Skip to main content

சிறப்பு குழந்தைகள்(Autism) ( என் வழி தனி வழி !!!!!!!!)


சிறப்பு குழந்தைகள்

இந்தியாவில் பிறக்கும்போதே குழந்தை குறைபாடோடு பிறப்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேவருகிறது. அதை சிறுவயதிலேயே கண்டுபிடித்தால் அவர்களின் எதிர்காலம் காப்பாற்றப்படும்.  இவர்கள் சொல்லிக்கொடுக்கும்  எதையும்  அவ்வளவு எளிதாக் புரிந்த்து கொள்ளமாட்டார்கள்.  இது வீம்போ அல்லது அடம்பிடிப்போ,கீழ்படியாமையோ அல்ல. அவர்களுக்கு ஏற்பட்டுள்ள குறைபாடு. சாதாரண குழந்தையைப்போல் இருக்காமல், வித்தியாசமாக நடப்பதால், எல்லோரும் இந்த குழந்தைகளை வேடிக்கையாகப்பார்ப்பார்கள். இது பெற்றொருக்கு வேதனை தரும். இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோரில்  நானும் ஒருவன் என்ற முறையிலும் அடுத்தவர்களும் பாதிப்பை சரியான நேரத்தில் கண்டுபிடித்து அதிலிருந்து மீள இது உதவும் என கருதுகிறேன்.

  1. ஆடிஸம் : என்பது பிறவியிலேயே  ஏற்படும் ஒருவகை மனவளர்ச்சி குறைபாடு ஆகும். இந்த குழந்தைகளுடன் காணும் முக்கிய பிரச்சினை கற்றல் குறைபாடு ஆகும். காரணம் இந்த குழந்தைகளுக்கும் பேசுவதிலும்,வார்த்தைகளை உச்சரிப்பதிலும் பிரச்சனை ஏற்படுகிறது. சில சமயம் செவித்திறன் கூட குறைவாக இருக்கலாம். இந்த குழந்தைகள் பொதுவாக ஏதாவது ஒரு பொருளை,பொம்மையை(கையில் வைத்திருக்க) அதிகமாகவிரும்புவார்கள். அவர்களது நடவடிக்கை அர்த்தமில்லாததாக இருக்கும். இவர்களில் 60 -70 சதவீத குழந்தைகளுக்கு மூளைவளர்ச்சி குறைவாக இருக்கும். இவர்களில் 25 சதவீத குழந்தைகளுக்கு வலிப்புநோய் இருக்கலாம்.
  2. வாண்டு கிலீஃப்நேர் நோய் தொகுப்பு : இந்த நோய்யின் பாதிப்பு உள்ள குழந்தைகளுக்குப்பாதிப்பு பெரும்பாலும் 3 வயது முதல் 7 வயதுக்குள் தோன்ற ஆரம்பிக்கும். இவர்களுக்கு பேச்சு பாதிப்பு தான் முக்கிய பாதிப்பாகும். ஆரம்பத்தில் பிறர் பேசுவதை புரிந்துகொள்ளும் திறன் குறையும் அதன் பிறகு பேசும் திறனும் குறைய ஆரம்பிக்கும். இவர்களில் பெரும்பானவர்களுக்கு வலிப்பு நோய்ப் பாதிப்பும் ஏற்படும்.

  1. ரெட்ஸ் குறைபாடு : இந்த வகைக் குழந்தைகளுக்குப் பிறக்கும்போது பெரிதாக குறைபாடு இருக்காது. பிறந்த சில காலம் சாதாரண குழந்தைப்போலவே இருப்பார்கள். ஆனால் குழந்தை வளர வளர பிரச்னை வெளிப்படையாகத்தெரியவரும். ஆடிஸ குழந்தை போலவே, பிற குழந்தைகள் மற்றும் சிறுவர்களோடு சேரமாட்டார்கள். சமூகத்தொடர்பு என்றி காணப்படுவார்கள். ஆடிஸப்பாதிப்பு பெரும்பாலும் ஆன் குழந்தைகளிடம்தான் காணப்படும் ஆனால் ரெட்ஸ் குறைபாடு பெரும்பாலும் பெண் குழந்தைகளையே பாதிக்கிறது. இவர்களுக்கு பல் கடிக்கும் பழக்கமும் ஏற்ப்படும்.


