Skip to main content

உலக சந்தையில் இந்திய மூளைக்கு அதிக விலை !!!!!!!!!!

 புத்தாண்டு காலையிலேயே  வீட்டில் பெரிய பஞ்சாயத்தாகிவிட்டது.  எனது மூன்றாவது படிக்கிற மகனுக்கும் சிறிய  மகளுக்கும் சண்டை.   புதுவருடமும் அதுவுமாக அவனை அடிக்க கையை ஓங்கி பின்னர் கொஞ்சமாவது அறிவிருக்காடா அந்த நாயை விட கேவலமாக இருக்கிறாயே என்று திட்டினேன். அதற்க்கு விடுங்கப்பா உங்க பிள்ளைதானப்பா பின்னே எப்படி இருக்கும்  என்ற படி ஆமாப்பா நாய்க்கு அறிவு கிடையாதா? என்றான் அப்பாவித்தனமாக.

                                  உருப்படியா  ஒரு கேள்வி கேட்கிறானே என்று நினைத்து , மகனே எல்லா மிருகங்களுக்கும்  மூளை உண்டு ஆனால் மூளையில் செரிப்ரம் என்ற ஒரு பகுதி உண்டு.அது மிருகங்களின்  மூளையில் சிறப்பாக இயங்குவதில்லை. அது ஒன்றுதான் மனிதனை (உன்னையல்ல) பிற விலங்குகளைவிட மேம்பட்டவனாக ஆக்குகின்றது என்றேன்.
                                   
                                மனிதனின் மூளை  கம்யூட்டரைப் போன்று ஒரே சமயத்தில் பல வேலைகளை செய்கிறது. உதாரணமாக நீ விளையாடிக்கொண்டே உன் தங்கையை  அழவைக்க முடிகிறது என்றேன். அப்போது அவன் அப்பா அமெரிக்கா, ஜப்பான்  காரனுக்கு அதிக மூளை இருக்குமாப்பா ?  அவன்தானே நிறைய கண்டுபிடிக்கிறான் (  என் மகனாடா  நீ உன் வயசிலே நான் இப்படியெல்லாம் யோசிக்கவேயில்லியேடா !)   அப்படியெல்லாம்  இல்லை, மூளை எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் இருக்கு  ஆனா அதை  எதுக்கு உபயோகப்படுத்துறோம் என்பது தான் வித்தியாசம் என்றேன்.

                 அதற்க்கும் என் மகன், ஆனால் அப்பா   என்ன  இருந்தாலும்  நம் இந்திய மூளைக்குதான் உலக சந்தையில் மதிப்பு இருக்குன்னு என் நண்பன் சொன்னான்.( இருக்காதா பின்னே  ! தகவல் தொடர்பில் (IT field) நாம் தானே ராஜா  ஐயோ !!  ராசா இல்லை) ஒரு தகவலும் சொன்னான்
 ஒரு தடவை  எல்லா உலக மக்களின் மூளையையும் வைத்து ஒரு கண்காட்சி வைத்தார்களாம் அதில்  அமெரிக்கரைவிட,ஜப்பானியரைவிட இந்தியரின் மூளைக்குதான் விலை அதிகமாக இருந்ததாம் ( இருக்காதா பின்னே !) . ஏன்னு கேட்டா  அது தான்  யூஸ் பண்ணாம ரொம்ப ஃப்ரஷ்  ஆக இருக்குமாம். 



                      கொள்ளை அடிக்கிறதையே கொள்கையாக வைத்திருக்கிற திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிக்கெல்லாம் ஓட்டு போடுற    நீங்க  என் பதிவு உங்கள் மனதை கொள்ளை அடித்திருந்தால் (இல்லையென்றாலும் ) கண்டிப்பாக ஓட்டுபோடவீங்கன்னு நம்புகிறேன்.

Comments

ஆகா!மேலே தூக்கி விட்டுக் கீ..ழே இறக்கிட்டீங்களே!
3-வதிலேயே இப்படி மூளையை உபயோகிக்கக் கத்துக் கொடுத்தால், வேறு எப்படி?...:-))
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
Unknown said…
@ middleclassmadhavi
என் மகன் மூன்றாவது படிக்கிறான். மூன்று வயது இல்லை. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Unknown said…
சந்திரசேகரன் ஐயாவுக்கு வணக்கம்.உண்மையிலேயே நாம தானே ஐயா வெளிநாட்டில் டாமினேட் பண்றோம். இதெல்லாம் அந்த காலத்துக்கதைகள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
Unknown said…
தஞ்சை.வாசன்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரரே.
நானும் மூணாவது-(3-வது)ன்னு தான் எழுதியிருக்கேன், 3-வயதில்-ன்னு இல்லை..!!
Unknown said…
middleclassmadhavi

