென்று காட்டியது மறக்கவே முடியாது!