வ ழக்கம் போல் ஆபீசர் சங்கரலிங்கம் அவர்களின் தலைமையில் ஒரு மினி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் துபாய் ராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராக கெளரவிக்க இருப்பதாகவும் சொன்னார்கள். எனக்கும் அழைப்பு வந்தது. வேலைகள் பல இருந்தாலும் போகவேண்டும் என்ற மனம் இருந்ததால் அதற்க்கான வழியை உருவாக்கிவிட்டு நெல்லையை சென்றடைந்தேன். நா ன் போகும் போதே வழக்கமான, தலைவர் திவான் அவர்களின் ஹோட்டல் ஜன்னத்தில் குளு குளு அறையில் ஆபீசரும் கெளசல்யா மேடமும் மற்றும் துபாய் ராஜாவும் அவர் துணைவியார் ரேவதியும் வந்திருந்தனர். அடுத்ததாக ரூபினா மேடமும் வர சந்திப்பு களை கட்ட ஆரம்பித்தது. ரூபினா மேடம் சென்னையில் தேனம்மை மேடத்தையும் டைரக்டர் செல்வா சாரையும் சந்தித்ததைப்பற்றி கூறி புகைப்படங்களையும் காண்பித்தார்கள். மேலும் ராமலிங்கம், ஞானேந்திரம் மற்றும் வெடிவால் ஐயாவும் வந்து சேர சந்திப்பு சமோசா தேநீருடன் இனிதே ஆரம்பித்தது. பரஸ்பர நலம் விசாரித்தலுடன் ஆரம்பித்த ...