தவறான புரிதல்.மன்னிக்கவும். அதென்ன உங்கள் பெயரே வித்தியாசமா இருக்கே.
நான் சாதாரண மிடில் க்ளாஸ் எண்ணங்கள் உள்ள மிடில் க்ளாஸைச் சேர்ந்த ஒருத்தி. ரொம்ப ஹைக்ளாஸ்த்தனமா கடினமான பதங்களையோ தத்துவங்களையோ சொல்லத் தெரியாது. அதான் - middle class madhavi
ராசா மாதிரி ஆளுங்கதான் மூளைய ஒர்க் பண்ணுறாங்க நாமெல்லாம் "ங்கே"...
Anonymous said…
Where ever in world Indians are there!
But we are wasting our creativity, energy, money by praying actors/ seeing cinemas/ writing cinema related article/watching cricket.

Calculate the man hours wasted for the above.
Unknown said…
@middleclassmadhavi:
உங்களுடைய தன்னடக்கம் என்னை மிகவும் கவர்ந்தது.உங்களையும். பதிலுக்கு நன்றி

Popular posts from this blog

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

என் முதல் கணினி அனுபவம் - தொடர் பதிவு....!

எனக்கு தமிழ்லயே பிடிக்காத வார்த்தை “தொடர்பதிவு” . ஏதோ வந்தோமா  ஏதாவது இரண்டு லைன் முகநூல்ல கிறுக்கினோமா போனோமான்னு இருக்கிற  என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த மனோவை தனியாக கவனித்துக் கொல்கிறேன்.                      பதிவு எழுதியே வருடங்கள் ஆகிப்போனதால் புதிய பதிவு எழுத எங்கே போகவேண்டும் என்று தேடவே நிறைய நேரம் ஆகிவிட்டது..... ஒரு வழியாக கண்டுபிடித்தும் தொலைத்தாகிவிட்டது. இனிவாயில் வந்ததை  வாந்தி எடுக்க வேண்டியதுதான் பாக்கி.                     முதலில் நான் கணினி வாங்க காரணமே தொழில் ரீதியாக புதிதாக சந்தைக்கு வரும் கேமிரா மற்றும் அதன் உப பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்க வசதியாக இருக்குமே என்றுதான். அதற்காக இணைய இணைப்பும் எடுத்தேன். அப்பொழுதுதான் என் கடைக்கு அடுத்த கடையில் இருக்கும் ஹரீஸ் என்ற நண்பன் பதிவுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அது வால்பையன் மறைந்த நண்பர் பட்டாபட்டி மற்றும் பன்னிக்குட்டி ராமசாமி ஆகிய சீனியர் பதிவர் நண்பர்கள் கலக்கிக்கொண்டிருந்த காலம் அது. இணைய இணைப்பு இருக்கிறது என்பதால்  சும்மா இருக்கின்ற நேரங்களில் அதில் மனதில் தோன்றியவற்றை கிறுக்க ஆரம்பித்தேன

நெல்லையில் மினி பதிவர் சந்திப்பு - ஆபீஸர் அதிரடி.

 இடமிருந்து வலம் ரூபினா மேடம்(நாய்குட்டி மனசு),கெளசல்யா மேடம்(மனதோடு மட்டும்),சகாதேவன் ஐயா(வெடிவால்),ஞானேந்திரன்(யானைக்குட்டி),டைரக்டர்.செல்வகுமார்(selva speaking),சீனா ஐயா(வலைச்சரம்),சங்கரலிங்கம் ஐயா(உணவு உலகம்) நேற்று நெல்லையில் ஒரு அதிரடி பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக ஆபீஸர் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் அழைப்பு விடுத்தார். அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு.செல்வகுமார் அவர்கள்  பங்கேற்க்க இருப்பதாகவும் சொன்னார்கள். ஏற்கனவே பிரமாண்டமாக நடந்த முதல் பதிவர் சந்திப்பில்   நான் பங்கேற்க்க முடியாத வருத்தம் இன்னும் இழையோடிக்க்கொண்டிருப்பதாலும் இன்னும் மிக முக்கியமான நட்சத்திர பதிவர்கள் வருகிறார்கள் என்று சொன்னதாலும் உடனடியாக செல்ல முடிவெடுத்தேன். அதன் படி நெல்லை போய் சேர்ந்தேன். மிகவும் சரியான நேரத்திற்க்கு வந்துசேர்ந்தது சீனா ஐயா தான்( அதிக தொலைவில் இருந்து வந்தவரும் அவர்தான்)                பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர இனிதாக களைகட்ட ஆரம்பித்தது பதிவர் சந்திப்பு .  திவானந்தா சுவாமிகள் தன்னுடைய குளுகுளு அறையை அதற்க்காக ஒதுக்கி கொடுத்தது இன்னும் மகிழ்ச்சியூட்டியது