  1. ஏஞ்சல்மேன் நோய்த் தொகுப்பு : ஆடிஸப் பாதிப்பைப் போன்றே இது ஒருவித மன பாதிப்பு ஆகும். குறிப்பாக கற்றாலில் ஏற்படும் பாதிப்பு இது. இப்பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு பேசுவது, எழுதுவது,புரிந்துகொள்வதில் பிரச்னை இருக்கும். இவர்கள் ஆடிஸக்குழந்தைகளைப்போல் ஒதுங்கி இருக்காமல் பெற்றொரிடத்திலும் உறவினரிடத்திலும் மிகவும் அன்பாக இருப்பார்கள்.

  1. பிரைஜெல் ‘எக்ஸ்நோய்த் தொகுப்பு : இந்த பாதிப்பு மரபணு குறைபாடு காரணமாக ஏற்படுகிறது. இவர்களின் வாய் அன்னம் உயரமாக அமைந்திருக்கும். இவர்களுக்கு மாறுகண் ஏற்படலாம். நீண்டமுகமாக இருக்கும் காதுகளும் நீண்டிருக்கும். இவர்களுக்கு ‘மூளை மழுங்கிஇருக்கும்.  குரோமோசோம்  பரிசோதனை மூலம் பாதிக்கப்பட்டகுழந்தைகளீடம் இந்த குறைப்பாட்டை உறுதிப்படுத்தலாம்.


  1. ஆஸ்பெர்ஜர் நோய்த்தொகுப்பு :   இவர்களுக்கு மூளை வளர்ச்சி, செயல்பாடு, பேச்சு, ஆர்வம் என அனைத்துமே சாதாரணக் குழந்தைகளுக்கு இருப்பதைப்போல் காணப்படும். ஆனால்,வெளியுலகத் தொடர்புகள் தான்  ஆடிஸக்குழந்தையைப்போல் குறைவாக இருக்கும். இக்குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்த பிறகு மற்றவர்களைப்போலவே சுயமாக வாழ முடியும். இவ்வகை  குறைபாடு பெரும்பாலும் ப்ரம்ப்பரைக்காரண்ங்களாலும் ஏற்படும்.

  1. பிராடர் வில்லி நோய்த் தொகுப்பு : இந்த நோய்த்தொகுப்பு கூட ‘ஆடிஸப்பாதிப்பை போலவே காணப்படும். இந்த குழந்தைகளுக்கு, பேச்சு தாமதப்படுவதும்,தசைத்தளர்வும் காணப்படும். உணவு மீது உள்ள ஈடுபாட்டால், இவர்கள் எளிதில் குண்டாகிவிடுவார்கள். இந்த குறைபாடு, தாயின் கருவில் உள்ள 30-வது குரோமோசோமின் குறைபாட்டால் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

நோய்க்கான பொதுவான காரணங்கள் :
  • சுற்றுசூழல் பாதிப்புகள்
  • பூச்சிக்கொல்லி மருந்துகள்
  • தடுப்பூசி பின்விளைவுகள்
  • பாதரசம் கலந்த மருந்துகள்
  • பரம்பரை,மரபணு காரணங்கள்
  • வைரஸ்,பாக்டீரியா கொல்லி மருந்துகள்
  • தாது உப்புக்கள்,உயிர்சத்துக்கள் குறைபாடு
  • பிற நச்சுப்பொருட்களின் பாதிப்பு

