வாங்க ஜெரால்ட் சார்( பெயர் தெரியாததால் இதையே பெயராக்கிவிடுவோம்) என்ன ரொம்ப சந்தோசமாக இருக்கீங்க என்றேன் நான். (ஜெரால்ட் என்னுடைய நல்ல வாடிக்கையாளர், அதிகம் பேசமாட்டார் , நல்ல மனிதரும் கூட.) என்னுடைய மனைவி (வெளிநாட்டில் நர்ஸாக பணிபுரிந்து கொண்டிருந்தவர்) நாளை வருகிறாள் நாளை சென்னை சென்று அவளையும் அழைத்து கொஞ்சம், வாங்க வேண்டிய பொருட்களெல்லாம் வாங்கி வரவேண்டும். இரண்டு நாள் சென்னையில் ஹால்ட் என்றார். அவர் மனைவி10 வருடமாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ஒரு 10 வயதில் ஒரு மகனுடன் இவர் இங்கு புகைப்படத்தொழிலை செய்து வருகிறார். இந்த தடவை மனைவி வேலையை விட்டுவிட்டு இங்கே செட்டில் ஆக முடிவெடுத்துவிட்டார் என தெரிவித்தார். அதுதான் அவரது மகிழ்ச்சியின் முக்கிய காரணம். ஒரு நாள் நான் மாலை நாளிதழை படித்துக்கொண்டிருந்த போது அதில் அவருடைய மனைவியின் மரண அறிவிப்பை கண்டு அதிர்ந்தேன். அவர் வந்தே மூன்று மாதம் தான் இருக்கும் என்ன ஆயிற்று என்று விசாரித்தேன். அங்கேயும் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி வருமாம். அவர் ச...