பின் தொடரரும் நண்பர்கள்

Monday, December 19, 2011

இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே...................


    பஞ்சத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறு பையன் ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் ஐ.நா. சபை நடத்திய முகாம் ஒன்றுக்கு உணவுக்காக ஊர்ந்து செல்கிறான். இந்த பையன் எப்போது சாவான் நாம் சாப்பிடலாம் என்று பையனை தூக்கி செல்ல தயாராக அருகிலேயே பிணம் தின்னி கழுகு ஒன்று காத்திருப்பதையும் காணலாம். இந்த பையன் உயிர் பிழைத்தானா அல்லது கழுகுக்கு இரையானானா என்று யாருக்கும் தெரியாது. ஏனென்றால் இந்த போட்டோவை எடுத்த போட்டோகிராபரும், போட்டோ எடுத்த உடன் அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டார்.


          இந்த படத்தை பார்த்ததும் உலகமே பெரும் அதிர்ச்சிக்குள்ளானது. அமெரிக்காவில் பத்திரிகையாளர்களுக்கு கொடுக்கப்படும் மிகச்சிறந்த விருதான புலிட்சர் விருது இப்படத்திற்கு கிடைத்தது. எனினும் இப் படத்தை எடுத்த போட்டோகிராபர் கெவின் கார்டர் மனம் உடைந்து 3 மாதங்கள் கழித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் கடைசியாக கடவுளுக்கு எழுதிய கடிதம் ஒன்றும் கிடைத்தது.


          அன்புள்ள கடவுளுக்கு : நான் எனக்கு கிடைத்த சாப்பாட்டை இனி எப்போதும் வீணாக்க மாட்டேன். அது எவ்வளவு மோசமாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த பையனை காப்பாற்றும் படியும் இந்த துயர நிலையிலிருந்து அவனை மீட்குமாறும் நான் வேண்டிக்கொள்கிறேன்.நாங்கள் இனிமேல் உலகில் நடப்பதைகூர்ந்து கவனிப்போம். எங்களை பற்றி மட்டுமே கவனித்துக்கொண்டிருந்க்க மாட்டோம். இந்த படத்தை பார்க்கும்போதெல்லாம் நாங்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்பதை எங்களுக்கு நினைவூட்டிக்கொண்டிருக்கும். இனி ஒருபோதும் பிறருக்கு கொடுக்க வேண்டியதை கொடுக்காமல் வைத்திருக்க மாட்டோம்.


         இக்கடிதத்தை நமது நண்பர்களிடம் காண்பியுங்கள். இந்த உலகில் எங்கு யார் துயரங்களை அனுபவித்தாலும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்யட்டும். யாரெல்லாம் சாப்பாட்டை வீணாக்குகிறார்களோ அவர்களிடம் இப்படத்தை காண்பியுங்கள். அவர்கள் இதைப்பற்றி நினைத்து பார்க்கட்டும்

13 கருத்துரைகள்:

வெளங்காதவன் said...

:-)
:-(

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மனதை நெகிழச் செய்த பதிவு..

சம்பத் குமார் said...

வணக்கம் அண்ணா

அவர் வரைந்த கடிதத்தை திரும்ப திரும்ப வாசிக்கிறேன்

என்று இந்த உலகம் மாறு என்று..

படிப்பவர் நெஞ்சில் பதிகிறது அவரது கடிதம்

கோகுல் said...

நல்லவிசயம் ,இன்னைக்குதான் நானும் இந்த விஷயம் பற்றி ஒரு பதிவு எழுதினேன்.இந்த பதிவிற்கான லில்கை எனது பதிவில் கொடுத்துள்ளேன்.

நன்றி!

rufina rajkumar said...

இந்த படத்தை பார்த்த அதிர்ச்சி இவ்வளவு நாள் ஆன பின்னும் நெஞ்சில் இருக்கிறது. இதை ஒத்த ஒரு பதிவு தயார் செய்து வைத்திருக்கிறேன் நாளை கண்டிப்பாக பாருங்க

கே. ஆர்.விஜயன் said...

வெளங்காதவன் :வருகைக்கு கருத்திற்க்கும் நன்றி.

கே. ஆர்.விஜயன் said...

* வேடந்தாங்கல் - கருன் *!// வாத்தியார் ஐயாவுக்கு வணக்கம்.

கே. ஆர்.விஜயன் said...

சம்பத் குமார் : வணக்கம் தல. உலகத்துல என்னவெல்லாமோ நடக்குது. ஒரு படம் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணிவிடுகிறது.

கே. ஆர்.விஜயன் said...

கோகுல் said...கூகுள் அண்ணனின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கே. ஆர்.விஜயன் said...

rufina rajkumar: மேடம் கண்டிப்பா எழுதுங்க.மிகவும் பெரிய அதிர்வை ஏற்படுத்திய படம் இது.

கக்கு - மாணிக்கம் said...

புலிட்சர் விருது கிடைத்த சில நாட்களிலேயே அவர் தற்கொலை செய்துகொண்டார். அதுசரி இது பழைய கதையாயிற்றே விஜி. முக்கியமான செய்தி என்னவென்றால் அவர் தற்கொலை செய்துகொண்ட பின்னர்தான் இந்த படமே மிகபிரபலமாயிற்று. பல பெரிய "உலக தலைவர்களை " வாய் விட்டு கதறவைத்த படம் இது. ஆனாலும் ஒன்றும் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்துவிட வில்லை என்பதே உண்மை.

Anonymous said...

மனம் கனக்கிறது

முடிந்தவரை நாம் அனைவரும் பொருட்களை சேதப் படுத்துவதை தவிர்ப்போம் இந்த புது வருடதிலிருந்தாவது..

இருதயம் said...

நல்ல பதிவு