நோய்க்கான ஆய்வுகள்,பரிசோதனகள் :
 நரம்பியல்,உளவியல் படித்த குழந்தை நல மருத்துவ நிபுணரிடம் காண்பித்தால், இந்நோயை எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள். இவர்களது மனநிலையையும் அறிவாற்றாலையும் (I.Q.)அறிந்துகொள்வதற்க்கான பல்வேறு கேள்விகளையும் கேட்டு (Verbal- Non verbal Tests)மனவியல் நிபுணர்களும் இவர்களுக்கு உதவுவார்கள்.
  • மூளைவளர்ச்சியை அறிய ஸ்கேன்(M.R.I.)
  • தைராய்டு ஹார்மொனின் செயல்பாடு(Thyroid function tests).
  • X குரோமோசோமின் பாதிப்பு நிலை

இந்நோய்க்கான சிகிட்சைகள் :
    ஆடிஸ நோய்க்கு சிகிட்சை செய்ய ஒரு குறிப்பிட்ட  மருந்தோ,ஊசியோ இல்லை. அதற்க்கு பல்வேறு பயிற்சி முறைகளும்,சிகிட்சை முறைகளும் தற்சமயம் செய்யப்படுகின்றன.
*Applied Behaviour Analysis   எனப்படும் நடைமுறை நடத்தைப் பயிற்சி.
* நட்பு வட்டாரத்தை வளர்த்தல். இவர்கள் தனித்தே இருக்க விரும்புவார்கள். அப்படி இருக்க விடாமல் மற்ற குழந்தைகளுடன் நம் கண்காணிப்புடன் விளையாடவிட வேண்டும்.
          அவர்களுக்கு தானே கற்க்கும் திறன் குறைவாக இருப்பதால் பெற்றோர்தான் சிரத்தை எடுத்து ஒவ்வொரு விஷயத்தையும் புரியும்வரை பொறுமையாக சொல்லிக் கொடுக்கவேண்டும்.
எங்க போறீங்க கமெண்டும் ஓட்டும் போடாமல்,போடுங்க ப்ளீஸ் !

Comments

உபயோகமான பதிவு.
Unknown said…
@ஸ்ரீராம் :
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக.
நிறைய புது விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். நன்றி
அடடே..... நல்லா உபயோகமான தகவலின் பதிவு...சூப்பர்....
Unknown said…
@middleclassmadhavi : முதலில் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.அடுத்து வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.
Unknown said…
@MANO நாஞ்சில் மனோ: நீக்ரோ மேட்டரை நினைத்தாலே சிரிப்புதான் வருது.
அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்.
பகிர்வுக்கு நன்றி!
நல்ல தகவல். மிக்க நன்றி .
Unknown said…
@ MUTHARASU :
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக.
//அதை சிறுவயதிலேயே கண்டுபிடித்தால் அவர்களின் எதிர்காலம் காப்பாற்றப்படும்.//
இது மிக மிக முக்கியம்.அநேக பெற்றோர் இதை குழந்தைகளின் சிறு வயதில் சரியாகக் கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள்.
//இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோரில் நானும் ஒருவன் //
கவலைப்பட வேண்டாம். விரைவில் சரியாகி விடும்; அதற்காகப் பிரார்த்திக்கிறேன்.
என் பேத்திக்கும் ஒரு குறைபாடு இருக்கிறது--ADHD.எல்லாக் குறைபாடுகளிலும் முக்கியம்-behavioural and occupational therapyதான்.
பயனுள்ள பதிவு.
Unknown said…
@சென்னை பித்தன் : என் மகன் நன்றாக மீண்டு வந்துவிட்டான். என்னுடைய அடுத்த பதிவு -ADHD தான். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ஆறுதலுக்கும் மிக்க நன்றி. மீண்டும் வருக.
நண்பர் இனியவன் அவர்களுக்கு

நல்ல குழந்தைகள் சம்பந்தமான விழிப்புணர்வு பதிவு இதில் எனக்கு தெரியாத நிறைய விஷயங்களை தெரிந்துக் கொண்டேன்

நன்றி நண்பரே
@ஸ்ரீராம் :
உங்களுடைய முதல் வருகைக்கும்,கருதிற்க்கும்,ஓட்டிற்க்கும் நன்றி. மீண்டும் வருக.

