Skip to main content

எல்லோரும் பாருங்க நானும் விஞ்ஞானிதான்..........................???????

நான் பள்ளியில் படிக்கும் காலங்களிலும் சரி, இப்பவும் சரி  பள்ளி ஆசிரியர்  ஒவ்வொரு மாணவரிடமும் நீபடித்து யாராக  ஆக விரும்புறன்னு கேட்பாங்க. அப்போ எல்லோரும் வழக்கம் போல டாக்டர் அல்லது இன்ஜினியர் - ன்னு சொல்வாங்க.  யாரும் சயிண்டிஸ்ட் ஆவேன்னு சொல்லி நான்  கேட்டதில்லை. ஏன்னா அது அப்பவும் இப்பவும் பாப்புலர் இல்லை.

                                  ஒரு புதிய விஷயத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானியாலதான் முடியும்,அது மனித குலத்திற்க்கு ரொம்ப தேவையும் கூட.  மருத்துவரோ அல்லது பொறியாளரோ ஆகவேண்டும் என்றால் அந்த துறையில் படித்து( அல்லது வாங்கியோ) பட்டம் பெற்றால் போதும். ஆனால் விஞ்ஞானி ஆக படிப்பு மட்டுமல்லாமல் அந்த துறையில் முழுமையான ஈடுபாடு ம்  அர்பணிப்பு தன்மையும் தேவை.

                                  அப்படி வந்தவரில் எடிசனும் ஒருவர். அவர் தன் ஆராய்ச்சியின் மூலம் ஒரு விஷயத்தை தெரிந்து கொண்டார். ஸெட்லிஜ் என்னும் உப்பை இரசாயன முறைப்படி கரைத்து அதன் மூலம் எழும்பும் ஆவியை மெல்லிய ஒரு பொருளில் கசியாமல் அடைத்தால் அந்தப் பொருள் வானத்தை நோக்கி மேலெழும்பிச் செல்லும் என்பது தான் அது.


                                     இந்த சோதனையை ஒரு மனிதன் விஷயத்தில் பயன்படுத்தினால் ஒருவேளை மனிதன் ஆகாயத்தில் எழும்பிக் காற்றில் மிதந்து மேலே செல்லக்கூடும் என்று எடிசன் நினைத்தார். அவர் வீட்டு வேலைக்காரனுக்கு ஸெட்லிஜ் உப்பை கரைத்து அவன் வயிறு முட்ட குடிக்க செய்தார். அவன் ஆகாயத்தை நோக்கி பறக்காமல் இந்த உலகைவிட்டே செல்லக்கூடிய நிலையை அடைந்து விட்டார்.  இப்படி நிறைய விஞ்ஞானிகளின் மனநிலை  நம்மை ஒத்து இருப்பதில்லை.
                                   
                                          இப்படிதான் ஒரு விஞ்ஞானி ஒரு  சோதனையில் ஈடுபட்டிருந்தார்.      ஒரு  ஈ  -ஐ பிடித்து அதன் ஒரு காலை பிய்த்து அவருடைய விரலில் ஏறும் படி சொன்னார். அதுவும் ஏறியது  இப்படி ஒவ்வொரு காலாக பிய்த்து விரலில் ஏறும் படி சொன்னார் அதுவும் தத்தித்தடுமாறி ஏறியது. கடைசியாக இருந்த காலையும் பிய்த்து ஏறச்சொன்னார் ( அதென்ன நடிகர் விஜய்யா சாதாரண ஈ தானே  !  காலில்லாமல் எப்படிய்யா ஏறும்) . உடனே அந்த விஞ்ஞானி சோதனையின் முடிவை  டயரியில் எழுதினார் பின்வருமாறு 
“ ஈ -யில்  ஆறு காலையும் எடுத்தவுடன்  காது கேட்பதில்லை அது செவிடாகிவிடுகிறது  என்று”.   

                          கொள்ளை அடிக்கிறதையே கொள்கையாக வைத்திருக்கிற திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிக்கெல்லாம் ஓட்டு போடுற    நீங்க  என் பதிவு உங்கள் மனதை கொள்ளை அடிக்கவில்லையின்றால் கண்டிப்பாக ஓட்டுபோடுங்க (பிடித்தால் சொல்லாமலே போடுவீங்கதானே)

Comments

Unknown said…
நல்ல பகிர்வுங்க. ஒரே பதிவில் விஞ்ஞானம், விஜய் பற்றிய காலாய்ப்பு, மலரும் நினைவுகள்,என ரொம்ப நல்லா, ரசனையா எழுதியிருக்கீங்க.
Unknown said…
சம்பாதிப்பதை மனதில் கொண்டே எல்லாரும் டாக்டர்,பொறியாளார் ஆக விரும்புகின்றனர்.இந்நாளில் விஞ்ஞானிகளும் மற்றவர்களை விட நல்ல சம்பளம் பெறுகின்றனர், சமூக மரியாதையும் கூடியிருக்கிறது.
pichaikaaran said…
வித்தியாசமான பார்வை
Unknown said…
உண்மையிலேயே நன்றாக இருந்தது உங்கள் பதிவு.
arasan said…
நல்ல தரமான பகிர்வு ...
தொடரட்டும் உங்களின் அறிவு சார்ந்த பதிவுகள் ....
Unknown said…
பார்வையாளன் அவர்களுக்கு,
உங்கள் பார்வைக்கும்,கருத்துக்கும் வருகைக்கும் நன்றி மீண்டும் வருக.
Unknown said…
பாரத்... பாரதி... அவர்களுக்கு,
உங்களுடைய ஊக்கம் எனக்கு பெரிதும் உதவும்.உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மீண்டும் வருக.
Unknown said…
இரவு வானம் அவர்களுக்கு,

