இது ஒரு உண்மைக்கதை. இன்று ஒரு பெரியவரை சந்தித்தேன் அவர் தன் மகனின் கதையை கூறினார் அதன் பாதிப்பே இந்த பதிவு கதையின் நாயகனின் பெயர் குமரன்( பெயர் மாற்றப்பட்டுள்ளது) , நாகர்கோயிலை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த குமரன் வீட்டில் உள்ள மற்ற இரு சகோதரர்களைகாட்டிலும் படு சுட்டி. எதையும் எளிதில் ஏற்றுக்கொள்ளாத ஒரு சுபாவம் அவனை மற்றவர்களிடத்திலிருந்த பிரித்து காட்டியது. அதுவே அவனது வளர்ச்சிக்கு ஊன்று கோலாகவும் இருந்தது. கெட்டும் பட்டணம் சேர் என்பார்கள் அதுபோல் இவனும் கொஞ்சம் கெட்டு சென்னை பட்டணம் சேர்ந்தான். அங்கே சிறிது சிறிதாக முன்னேறி ஒரு ஒப்பந்ததாரர் (contractor) ஆனான். நல்ல பணம் வர ஆரம்பித்தது அதனூடேயே செல்வாக்கும் வளர்ந்தது. அந்த ஏரியாவில் எல்லா வேலைக்கும் அவனைத்தான் அழைத்தார்கள் நிறைய பேருக்கு செல்லப்பிள்ளையானான். குமரனின் தாய்மாமாவுக்கு ஒரு இளவரசி என்ற மகள் இருந்தாள் அந்த பெண் கேரள தலைநகரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தாள்..... பெயருக்க...