January 8, 2011 7:44 AM

==================================


@ஸ்ரீராம் :
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக.

January 15, 2011 8:15 PM

===============================

:))
Unknown said…
ஹைதர் அலி :
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக.
அண்ணாச்சி,,நீங்க என்னா கொழந்தை டாக்டரா?
செய்திகள் நல்லா இருக்கு .

Popular posts from this blog

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை     ...

நெல்லையில் மினி பதிவர் சந்திப்பு - ஆபீஸர் அதிரடி.

 இடமிருந்து வலம் ரூபினா மேடம்(நாய்குட்டி மனசு),கெளசல்யா மேடம்(மனதோடு மட்டும்),சகாதேவன் ஐயா(வெடிவால்),ஞானேந்திரன்(யானைக்குட்டி),டைரக்டர்.செல்வகுமார்(selva speaking),சீனா ஐயா(வலைச்சரம்),சங்கரலிங்கம் ஐயா(உணவு உலகம்) நேற்று நெல்லையில் ஒரு அதிரடி பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக ஆபீஸர் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் அழைப்பு விடுத்தார். அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு.செல்வகுமார் அவர்கள்  பங்கேற்க்க இருப்பதாகவும் சொன்னார்கள். ஏற்கனவே பிரமாண்டமாக நடந்த முதல் பதிவர் சந்திப்பில்   நான் பங்கேற்க்க முடியாத வருத்தம் இன்னும் இழையோடிக்க்கொண்டிருப்பதாலும் இன்னும் மிக முக்கியமான நட்சத்திர பதிவர்கள் வருகிறார்கள் என்று சொன்னதாலும் உடனடியாக செல்ல முடிவெடுத்தேன். அதன் படி நெல்லை போய் சேர்ந்தேன். மிகவும் சரியான நேரத்திற்க்கு வந்துசேர்ந்தது சீனா ஐயா தான்( அதிக தொலைவில் இருந்து வந்தவரும் அவர்தான்)                பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர இனிதாக களைகட்ட ஆரம்பித்தது பதிவர் சந்திப்பு .  திவானந்தா சுவாமிகள் தன்னுடைய குளுகுளு அ...

நரேந்திரமோடி : முன்மாதிரியான முதல்வர்

              1950 ஆம் ஆண்டு  செப்டம்பர்  17 -ல்  குஜராத்திலுள்ள வட்நகர்(vadnagar) என்ற சாதாரண கிராமத்தில் பிறந்தவர். சோசியல் சயின்ஸ்- ல் முதுகலை பட்டம் பெற்றவர்.  இவருடைய  அலுவலகம் ISO 9001:2008 CERTIFIED ஆகும்.                                    முதன் முதலாக அக்டோபர் 2001-ல் குஜராத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த காலகட்டத்தில் தான் குஜராத்தில் புஜ் என்ற இடத்தில் மாபெரும்  பூகம்பம் ஏற்பட்டு குஜராத் மாபெரும் உயிர் மற்றும் பொருள் இழப்பைக் கண்டது.  அதிலிருந்து  குஜராத்தை மீட்டெடுத்து இந்தியாவிலேயே  ஆச்சரியப்படும் வகையில் முன்னணி மாநிலமாக ஆக்கிய பெருமை  மோடியையே சாரும்.  மதுக்கடை வருமானம் அங்கு கிடையாது. ஓட்டு வங்கிமற்றும் இலவச (அரிசி) அரசியல் அவர் செய்வது கிடையாது. அவருடைய ஒரே முழக்கம்...