கருத்துக்கு நன்றி.மீண்டும் வருக.
Unknown said…
அரசன் அவர்களுக்கு,
உங்களுடைய முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக.
Unknown said…
சென்னை பித்தன் சந்திரசேகரன் ஐயா அவர்களுக்கு,
கருத்துக்கு நன்றி. உலவு.காம் -ல தான் இப்ப உங்க பதிவுகளை பார்க்க முடியுது. உஜாலவுக்கு மன்னிக்கவும் உலவுக்கு மாறீட்டீங்களா?
Prabu M said…
ந‌ல்ல‌ ப‌திவு பாஸ்...
ந‌கைச்சுவை க‌ல‌ந்து நல்ல‌ விஷ‌ய‌ங்க‌ள் சொல்வ‌து பாராட்டுக்குரிய‌து...
விஞ்ஞானிக‌ள் வீடுகளில் வேலைக்கார‌னாவ‌தில் எத்த‌னை சிக்க‌ல்க‌ள் இருக்கிற‌து!!ஹ‌ஹ‌ஹா
நைஸ்!!
//கொள்ளை அடிக்கிறதையே கொள்கையாக வைத்திருக்கிற திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிக்கெல்லாம் ஓட்டு போடுற நீங்க என் பதிவு உங்கள் மனதை கொள்ளை அடிக்கவில்லையின்றால் கண்டிப்பாக ஓட்டுபோடுங்க //ஓட்டு போட்டு விட்டேன்.
Unknown said…
பிரபு எம்
//ந‌கைச்சுவை க‌ல‌ந்து நல்ல‌ விஷ‌ய‌ங்க‌ள் சொல்வ‌து பாராட்டுக்குரிய‌து...//
உங்களுடைய முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக
Unknown said…
@ஸாதிகா
ஓட்டு போட்டதுக்கு நன்றி. ஓட்டு போட என்னெல்லாம் சொல்லவேண்டியிருக்கு பார்தீங்களா ?
விஞ்ஞானிகள் சில சமயங்களில் முட்டாள்களாகத்தான் இருக்கிறார்கள்..நன்றி
Unknown said…
Samudra
அவர்களுடைய முட்டாள் தனமான சிந்தனைதான் புதிய படைப்புகளை தருகிறது.உங்களுடைய முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக.
இனியவன்,இண்ட்லி,தமிழ்10
திரட்டி,தமிழ்மணம் இவற்றிலும் இணைத்துக் கொண்டுதானிருக்கிறேன்!
நன்றி.
Unknown said…
@MANO நாஞ்சில் மனோ:
உங்களுடைய முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக
/// ( அதென்ன நடிகர் விஜய்யா சாதாரண ஈ தானே ! காலில்லாமல் எப்படிய்யா ஏறும்) . உடனே அந்த விஞ்ஞானி சோதனையின் முடிவை டயரியில் எழுதினார் பின்வருமாறு
“ ஈ -யில் ஆறு காலையும் எடுத்தவுடன் காது கேட்பதில்லை அது செவிடாகிவிடுகிறது என்று”. ///

ஹா ஹா ஹா.. நல்லா தான் ரிப்போர்ட் குடுத்தார்.. :-)

பகிர்வுக்கு நன்றி :-)
Unknown said…
பதிவு நல்லாயிருந்ததுங்க..

சயிண்டிஸ்ட் மேட்டர் சூப்பர்..:-)
Unknown said…
Ananthi (அன்புடன் ஆனந்தி)
உங்களுடைய முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக
Unknown said…
பதிவுலகில் பாபு said...
உங்களுடைய வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக

Popular posts from this blog

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.                     தன்னுடையவா

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

என் வடஇந்திய நண்பனுக்கு கல்யாணம்

       போ ன வாரம்  என் நண்பனின் திருமணம் கான்பூரில்(உத்திர பிரதேசம்) நடைப்பெற்றது.  நண்பனின்   அதீத அன்பின் காரணமாக அழைப்பை ஏற்று நானும் என் மனைவியும் புறப்பட்டோம்.                     அ திகாலை 5.50 க்கு அடைமழையில் ராப்திசாகர் என்ற இரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது.  இரயில் பெட்டிகள் காந்தி தாத்தா காலத்தில் உள்ளது போல் ரொம்ப பழையதாக இருந்தது. சரி  பெட்டி ரொம்ப இருட்டாக இருந்ததால் மின்விளக்கை போடலாம் என்று பொத்தானை துழாவினேன் அங்கே பொத்தான் இருந்ததுக்கு அடையாளமாக ஒரு ஓட்டை மட்டும் இருந்தது, சரி என்று விதியை நொந்தபடி படுத்து உறங்கிவிட்டேன்.  உறக்கம் தெளிந்தபோது மணி 12.00.   கொஞ்சம்  காலைகடன்களை கழிக்கலாமே என்று  கழிவறைக்கு ள் சென்று தாளிட தாப்பாளை(கொண்டியை) தேடினேன் அதுவும் மிஸ்ஸிங்(வாழ்க பிகாரிகள்).                        நி திஷ் குமார் ஆட்சியில் பிகார் முன்னேறியிருப்பதாக சொன்னார்களே  முன்னேறிய பிறகும் இப்படி என்றால் இதற்க்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே தலை சுற்றியது.எல்லாம் முடிந்த பின்  toilet ஐ flush செய்ய லிவரை அழுத்தினேன் கொஞ்சம் இறுக்கமாக இருந