நான் பள்ளியில் படிக்கும் காலங்களிலும் சரி, இப்பவும் சரி பள்ளி ஆசிரியர் ஒவ்வொரு மாணவரிடமும் நீபடித்து யாராக ஆக விரும்புறன்னு கேட்பாங்க. அப்போ எல்லோரும் வழக்கம் போல டாக்டர் அல்லது இன்ஜினியர் - ன்னு சொல்வாங்க. யாரும் சயிண்டிஸ்ட் ஆவேன்னு சொல்லி நான் கேட்டதில்லை. ஏன்னா அது அப்பவும் இப்பவும் பாப்புலர் இல்லை.
ஒரு புதிய விஷயத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானியாலதான் முடியும்,அது மனித குலத்திற்க்கு ரொம்ப தேவையும் கூட. மருத்துவரோ அல்லது பொறியாளரோ ஆகவேண்டும் என்றால் அந்த துறையில் படித்து( அல்லது வாங்கியோ) பட்டம் பெற்றால் போதும். ஆனால் விஞ்ஞானி ஆக படிப்பு மட்டுமல்லாமல் அந்த துறையில் முழுமையான ஈடுபாடு ம் அர்பணிப்பு தன்மையும் தேவை.
அப்படி வந்தவரில் எடிசனும் ஒருவர். அவர் தன் ஆராய்ச்சியின் மூலம் ஒரு விஷயத்தை தெரிந்து கொண்டார். ஸெட்லிஜ் என்னும் உப்பை இரசாயன முறைப்படி கரைத்து அதன் மூலம் எழும்பும் ஆவியை மெல்லிய ஒரு பொருளில் கசியாமல் அடைத்தால் அந்தப் பொருள் வானத்தை நோக்கி மேலெழும்பிச் செல்லும் என்பது தான் அது.
இந்த சோதனையை ஒரு மனிதன் விஷயத்தில் பயன்படுத்தினால் ஒருவேளை மனிதன் ஆகாயத்தில் எழும்பிக் காற்றில் மிதந்து மேலே செல்லக்கூடும் என்று எடிசன் நினைத்தார். அவர் வீட்டு வேலைக்காரனுக்கு ஸெட்லிஜ் உப்பை கரைத்து அவன் வயிறு முட்ட குடிக்க செய்தார். அவன் ஆகாயத்தை நோக்கி பறக்காமல் இந்த உலகைவிட்டே செல்லக்கூடிய நிலையை அடைந்து விட்டார். இப்படி நிறைய விஞ்ஞானிகளின் மனநிலை நம்மை ஒத்து இருப்பதில்லை.
இப்படிதான் ஒரு விஞ்ஞானி ஒரு சோதனையில் ஈடுபட்டிருந்தார். ஒரு ஈ -ஐ பிடித்து அதன் ஒரு காலை பிய்த்து அவருடைய விரலில் ஏறும் படி சொன்னார். அதுவும் ஏறியது இப்படி ஒவ்வொரு காலாக பிய்த்து விரலில் ஏறும் படி சொன்னார் அதுவும் தத்தித்தடுமாறி ஏறியது. கடைசியாக இருந்த காலையும் பிய்த்து ஏறச்சொன்னார் ( அதென்ன நடிகர் விஜய்யா சாதாரண ஈ தானே ! காலில்லாமல் எப்படிய்யா ஏறும்) . உடனே அந்த விஞ்ஞானி சோதனையின் முடிவை டயரியில் எழுதினார் பின்வருமாறு
“ ஈ -யில் ஆறு காலையும் எடுத்தவுடன் காது கேட்பதில்லை அது செவிடாகிவிடுகிறது என்று”.
கொள்ளை அடிக்கிறதையே கொள்கையாக வைத்திருக்கிற திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிக்கெல்லாம் ஓட்டு போடுற நீங்க என் பதிவு உங்கள் மனதை கொள்ளை அடிக்கவில்லையின்றால் கண்டிப்பாக ஓட்டுபோடுங்க (பிடித்தால் சொல்லாமலே போடுவீங்கதானே)
Comments
தொடரட்டும் உங்களின் அறிவு சார்ந்த பதிவுகள் ....
உங்கள் பார்வைக்கும்,கருத்துக்கும் வருகைக்கும் நன்றி மீண்டும் வருக.
உங்களுடைய ஊக்கம் எனக்கு பெரிதும் உதவும்.உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மீண்டும் வருக.
கருத்துக்கு நன்றி.மீண்டும் வருக.
உங்களுடைய முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக.
கருத்துக்கு நன்றி. உலவு.காம் -ல தான் இப்ப உங்க பதிவுகளை பார்க்க முடியுது. உஜாலவுக்கு மன்னிக்கவும் உலவுக்கு மாறீட்டீங்களா?
நகைச்சுவை கலந்து நல்ல விஷயங்கள் சொல்வது பாராட்டுக்குரியது...
விஞ்ஞானிகள் வீடுகளில் வேலைக்காரனாவதில் எத்தனை சிக்கல்கள் இருக்கிறது!!ஹஹஹா
நைஸ்!!
//நகைச்சுவை கலந்து நல்ல விஷயங்கள் சொல்வது பாராட்டுக்குரியது...//
உங்களுடைய முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக
ஓட்டு போட்டதுக்கு நன்றி. ஓட்டு போட என்னெல்லாம் சொல்லவேண்டியிருக்கு பார்தீங்களா ?
அவர்களுடைய முட்டாள் தனமான சிந்தனைதான் புதிய படைப்புகளை தருகிறது.உங்களுடைய முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக.
திரட்டி,தமிழ்மணம் இவற்றிலும் இணைத்துக் கொண்டுதானிருக்கிறேன்!
நன்றி.
உங்களுடைய முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக
“ ஈ -யில் ஆறு காலையும் எடுத்தவுடன் காது கேட்பதில்லை அது செவிடாகிவிடுகிறது என்று”. ///
ஹா ஹா ஹா.. நல்லா தான் ரிப்போர்ட் குடுத்தார்.. :-)
பகிர்வுக்கு நன்றி :-)
சயிண்டிஸ்ட் மேட்டர் சூப்பர்..:-)
உங்களுடைய முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக
உங்களுடைய வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக